Saturday 5 March 2016


திருப்புன்கூர்
இறைவன் பெயர்  :  சிவலோகநாதர்
இறைவி பெயர்  :  சௌந்தர நாயகி, சொக்கநாயகி
வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில்
மேற்கே 3 கி.மி. சென்றால் 
ஒருபுறம் திருப்புன்கூர் கைகாட்டியும்,
 மறுபுறம் திருப்புன்கூர் சிவலோக நாதசுவாமி கோயில் என்ற வளைவும்  உள்ளது.
 அதனுள் - அச்சாலையில் 1.5 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம்.
சாலை ஓரத்திலேயே கோயில் 
உள்ளது. 
கோயில் வரை வாகனங்கள் செல்லும்.
இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும்,
மாலை 4 மணி முதல்  
இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

புங்க மரத்தடியின் கீழே சிவபெருமான் தரிசனம் கொடுப்பதால
திருப்புன்கூர் என்று இத்தலம் வழங்கப்படுகிறது.
திருநாளைப் போவார் நாயனார் (நந்தனார்) தம்மை நேராக தரிசனம் செய்து
வணங்கும் பொருட்டு இத்தலத்து  
இறைவன் சிவலோகநாதர்
 தமக்கு முன்னால் அமர்ந்திருந்த நந்தியை சிறிது விலகி இருக்குமாறு
 செய்தருளிய  
தலம் திருப்புன்கூர்.
 நந்தனார் கீழ் குலத்தில் பிறந்தவராதலால் ஆலயத்திற்குள் செல்வதற்கு
அனுமதி  
இல்லாததால் வெளியில் இருந்தே வழிபடுவார். 
அப்போது இறைவன் முன் இருக்கும் நந்தி
நன்றாக 
அவர் இறைவனைப் பார்க்க முடியாமல் மறைக்கும்.
 அதற்காக கவலைப்பட்டு ஆதங்கப்பட்ட அவருக்கு 
தரிசனம் கொடுக்க நந்தியை விலகச் சொல்லி
நந்தனாரின் பக்தியை உலகிற்கு எடுத்துக் காட்டிய தலம். 
எல்லா சிவன் கோவில்களிலும் உள்ள நந்தியின் நாக்கு வெளியில் தெரியும்படி இருக்கும்.
 ஆனால்  
நந்தனாருக்காக விலகிய இங்குள்ள நந்தியின் நாக்கு வெளியில் தெரிவதில்லை
.இங்குள்ள நந்திகேஸ்வரர்  மிகவும் அழகிய வேலைப்பாடுடன் 
ஒரே கல்லில் சிற்பமாக வடிக்கப்பட்ட சிறப்புடையதாகும். மேலும் 
இத்தலத்தில் ஆலயத்தின் மேற்புறம் உள்ள ரிஷப தீர்த்தம்
 நந்தனாருக்காக விநாயகர் ஒரே இரவில் 
வெட்டிய குளம் என்ற பெருமையுடையதாகும்.

கோவில் அமைப்பு: மூவர் பாடல் பெற்ற தலங்கள் வரிசையில் ஒன்றான இவ்வாலயம்
ஒரு 5 நிலை  
இராஜகோபுரத்துடனும், 2 பிராகாரங்களுடனும் காட்சி அளிக்கிறது.
 கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் 
விசாலமான திறந்த முற்றவெளி உள்ளது.
வெளிப்பிராகாரத்தில் குளம் வெட்டிய விநாயகர் சந்நிதியும், 
சுப்பிரமணியர் சந்நிதியும் தலமரமும் பிரம்மலிங்கமும் உள்ளன.
கவசமிட்ட கொடிமரத்தையும், பெரிய 
நந்தியையும் (சற்று விலகியுள்ளது) 
கடந்து சென்றால் உள் வாயிலை அடையலாம். உள்வாயிலின் மேற்புறத்தில் 
வண்ணச்சுதையில் பஞ்சமூர்த்திகள் காட்சி தருகின்றனர்.
துவார விநாயகரை வணங்கி உள்வாயிலைக் 
ந்தால்
 உள்பிராகாரத்தில் இடப்பால் சூரியன், நால்வருடன் கலிக்காமரும் சேர்ந்த சந்நிதி.
 சுந்தரவிநாயகர்
  சந்நிதி முதலியவை உள்ளன. 

அடுத்துள்ள சோமாஸ்கந்தர் - பெரிய திருமேனி இத்தலத்திற்குரிய தனிச்சிறப்பு -
 தரிசிக்கத்தக்கது. 
அடுத்து சூரியன் அக்கினி வழிபட்ட லிங்கங்கள்.
ஆறுமுகர்சந்நிதி, தத்புருஷ், அகோர, வாமதேவ, சத்யோஜாத 
முகங்களின் பெயரில் அமைந்துள்ள லிங்கபாணங்கள்,
கஜலட்சுமி முதலிய சந்நிதிகள் உள்ளன. 
இடதுபுறம் அம்பாள் சந்நிதி தனியாக வலம் வரும் அமைப்புடன் உள்ளது.
நவக்கிரகம், பைரவர், சந்திரன்  
சந்நிதிகளைத் தொழுது வலம் முடித்துச் சென்றால்
 நேரே சுவாமி சந்நிதி. மூலவர் சற்று குட்டையான பாணத்துடன் காட்சி தருகிறார். 
இங்குள்ள சிவலிங்கம் மண் புற்றினால் ஆன சுயம்பு மூர்த்தியாகும்.
 சுயம்பு 
லிங்கத்தின் மீது குவளை சார்த்தியே காணப்படுகிறார்.
 புணுகு சட்டம் சார்த்தும் நாளில் மட்டும்
 கவசமின்றி 
மூலவரை தரிசிக்கலாம். 
இறைவன் கருவறை கோஷ்டங்களில் நர்த்தனவிநாயகர், பிட்சாடனர், அகத்தியர், 
தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை,
அர்த்தநாரீஸ்வரர், பைரவர் ஆகியோர் உள்ளனர்.
 பிரம்மா, 
இந்திரன், பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதர் மற்றும்
 ஏயர்கோன் கலிக்காம நாயனார், விறல் மீண்டர் ஆகியோர் 
இத்தலத்து இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றிருக்கின்றனர்.
இறைவன் சந்நிதிக்கு இடதுபுறம்
அம்பா
ள்  சொக்கநாயகியின் சந்நிதி தனிக்கோவிலாக
 ஒரு சுற்றுப் பிராகாரத்துடன் அமைந்துள்ளது

