Wednesday 15 January 2014

மாமரம் - சில  மகிமைகள்

எந்த ஒரு தலத்திலும், மூலவழிபாடு  அங்குள்ள ஏதேனுமொரு  மரத்திலிருந்து தொடங்கியிருக்கிறது.  அதன்பிறகே  மூலவிக்கிரக பிரதிஷ்டை, கருவறை, பிரகாரம், கோபுரம் என  விரிவடைந்திருக்கிறது. வழிபாட்டுத்தலம்  ஆலயமாய்  வளர்ந்த பின்னரும்,  மூலவழிபாட்டுக்குரிய மரம்  ' தல விருட்சம்'  என் போற்றப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது.  

பாரத நாட்டில் வணங்கப்பட்டுவரும்  தல விருட்சங்களிலேயே மிகவும் புரதானமானதென்று  கருதப்படுவது  காஞ்சிபுரத்தில் உள்ள  ஏகாம்பரேசுவரர்  ஆலயத்தில் உள்ள மாமரமாகும்.  ஆயிரமாயிரம்  ஆண்டுகளாக  ஜீவகளையுடன் விளங்கிவரும் இப்புனிதமரம்,  மேலும் சில  ஆயிரம் வருடங்களுக்குப்  பிறகு,  கல்மரமாய்  ( possil  ) என்று  உறைந்துபோகும் என விஞ்ஞானிகள்  கருதுகின்றனர்.

ஒவ்வொரு வேதமும் ஒரு கிளையாய், நான்கு பெருங்கிளை கலைப் பரப்பி 
ஏக-ஆம்ரம் - ஒரே மாமரம்  என்று  , ஈசனே  ' ஏகாம்பரம் '  என திருநாமம் கொள்ளச் செய்துள்ளது.  வேறு எந்த தல விருட்சத்திற்கும்  இல்லாத தனிச் சிறப்பாய் ' மாவடிச் சேவை"  என்ற பெயரில்  ஆண்டுதோறும்  திருவிழா கொண்டாடப்பெறும்  மகிமை வாய்ந்தது, காஞ்சிபுரம்  ஏகாம்பரேசுவரர்  ஆலயத்து  மாமரம்.

மாமரத்தை சிறப்பித்துக்  கூறும்  புராணங்கள்  பல.  அவற்றில்  குறிப்பிடத்தக்கது  கந்த புராணம்.  முருகவேளுடன்  பலவாறு போரிட்டு தோற்கும்  சூரபதுமன்,  இறுதியில்  சலிப்புற்று  மாமரமாய்  சமைந்து போகின்றான்.  முருகனும், தமது வேலாயுதத்தால்  அம்மரத்தை இருகூருகளாக  பிளந்து,  ஒரு பாதியை தமக்குரிய மயில் வாகனமாகவும், மறுபாதியை செவர்கொடியுமக்கிக் கொள்கிறார்.  

பொதுவாகவே  மாமரத்திற்கு  விஷேசமான  சாஸ்திரச் சிறப்புக்கள் உண்டு.  
மாவிலையில்  திருமகள்  வாசம்  செய்கிறாள்.  மாவிலையால்  பிரும்மஹஸ்தி  தோஷம்  நீங்கும் என  குறிப்பிடப்படுகிறது.  
மங்கல  நாட்களில்  மாவிலைத் தோரணம்  கட்டுவது இதன் பொருட்டே!  

மாளய  பட்சம் வரும்  பதினைந்து நாட்களிலும்,  திதி, சிரார்த்தம்  ஆகிய  நாட்களிலும்   மாவிலையால்  பல் துலக்க,  தோஷங்கள்  நீங்கப் பெற்று,
பித்ருக்களின்  ஆசி  குறைவற  கிட்டும்.



No comments:

Post a Comment