Thursday 25 December 2014

திருவெம்பாவை 

பாடல்  7

அன்னே...  இவையும் சிலவோ ?
பல அமரர்க்கு உன்னற்கு 
அறியான் ஒருவன் ,
இருஞ்சீரான்  சின்னங்கள் கேட்ப 
சிவனென்றே வாய் திறப்பாய் !
தென்னா  என்னும் முன்னம் 
தீ சேர்  மெழுகு  ஒப்பாய் !

என்னானை,
என் அரையன் , இன்னமுது 
என்று எல்லோமும் சொன்னோம் 
கேள்  பலவேறாய் !
இன்னம்  துயிலுதியோ ?
வன்னெஞ்சப் பேதையர்போல் 
வாளா கிடத்தியால் என்னே துயிலின் ,
பரிசேலோர்  எம்பாவாய் !!



தோழியர் :   அம்மா !  இவையும் உன் குணங்களில் சிலவோ ?
பல தேவர்களின்  நினைத்தலுக்கும்  அரியவனான சிவனின்
சின்னங்களை கேட்டமாத்திரத்தில் , " சிவ , சிவ " என்பாய் !
" தென்னாடுடைய  சிவனே " என்று  ஆரம்பித்த  மாத்திரத்தில் ,
தீயிலிட்ட மெழுகுபோல உருகிடுவாய் !

எம்பெருமானை. " என் அரசே ! இனிய அமுதம் போன்றவனே "
என்று  நாங்கள் எல்லோரும் பலவிதமாய்  சொல்லியும் ,
இன்னம் உறங்குகின்றாயோ ?

உறக்கத்தின் காரணமாக,  வன்மையான் நெஞ்சம் கொண்டவரைப்
போல, சிறு அசைவும் இல்லாமல்  இருக்கின்றாயே !
பதில் சொல்வாய் !

தொடரும்...........































No comments:

Post a Comment