சுந்தரர் பதிகம்: ஒருமுறை சுந்தரரும் அவரது நண்பருமான
ஏயர்கோன் கலிக்காம நாயனாரும் இத்தலத்திற்கு 
வருகை புரிந்தனர். அச்சமயம் திருப்புன்கூரும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும்
பல காலமாக மழையின்றி 
இருந்ததால் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டனர்.
 இப்பகுதியை அரசாண்டு வந்த மன்னரிடம் 12 வேலி நிலம் 
ஆலயத்திற்குக் கொடுத்தால் மழை பெய்யும் என்று சுந்தரர் கூற அரசனும் சம்மதித்தான்.
அதன்படி சுந்தரர்  
பதிகம் பாடி மழை பெய்யச் செய்தருளி
 12 வேலி நிலமும், பிறகு விடாது பெய்த மழையை நிறுத்த
12 வேலி  
நிலமும் மன்னனிடம் பெற்று இந்த திருப்புன்கூர் கோவிலுக்குச் சேர்த்தார்.

இந்த வரலாற்றை சுந்தரர் "அந்தணாளன் உன அடைக்கலம் புகுந்த"
என்று தொடங்கும் தனது பதிகத்தின் 
2-வது பாடலில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.
வையகம் முற்றும் மாமழை மறந்து
வயலில் நீர்இலை மாநிலம் தருவோம்
உய்யக் கொள்கமற் றெங்களை என்ன
ஒளிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும்
பெய்யும் மாமழைப் பெருவெள்ளம் தவிர்த்துப்
பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளும்
செய்கை கண்டுநின் திருவடி அடைந்தேன்
செழும்பொ ழிற்றிருப் புன்கூருளானே.
சிவபெருமான் திரிபுரத்தை எரித்தபோது அழியாது பிழைத்த
அசுரர் மூவரில் இருவரை தனது திருக் கோயிலின் 
வாயில் காவலராகும்படி பணித்தபின்பு,
மற்றொருவனை தான் தடனம் ஆடும்பொது அழகிய மத்தளத்தை 
முழக்கும்படி அருள்செய்தார்.
சுந்தரர் தனது பதிகத்தின் 8-வது பாடலில் இதைக் குறிப்பிடுகிறார். 
திரிபுர அசுரர்களுக்கு அருள் செய்ததை அறிந்து அடியேன் உன் திருவடியை அடைந்தேன்,
என்னை ஏற்றுக் 
கொண்டருள் என்று தனது பாடலில் இறைவனை வேண்டுகிறார்.


மூவெயில் செற்ற ஞான்றுய்ந்த மூவரில்
இருவர் நின்திருக் கோயிலின் வாய்தல்
காவ லாளர்என் றேவிய பின்னை
ஒருவன் நீகரி காடரங் காக
மானை நோக்கியோர் மாநடம் மகிழ
மணிமு ழாமுழக் கவருள் செய்த
தேவ தேவநின் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே
இத்தலத்திலுள்ள நடராச சபையில் உள்ள நடராச வடிவம் கலையழகு வாய்ந்தது.
இத்தல
த்தில் சுந்தரர் பதிகத்தில் கூறியபடி 
நடராஜப் பெருமான் பாதத்தில் ஓர் உருவம் அமர்ந்து தன் நான்கு கரங்களாலும் 
பஞ்சமுக வாத்யத்தை அடித்து மணிமுழா முழக்குவதைக் காணலாம்.
 ( திருச்சிற்றம்பலம்  )

