Friday 28 March 2014

அபிராமி அந்தாதி ( 42 )

அபிராமி  அந்தாதி  

பாடல்  42


இடம் கொண்டு  விம்மி 
இணை கொண்டு  இறுகி, இளகி 
முத்து வடம் கொண்ட 
கொங்கை  மலை  கொண்டு 
இறைவர்  வலிய  நெஞ்சை 
நடம்  கொண்ட 
கொள்கை  நலம் கொண்ட  நாயகி,
விட  அரவின் 
படம் கொண்ட  அல்குல் 
பனி மொழி 
வேதப் பரிபுரையே  !

தொடரும்  .....

அபிராமி அந்தாதி ( 41 )

அபிராமி  அந்தாதி  

பாடல்  41


புண்ணியம்  செய்தனை  மனமே,
புதுப் பூங்குவளைக்  கண்ணியும் 
செய்யக் கணவரும்  கூடி 
நம்  காரணத்தால்  நண்ணி 
இங்கே  வந்து 
தம்  அடியார்கள்  நடுவிருக்கம் பண்ணி 
நம்  சென்னியின் மேல் 
பத்ம பாதம்  பதித்திடவே !


தொடரும் .....

Monday 24 March 2014

அபிராமி அந்தாதி ( 40 )

அபிராமி  அந்தாதி  

பாடல்  40


வாள்நுதல்  கண்ணியை  ,

விண்ணவர்  யாவரும் 
வந்து  இறைஞ்சிப் 
பேணுதற்கு  எண்ணிய 
எம்பெருமாட்டியை ,

பேதை  நெஞ்சில்  
காணுதற்கு  
அண்ணியள்  அல்லாத 
கன்னியை ,

காணும் அன்பு  பூணுதற்கு 
எண்ணிய  எண்ணம்  அன்றோ  
முன்செய்  புண்ணியமே  !!

தொடரும் .....




அபிராமி அந்தாதி ( 39 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  39


ஆளுகைக்கு  
உந்தன்  அடித் தாமரைகள்  
உண்டு :

அந்தகன் பால்  மீளுகைக்கு 
உந்தன்  விழியின் 
கடை  உண்டு :

மேல் இவற்றின்  மூளுகைக்கு 
என் குறையே  ,
நின் குறை  அன்று ;

முப்புரங்கள்  மாளுகைக்கு 
அம்பு தொடுத்த  
வில்லான் பங்கில் 
வாள் நுதலே !!

தொடரும்  .....





அபிராமி அந்தாதி ( 38 )

அபிராமி  அந்தாதி


பாடல்  38


பவளக் கோடியில்  பழுத்த 
செவ்வாயும்,

பனிமுறுவல்  தவளத்  திருநகையும் 
துணையாய்,

எங்கள்  சங்கரனைத் 
துவளப் பொருது 
துடி இடை சாய்க்கும் 
துணை  முலையாள் :

அவளைப்  பணிமின் ,
கண்டீர்  அமராவதி 
ஆளுகைக்கே  !!

தொடரும் .....

அபிராமி அந்தாதி ( 37 )

அபிராமி  அந்தாதி

பாடல்  37


கைக்கே  அணிவது  
கன்னலும்  பூவும்;

கமலமன்ன  மெய்க்கே  அணிவது 
வெண் முத்து  மாலை ;

விட  அரவின்  பைக்கே  அணிவது 
பன்மணிக் கோவையும், பட்டும் ;

எட்டுத் திக்கே  அணியும் 
திருவுடையான்  இடம் 
சேர்பவளே !


தொடரும் .....

Thursday 20 March 2014

அபிராமி அந்தாதி ( 34 )

அபிராமி  அந்தாதி  


பாடல்  34


வந்தே  சரணம் புகும்  அடியார்க்கு 
வானுலகம்  தந்தே 
பரிவோடு ,
தான்  போயிருக்கும் 
சதுர் முகமும்,
பைந்தேன்   அலங்கல்  பருமணி  ஆகமும் ,
பாகமும் ,
பொன் செந்தேன் மலரும்,
அலர் கதிர்  
ஞாயிறும்  திங்களுமே !


