Tuesday 26 December 2017



ஈங்கோய்  மலை 

திரு ஈங்கோய் மலை எனப்படும் இந்த தலம்
திருச்சி மாவட்டத்தில், திருச்சியில் இருந்து 
சுமார் 50 கி.மீ  தொலைவிலும், முசிறியில் 
இருந்து நாமக்கல் செல்லும் பாதையில் 6 கி. மீ 
தொலைவிலும் உள்ளது 

மூவர் பெருமக்களால் பாடப்பெற்ற இந்த தலம் 
காவிரியின் வடகரையிலுள்ள 63 வது தலமாகும் .

Google வரைபடத்தில், NC063 Maragathaleswara Swamy Temple 
என குறிப்பிடப்பட்டுள்ள இந்த தலத்தின் அமைவிடத்தைக் 
காண இங்கே சொடுக்கவும் 

இம்மலையின் அடிவாரத்தில் , சித்தர் போகரின் 
ஆலயமும், கைலாச நாதர் ஆலயமும் உள்ளது.
இவைகளின் இருப்பிடத்தைக் காண 
இங்கே சொடுக்கவும் 

இறைவன்  : மரகதாலீஸ்வரர் 
இறைவி      : மரகதாம்பிகை, மரகதவல்லி 

இறைவன் மரகதத்தால் ஆன சுயம்பு மூர்த்தியாக 
அருள்பாலிக்கின்றார்.

பிருங்கி முனிவர் அம்மனை வழிபடாது, ஈசனை 
மட்டுமே வணங்கி வந்தார், இறைவன் வழிபாட்டில் 
அம்மனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் 
என்ற காரணத்தினால், இறைவனின் திருவிளையாடலின் 
மூலமாக இங்கு வந்த உமையவள், தனக்கு 
இறைவனின் உடலில் இடதுபாகத்தைத் தரும்படி 
தவமிருக்கிறாள். இறைவனும் காட்சி  அளித்து ,
இடதுபாகத்தைத் தருவதாக உறுதி அளிக்கின்றார்.
அம்மனின் சக்திபீடங்களில், இது சாயா சக்திபீடம் 
என கருதப்படுகிறது.

தென்திசைக்கு வந்த அகத்தியர், இந்த தலத்திற்கு 
வந்தபோது, ஆலயம் மூடப்பட்டிருந்ததால் , தனக்கு 
காட்சி அளிக்கும்படி இறைவனை வேண்டுகிறார். 
அப்போது ' அடிவாரத்தில் உள்ள தீர்த்தத்தில் 
நீராடிவிட்டு வந்தால் தன்னை தரிசிக்கலாம் என 
அசரீரியாய், இறைவன் உரைக்கின்றார். 

அடிவாரம் வந்து தீர்த்தத்தில் நீராடியவுடன் " ஈ " வடிவம் 
பெற்ற அகத்தியர், மலை மேலே சென்று, மூடப்பட்டிருந்த 
கதவின் சாவித்துவாராம் வழியே உள்ளே சென்று 
இறைவனை தரிசித்துத் திரும்புகிறார். 

அகத்தியர் ஈ வடிவத்தில் இறைவனை வழிபட்டதால் 
இத்தலம் ஈங்கோய் மலை என்றழைக்கப்படுகிறது. 
இறைவனுக்கு ஈங்கோய் நாதர் என்ற பெயரும் உண்டு.

இறைவனின் நண்பரான சுந்தரர் பொன் வேண்டி 
இந்த தளத்திற்கு வந்தபோது, அவருடன் விளையாட 
எண்ணிய இறைவன், புளிய மரத்தில் ஒளிந்து கொள்கிறார்.
எவ்வளவு வேண்டியும் காட்சி அளிக்காத இறைவன், 
தந்கத்தினாலான ஒரு புளியம்பழத்தை  அருளுகிறார்,
சுந்தரர் அதை எடுத்தவுடன், அதுவும் மறைந்துவிடுகிறது. 
விரக்தி அடைந்த சுந்தரர், தனக்கு கிடைக்காத புளி 
யாருக்கும் கிடைக்கவேண்டாம் என சபித்துவிட்டு 
திரும்பிவிடுகின்றார்.

இந்த ஆலயத்தின் தல விருக்ஷம் புளியமரம், ஆனால் 
இப்னு புளியமரம் இல்லை.

சிவராத்ரியின்போது, மூன்று நாட்கள் சூரிய ஒளி 
இறைவனின் மீது விழும்போது, லிங்கத்தின் நிறம் மாறி காட்சி அளிக்குமாம்.

தீபாராதனையின் போது, லிங்கத்தில் ஜோதி 
ஜொலிப்பதைக் காணலாம்.

