Wednesday 8 January 2014



அட்சய  திருதியை

சித்திரை மாதம்  வளர்பிறை 'திருதியை'      திதியை  அட்சய  திரிதியை ஆக கொண்டாடுகிறோம்.  'அட்சய'  என்றால் வளர்தல் என்று பொருள்.

கௌரவர்களின் சபைக்கு  துச்சாதனனால் இழுத்து வரப்பட்ட  பாஞ்சாலி,   பீஷ்மர் முதலியவர்களிடம்  நீதி கேட்டு முறையிட , அது கிடைக்காத நிலையில், பாஞ்சாலியின் துகிலை உரிய துச்சாதனன் முற்படுகின்றான். தன்  பலத்தால் அதைத தடுக்க முயன்று,  இயலாத நிலையில் இரு கைகளையும் கூப்பி,   கண்ணனிடம் சரணகதி அடைகிறாள், பாஞ்சாலி .  கண்ணனின்  பதினாறு நாமங்களைச் சொல்லிக்  கதறுகிறாள். 

கண்ணனும் அங்கு வந்து   ' அட்சய' என்கிறார். பாஞ்சாலியின்  துகிலும்  வளர்ந்து கொண்டே போனது.  துகிலுரித்த துச்சாதனனும்  மயங்கியே விழுந்தான். 

' அட்சய'  என்ற சொல்,  அந்த அளவிற்கு  வளர்ச்சியைத்  தரக்கூடியது.

இதனால்தான், அட்சய திருதியை என்னும் நன்னாளில், பொருட்களை வாங்கினால்  அவை பல மடங்காக பெருகும் என்ற நம்பிக்கை உள்ளது.  இந்த நாளில் ,  தங்கம் வாங்குவதில்தான், அநேகர்  கவனம் செலுத்துகின்றனர்.

இந்த நாளில், வெள்ளி, கிரைண்டர், மிக்சி, பிரிட்ஜ், ஏ .சி ., என  எந்த பொருளையும்  வாங்கலாம்.  

இந்நாளில்,  புத்தாடை உடுத்துவதும், தானம் செய்வதும் விசேஷம். 

இந்த நாளில்,  பாத்திரங்கள்  வாங்கலாம்.  இவற்றை, முதன்முதலாக அடுப்பில் வைக்கும் போது, இஷ்ட தெய்வத்துக்குரிய ஸ்லோகங்களையோ, பாடல்களையோ சொல்லி வைப்பதன் மூலம், ஆண்டு முழுவதும் தடையற்ற முறையில் உணவு கிடைக்கும்.  

சிலப்பதிகாரத்து  மாதவியின் மகள், மணிமேகலை  வைத்திருந்த பாத்திரத்துக்குப்  பெயரே  ' அட்சய  பாத்திரம் '.

இவை எல்லாவற்றிற்கும்  மேல், ஓர் எளிய மற்றும் முக்கியமானது ஒன்று உண்டு.  திரிதியை திதி  லட்சுமிக்கு உரியது என்பதால், அவளுக்கு பிடித்தமான மஞ்சள் மற்றும் உப்பை வாங்கி வைப்பதுதான்.

அட்சய திருதியை அன்று, தங்கத்தை மட்டுமல்ல, வேறு எந்த பொருளானாலும் சரி, லட்சுமிக்கு உகந்ததை வாங்குங்கள். லட்சுமி கடாட்சத்தைப் பெறுங்கள். 

நன்றி :  காலைக்கதிர் , 28/04/13. Bangalore Edition 










  

No comments:

Post a Comment