திருவதிகை
இறைவன் பெயர்  :  அதிகை வீரட்டேஸ்வரர்
இறைவி பெயர்    :  திரிபுரசுந்தரி
இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் 
மாலை 4-30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்
தல புராண வரலாறு:
சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட எட்டு தலங்களில் முக்கியமான தலம் திருவதிகை.
அட்ட வீரட்டானத் 
தலங்களில் ஒன்றாகத் திகழும் திருவதிகையில் தான் சிவபெருமான்
 திரிபுர சம்ஹாரம் செய்தார். வித்யுந்மாலி,  தாருகாட்சன், கம்லாட்சன் என்ற
மூன்று அசுரர்கள் முறையே
 பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் மூன்று  கோட்டைகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர்.
 இந்த கோட்டைகளுக்கு விமானம் போல் நினைத்த இடங்களுக்குச் 
செல்ல வசதியாக சிறகுகளும் இருந்தன. இந்த முப்புரங்களையும் வைத்துக் கொண்டு
இந்த அசுரர்கள் 
தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர்.
 தேவர்கள் அசுரகள் தொல்லை பொறுக்கமுடியாமல் 
சிவபெருமானிடம் முறையிட்டனர். மூன்று அசுரர்களையும் அழிக்க
சிவபெருமான் பூமியைத் தேராக்கி, 
நான்கு வேதங்களையும் குதிரைகளாக்கி,
பிரம்மாவை சாரதியாக்கி,
சூரிய சந்திரர்களை சக்கரங்களாக்கி
மற்ற 
எல்லா உலகப் படைப்புகளையும்
 போர் புரிவதற்கான ஒவ்வொரு உறுப்பாகி புறப்பட்டார்.
இச்சமயம் ஒவ்வொரு  
உறுப்பும் தன்னால் தான் முப்புரங்களையும்
 சிவபெருமான் வெல்லப் போகிறார் என்று நினைத்து
கர்வம்  
கொள்ளத் தொடங்கின.
இறைவன் இவ்வாறு ஒவ்வொருவரும் கர்வம் கொண்டிருப்பதைக் கண்டார்.
தன் பங்கு இல்லாமல் 
இப்படையில் எந்த ஒரு பயனும் இல்லை
 என்று அவர்களுக்குப் புரிய வைக்க நினைத்து,
தேவர்களின்  
செருக்கு அடங்கப் புன்னகையும்
,சிவபூஜை தவறாத திரிபுர அசுரர்கள் உய்யுமாறு தண்ணகையும்,
 சிவபூஜை 
தவறிய முப்புரவாசிகள் மடியுமாறு வெந்நகையும் 
ஆகிய இம்மூன்றையும் இத்தல சிவபெருமான் செய்தார். 
அவர் சிரித்த உடனேயே கோட்டைகள் மூன்றும் பொடிப்பொடியாக பொசுங்கிப் போயின.
இச்சம்பவம் நடந்த 
இடம் தான் திருவதிகை.

திருநாவுக்கரசர்:
 திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூர் என்ற ஊரில் புகழனார் மாதினியார் தம்பதிகளுக்கு 
மகளாக திலவதியும், மகனாக மருள்நீக்கியாரும் பிறந்தனர்.
மருள்நீக்கியார் வளர்ந்தவுடன் சமண சமயத்தில் 
ஈடுபாடு கொண்டு சமண சமயத்தைச் சார்ந்து தருமசேனர் என்று பெயரோடு வாழ்ந்து வருகிறார்.
தமக்கை  
திலவதியாரோ தனக்கு மணம் புரிய நிச்சயிக்கப்பட்ட
 கலிப்பகையார் போரில் இற்ந்துபோக,
இனி தனக்கு 
திருமணம் வேண்டாம் என்று வெறுத்து சைவ சமயம் சார்ந்து
 இறைப்பணி செய்து வாழ்ந்து வருகிறார்.
 தம்பி  
சமண மதத்தில் இருந்து விலகி சைவ சமயம் சார
 அருள்புரிய வேண்டி சிவபெருமானிடம் முறையிடுகிறார். 
இந்நிலையில் தம்பி தருமசேனரை கொடிய சூலைநோய் தாக்குகிறது.
சூலைநோயின் கொடுமை தாங்க 
முடியாமல்
 தம்பி துன்பப்படுவதைக் கண்ட திலகவதி
திருவதிகை இறைவனிடம் கூட்டிச் சென்று அங்குள்ள 
திருநீறை அவருக்குப் பூசி இறைவன் மேல் மனமுருகிப் பாடச் சொல்கிறார். அவரும்