கோஷ்டத்தில் ஒரு தக்ஷிணாமூர்த்தி, 
விமானத்தில் வினை தக்ஷிணாமூர்த்தி ,
கால் மாறி அமர்ந்த தக்ஷிணாமூர்த்தி  
என வித்தியாசமான உருவங்களில் 
தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.

அம்பாள் சன்னதி கோஷ்டத்தில்,
மகிஷாசுரனின் தலைமேல் நின்ற 
கோலத்தில் ஒரு துர்க்கையையும்,
சாந்த ஸ்வரூபிணியாக 
மற்றொரு துர்க்கையையும் 
தரிசிக்கலாம்.

500 படிகள் ஏறிச்சென்று இறைவனை 
தரிசிக்க வேண்டும்.:

நடை திறந்திருக்கும் நேரம் :
காலை 9.00 முதல் மாலை 6.00வரை.

ஆலயத்து தோற்றங்களில் சில :




மலை அடிவாரத்தில் உள்ள சித்தர் போகரின் 
ஆலய தோற்றம் 

கைலாச நாதர் ஆலயத்தோற்றம் 



படங்கள் உதவி : Google Maps 




 தொட்டியம் 

தொட்டியம் திருச்சி மாவட்டத்தில் உள்ளது.
முசிறியில் இருந்து 14 கி.மீ தொலைவிலும்,
திருச்சியில் இருந்து சுமார் 57 கி,மீ  தொலைவிலும்
உள்ளது.
அதன் அவைவிடத்தைக் காண இங்கே சொடுக்கவும்
https://www.google.co.in/maps/@10.9201272,78.5218805,11.75z

இவ்வூரில் உள்ள சிவன் கோவிலின் இருப்பிடத்தைக்
காண இங்கே சொடுக்கவும்
https://www.google.co.in/maps/@10.9867978,78.3382683,15.75z

கைலாய நாதன் திரிபுர சம்ஹாரம் செய்யும் பொருட்டு
செல்லும்போது இந்த தலத்தில் நான்முகன் ஹோமம்
செய்த அக்னி குண்டத்தில் எழுந்தருளி நர்த்தனம்
செய்ததாக ஐதீகம்

இறைவன் : அனலாடீஸ்வரர்
இறைவி     : திரிபுர சுந்தரி


இந்த ஆலயத்தின் சில புகைப்படங்கள் :



புகைப்படங்கள் : Google  Maps  நன்றி










Saturday 23 December 2017


சுகவனேஸ்வரர் ஆலயம் 

சேலம் 

சேலம் நகரின் மையப்பகுதியில்  அமைந்துள்ளது 
சுகவனேஸ்வரர் ஆலயம். 

ஆலயத்தின் அமைவிடத்தைக் காண 
இங்கே சுடுக்கவும்.




இறைவன்:  சுகவனேஸ்வரர்
இறைவி    : ஸ்வர்ணாம்பிகை 

ஆலயம் திறந்திருக்கும் நேரம் :
காலை 6.00 முதல் 12.00 வரை 
மாலை 4.00 முதல் 8.30வரை 

முல லிங்கம் ஒரு பக்கம் சாய்வாக இருக்கும். 
லிங்கத்தின் முடியில் வெட்டுப்பட்ட தழும்பு உள்ளது.

இது  திருப்புகழ் பாடல் பெற்ற தலமாகும்.

இங்குள்ள விகடசக்கர விநாயகரை வழிபட்டால் ,
குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய " பாலாரிஷ்டம் "
தொல்லைகள் நீங்கும்.

தல வரலாறு :

பிரமன் தன் படைப்பில் ஒவ்வொன்றும் எவ்வாறு 
வித்தியாசமாக இருக்கிறது என்ற ரகசியத்தை சில 
முனிவர்களுக்குச் சொல்ல, அதைக் கேட்டுக்கொண்டிருந்த 
சுகர் எனும் முனிவர், அந்த ரகசியத்தை சரஸ்வதி தேவியிடம் 
கூறிவிடுகிறார். இதை அறிந்த பிரம்மா, சுக முனிவரை 
கிளியாக மாறும்படி சபித்துவிடுகிறார்.

சுக முனிவர் சாப விமோசனம் வேண்ட, பிரமனும்,
இந்த பகுதியில் உள்ள சுயம்பு லிங்கத்தை வழிபாட்டு 
வந்தால், தகுந்த நேரத்தில் சாப விமோசனம் கிடைக்கும் 
என்று அருளுகிறார். 

கிளி வடிவில் இங்கு வந்த சுக முனிவர், அங்கிருந்த 
மற்ற கிளைகளுடன் சேர்ந்துகொண்டு, ஒரு புற்றுக்குள் 
சுயம்பு வடிவில் இருந்த சிவனை வழிபட்டுக்கொண்டிருக்கும்  வேளையில், அங்கு வந்த 
வேடன் ஒருவன், புற்றின் அருகே கூட்டமாய் இருந்த 
கிளிகளை விரட்ட , கிளிகள் யாவும் புற்றின் மீது 
பதுங்கின. கோபம் கொண்ட வேடன் , கிளிகளை விரட்ட,
புற்றை வெட்டும்போது, சுக முனிவரைத் தவிர மற்ற 
கிளிகள் எல்லாம் மாண்டன. 