தொடரும்.   ....

Sunday 9 March 2014

இரும்பைக்  காய்ச்சி உருக்கிடுவீரே !
யந்திரங்கள்  வகுத்திடுவீரே !
கரும்பைச்  சாறு  பிழிந்திடுவீரே !
கடலில்  மூழ்கி  நன்முத்தெடுப்பீரே !
அரும்பும் வேர்வை உதிர்த்து புவிமேல்
ஆயிரம்  தொழில் செய்திடுவீரே  !
பெரும் புகழ்  நுமக்கே  இசைக்கின்றேன்
பிரமதேவன் கலை இங்கு  நீரே !!

மண்ணெடுத்து  குடங்கள்  செய்வீரே !
மரத்தை வெட்டி  மனை  செய்குவீரே !
உண்ணக்  காய்கனி  தந்திடுவீரே !
உழுது  நன்செய்ப் பயிரிடுவீரே !
எண்ணெய்  பால்  நெய்  கொணர்ந்திடுவீரே !
இழையை  நூற்று  நல்லாடை  செய்வீரே !
விண்ணின்று  எமை  வானவர்  காப்பார்,
மேவிப்  பார்மிசைக்  காப்பவர்  நீரே !!

பாட்டும்  செய்யுளும்  கோத்திடுவீரே !
பரத  நாட்டியக்  கூத்திடுவீரே !
காட்டும்  வையப் பொருளின்  உண்மை
கண்டு  சாத்திரம்  சேர்த்துடுவீரே !
நாட்டிலே  அறம்  கூட்டி வைப்பீரே !
நாடும்  இன்பங்கள்  ஊட்டி வைப்பீரே !
தேட்டமின்றி  விழியெதிர்  காணும்
தெய்வமாக  விளங்குவீர்  நீரே !!

தான்  கண்ட  புதுமைப் பெண்ணை
பாராட்டி,
படத்தலையும்  காத்தலையும்
அவர்தம்    செயலாகக்  கருதி,
எங்கெங்கும்  காணினும்  சக்தியடா
என்று  முழங்கியவர்  பாரதியார்.

பெண்டிர்  அனைவருக்கும் 
மகளிர்தின  வாழ்த்துக்கள் .









அபிராமி அந்தாதி ( 32 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  32


ஆசைக் கடலில் 
அகப்பட்டு, 
அருளற்ற அந்தகன் 
கைப்  பாசத்தில் 
அல்லல்பட   இருந்தேனை,

நின் பாதமென்னும்
வாசக்கமலம்,
தலைமேல்  வலிய  வைத்து 
ஆண்டு கொண்ட நேசத்தை 
என்  சொல்லுவேன் !

ஈசர்  பாகத்து 
நேரிழையே  !


தொடரும் .....

Saturday 8 March 2014

அபிராமி அந்தாதி ( 31 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  31

உமையும்,
உமை ஒரு  பாகனும் 
ஏக  உருவில்  வந்து 
இங்கு 
எமையும் 
தனக்கு  
அன்பு  செய்ய வைத்தார் ;

இனி  எண்ணுதற்கு 
சமயங்களும்  இல்லை ;

ஈன்றெடுப்பாள்  
ஒரு  தாயும் இல்லை ;

அமையும் 
அமைஉறு  தோளியர் மேல் 
வைத்த    ஆசையுமே  !!


தொடரும் ....



Friday 7 March 2014

அபிராமி அந்தாதி ( 30 )

அபிராமி  அந்தாதி 


பாடல்  30


அன்றே  
தடுத்து என்னை 
ஆண்டு கொண்டாய்,

கொண்டதல்ல  
என் கை,
நன்றே  உனக்கு ;

இனி 
யான் 
என் செயினும்,
நடுக் கடலுள் 
சென்றே  வீழினும்,
கரை  ஏற்றுகை 
நின் 
திருவுளமே !