கூற்றாயின வாறு விலக்ககிலீர்
  கொடுமைபல செய்தன் நான் அறியேன்
ஏற்றாய அடிக்கே இரவும் பகலும்
  பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாது என் வயிற்றின் அகம் படியே
  குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதி கைக்கெடில
  வீரட்டானத் துறை அம்மானே
என்ற பாடலுடன் தொடங்கும் பதிகத்தைப் பாடி சூலை நோய் நீங்கப் பெற்றார்.
மேலும் நாவுக்கரசர் என்று  
சிவபெருமானால் அழைக்கப்பட்டு 
தருமசேனராக இருந்தவர் திருநாவுக்கரசர் என்று சிவபெருமான் சூட்டிய  திருநாமத்துடன்
 சைவ சமயத்திற்குப் பெரும் தொண்டு செய்யத் தொடங்கினார்.
 தனது சூலை நோய் நீங்கப் 
பாடிய பதிகமே இவர் பாடிய முதல் பதிகமாகும்.
கோவில் அமைப்பு:
கோவில் சுமார் 7 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு பெரிய கோவிலாகும்.
கிழக்கு நோக்கிய ராஜகோபுரம்  
7 நிலைகளுடனும், 7 கலசங்களுடனும் காட்சி தருகிறது.
 கோயிலுக்கு முன்னால் பதினாறுகால் மண்டபம் உள்ளது. 
இதைத் திருநீற்று மண்டபம் என்றழைக்கிறார்கள்.
இம்மண்டபத் தூண்களில் ரிஷபாரூடர், அப்பர், மயில் வாகனன்  
முதலிய சிற்பங்களும், 
இக்கோயிலைத் திருப்பணி செய்வித்த செட்டியார் சிற்பங்களும் உள்ளன.
 கோபுர 
வாயிலின் இரு பக்கமும் நாட்டியக் கலையின்
 108 தாண்டவ லட்சணங்களை விளக்கும் வகையில்
 பெண்கள் 
அழகிய சிற்பங்களாகக் காட்சி அளிக்கின்றனர்.
 வலப்பக்கத்தில் சற்று உயரத்தில் திரிபுமெரித்த கோலம்
மிக  
அழகாக வடிக்கப்பட்டுள்ளது.
 அதன் கீழ் கஜசம்ஹாரகோலம்.
கோபுர வாயில் வழியாக உள்ளே நுழந்தவுடன் 
உட்புறத்தில் மற்றொரு பதினாறுகால் மண்டபம் உள்ளது.
திறந்த வெளி முற்றத்தின் தென்பக்கம் சங்கர  
தீர்த்தமும்,
 வடப்பக்கம் 5 அடி உயரமுள்ள பத்மாசனக் கோலத்தில் காணப்படும்
ஒரு புத்தர் சிலையும் உள்ளன.  
2வது கோபுர வாயிலின் வெளிப்புறம் விநாயகர், கொடிமரம், பலிபீடம் ஆகியவை உள்ளன. 
5 நிலைகளையுடைய இரண்டாவது கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன்
ஒரு பெரிய நந்தியின்  
உருவசிலைக் காணப்படுகிறது. 
ஒருபுறம் முருகப் பெருமானும், மறுபுறம் கணபதியும் காட்சியளிக்கின்றனர்.
 2வது சுற்றின் தென்புறத்தில் திருநாவுக்கரசருக்கும்,
அவர் தமக்கை திலகவதிக்கும் தனித் தனியாக சந்நிதி  
உள்ளது.
 அதற்கடுத்து பைரவர், சனீஸ்வரர், மற்றும் துர்க்கையம்மன் சந்நிதிகள் உள்ளன.
 அதன்பின்  
இறைவி பெரியநாயகி சந்நிதி இருக்கிறது
. அம்பிகையின் கோவில் வாசலில் இருந்து
இறைவி சந்நிதி  
விமானத்தைக் காணலாம். 
விமானத்தில் உள்ள சுதை வேலைப்பாடு சிற்பங்கள்
பல வண்ணங்களில்  
நம் கருத்தைக் கவரும்.
 இவைகளில் பிரச்சித்தமான வடிவம் திரிபுராந்தகர் சிற்பம்.
12 திருக்கரங்கள்,
சூலம் 
ஏந்திய கை ஒன்று, 
வில்லேந்திய கை ஒன்று,
ஒரு கால் தேர்த்தட்டிலும், மற்றொரு காலை உயர்த்தியும் .
வில் வளைத்து நிற்கிறார்

3வது சுற்றில் தான் மூலவர் அதிகை வீரட்டேஸ்வரர் சந்நிதி இருக்கிறது.
கருவறையில் காட்சி அளிக்கும்  
வீரட்டேஸ்வரர்
 16 பட்டைகளுடன் கூடிய சுயம்பு லிங்கம் ஆவார்.
இவருக்குப் பின்னால் கருவறைச் சுவற்றில்
 பார்வதி, சிவன் கல்யாணத் திருக்கோலம் காட்சி தருகிறது.
மூலஸ்தானத்தின் மேல் உள்ள விமானம்
பல்லவர்  
காலத்தைச் சார்ந்தது.
 இறைவன் கருவறை விமானம் நிழல் பூமியில் சாயாதபடிக் கட்டப்பட்டுள்ளது.
 கருடன்,  
பிரம்மா, திருமால், பஞ்சபாண்டவர் ஆகியோர்
 இத்தலத்தில் வீரட்டேஸ்வரரை பூஜித்திருக்கின்றனர்.
உள் சுற்றின் தென்மேற்கே உள்ள பஞ்சமுக லிங்கம் காணவேண்டிய ஒன்று.
இதுவம் பல்லவர் காலத்தைச்  
சார்ந்தது.
 இத்தகைய பஞ்சமுக லிங்கம் தமிழ்நாட்டில் வேறெங்கும் காண முடியாது.
மூன்று திக்குகளை  
நோக்கி நானகு முகங்கள் உள்ளன.
ஒரு முகம் மேல் நோக்கி உள்ளதாக ஐதீகம்.
எனவே பஞ்சமுக லிங்கம்  
என்று கூறுவர்.
 இது ஒரு அரிய தரிசனம் ஆகும்.
வரிசையாகப் பல சிவலிங்கத் திருமேனிகள் உள்ளன. 
யாகசாலை, நவக்கிரக சந்நிதிகளையடுத்து, நடராச சபை உள்ளது.
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார்.
திருப்புகழில் இத்தலத்து  
முருகன் மீது 2 பாடல்கள் உள்ளன.
 இத்தலத்தில் ஆறுமுகப் பெருமான் தனது தேவியர் இருவருடன்  எழுந்தருளியுள்ளார்
. உற்சவரும் தன் இரு தேவியருடன் சணமுகப் பெருமானாகக் காட்சி தருகிறார்.
திருநாவக்கரசர் உழவாரப்பணி செய்த இத்தலத்தை மிதிக்க அஞ்சி
சுந்தரர் அருகிலிருந்த சித்தவடமடத்தில் .
தங்கி
 இத்தலப் பெருமானை வழிபட்டார்.
சுந்தரர் இரவு மடத்தில் தூங்கிக் கொண்டு இருந்த போது
 அவரின்  
மேல் யாரோ காலால் இடிப்பது தெரிந்து
 சுந்தரர் நகர்ந்து படுத்தார்.
மீண்டும் யாரோ அவர் தலையில் கால்  
படும்படி படுக்க
, சுந்தரர் எழுந்து காலால் தலையை தீண்டியவரை கடுமையாகப் பேச,
பின் இறைவன் தான்  
இவ்வாறு திருவிளையாடல் செய்துள்ளார்
 என்பதைப் புரிந்து கொண்டு அவரை வணங்கினார்.
 இவ்வாறு  
சுந்தரர் இறைவனிடம் திருவடி தீட்சை பெற்றதும்,
 பல்லவனான மகேந்திர வர்மனின் மனத்தை மாற்றிச் 
சமணபள்ளிகளை இடித்துக் குணபரவீச்சரம் என்ற கோவிலை எழுப்பச் செய்ததும்
இத்தலத்தின்  
பெருமையைப் பறைசாற்றும் நிகழ்ச்சிகளாம்


