Tuesday 23 December 2014


திருவெம்பாவை

பாடல் 5

மால்  அறியா ,
நான் முகனும்  காணா  மலையினை ,
நாம் போலறிவோம்  என்றுள்ள 
பொக்கங்களே  பேசும் 
பாலூறு(ம்)  தேன்வாய்(ப் )  படிறீ  !
கடை  திறவாய் !

ஞாலமே , 
விண்ணே ,
பிறவே அறிவரியான் கோலமும் ,
நம்மை ஆட்கொண்டருளி 
சீராட்டும் சீலமும் பாடி ,
" சிவனே !  சிவனே ! "
என்று ஓலமிடினும் , உணராய் ! 
உணராய் காண் ! 
ஏலக்குழலி !
பரிசேலோர்  எம்பாவாய் !


தோழியர் :  
" திருமாலும், நான்முகனும்  காணமுடியாத  மலையை 
நாம் அறிவோம் என்று ( உணர்ந்தவளைப்போல ) 
பொய்யாகவே பேசிக்கொண்டிருக்கும் ,
பாலும் , தேனும் போன்ற இனிய  சொற்களை உடைய 
வஞ்சகியே !  கதவைத்திற !!

இவ்வுலகமும்,  விண்ணுலகமும் ,
பிறவுலகங்களும்  அறிவதற்கு  அரிய ,
சிவபிரானின்  திருக்கோலத்தையும்,
அவர்  நம்மை  ஆட்கொண்டு ,
நம் குற்றங்களை  போக்கியருளும்  பெருமையையும்  பாடி,
" சிவனே ... சிவனே ! " என்று ,
நாங்கள்  ஓலமிட்ட்டபோதும் ,
சற்றும்   உணர்ச்சி இல்லாமல்  இருக்கின்றாயே !
நீ  உணர்ச்சி அடைவாய் !
மணம் நிறைந்த  கூந்தலை  உடையவளே !
என்கள் தோழியே !
பதில் சொல்வாய் ! 

தொடரும் .............


























No comments:

Post a Comment