Tuesday 26 June 2018

திருப்பூவனுர் 
Pin 612 803
மாவட்டம் : திருவாரூர் 

தேவார பாடல் பெற்ற தலம் 
காவிரியின் தென்கரைத் தலங்களின் 
வரிசையில் 103

இறைவன் :  புஷ்பவன நாதர் ; சதுரங்க வல்லப நாதர் 

இறைவி :  கற்பகவல்லி ; ராஜ ராஜேஸ்வரி 

ஆலயம் திறந்திருக்கும் நேரம் :
காலை:  7.30 முதல் 12.00 வரை 
மாலை : 4.30 முதல் 7.30 வரை .

அமைவிடம் : 

மன்னார்குடி - நீடாமங்கலம் சாலையில் மன்னார்குடியில் வடக்கே இருந்து சுமார் 12 கி.மி. தொலைவிலும், நீடாமங்கலத்தில் இருந்து தெற்கே சுமார் 4.5 கி.மி. தொலைவிலும் இத்தலம் உள்ளது . திருவாரூர் - நீடாமங்கலம் - மன்னார்குடி செல்லும் பேருந்தில் ஏறிப் பூவனூர் நிறுத்தத்தில் இறங்கி, பாமணி ஆற்றைக் கடந்து சிறிது தூரம் சென்றால் கோயிலை அடையலாம். ஆற்றைக் கடப்பதற்குப் பாலம் உள்ளது. பாலத்தில் போகும்போது பார்த்தாலே கோபுர தரிசனம் கிட்டும்.

வரைபடம் ( Click )


தல வரலாறு :இத்தலத்தில் இறைவனுக்கு சதுரங்கவல்லபநாதர் என்ற பெயர் ஏற்பட ஒரு சுவையான வரலாறு உள்ளது. தெண்பாண்டி நாட்டு அரசன் வசுசேனன் அவன் மனைவி காந்திமதி ஆகியோருக்கு வெகு காலமாக குழந்தை இல்லை. நீண்ட நாட்களாக அவர்கள் சிவபெருமானை வழிபட்டு வந்தனர். இறைவன் அவர்களுக்கு அருள முன்வந்தார். அரசன் ஒருநாள் நீராடிய குளத்தில் ஒரு தாமரை மலரில் ஒரு சங்கைக் கண்டான். இறைவன் திருவருளால் உமாதேவியே அவர்களுக்கு மகளாகப் பிறக்க அங்கு சங்கு ரூபத்தில் தென்பட அரசன் அச்சங்கை கையில் எடுத்தவுடன் அது ஒரு அழகிய பெண் குழந்தையாக உருவெடுக்கக் கண்டு மிகவும் மனம் மகிழ்ந்து அக்குழந்தைக்கு ராஜராஜேஸ்வரி என்று பெயரிட்டு அருமை பெருமையுடன் வளர்த்து வந்தான். சப்த மாதர்களில் ஒருவரான சாமுண்டிதேவி அக்குழந்தைக்கு வளர்ப்புத் தாயாக வர ராஜராஜேஸ்வரி சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்று வளர்ந்தாள். குறிப்பாக சதுரங்க விளையாட்டில் மிகவும் புகழ் பெற்று எல்லோரையும் வென்று விளங்கினாள். அரசன் மகளுக்கு மணம் முடிக்க வேண்டி, தகுந்த வரன் அமைய வேண்டும் என்ற நோக்கில் மகளை சதுரங்க விளையாட்டில் வெல்பவருக்கே மணமுடிப்பது என்று தீர்மானித்தான். பல அரசகுமாரர்கள் வந்தனர். அனைவரும் சதுரங்க ஆட்டத்தில் அவளிடம் தோற்றுப் போனார்கள். மன்னன் யாராலும் மகளை வெல்ல முடியவில்லையே என்று வருத்தப்பட்டு, இறைவன் மீது பாரத்தைப் போட்டு தலயாத்திரை மகளுடன் கிளம்பிச் சென்றான். அநேக சிவஸ்தலங்களை தரிசித்துவிட்டு திருப்பூவனூர் வந்து சேர்ந்தான். இறைவன் புஷ்பவனநாதரை வழிபட்டு கவலையுடன் தன் இருப்பிடம் திரும்பினான். மறுநாள் காலை ஒரு வயோதிகர் அரசனைத் தேடி வந்தார். ராஜராஜேஸ்வரியைப் பார்த்து என்னுடன் சதுரங்கம் ஆடி உன்னால் என்னை வெல்ல முடியுமா என்று கேட்டார். அரசன் மகளும் சம்மதிக்க சதுரங்க ஆட்டம் துவங்கியது. அன்றுவரை இந்த ஆட்டத்தில் தோல்வியே காணாத அவள் அன்று அந்த முதியவரிடம் தோற்றுப் போனாள். அரசன் மகளை ஒருவர் வென்று விட்டாரே என்று சந்தோஷப்பட்டாலும் ஒரு வயோதிகருக்கு தன் வாக்குப்படி மகளை மண்முடிக்க வேண்டுமே என்று கவலைப்பட்டான். உள்ளம் உருக சிவபெருமானை தியானித்தான். கண் சிமிட்டும் நேரத்தில் அங்குள்ள முதியவர் மறைந்து அங்கே சிவபெருமான் நிற்கக் கண்டான். சதுரங்க ஆட்டத்தில் ராஜராஜேஸ்வரியை வென்று அவளுக்கு மாலையிட்டவர் புஷ்பவனநாதரே ஆவார். சதுரங்க ஆட்டத்தில் இறைவியை வென்றதால் சதுரங்கவல்லபநாதர் என்ற பெயரும் பெற்றார்.