திருவெண்ணைநல்லூர்
இறைவன் பெயர்  :  தடுத்து ஆட்கொண்ட நாதர், கிருபாபுரீஸ்வரர்,
                                           வேணுபுரீஸ்வரர்
இறைவி பெயர்  :  வேற்கண்ணி அம்மை, மங்களாம்பிகை
திருக்கோவிலூரில் இருந்து தென்கிழக்கே சுமார் 20 கி.மி. தொலைவிலும்,
விழுப்புரத்திலிருந்து 22 கி.மீ. 
தொலைவிலும் பெண்ணையாற்றின் தென்கரையில்
 திருவெண்ணைநல்லூர் தலம் அமைந்துள்ளது. 
திருக்கோவிலூரில் இருந்து அரசூர் செல்லும் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். 
இவ்வாலயம் தினந்தோறும் காலை 6-00 மணி முதல் பகல் 11 மணி வரையிலும்,
மாலை 5-00 மணி  
முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

ஆலய தொடர்புக்கு:    93456 60711 
இத்தலத்தில், இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார். 
கிழவராக வந்து , சிவா லிங்கத்தில் ஐக்கியமாகும் முன் , கருவறை வாசலில் 
சிவபெருமான் கழற்றி வைத்த பாதுகைகள் இன்றும் இத்தலத்தில் உள்ளது.
சுந்தரருக்கும், கிழவராக வந்த சிவபெருமானுக்கும் பெரியோர்களால்,
பஞ்சாயத்து நடத்தப்பட்ட மண்டபம் இன்றும்  
உள்ளது.
 பரமன் சாய்ந்திருந்த தூண் இன்றும் வெதுவெதுப்பாக உள்ளது.
அருச்சுனனுக்கு மகப்பேறு அளித்த விஜய லிங்கம் உள்ளது.
தேவேந்திரன் பூஜித்த சுந்தர லிங்கம் உள்ளது.
மஹாவிஷ்ணு பூஜித்த சங்கர லிங்கம் உள்ளது.
தன் மீது திருப்புகழ் பாடிய அருணகிரிநாதருக்கு , முருகன் மயிலோடு நடனமாடி
காட்சி தந்த திருத்தலம் இது.
தருமனும், பாஞ்சாலியும் தனித்திருந்ததை பார்த்ததால் உண்டான பாவத்தை ,
அருச்சுனன், இங்கு இறைவனை நோக்கி தவமிருந்து போக்கிக் கொண்டான்.
கருவுற்ற பசுவை வேள்வி செய்த பாவத்தை, வித கோத்திரர் எனும் அந்தணர் ,
இங்கு வந்து அருள்துறை தீர்த்தத்தில் 
நீராடி, 
இறைவனை பாடி பணிந்து போக்கிக் கொண்டார்.

மகிஷனை வதம் செய்த ஆக்ரோஷம் தீர நதியில் குளித்து , மங்களம் பெற்றதால் ,
அம்பிகைக்கு மங்களாம்பிகை  
என்று பெயர் .
 அம்பிகை , நான்கு திருக்கரங்களுடன் , நின்ற கோலத்தில் அருள் புரிகிறார்.
சங்கநிதி, பதும நிதி, ஸ்ரீ சக்கரத்துடனும்,
சிம்ம வாகனத்துடனும் இருக்கும் 
அம்பிகையை தரிசனம் செய்வது என்பது,
முற்பிறவியின் பயனே !
தல புராணம் 
திருமண நாளன்று, திரு  நாவலூரில் திருமணக்கோலத்தில் இருந்த சுந்தரரை,
ஈசன் தடுத்து ஆட்கொள்கிறார். 
சுத்தரருக்கும், சிவபெருமானுக்கும் வழக்கு நடந்த இடம் இதுவே.
இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட சுந்தரர், 
" பித்தா பிறை சூடி " என்ற புகழ்பெற்ற பாடலை பாடிய தம் இதுவே. 
தாருகாவனத்து முனிவர்கள் இறைவனை கொல்ல ,
வேள்வியில் தோன்றிய யானையை ஏவினர். 
அவர்கள் எண்ணம் ஈடேரவில்லை.
அவர்கள் ஆணவம் அழிந்து,
இத்தலத்தில், இறைவனை நோக்கி தவம் புரிந்தனர். 
இறைவனும், அவர்களின் தவறை மன்னித்து அருள் புரிந்தார்.
எனவே இத்தலம் அருள் துறை என பெயர் பெற்றது. 
பித்தா பிறைசூடீ பெருமானே அருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் - பெண்ணைத் தென்பால்  வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள்
அத்தா உனக் காளாய் இனி அல்லேன் எனலாமே. 
திருப்புகழ்
தனதன தத்தன தனதன தத்தன
     தனதன தத்தன தனதன தத்தன
          தனதன தத்தன தனதன தத்தன ...... தனதான