ஒன்றே !
பல உருவே !
அருவே !

என் 
உமையவளே !!


தொடரும் .....



Thursday 6 March 2014

அபிராமி அந்தாதி ( 29 )

அபிராமி  அந்தாதி 



பாடல்  29

சித்தியும்,
சித்திதரும்  தெய்வமாகித் 
திகழும் 
பரா சக்தியும்,

சக்தி  தழைக்கும் 
சிவமும்,

தவ முயல்வார் 
முக்தியும்,

முக்திக்கு  வித்தும்,

வித்தாகி 
முளைத்தெழுந்த 
புத்தியும்,

புத்தியின்  உள்ளே 
புரக்கும் 
புரத்தை அன்றே !!

தொடரும் .....

Wednesday 5 March 2014

அபிராமி அந்தாதி ( 28 )

அபிராமி  அந்தாதி 


பாடல்  28

சொல்லும், 
பொருளும்  என 
நடமாடும்  
துணைவருடன் 
புல்லும் 
பரிமளப்  பூங்கொடியே !!

நின் 
புது  மலர்த் தாள் 
அல்லும்  பகலும் 
தொழும்  அவர்க்கே,

அழியா  அரசும்,
செல்லும்  தவ நெறியும்,
சிவ லோகமும் 
சித்திக்குமே !!

தொடரும் ....



Tuesday 4 March 2014

அபிராமி அந்தாதி ( 27 )

அபிராமி  அந்தாதி 





பாடல்  27

உடைத்தனை,
வஞ்சப் பிறவியை !

உள்ளம்  உருகும் 
அன்பு 
படைத்தனை !

பத்மபத யுகம்  
சூடும்  பணி  
எனக்கே 
அடைத்தனை !

நெஞ்சத்து 
அழுக்கையெல்லாம், 

நின் 
அருட் புனலால் 
துடைத்தனை !

சுந்தரி  !!

நின் 
அருள் 
ஏதென்று 
சொல்லுவதே !!


தொடரும் ....

Monday 3 March 2014

அபிராமி அந்தாதி ( 26 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  26




ஏத்தும்  அடியவர் 
ஈரேழ்  உலகினையும் 
படைத்தும் ,
காத்தும் ,
அழித்தும் 
திரிபவராம் ;

கமழ்   பூக்கடம்பு  சாத்தும் 
குழல் அணங்கே !

மணம்  நாறும் 
நின்  தாள்  இணைக்கு  
என்  நாத்தங்கு 
புன்மொழி  ஏறியவாறு 
நகை  உடைத்தே !!


தொடரும் ----

Sunday 2 March 2014

அபிராமி அந்தாதி ( 25 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  25



பின்னே  திரிந்து,
உன்  அடியாரைப்  பேணி, 
பிறப்பறுக்க,
முன்னே 
தவங்கள்  முயன்று கொண்டேன் ;

முதல்  மூவருக்கும் 
அன்னே !!

உலகுக்கு,
அபிராமி  என்னும் 
அருமருந்தே !

என்னே! 
இனி  
உன்னை யான்   மறவாமல் 
நின்று 
ஏத்துவனே !!

 தொடரும் ....




அபிராமி அந்தாதி ( 24 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  24


மணியே !
மணியின்  ஒளியே !

ஒளிரும் 
மணி புனைந்த 
அணியே !

அணியும்  அணிக்கு 
அழகே !

அணுகாதவர்க்குப்   பிணியே !
பிணிக்கு  மருந்தே !
அமரர்  பெருவிருந்தே  !

பணியேன்  ஒருவரை,
நின் 
பத்ம  பாதம் 
பணிந்த பின்னே !!


தொடரும்  ....