Saturday 13 February 2016

வீரட்டேஸ்வரர் கோவில்,
திருக்கோவிலூர்
இறைவன் பெயர்  :   வீரட்டேஸ்வரர்
இறைவி பெயர்  :  சிவானந்தவல்லி
இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 
பகல் 12 மணி வரையிலும்
மாலை 4-30 மணி முதல் 
இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும். 
ஆலய தொடர்புக்கு:    93456 60711 
இத்தலத்தில், இறைவன் சுயம்பு மூர்த்தியாக, 
பைரவ சொரூபமாக அருள்பாலிக்கின்றார். 
இது சுக்கிரன் சாப விமோசனம் பெற்ற ஸ்தலம் 
திரிபுர பைரவி உற்பத்தி ஸ்தலம் .
சப்த மாதாக்கள் உற்பத்தியான ஸ்தலம்.
64 பைரவர்கள் , 64  பைரவிகள் உற்பத்தியான ஸ்தலம் .
தல விருட்சம் :  சரக் கொன்றை .
சிவபெருமான் வீரச் செயல்கள் புரிந்த அட்டவீரட்டத் தலங்களில் 
அந்தாகாசுரனை வதைத்த தலம்,
 1
08 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான 

திரிவிக்ரமப் பெருமாள் வைணவ ஆலயமும்,
 ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம் என்று
 சொல்லப்படும் முதல் மூன்று  ஆழ்வார்களின் வரலாற்று நிகழ்ச்சி 
இடம் பெற்ற தலம்,
 தஞ்சை பெரிய கோவிலைக் கட்டியவனும், 
திருமுறை கண்ட சோழன் என்று போற்றபடுவனும்
ஆன ராஜராஜன் பிறந்த தலம் என்று பல 
பெருமைகளை உடையது திருக்கோவலூர் தலம்.

தல வரலாறு:
பார்வதி, சிவபெருமானின் இரு கண்களை ( சூரியன், சந்திரன் )
விளையாட்டாக மூடியதால், எங்கும் இருள் 
சூழ்கிறது. 
அந்த இருளே , அந்தகாசுரன் என்னும் அரக்கனாக உருவெடுக்கிறது.
அந்தகாசுரனை அழிக்க  
சிவபெருமான் யுத்தம் புரியும்போது,
 அசுரனின் தலையில் , கதையால் ஓங்கி அடிக்கிறார். அசுரனின் 
தலையிலிருந்து பீரிட்ட இரத்தம் பூமியில் விழுகிறது.
ஒவ்வொரு துளி இரத்தத்திலிருந்தும் பல அசுரர்கள் 
உற்பத்தி ஆக,  யுத்தம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. 
அசுரர்களின் உற்பத்தியை தடுக்க, உமையவள், காளி சொரூபம் கொண்டு,
அந்தகாசூரனின் தலையிலிருந்து  
விழும் இரத்தத் துளிகளை ,
 கையில் கபாலம் கொண்டு எந்துகிறாள். 
அசுரனின் தலையிலிருந்து வெளிப்பட்ட ரத்தங்கள்,
ரத்தக் கோடுகளாகி , எட்டத் திசையிலும் , குறுக்கும் 
நெடுக்குமாக 8 , 8 ஆக, 64 ( சதுரங்கள் ) பதங்களாக விழுகிறது.
அந்த பதங்களில் , சிவபெருமான் ,   தன் அருளால் 
64 பைரவர்களை உற்பத்தி செய்து, அந்த பதங்களில் இருத்தி,
அசுர உற்பத்தியை தடுத்து, அந்தகாசுரனை வதம்
செய்து, தேவர்களுக்கு அனுக்கிரகம் செய்கிறார்.
( இதுவே, இக்காலத்தில் வாஸ்து சாந்தி என்று கிரக பிரவேச 
காலங்களிலும், வீடு கட்டும் காலங்களிலும் செய்யப்படும் வாஸ்து சாந்தி
தோஷ நிவர்த்தியாகும் ) 
இவ்வாறு , அந்தகனை அழித்து , அஞ்ஞானத்தை நீக்கி , மெய்ஞானத்தை  அருளியவர் ,
வீரட்டானேசுவரர் ஆவார். 
வீரட்டேஸ்வரர் கோவிலும், அம்பாள் சிவானந்தவல்லி கோவிலும்
தனித்தனி கோவில்களாக சுற்று மதிலுடன் 
மேற்கு நோக்கி அருகருகே அமைந்துள்ளன.
சுவாமி கோவிலுக்கு இடதுபுறம் அம்பாள் கோவில் 
அமைந்துள்ளது. இரண்டு கோவில்களுக்கும் 3 நிலை கோபுரங்கள் உள்ளன.
கோபுரங்களுக்கு முன்னால் 
விசாலமான வெளியிடம் உள்ளது