நெடிதுயர்ந்த மதிற்சுவரும் கருத்தைக் கவரும் கல்மண்டபங்களும் அகன்று விரிந்த உள்-வெளிப் பிரகாரங்களும் கலை நுணுக்கமுள்ள விமானங்களும் இவ்வாலயத்தின் சிறப்பம்சமாகும். வெளிப் பிரகாரத்தின் மத்தியில் உள்ள மண்டபத்தில் தெற்கு நோக்கிய சந்நிதிகளில் இத்தலத்தின் இரண்டு தேவியர் கற்பகவல்லியும் ராஜராஜேஸ்வரியும் கோவில் கொண்டிருக்கிறார்கள். உட்பிரகாரத்தில் புஷ்பவனநாதர் என்றும் சதுர்ங்கவல்லபநாதர் என்றும் அழைக்கப்படும் மூலவர் சந்நிதி உள்ளது. அகன்ற திறந்த வெளிப் பிரகாரத்தில் தெற்குப் பகுதியில் சாமுண்டீஸ்வரி சந்நிதி அமைந்திருக்கிறது.இந்தத் தலத்தில் கோவில் கொண்டுள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம்.

தர்மவர்மன் என்னும் அரசன் இக்கோவிலின் தீர்த்தத்தில் நீராடி தனது கரும்குஷ்டநோய் நீங்கபெற்றிருக்கிறான். நந்திதேவர் மற்றும் சித்தர்கள் பலர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர். கருவறை கோஷ்டங்களில் தட்சினாமூர்த்தி, துர்க்கை, முருகன், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆக்யோரின் சந்நிதிகள் அமையபெற்றுள்ளன. நவக்கிரக சந்நிதியும் உள்ளது.

பூவ னூர்ப்புனி தன்றிரு நாமந்தான்
நாவின் நூறுநூ றாயிரம் நண்ணினார்
பாவ மாயின பாறிப் பறையவே
தேவர் கோவினுஞ் செல்வர்க ளாவரே.


ஆவின் மேவிய ஐந்தமர்ந் தாடுவான்
தூவெண் ணீறு துதைந்தசெம் மேனியான்
மேவ நூல்விரி வெண்ணியின் தென்கரைப்
பூவ னூர்புகு வார்வினை போகுமே.