......... பாடல் .........
பலபல தத்துவ மதனையெ ரித்திருள்
     பரையர ணப்படர் வடவன லுக்கிரை
          படநட நச்சுடர் பெருவெளி யிற்கொள ...... விடமேவிப்
பவனமொ ழித்திரு வழியைய டைத்தொரு
     பருதிவ ழிப்பட விடல்கக னத்தொடு
          பவுரிகொ ளச்சிவ மயமென முற்றிய ...... பரமூடே
கலகலெ னக்கழல் பரிபுர பொற்பத
     வொலிமலி யத்திரு நடனமி யற்றிய
          கனகச பைக்குளி லுருகிநி றைக்கட ...... லதில்மூழ்கிக்
கவுரிமி னற்சடை யரனொடு நித்தமொ
     டனகச கத்துவம் வருதலு மிப்படி
          கழியந லக்கினி நிறமென விற்றுட ...... லருள்வாயே
புலையர்பொ டித்தளும் அமணரு டற்களை
     நிரையில்க ழுக்களி லுறவிடு சித்திர
          புலவனெ னச்சில விருதுப டைத்திடு ...... மிளையோனே
புனமலை யிற்குற மகளய லுற்றொரு
     கிழவனெ னச்சுனை தனிலவ ளைப்புய
          புளகித முற்றிபம் வரவணை யப்புணர் ...... மணிமார்பா

மலைசிலை பற்றிய கடவுளி டத்துறை
     கிழவிய றச்சுக குமரித கப்பனை
          மழுகொடு வெட்டிய நிமலிகை பெற்றருள் ...... முருகோனே
மகிழ்பெணை யிற்கரை பொழில்முகில் சுற்றிய
     திருவெணெய் நற்பதி புகழ்பெற அற்புத
          மயிலின்மி சைக்கொடு திருநட மிட்டுறை ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
பலபல தத்துவம் அதனை எரித்து இருள் பரை அரணப் படர்
வட அனலுக்கு இரை பட ... பலபல தத்துவ சேஷ்டைகளையும்,
அஞ்ஞான இருளையும் எரித்து, சிவசக்தியே காவலாக துக்கங்களை
வடவா முகாக்கினிக்கு இரையாகும்படி ஆக்கி,
நடநச் சுடர் பெரு வெளியில் கொ(ள்)ள இடம் மேவி பவனம்
ஒழித்து இரு வழியை அடைத்து ... நடன ஜோதியை பரந்த ஆகாச
வெளியில் கண்டு கொள்ளும்படியாக (விந்து நாதம் கூடும்) முகப்பில்
சேர்ந்து, வாயுவை அடக்கி, இடகலை, பிங்கலை* என்ற இரண்டு
வழிகளையும் மாற்றி அடைத்து,
ஒரு பருதி வழிப் படவிடல் ககனத்தொடு பவுரி கொ(ள்)ளச்
சிவமயம் என முற்றிய பரம் ஊடே ... ஒப்பற்ற சூரிய ஜோதியின்
பிரகாச நிலையில் அமைந்து, ஆகாய வெளியில் நடனம் கொள்ள சிவ
மயமாய் முற்றும் பரந்த பர வெளியில்,
திருவெண்ணைநல்லூர் (  5 )
கலகல எனக் கழல் பரிபுர(ம்) பொன் பத ஒலி மலியத் திரு
நடனம் இயற்றிய கனக சபைக்குளில் உருகி நிறைக் கடல்
அதில் மூழ்கி ... கலகல என்று கழலுகின்ற சிலம்பும் அழகிய திருவடியின்
ஒலி நிரம்ப, திரு நடனம் புரிந்த பொன் அம்பலத்தில் உருகி, நிறைந்த
சுகானந்தக் கடலில் முழுகி,
கவுரி மின்னல் சடை அரனொடு நித்தமொடு அனக
சகத்துவம் வருதலும் இப்படி கழிய நலக்கு இனி நிறம் என்
நவிற்று உடல் அருள்வாயே ... பார்வதி தேவி மின்னலை ஒத்த
சடையையுடைய சிவபெருமான் ஆகியவரோடு தினந்தோறும் குற்றமற்ற
உலக தத்துவமே நீயாகத் தோன்றும் நிலை வந்து கூடவும், இவ்வாறு
கழியும்படியான நன்மையால், இனி புகழொளி எனக் கூறப்படும் உடலை
எனக்குத் தந்தருளுக.
புலையர் பொடித்தளும் அமணர் உடல்களை நிரையில்
கழுக்களில் உற விடு சித்திர புலவன் எனச் சில விருது
படைத்திடும் இளையோனே ... இழிந்தவர்களும், திருநீற்றை
விலக்கித் தள்ளுபவர்களும் ஆகிய சமணர்களின் உடல்களை கழு முனை
வரிசைகளில் பொருந்தவிட்டவனும், சித்திரக் கவி பாடவல்ல புலமை
கொண்டவன் என்று சில வெற்றிச் சின்னங்களைப் பெற்றவனுமாகிய
(திருஞானசம்பந்தர் என்னும்) இளையவனே,