சுவாமி கோவில் கோபுர வழியே உள்ளே நுழைந்ததும் கவசமிட்ட கொடிமரம்,
முன்னால் நந்தி உள்ளதைக் 
காணலாம். வெளிப்பிராகாரத்தில் சந்நிதி ஏதுமில்லை.
 முகப்பு வாயிலில் மேலே பஞ்சமூர்த்திகள்  வைக்கப்பட்டுள்ளன. முன்தூணில்
 இடதுபுறம் மெய்ப்பொருள்நாயனார் சிற்பம் உள்ளது. வலதுபுறம் கணபதியின் 
சந்நிதி உள்ளது. ஒளவையாரால் வழிபடப்பட்ட விநாயகர் இவர். சுந்தரர் வெள்ளை
யானை மீதேறியும்,  
அவரது தோழரான சேரமான் பெருமாள் நாயனார்
 குதிரை மீதேறியும் கைலாயம் செல்லும் போது  ஒளவையாரையும் உடன் வருமாறு
 அழைத்தனர். ஒளவையார் தானும் கயிலை செல்ல எண்ணி அவசரமாக 
பூஜை செய்ய, விநாயகர் காட்சி தந்து பொறுமையாக பூஜை செய்யும் படியும்,
கயிலைக்கு தான் அழைத்துச்  
செல்வதாகவும் அருளினார். இத்தல கணபதியை
 வழிபட்டுக்கொண்டிருந்த ஒளவையார் வழிபாட்டைத் தொடர்ந்து 
விநாயகர் அகவல் பாடி பூஜையை முடித்தார். வழிபாடு முடிந்த பிறகு ஒளவையாரை
தனது  
துதிக்கையால் சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரும் 
கயிலையை அடைவதற்கு முன்பு சேர்த்து விட்டார். 
இவ்வாறு ஒளவையைத் தூக்கிவிட்ட கணபதி இவரே என்பர்.
விநாயகர் சந்ந்திக்கு முன்புறம சுவரில்  
புடைப்புச் சிற்பமாக 
இந்த வரலாறு காணப்படுகிறது. வாயிலின் இடதுபுறம் வள்ளி தெய்வயானை சமேத 
ஆறுமுகப்பெருமான் சந்நிதி உள்ளது.
பக்கத்தில் கஜலட்சுமி சந்நிதியும், நடராசசபையும் உள்ளன.
திருப்புகழ் தலம்:
திருக்கோவிலூர் ஒரு திருப்புகழ் தலமாகும்.
இத்தல முருகப்பெருமானை அருணகிரிநாதர் 
தனது திருப்புகழில் பாடியுள்ளார். ஓரு திருப்புகழ் பாடல் இத்தலத்திற்கு உள்ளது.
இத்தலத்தில் முருகப்பெருமான் 
ஆறுமுகராக ஆறு திருமுகத்துடனும்
 12 திருக்கரங்களுடனும் தேவியர் இருவருடம் மயில் மீது அமர்ந்து 
அருள்பாலிக்கின்றார்.
தலமூர்த்தியாகிய அந்தகாசுர சம்ஹார மூர்த்தி விசேஷமானது. பக்கத்தில்
நரசிங்க முனையரையர், மெய்ப்பொருள் 
நாயனார் ஆகியோரின் உற்சவத்
  உள்ளன. துவாரபாலகரை வணங்கி உள்ளே சென்றால் மூலவர் திருமேனிகள்
வீரட்டேஸ்வரர் சுயம்பு சிவலிங்கத் திருமேனி, பெரிய உருவத்துடன் தரிசனம் தருகிறார்.
கோஷ்ட மூர்த்தங்களாக 
தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும்
 துர்க்கை ஆகியோரைக் காணலாம். துர்க்கை எட்டுக் கரங்களுடன் 
காட்சியளிக்கின்ற நின்ற திருக்கோலம் மிகவும் விசேஷமாகவுள்ளது.
விழிகள் மிகவும் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளன

அம்பாள் கோயில் தனியே 3 நிலை கோபுரத்துடன் உள்ளது.
முன்மண்டபத்தில் இருபுறமும் துவாரகாலகர்களாக 
விநாயகரும் சுப்பிரமணியரும் உள்ளனர்.
சந்நிதிக்கு முன்னால் நந்தி பலிபீடம் உள்ளன. அம்பாள் 
அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்களுடன்
நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகிறாள்.
விநாயகர் அகவல்
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நிறைந்த கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)
இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி

மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை குழாத்துடன் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)
எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி

அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)
 ( திருச்சிற்றம்பலம்  )

அகஸ்திய மகரிஷியை தரிசிக்க

அகஸ்திய மகரிஷியை தரிசிக்க

மந்திரம் 

ஓம் சிம் பம் அம் உம்  மம் 
மகத்தான அகஸ்தியரே 
என் குருவே  
வா வா 
வரம் அருள்க 
அருள் தருக 
அடியேன் தொழுதேன் 


வழிமுறை 


அமாவாசை அன்று இரவில் , இரவு 8 மணிக்குள்ளாக ,
ஒரு சுத்தமான அறையில் ,
கிழக்கு அல்லது வடக்கு முகமாக  
ஒரு விரிப்பு அல்லது  பலகையை அமைக்கவும்.

அதிலிருந்து 8 அடி தூரத்தில் , நம் கண்களுக்கு நேராக வருமாறு 
ஒரு நெய்தீபம், தாமரை நூலில் எரியவேண்டும்.

தீபத்தின் முன்பக்கம், ஒரு காசி சொம்பில் சுத்தமான நீரை 
நிரப்பி  வைக்க வேண்டும். 

காசி சொம்பின் முன்புறத்தி.ல் , பழங்களை 
நிவேதனமாக வைக்கவும் 

இரவு 8 மணிக்கு , விரிப்பில் அமர்ந்து கொண்டு ,
உதடு பிரியாமல் , மேற்கூறிய மந்திரத்தை , 
அகஸ்தியரின் பெயரை அல்லது 
மூல மந்திரத்தை கூறிவிட்டு , 
சுமார் ஒரு மணி நேரம் ஜெபிக்க வேண்டும்.

9 மணி ஆனதும்,  தீபத்தை வணங்கிவிட்டு , 
காசி சொம்பில் உள்ள தீர்த்தத்தை பருகவும்.
நிவேதனமாக இடப்பட்ட பழங்களை அருந்தவும்.
இரவில் பால் சாதம் உண்ணவும். 

இவ்வாறு தொடர்ந்து 45 நாட்கள்  
( அசைவம் தவிர்த்து, உணவில்  உப்பு, 
புளி , காரம் குறைத்து ) ஜெபித்துவர , 
அகஸ்தியர்  காட்சி தந்தருளுவார். 
அவரை குருவாக ஏற்று ,
வாழ்வில் வளம் காணுங்கள் .