சுக முனிவர், இறைவன் மீது வெட்டுப்படாமல் இருக்க,
சுயம்புவின் முடிமேல் அமர்ந்து சிறகை விரித்துக் காக்க,
வேடன் மறுபடியும் தன வாளை வீசுகிறான். வீசப்பட்ட 
வாள் , கிளையை வெட்டியது மட்டுமல்லாமல், லிங்க த்தையும்                      பதம்  பார்க்க, வெட்டுப்பட்ட லிங்கத்தில் இருந்து இரத்தம் 
பீறிட, இறைவன் வெளிப்பட்டு சுக முனிவருக்கு சாப 
விமோசனம் அருளுகிறார்.

சேராமானுக்கும், ஆதிசேஷனுக்கும் இறைவன் 
தரிசனம் தந்த தலம் .

நவக்கிரகங்களில், ராகுவும் செவ்வாயும் இடம் மாறி 
உள்ளதால், இது ஒரு சிறந்த பரிகாரத் தலம்.

ஒரு பக்கம் சாய்வாக இருக்கும் லிங்கத்தின் முடியில், 
வேடனால் வெட்டுப்பட்ட தழும்பு உள்ளது, 

ஆவுடையார் பிற்பாகம் இரண்டு பிரிவாகவும், 
விஷ்யு பாகம், சோமசுந்தரம் ஒரே பாகமாக 
சேர்க்கப்பட்டுள்ளது. இது மற்ற சிவ தலங்களில் 
காண முடியாத ஒன்று.


நன்றி:
ஆலய பட உதவி : Google  Maps 





2, கைலாசநாதர் ஆலயம் 

கைலாச நாதர் ஆலயம் , சுகவனேஸ்வரர் 
ஆலயத்தில் இருந்து சுமார் 1.2 கி. மீ. 
தூரத்தில் அமைந்துள்ளது. 

இவ்வாலயத்திற்கு செல்லும் வழியினைக் 
காண இங்கே சொடுக்கவும்.


Google Map  வெளியிடப்பட்டுள்ள  இவ்வாலயத்தின் 
தோற்றங்களில் சில உங்கள் பார்வைக்கு :



நன்றி : Google Maps 




Wednesday 20 December 2017

தாராமங்கலம்
ஓமலூரில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவிலும்,
சேலத்தில் இருந்து சுமார் 23 கி.மீ தொலைவிலும்
உள்ளது

இங்கு, இளமீசர் ஆலயமும், கைலாச நாதர் ஆலயமும்
உள்ளது.
இந்த ஊர் இருக்குமிடத்தைக்காண இங்கே சொடுக்கவும்

தாராமங்கலத்தில் ஆலயங்கள் அமைந்திருக்கும் இடத்தைக்காண
இங்கே சொடுக்கவும்.


1. இளமீசர் ஆலயம் :
சுமார் 500 வருடங்கள் பழமையான ஆலயம்.
இறைவன் : இளமீசர்
இறைவி : தையல்நாயகி
காலை 6.00 – 1.00 ; மாலை 4.00 – 8.00
பிரகாரத்தில் , பால வித்யா கணபதி,
தனி சன்னதியில் அருள்பாலிகின்றார்
மஹாவிஷ்ணு, தன் தங்கையான சிவகாமசுந்தரியை
இந்த தலத்தில் சிவனுக்கு திருமணம் செய்து
கொடுத்ததாக ஐதீகம்






2. கைலாச நாதர் ஆலயம்
சிற்ப வேலைப்பாடுகளுக்கு சிறந்ததாகக் கருதப்படும்
இக்கோவில், 13ம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
மேற்கு பார்த்த சிவன் கோவில்.
இறைவன் : கைலாசநாதர்
இறைவி  : சிவகாம சுந்தரி
தலத்தின் கீழ் பகுதியில் பாதாள லிங்கம் உள்ளது.
3 தலை, 3 கால்களுடன் ஜுரஹரேஸ்வரர்
காட்சி அளிக்கின்றார்.
எண்கோண வடிவில் உள்ள தெப்பக்குளம் உள்ளது.
தனித்தனி சன்னதிகளில்,முருகனும், அவிநாசியப்பரும்
எழுந்தருளியுள்ளனர்.
மாசி 9,10,11 ஆகிய தேதிகளில், சூரிய ஓளி, நந்தியின்
கொம்புகளின் இடையே சென்று சிவலிங்கத்தின் மீது
3ஆம் பிறை போல் விழுகின்றது.




படங்கள் உதவி : google  Maps  நன்றி !