அனுச யப்பட்ட துவிது வென்னாதே
கனிம னத்தொடு கண்களும் நீர்மல்கிப்
புனித னைப்பூவ னூரனைப் போற்றுவார்
மனித ரிற்றலை யான மனிதரே.


அப்பர்




Friday 8 June 2018

ஆனைமங்களம் ( எ ) ஆனைமாகாளம் 
PIN 610101
வட்டம் : திருவாரூர் 
மாவட்டம் : திருவாரூர் 

தேவார வைப்புத்தலம் 

அப்பர் அருளிய திருவீழி மிழலை 
திருத்தாண்டகம்  ( 6- 51 - 7 )

மறைக்காட்டார் வலிவலத்தார் வாய்மூர் மேயார்
வாழ்கொளி புத்தூரார் மாகா ளத்தார்
கறைக்காட்டுங் கண்டனார் காபா லியார்
கற்குடியார் விற்குடியார் கானப் பேரார்
பறைக்காட்டுங் குழிவிழிகட் பல்பேய் சூழப் 
பழையனூர் ஆலங்காட் டடிகள் பண்டோ ர்
மிறைக்காட்டுங் கொடுங்காலன் வீடப் பாய்ந்தார்
வீழி மிழலையே மேவி னாரே.



சுந்தரர் அருளிய ஊர்த்தொகை  
தேவாரத் திருப்பதிகம் ( 7 - 47 - 5 )

மருகல்  உறைவாய் மாகா ளத்தாய் மதியஞ் சடையானே 
அருகற் பிணிநின் னடியார் மேல அகல அருளாயே 
கருகற்  குரலாய் வெண்ணிக் கரும்பே கானுர்க் கட்டியே 
பருகப் பணிவாய் அடியார்க் குன்னைப்  பவளப் படியானே 





பாடல் பெற்ற தலமான,
கீவளூரில் உள்ள சிவனை முருகன் 
பூஜிக்க வந்தபோது, அவனைக் காக்கும் 
பொருட்டு யானை மேல் ஏறி வந்து  , சிவனை 
காளி  பூஜித்ததால் , ஆனை  மாகாளம் 
எனப்பட்டது. 

இதர மாகாளங்கள் :

அம்பர் மாகாளம் 
உஜ்ஜையினி  மாகாளம் 
இரும்பை மாகாளம் 

அருள்பாலிப்பவர் :
அருள்மிகு மங்களநாயகி உடனுறை 
மகாகாளேஸ்வரர் 

கோவில் குருக்கள் : 
98433 59496

தரிசன நேரம் :
கோவில் குருக்களைத் தொடர்பு கொள்ளவும்.

கீழ்வேளூர் (கீவளூர்) வந்து பிரதான சாலையில் விசாரித்து 
'வடகரை' சாலையில் சிறிது தூரம் சென்றால் ஊரையடையலாம் -
 'வெட்டாற்றை'க் கடந்தால் மறுகரையில் கோயில் உள்ளது.



அமைவிடம் : ( கீழே சொடுக்கவும் )

கீழ் வேளூரில் இருந்து  7 கி மீ 

மயிலாடுதுறையில் இருந்து  50 கி மீ 

திருவாரூரில் இருந்து 22 கி மீ 

நாகை ப்பட்டினத்தில் இருந்து   20 கி மீ 










Tuesday 5 June 2018

நவகோடி சித்தர் கோவில்

நவகோடி சித்தர் கோவில்
PIN 614807
https://www.google.co.in/maps/@10.27561,79.8133514,16z

குழகர் கோவிலில் இருந்து  3 km

அங்கிருக்கும் தகவல் பலகையைத்
தவிர தகவல்  தர  வேறு யாரும் இல்லை.

நாங்கள் சென்றபோது  ஆலயம்
மூடப்பட்டிருந்ததது.

கிழக்கு, மேற்கு, தெற்கு என
முப்புறமும் கடல் சூழ்ந்த இடம்.
மிக நல்ல அதிர்வலைகள் உள்ள இடம்.

தொடர்புகொண்டு தரிசனம் செய்யலாம்.