விரதமிருக்கும் இந்த நாட்களில் ( தெரியாமல் கூட )
மது , மாமிசம் சேர்க்கக்கூடாது .  உடலுறவை 
தவிர்க்க வேண்டும். துக்க ஜனன வீடுகளுக்கு 
செல்வதையும் தவிர்க்க வேண்டும்.

முற்பிறவியில்,  கடுமையான பாவங்களைச் 
செய்திருந்தால், இந்த கட்டுரையை  வாசிக்கும் 
சந்தர்ப்பம்கூட அமையாது. ஓரளவு பாபம் 
செய்திருந்தால், கனவில் அகஸ்தியர் தோன்றுவார்.






சித்தர்களை தரிசிக்க 

பெரிய ஞானக்கோவை என்ற புத்தகத்தில் இருந்து 
கிடைத்த தகவல்.

நாம் தரிசிக்க விரும்பும் சித்தர்களைக் காண 
ஓம் சிங் ரங் அங்  சிங் 
என்ற மந்திரத்தை ஜெபிக்க வேண்டும் .

வழிமுறை 

அமாவாசை அன்று இரவில் , இரவு 8 மணிக்குள்ளாக ,
ஒரு சுத்தமான அறையில் ,
கிழக்கு அல்லது வடக்கு முகமாக  
ஒரு விரிப்பு அல்லது  பலகையை அமைக்கவும்.

அதிலிருந்து 8 அடி தூரத்தில் , நம் கண்களுக்கு நேராக வருமாறு 
ஒரு நெய்தீபம், தாமரை நூலில் எரியவேண்டும்.

தீபத்தின் முன்பக்கம், ஒரு காசி சொம்பில் சுத்தமான நீரை 
நிரப்பி  வைக்க வேண்டும். 

காசி சொம்பின் முன்புறத்தி.ல் , பழங்களை 
நிவேதனமாக வைக்கவும் 

இரவு 8 மணிக்கு , விரிப்பில் அமர்ந்து கொண்டு ,
உதடு பிரியாமல் , மேற்கூறிய மந்திரத்தை , 
நாம் காண / தரிசிக்க விரும்பும் சித்தரின் 
பெயரை அல்லது மூல மந்திரத்தை கூறிவிட்டு , 
சுமார் ஒரு மணி நேரம் ஜெபிக்க வேண்டும்.

9 மணி ஆனதும்,  தீபத்தை வணங்கிவிட்டு , 
காசி சொம்பில் உள்ள தீர்த்தத்தை பருகவும்.
நிவேதனமாக இடப்பட்ட பழங்களை அருந்தவும்.
இரவில் பால் சாதம் உண்ணவும். 

இவ்வாறு தொடர்ந்து 90 நாட்கள்  
( அசைவம் தவிர்த்து, உணவில்  உப்பு, 
புளி , காரம் குறைத்து ) ஜெபித்துவர , 
விரும்பிய சித்தர் காட்சி தந்தருளுவார். 
அவரை குருவாக ஏற்று ,
வாழ்வில் வளம் காணுங்கள் .









ரத சப்தமி 

நாளை ரத சப்தமி. 
காலையில் ஸ்நானம் செய்யும்போது , 
தலையில் ஒரு வெள்ளெருக்கு இலையை வைத்து 
கீழ் கண்ட ஸ்லோகத்தை சொல்லியவாறு 
ஸ்நானம் செய்யவேண்டும்.
சப்த சப்த மஹா சப்த 
சப்த த்வீப  வசுந்தரா 
சப்த அர்க  மஹாதேவா 
சப்தமி ரத சப்தமி 

அதேபோல் , 
வலது தோள்பட்டை, 
இடது தோள்பட்டை.
வலது தொடை,
இடது தொடை ,
உந்தி  மற்றும் முதுகு 
ஆகிய இடங்களிலும் வெள்ளெருக்கு இலையை 
வைத்து ஸ்நானம் செய்ய வேண்டும்.