புன மலையில் குற மகள் அயல் உற்று ஒரு கிழவன் எனச்
சுனை தனில் அவள் ஐப் புய(ம்) புளகிதம் உற்று இபம் வர
அணையப் புணர் மணி மார்பா ... தினைப் புனம் உள்ள வள்ளி
மலையில் குறப் பெண் வள்ளியின் பக்கத்தில் சென்று, ஒரு கிழவன்
என வேடம் பூண்டு, சுனையில் அவளுடைய அழகிய புயத்தை
புளகாங்கிதத்துடன், யானை வந்து எதிர்ப்பட, தழுவிப் புணர்ந்த அழகிய
மார்பனே,
மலை சிலை பற்றிய கடவுள் இடத்து உறை கிழவி அறச் சுக
குமரி தகப்பனை மழு கொ(ண்)டு வெட்டிய நிமலிகை பெற்று
அருள் முருகோனே ... மேரு மலையை வில்லாகப் பிடித்த
சிவபெருமானது இடது பாகத்தில் இருக்கின்ற உரிமை வாய்ந்தவள்,
தருமமே புரியும் சுக குமரி, பிதாவாகிய தக்ஷனை மழுவைக் கொண்டு
வெட்டிய தூய்மையானவள் ஆகிய (தாக்ஷாயாணி என்ற) உமாதேவி
பெற்றருளிய முருகோனே,
மகிழ் பெ(ண்)ணையில் கரை பொழில் முகில் சுற்றிய
திருவெ(ண்)ணெய் நல் பதி புகழ் பெற அற்புத மயிலின்
மிசைக் கொடு திரு நடம் இட்டு உறை பெருமாளே. ... மகிழ்ச்சி
தரும் பெண்ணையாற்றின் கரையில், சோலையும் மேகங்களும் சூழ்ந்த
திருவெண்ணெய்நல்லூர்** என்னும் நல்ல ஊரில், புகழ் விளங்க
அற்புதமான மயிலின் மீது வீற்றிருந்து திரு நடனம் புரிந்து விளங்கும்
பெருமாளே.

* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன.
      அதன் சுருக்கம் வருமாறு:
நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு
ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று
பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள்,
சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம
கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும்.
இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும்
ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த
ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி,
ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும்
(இடைகலை, பிங்கலை,சுழுமுனை முதலியன) உள்ளன.
'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.
'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.
சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.
'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும்
ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.
சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால்
மன அமைதி ஏற்படும்.
 ( திருச்சிற்றம்பலம்  )

Saturday 13 February 2016

வீரட்டேஸ்வரர் கோவில்,
திருக்கோவிலூர்
இறைவன் பெயர்  :   வீரட்டேஸ்வரர்
இறைவி பெயர்  :  சிவானந்தவல்லி
இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 
பகல் 12 மணி வரையிலும்
மாலை 4-30 மணி முதல் 
இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும். 
ஆலய தொடர்புக்கு:    93456 60711 
இத்தலத்தில், இறைவன் சுயம்பு மூர்த்தியாக, 
பைரவ சொரூபமாக அருள்பாலிக்கின்றார். 
இது சுக்கிரன் சாப விமோசனம் பெற்ற ஸ்தலம் 
திரிபுர பைரவி உற்பத்தி ஸ்தலம் .
சப்த மாதாக்கள் உற்பத்தியான ஸ்தலம்.
64 பைரவர்கள் , 64  பைரவிகள் உற்பத்தியான ஸ்தலம் .
தல விருட்சம் :  சரக் கொன்றை .
சிவபெருமான் வீரச் செயல்கள் புரிந்த அட்டவீரட்டத் தலங்களில் 
அந்தாகாசுரனை வதைத்த தலம்,
 1
08 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான 

திரிவிக்ரமப் பெருமாள் வைணவ ஆலயமும்,
 ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம் என்று
 சொல்லப்படும் முதல் மூன்று  ஆழ்வார்களின் வரலாற்று நிகழ்ச்சி 
இடம் பெற்ற தலம்,
 தஞ்சை பெரிய கோவிலைக் கட்டியவனும், 
திருமுறை கண்ட சோழன் என்று போற்றபடுவனும்
ஆன ராஜராஜன் பிறந்த தலம் என்று பல 
பெருமைகளை உடையது திருக்கோவலூர் தலம்.

தல வரலாறு:
பார்வதி, சிவபெருமானின் இரு கண்களை ( சூரியன், சந்திரன் )
விளையாட்டாக மூடியதால், எங்கும் இருள் 
சூழ்கிறது. 
அந்த இருளே , அந்தகாசுரன் என்னும் அரக்கனாக உருவெடுக்கிறது.
அந்தகாசுரனை அழிக்க  
சிவபெருமான் யுத்தம் புரியும்போது,
 அசுரனின் தலையில் , கதையால் ஓங்கி அடிக்கிறார். அசுரனின் 
தலையிலிருந்து பீரிட்ட இரத்தம் பூமியில் விழுகிறது.
ஒவ்வொரு துளி இரத்தத்திலிருந்தும் பல அசுரர்கள் 
உற்பத்தி ஆக,  யுத்தம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. 
அசுரர்களின் உற்பத்தியை தடுக்க, உமையவள், காளி சொரூபம் கொண்டு,
அந்தகாசூரனின் தலையிலிருந்து  
விழும் இரத்தத் துளிகளை ,
 கையில் கபாலம் கொண்டு எந்துகிறாள். 
அசுரனின் தலையிலிருந்து வெளிப்பட்ட ரத்தங்கள்,
ரத்தக் கோடுகளாகி , எட்டத் திசையிலும் , குறுக்கும் 
நெடுக்குமாக 8 , 8 ஆக, 64 ( சதுரங்கள் ) பதங்களாக விழுகிறது.
அந்த பதங்களில் , சிவபெருமான் ,   தன் அருளால் 
64 பைரவர்களை உற்பத்தி செய்து, அந்த பதங்களில் இருத்தி,
அசுர உற்பத்தியை தடுத்து, அந்தகாசுரனை வதம்
செய்து, தேவர்களுக்கு அனுக்கிரகம் செய்கிறார்.
( இதுவே, இக்காலத்தில் வாஸ்து சாந்தி என்று கிரக பிரவேச 
காலங்களிலும், வீடு கட்டும் காலங்களிலும் செய்யப்படும் வாஸ்து சாந்தி
தோஷ நிவர்த்தியாகும் ) 
இவ்வாறு , அந்தகனை அழித்து , அஞ்ஞானத்தை நீக்கி , மெய்ஞானத்தை  அருளியவர் ,
வீரட்டானேசுவரர் ஆவார். 
வீரட்டேஸ்வரர் கோவிலும், அம்பாள் சிவானந்தவல்லி கோவிலும்
தனித்தனி கோவில்களாக சுற்று மதிலுடன் 
மேற்கு நோக்கி அருகருகே அமைந்துள்ளன.
சுவாமி கோவிலுக்கு இடதுபுறம் அம்பாள் கோவில் 
அமைந்துள்ளது. இரண்டு கோவில்களுக்கும் 3 நிலை கோபுரங்கள் உள்ளன.
கோபுரங்களுக்கு முன்னால் 
விசாலமான வெளியிடம் உள்ளது


