Thursday 30 October 2014

அபிராமி அந்தாதி ( 75 )

அபிராமி  அந்தாதி


பாடல்  75




தங்குவர் ,
கற்பகத் தருவின்  நிழலில் ;
தாயார்  இன்றி
மங்குவர் ;

மண்ணில்  வழுவாப்  பிறவியை ,
மால் வரையும்
பொங்குவர் ;

ஆழியும்,
ஈரேழ்  புவனமும் பூத்த  உந்தி
கொங்கிவர்
பூங்குழலாள்  திருமேனி
குறித்தவரே !

தொடரும் .............




Tuesday 28 October 2014

அபிராமி அந்தாதி ( 74 )

அபிராமி அந்தாதி 

பாடல் 74



நயனங்கள்  மூன்றுடை  நாதனும் ,
வேதமும்,
நாரணனும் ,
அயனும் பரவும் 
அபிராமவல்லி  அடியிணையைப்  
பயனென்று  கொண்டவர் ,
பாவையர்  ஆடவும். பாடவும் ,
பொன் சயனம் பொருந்து ,
தமனியக் காவினில்  .... தங்குவரே !

தொடரும்​​​ ___ 


Monday 27 October 2014

அபிராமி அந்தாதி ( 73 )


அபிராமி  அந்தாதி 

பாடல்  73



தாமம்  -   கடம்பு ,

படை  -  பஞ்ச பாணம் , தனுக் கரும்பு ,

யாமம்  - வயிரவர்  ஏத்தும்  பொழுது ,

எமெக்கென்று  வைத்த  சேமம் - 
செங்கைகள் நான்கு ,

ஒளி  - செம்மை ,

அம்மை நாமம்  - திரிபுரை ,

ஒன்றோடு  இரண்டு  நயனங்களே !


தொடரும் -----