Monday 6 March 2017


கடலாடி  2

கடலாடி வன்னீஸ்வரர் கோவிலில் இருந்து வந்த வழியே சிறிது தூரம் சென்றால், கரைகண்டீஸ்வரர் கோவிலை அடையலாம். இந்த சாலை புதிதாக அமைக்கப்பெற்றிருப்பதால், சிறிது  கரடு முரடாகவே உள்ளது. கூகுள் வரைபடத்திலும்  காண முடியாது. அருகில் உள்ளவர்களை , கரை கண்டீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பாதை என விசாரித்துக்கொள்ள வேண்டும். 

வயல்களின் ஊடே, வளைந்து நெளிந்து செல்லும் பாதை. வாகனத்தில் இருந்து இறங்கி,  சிறிது தூரம் நடக்கவும் வேண்டியிருக்கும் .

மிக மிக பழமையான கோவில்.  
ஆறுமுகனின் திருவடி பட்ட இடம்.
பாவங்கள் கரைந்த இடம். 


செய்யாரின் வடகரையில் அமைந்துள்ள ஆலயம்.
இறைவன் :  கரைகண்டீஸ்வரர் 
இறைவி     :  பிருஹந்நாயகி 



நன்றி : Google Maps 





எமது  அடுத்த பயணம், செய்யாற்றின் வட கரையில் உள்ள காஞ்சி எனும் திருத்தலத்தை  நோக்கி..........




கடலாடி 

வாசுதேவன்பட்டு  கோவிலில் இருந்து சுமார் 14 km தொலைவில் உள்ள ஊர் ,
கடலாடி.  


சாலை ஓரத்திலேயே அமைந்திருக்கும், இந்த ஊரில், இரண்டு சிவன் கோவில்கள் உள்ளன. ஒன்று, ஊரின் உள்ளே  அமைந்துள்ளது.

இறைவன்   :  வன்னிஸ்வரர் 
இறைவி       :  காமாட்சி  









நன்றி : google Maps 




எங்களின்  அடுத்த பயணம், 
இந்த ஊரின் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் 
கரைகண்டீஸ்வரர்  ஆலயத்தை நோக்கி......






வாசுதேவன்பட்டு 


வாசுதேவன்பட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர்.
செய்யாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. செங்கத்தில் இருந்து போளுர்  செல்லும் சாலையில் சுமார் 24 km தூரத்தில் உள்ளது. இந்த சிற்றுரில் அப்படி என்னதான் விஷேசம் ?

அம்பிகையின் பாதம் பதிந்த இடம் என்பதே விஷேசமல்லவா?

அம்பிகை இங்கு வரக் காரணம், ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு.

காஞ்சிபுரத்தில், தவமிருந்து இறைவனை அடைந்த காமாட்சி, இறைவனிடம் இடப்பாகம் வேண்டுகிறாள். மனமிரங்கிய இறைவனும், அம்பிகையை திருவண்ணாமலை வர பணிக்கிறார். திருவண்ணாமலை நோக்கி பயணிக்கும் அம்பிகை , வாழைப்பந்தல் எனும் இடத்தில் தங்க நேரிடுகிறது. அங்கு இறைவனை பூஜிப்பதற்காக தண்ணீர் தேவைப்படுகிறது. உடன் வந்த முருகனை குறிப்பாக நோக்குகிறாள், அம்பிகை. குறிப்பறிந்த வேலவனும், மேற்கு நோக்கி வேலை எறிந்து,
ஒரு ஆற்றை உருவாக்குகிறார். சேயால் உருவாக்கப்பட்ட ஆறு சேயாறு. பின்னர் மருவி செய்யாறு ஆகிவிட்டது. 

ஆற்றில் வெள்ளம் பருகிவர, தண்ணீரின் நிறம் மாறுபடுகின்றது. காரணத்தை ஆராய்கிறான், வேலவன். வேலை எரிந்து, மலையைப் பிளந்த இடத்தில், தவம் செய்துகொண்டிருந்த ஏழு முனிவர்களின் மரணமே இந்த நிறமாற்றத்திற்குக் காரணம் என்பதை உணர்கிறான், வேலவன். 

இதனால் ஏற்பட்ட தோஷத்தைப் போக்குவதற்காக, சேயாற்றின் வடகரையில், ஏழு சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து , இறைவனை வழிபாட்டு, தன தோஷத்தைக் கரைத்துக் கொள்கிறான், வேலவன். 

முருகனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபடப்பட்ட ஏழு சிவலிங்கங்களும், கரைகண்டீஸ்வரர் என்ற பெயருடன் விளங்குகின்றது. 

முனிவர்களின் இறப்புக்கு, தானும் ஒரு காரணம் என்று கருதிய உமையவள், சேயாற்றின் தென்கரையில் ஏழு சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து தன் பாவங்களையும் போக்கிக்கொள்கிறாள், உமையவள். 

தாயும், சேயும் வணங்கிய இறைனை தரிசிப்பதுதான், எங்கள் குழுவின் நோக்கம்.

இந்த தளங்கள் எல்லாம், சிற்றுர்களில் சரியான கவனிப்பின்றி இருப்பதால், இறைவனை தரிசிக்க சிவராத்திரி தினத்தைத் தேர்ந்தெடுத்தோம், கோவிலை சத்தம் செய்வதற்காகவாது கோவில் திறந்திருக்கும் என்ற நம்பிக்கையில். எங்கள் நம்பிக்கை வீண்போகவில்லை..

இந்த ஊரில், நாங்கள் சென்றபோது, கோவில் மூடி  இருந்தாலும்,  அருகில் இருந்தவர்களை விசாரித்தபோது, அவர்கள் உடனடியாக,  எங்களின்  தரிசனத்திற்கு ஏற்பாடு செய்தனர். 

செய்யாரின் தென்கரையில், அம்பிகை வழிபட்ட முதல் தலம் , வாசுதேவன்பாட்டு.


இறைவன்  :  ஆட்கொண்டீஸ்வரர் 
இறைவி      :  சவுந்தர்யநாயகி 

நன்றி : google  Maps  




எங்களின்  அடுத்த பயணம் கடலாடி என்ற தலத்தை நோக்கி....



செங்கம் 


24/02/2017, மகாசிவராத்திரியன்று, நானும், எனது நண்பர்களும் சிவாலயங்களை தரிசிக்க, முதலில் சென்றடைந்த தலம் செங்கம். 

திருவண்ணாமலை - பெங்களூர் சாலையில், திருவண்ணாமலையில் இருந்து சுமார் 35 km தொலைவில் உள்ளது. மிகப் பழமையான சிவாலயம். மூவர் பெருமக்களில் ஒருவரான திருநாவுக்கரசரால்  தேவாரத்தில் குறிப்பிடப்பட்டு, வைப்புத்தலமாகக் கருதப்படுகிறது.

மண்ணிப் படிக்கரை வாழ்கொளிபுத்தூர்
வக்கரை மந்தாரம் வாரணாசி
வெண்ணி விளத்தொட்டி வேள்விக்குடி
விளமர் விராடபுரம் வேட்களத்தும்
பெண்ணை அருட்டுறை தண் பெண்ணாகடம்
பிரம்பில் பெரும்புலியூர் பெருவேளூரும்
கண்ணை களர் காறை கழிப்பாலையும்
கயிலாய நாதனையே காணலாமே.


சிறு வாகனம் என்றால் ஆலயம் வரை செல்லலாம். 





நன்றி ; Google Maps

Add caption

அடுத்ததாக எங்கள் பயணம் வாசுதேவன்பட்டு என்ற சிற்றுரை நோக்கி........

அடுத்ததாக