Friday 26 December 2014

திருவெம்பாவை

பாடல் 8

கோழி  சிலம்ப,
சிலம்பும்  குறுக்கு எங்கும் !
ஏழில்  இயம்ப ,
இயம்பும்  வெண்சங்கு  எங்கும் !
கேழில்  பரஞ்சோதி ,
கேழில் பரங்கருணை ,
கேழில்  விழுப்பொருள்கள்  பாடினோம் ,
கேட்டிலையோ ?

வாழி,  இதென்ன உறக்கமோ ,
வாய் திறவாய் !
ஆழியான் அன்புடைமை 
ஆமாறும்  இவ்வாறோ  !
ஊழி முதல்வனாய்  நின்ற  ஒருவனை ,
ஏழைப்பங்காளனையே 
பாடேலோர்  எம்பாவாய் !


தோழியர் :
கோழி கூவ, பிற பறவைகளும்  கீச்சிடுகின்றன !
இசைக்கருவிகள்  ஒலிக்க , வெண்சங்கும் ஒலிக்கின்றது !
ஒப்பற்ற பரஞ்சோதியான  பெருமானையும்,
அப்பெருமானின் ஒப்பற்ற பெரும் கருணையையும் ,
ஒப்பற்ற மேன்மையான , சிவம் சாய்ந்த பொருள்களைப் 
பற்றியும் பாடினோம், கேட்கவில்லையா ?

அப்படியென்ன உறக்கமோ , சொல்வாய் !
திருமாலைப் போன்று  பக்தி செய்யும் விதம் இதுவோ !
ஊழிகள்  எல்லாவற்றிற்கும் முன்னரே  தோன்றி 
அழிவில்லாமல்  இருக்கும்  இறைவனையே பாடு !



ÌÕÌ - ÀȨÅ; ²ú - ²Ø ÍÃí¸Ç¡ø ¬É þ¨º(ì¸ÕÅ¢);
§¸ú - ´ôÒ; Å¢Øô¦À¡Õû - §Áý¨Á ¾í¸¢Â ¦À¡Õû; ¬Æ¢ - ºì¸Ãõ;
²¨Æ - ¦Àñ(ºì¾¢).

No comments:

Post a Comment