Wednesday 24 December 2014

திருவெம்பாவை  

பாடல்  6


மானே !
நீ  நென்னலை ,
" நாளை  வந்துங்களை 
  நானே  எழுப்புவன் "  என்றலும் ,
நாணாமே  போன திசை  பகராய் !
இன்னும் புலர்ந்தின்றோ ?

,வானே , நிலனே ,
பிறவே பிறவரியான் ,
தானே  வந்து 
எம்மை தலையளித்து ,  
ஆட்கொண்டருளும் 
வான் வார்  கழல் பாடி வந்தோர்க்கு ,
உன் வாய்  திறவாய் !
ஊனே  உருகாய் !
உனக்கே  உறும் !

எமக்கும் , ஏனோர்க்கும் ,
தம் கோனை ,
பாடேலோர்  எம்பாவாய் !



தோழியர் :

மானைப் போன்று  அழகியவளே !
நீ  நேற்று , "  நாளை , நானே  வந்து உங்களை  எழுப்புவேன்"
என்று கூறி விட்டு, வெட்கமில்லாமல்  இன்று  எங்கு
போய்விட்டாய் ? இன்னுமா  பொழுது புலரவில்லை ?

வானுலகமும், பூமியும், பிற எல்லாமும்  அறிவதற்கு
அரிய  சிவபெருமான் , தானே வந்து ,  கருணையுடன் நம்மை
ஆட்கொள்கிறான் !  சிவனின், வானென  நெடிதுயர்ந்த
கழலடிகளை  பாடி வந்த  எமக்கு பதில் சொல்வாய்  !
சிவனை , உடல் உருக  தொழுவாய் !

இவ்வாறு  இருப்பது உனக்குத்தான்  பொருந்தும் !

எங்களுக்கும், மற்ற எல்லோருக்கும்  தலைவனாய்
இருக்கும்  சிவபிரானைப்  பாடுவாய் !!



¦¿ýÉ¨Ä - §¿üÚ; ¾¨ÄÂÇ¢òÐ - ¸Õ¨½Üà §¿¡ì̾ø;
°ý - ¯¼ø.

No comments:

Post a Comment