( யாரோ சொல்லியது )

Thursday 4 February 2016

வீரட்டன திருத்தலங்கள் 

கடந்த இரண்டு வருடங்களாக, தை அமாவாசையன்று , திருக்கடையூர் சென்று  அன்னை அபிராமியை தரிசித்து வந்த நானும், என் நண்பரும்,  இந்த வருடமும்  திருக்கடையூர் செல்ல ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தபோது, தற்செயலாக "  இந்த பயணத்தை , அனைத்து வீரட்டான திருத்தலங்களையும் தரிசிக்கும் பயணமாக மாற்றக்கூடாது ? " என்ற எண்ணம் தோன்றியது.
தேவயான விவரங்களை சேகரிக்க ஆரம்பித்தேன் .

காவிரியின் கரைக் கண்டி வீரட்டானம்         
கடவூர் வீரட்டானம் காமரு சீர் அதிகை
மேவிய வீரட்டானம் வழுவை வீரட்டம்
வியன்பறியல் வீரட்டம் விடையூர்திக்கு இடமாம்
கோவல்நகர் வீரட்டம் குறுக்கை வீரட்டம்
கோத்திட்டைக் குடிவீரட்டானம் இவை கூறி
நாவில் நவின்று உரைப்பார்க்கு நணுகச் சென்றால்
நமன்தமரும் சிவன்தமர் என்று அகல்வர் நன்கே.   ( தேவாரம் ) 
உரை :
காவிரியின் கரையிலுள்ள கண்டியூர் வீரட்டானம், 
கடவூர் வீரட்டானம், 
விரும்பத்தக்க புகழினை உடைய அதிகை வீரட்டானம், 
வழுவூர் வீரட்டானம், 
பரப்பு மிக்க பறியலூர் வீரட்டானம், 
இடபத்தை ஊர்தியாக உடைய சிவபெருமானுக்குரிய இடமாகிய
கோவலூர் வீரட்டானம்,
குறுக்கை வீரட்டானம், 
தலைமையும் மேன்மையுமுடைய விற்குடி வீரட்டானம் 
என்னும் வீரட்டானங்கள் எட்டினையும் 
முறைப்பட முன்னர் ஒருமுறை மொழிந்து பின்னர் அம்முறையே நாவில் 
பழகிப் பலகாலும் போற்றுவார்க்கு அருகில் இயமதூதர்கள் ஒருகால் செல்ல 
நேரிடின் இவர் சிவபெருமானுக்கு அடியர் என்று உடனே உணர்ந்து 
அவரைவிட்டு வெகு தொலைவு அகல நீங்குவர் .

எட்டு வீரட்டான திருத்தலங்களையும் கருத்தில் கொண்டு,
மற்றும் சில திருத்தலங்களையும் சேர்த்து ,  ஒரு பயண திட்டத்தை
உருவாக்கியுள்ளோம்.

Feb  - 8 .  திருகோவிலூர் ,
                திருவெண்ணைநல்லூர்.
                திருவதிகை
                கீழப்பெரும்பள்ளம்
                திருவெண்காடு
                திருக்கடையூர் 
Feb  - 9   திருக்கடையூர் திருமெய்ஞானம் ,
               திருப்பறியலூர்
               திருக்குறுக்கை 
               திரு வழுவூர் 
               திருவிற்குடி 
               திரு நாகேச்வரம்
               திருவிடைமருதூர்
               திருவையாறு

பிப்  10  திரு கண்டியூர் 
               திரு  கண்டியூர்  ஸ்ரீ ஹர சாப விமோசன பெருமாள் ஆலயம்
               திருமுது குன்றம் ( விருதாசலம் )
               முகாசா பரூர் ( சித்தர் கோரக்கர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் )

" அவன் அருளாலே  அவன்தாள் வணங்கி "  பின்னர் நான் சேகரித்த
தகவல்களை பகிர்ந்துகொள்கிறேன் .