சுவாமி கோவில் கோபுர வழியே உள்ளே நுழைந்ததும் கவசமிட்ட கொடிமரம்,
முன்னால் நந்தி உள்ளதைக் 
காணலாம். வெளிப்பிராகாரத்தில் சந்நிதி ஏதுமில்லை.
 முகப்பு வாயிலில் மேலே பஞ்சமூர்த்திகள்  வைக்கப்பட்டுள்ளன. முன்தூணில்
 இடதுபுறம் மெய்ப்பொருள்நாயனார் சிற்பம் உள்ளது. வலதுபுறம் கணபதியின் 
சந்நிதி உள்ளது. ஒளவையாரால் வழிபடப்பட்ட விநாயகர் இவர். சுந்தரர் வெள்ளை
யானை மீதேறியும்,  
அவரது தோழரான சேரமான் பெருமாள் நாயனார்
 குதிரை மீதேறியும் கைலாயம் செல்லும் போது  ஒளவையாரையும் உடன் வருமாறு
 அழைத்தனர். ஒளவையார் தானும் கயிலை செல்ல எண்ணி அவசரமாக 
பூஜை செய்ய, விநாயகர் காட்சி தந்து பொறுமையாக பூஜை செய்யும் படியும்,
கயிலைக்கு தான் அழைத்துச்  
செல்வதாகவும் அருளினார். இத்தல கணபதியை
 வழிபட்டுக்கொண்டிருந்த ஒளவையார் வழிபாட்டைத் தொடர்ந்து 
விநாயகர் அகவல் பாடி பூஜையை முடித்தார். வழிபாடு முடிந்த பிறகு ஒளவையாரை
தனது  
துதிக்கையால் சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரும் 
கயிலையை அடைவதற்கு முன்பு சேர்த்து விட்டார். 
இவ்வாறு ஒளவையைத் தூக்கிவிட்ட கணபதி இவரே என்பர்.
விநாயகர் சந்ந்திக்கு முன்புறம சுவரில்  
புடைப்புச் சிற்பமாக 
இந்த வரலாறு காணப்படுகிறது. வாயிலின் இடதுபுறம் வள்ளி தெய்வயானை சமேத 
ஆறுமுகப்பெருமான் சந்நிதி உள்ளது.
பக்கத்தில் கஜலட்சுமி சந்நிதியும், நடராசசபையும் உள்ளன.
திருப்புகழ் தலம்:
திருக்கோவிலூர் ஒரு திருப்புகழ் தலமாகும்.
இத்தல முருகப்பெருமானை அருணகிரிநாதர் 
தனது திருப்புகழில் பாடியுள்ளார். ஓரு திருப்புகழ் பாடல் இத்தலத்திற்கு உள்ளது.
இத்தலத்தில் முருகப்பெருமான் 
ஆறுமுகராக ஆறு திருமுகத்துடனும்
 12 திருக்கரங்களுடனும் தேவியர் இருவருடம் மயில் மீது அமர்ந்து 
அருள்பாலிக்கின்றார்.
தலமூர்த்தியாகிய அந்தகாசுர சம்ஹார மூர்த்தி விசேஷமானது. பக்கத்தில்
நரசிங்க முனையரையர், மெய்ப்பொருள் 
நாயனார் ஆகியோரின் உற்சவத்
  உள்ளன. துவாரபாலகரை வணங்கி உள்ளே சென்றால் மூலவர் திருமேனிகள்
வீரட்டேஸ்வரர் சுயம்பு சிவலிங்கத் திருமேனி, பெரிய உருவத்துடன் தரிசனம் தருகிறார்.
கோஷ்ட மூர்த்தங்களாக 
தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும்
 துர்க்கை ஆகியோரைக் காணலாம். துர்க்கை எட்டுக் கரங்களுடன் 
காட்சியளிக்கின்ற நின்ற திருக்கோலம் மிகவும் விசேஷமாகவுள்ளது.
விழிகள் மிகவும் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளன

அம்பாள் கோயில் தனியே 3 நிலை கோபுரத்துடன் உள்ளது.
முன்மண்டபத்தில் இருபுறமும் துவாரகாலகர்களாக 
விநாயகரும் சுப்பிரமணியரும் உள்ளனர்.
சந்நிதிக்கு முன்னால் நந்தி பலிபீடம் உள்ளன. அம்பாள் 
அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்களுடன்
நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகிறாள்.
விநாயகர் அகவல்
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நிறைந்த கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)
இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி

மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை குழாத்துடன் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)
எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி

அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)
 ( திருச்சிற்றம்பலம்  )