இறைவன் அருளால் தரிசனம் செய்த நாள் 03/06/2018








Saturday 2 June 2018

பஞ்ச நதிக்குளம் 
தென்கோடி 
PIN  614714 


வைரவநாதர் கோவிலில் இருந்து  6 km 
வாய்மேட்டில் இருந்து  வேதாரண்யம் 
செல்லும் பாதையில் 
மருதூர் இரட்டைக்கடியடி. 
அடுத்து பஞ்ச நதிக்குளம்.
வலதுபுறம்  தெற்கு நோக்கி செல்லும் 
பாதையில் சிவன் கோவில் 


அருள்மிகு மதுரபாஷிணி  உடனுறை
 தென்கோடிநாதர் 
09.00 - 10.00 ; 5.00 - 6.00 

சேகர் குருக்கள்  99651 55489 


நவகோடி சித்தர்களால் ஆராதனை
செய்யப்பட்டவர்.
கொடிக்கரைக்கு தெற்கே 5 km  தூரத்தில்
கடலில் கிடைத்த சுவாமி.
மூலவர் அம்பாள் மட்டும்தான்
கடலில் கிடைத்தது.

சிதிலமடைந்த 2 கோவில்களின்
உற்சவர்கள் இங்கு ஸ்தாபிக்கப்பட்டன.

பஞ்ச பாண்டவர்கள் வெட்டிய
குலமாதலால், பஞ்ச நதிக்குளம் .

தான் குளிப்பதற்கு , இராமர்
குளத்தை உண்டாக்கியதாக தகவல்.




கோடியக்கரை
PIN  614821



தேவார பாடல் பெற்ற தலம் 
காவிரி தென் கரைத்  தலங்களின் 
வரிசையில் 127

அகத்தியான் பள்ளியில் இருந்து  8 km

அருள்மிகு  அஞ்சனாட்சி உடனுறை
அமிர்தகடேஸ்வரர் 
6.30 - 12.00 ; 5.00 - 8.30

தலவரலாறு 











கோடியக்கரை குழகர் கோவிலுக்கும் , அகத்தியான்பள்ளிக்கும்
இடையில் இராமர் பாதம் சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது.




தரிசித்த நாள் : 03/06/2018





அகஸ்தியன் பள்ளி ( எ ) 
அகத்தியான்பள்ளி
PIN  614821

தேவார பாடல் பெற்ற தலம் 
காவிரியின் தென்கரைத் தலங்களின் 
வரிசையில் 126

வேதாரண்யத்தில் இருந்து  2 km


அருள்மிகு பாகம்பிரியாள்  உடனுறை
அகத்திஸ்வரர் 
6.30 - 12.00 ; 5.00 - 8.30 



தலவரலாறு 






























வேதாரண்யம் ( எ ) திருமறைக்காடு
PIN 614810

தேவார பாடல் பெற்ற தலம்
காவிரி தென்கரைத் தலங்களின்
வரிசையில் 125

சப்த விடங்கத் தலம் 
அருள்பாலிப்பவர் : புவனி விடங்கர் 

அருள்மிகு வேதநாயகி  உடனுறை
வேதாரண்யேஸ்வரர் 
6.30 - 12.00 ; 5.00 - 8.30 

தளிக்குளத்தில் இருந்து 18 km
திருத்துறைப்பூண்டியில் இருந்து  37 km
நாகப்பட்டினத்தில் இருந்து 50 km

தலவரலாறு 




















தரிசித்த நாள் : 03/06/2018
































கோயிற்குளம் ( எ ) தளிக்குளம்
Pin 614707

தேவார வைப்புத்தலம்

தகட்டூர் பைரவநாதர் கோவிலில்
இருந்து 12 km

அருள்மிகு  பாலினும் நன்மொழியாள் 
உடனுறை
எழுமேஸ்வரமுடையார் 

8.00 - 11.00 ; 5.00 - 7.00 

V M  உமாபதி சிவம்  91597 28259
வீடு அருகில் உள்ளது.

அப்பர் :
நள்ளாறும் பழையாறுங் கோட்டாற் றோடு
நலந்திகழும் நாலாறுந் திருவை யாறுந்
தெள்ளாறும் வளைகுளமுந் தளிக்கு ளமுநல்
இடைக்குளமுந் திருக்குளத்தோ டஞ்சைக் களம்
விள்ளாத நெடுங்களம்வேட் களம்நெல் லிக்கா
கோலக்கா ஆனைக்கா வியன்கோ டிகா
கள்ளார்ந்த கொன்றையான் நின்ற ஆறுங்
குளங்களங்கா எனவனைத்துங் கூறு வோமே....   



2100 ஆண்டுகள் பழமையான தலம்.
மூலவர் சுயம்பு
எழுமுள்  காணப்படும் ஒருவகை
முற்செடிகள் ( எழு முல்லைக்காடு) இருந்த
குளத்தில் , துளசி மகாராஜன் தன்னுடைய
குஷ்டரோகம் நீங்க இறைவனை வேண்டினான்.

இறைவன் கனவில் தோன்றி ,
மாடு பால் சொரிந்துவரும் இந்த
எழுமுள் காட்டில் உள்ள இறைவனை
வழிபாடாக கூற , அரசனும் அவ்வாறே
108 ஏக்கர் நிகிலத்தில் கோவிலும்,
குளமும் கட்டி இறைவனை வழிபட்டு ,
தன் நோய் தீரப்  பெற்றான்.

கோவில் அருகில் உள்ள புத்திரங்கன் குட்டை
என்னுமிடத்தில் நீராடி, அக்குளத்தில் இருந்த
வெண் தாமரை மலர்களின் தண்டில்  திரி செய்து,
48 நாட்கள் இறைவனை வழிபாட்டு,
புத்திர சந்தானம் பெற்றான்,
துளசி மகாராஜனின் மகன்.

மஹரிஷிகள் வழிபட்ட தலம் .












































தகட்டூர் 
Pin  614714

தேவார வைப்புத்தலம் 
சுந்தரரின் திருநாட்டு தொகையில்
குறிப்பிடப்பட்டுள்ள தலம் .

கடிக்குளம் கற்பகநாதர் கோவிலில்
இருந்து 12 km
வாய்மேடு - வேதாரண்யம் பாதையில்
இடதுபுறம் திரும்ப வேண்டும்.


வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த விலங்கலான் 
கூழை ஏறுகந் தானிடங் கொண்டதுங் கோவலூர்
தாழையூர் தகடூர் தக்களூர் தருமபுரம்
வாழை காய்க் கும்வளர் மருகல் நாட்டு மருகலே

இறைவன் : பைரவநாதர் 
8.00 - 12.00 ; 5.00 - 8.00
ஞாயிறு, திங்கள், வெள்ளி
ஆகிய தினங்களில்
மதியம் 1.00 வரை.



யந்த்ரபுரி என பெயர் பெற்ற தலம்.
யந்திரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு
மஹாசக்தி வாய்ந்த தலமாகக்
கருதப்படுகிறது.

இராமாயண காலத்துப் பிண்ணனி
உள்ள கோவில்.

இராவண சம்ஹாரம் முடிந்த பின்னர்
பிரம்மஹத்தி தோஷம் நீங்க இராமர்
சிவலிங்கம் அமைத்து பூஜை செய்ய
விரும்பினார்.

கங்கைக் கரையில் இருந்து சிவலிங்கத்தைக்
கொண்டுவர அனுமனிடம் கேட்டபோது,
அனுமனோ ஒரு கோவிலுக்குத் தேவையான
அனைத்தையும் கொண்டு வந்தார்.

மகா மண்டபத்தில் உள்ள
காசி விஸ்வநாதரும்,
பைரவரும் அனுமன் கொண்டுவந்தாகும்.

பூலோகத்தில், பைரவர்
பரமேஸ்வரரின் திருஅவதாரம்.

எனவே, கருவறையில் பைரவருக்கே
பிரதான வழிபாடு. காசி விஸ்வநாதர்
மறுபுறம் உள்ளார்.

சத்ரு உபாதை, மரண பயம்,
வியாதி தொந்திரவு, திருமணத் தடை
ஆகியவற்றிற்கு தீர்வு தரும் பைரவர்












கற்பகநாதர் குளம் ( எ ) 
திருக்கடிக்குளம்
PIN 614703


தேவார பாடல் பெற்ற தலம்.
காவிரியின் தென்கரைத் தலங்களின் 
வரிசையில் 109

இடும்பாவனம் சற்குணேஸ்வரர்
ஆலயத்தில் இருந்து 2 km

அருள்மிகு சௌவுந்தர நாயகி உடனுறை
கற்பகநாதர் 

6.00 - 12.00 ; 4.00 - 8.00

தலவரலாறு  











இடும்பாவனம் 
PIN  614703

தேவார பாடல் பெற்ற தலம்.
காவிரி தென்கரைத்  தலங்களின்
வரிசையில் 108

அருள்மிகு  மங்களவல்லி  உடனுறை
சற்குணேஸ்வரர் 
7.30 - 12.30 ; 4.30 - 8.30 

கோவிலூர் மந்திரபுரீஸ்வரர் கோவிலில் 
இருந்து 20 km 

தலவரலாறு
சசிசேகர சிவாச்சாரியார், கைபேசி: 9843628109










கோவிலூர்  ( எ  )  திருவுசத்தானம் 
Pin  613 704


தேவார பாடல் பெற்ற தலம் .
காவிரியின் தென்கரைத்  தலங்களின் 
வரிசையில் 107

அருள்மிகு பிருகந்நாயகி  உடனுறை 
மந்திரபுரீஸ்வரர் 

6.30 - 11.30 ; 4.30 - 8.00 



தலவரலாறு 




Thursday 31 May 2018

தெள்ளாறு 
Pin  604406

வட்டம் : வந்தவாசி 
மாவட்டம் : திருவண்ணாமலை 

தேவார வைப்புத் தலம்.

அருள்மிகு  அகிலாண்டேஸ்வரி  உடனுறை
திருமூலட்டானேஸ்வரர்  
அருள்பாலிக்கும் திருத்தலம்.

தெள்ளாறு நாட்டு தெள்ளாறு  என்ற பெயர்
கொண்ட இந்த ஊர், நிறைய கல்வெட்டுச்
செய்திகளைக் கொண்டுள்ளது.

நந்திக்  கலம்பக  நாயகன்,
நந்திவர்மன், கி பி 832 இல்
இங்கு, தெள்ளாரில் போரிட்டு
வெற்றி பெற்றான்.

இவரே பிற்காலத்தில், கழற் சிங்க நாயனாராக
அழைக்கப்பட்டவர்.

இந்த  ஊரில், பெண்கள் தண்ணீர் எடுத்துச்
செல்லும் பொது, ஒரு நாள் மாலையில்,
ஓரூ வான் மது மயக்கத்தில்  அவர்களை
ஏளனம் செய்த  குற்றத்திற்காக,
இத்திருக்கோவிலில் சில  நாட்கள் 
விளக்கிட வேண்டும் என்று தீர்ப்பு  வழங்கப்பட்டது.
தீர்ப்பை வழங்கியவர், அவரது மனைவி.
ஓர் நாள், அவளே விளக்கிடச் சென்ற போது ,
நீதிபதி என்ற முறையில் அன்று தீர்ப்பும்,
மனைவி என்ற முறையில் கணவனின்
காரியத்தை இன்று செய்வதாகவும்
கூறியிருப்பதை, கல்வெட்டுச் செய்தி
ஒன்று கூறுகின்றது .





தேவனுர் 
Pin 604 208

வட்டம் : செஞ்சி 
மாவட்டம் : விழுப்புரம் 

தேவார வைப்புத் தலம் 
திருப்புகழ் பாடல் பெற்ற தலம் 
சந்திரன் வழிபட்ட தலம்.

சுந்தரர் அருளிய திருநாட்டுத் தொகை ( 12 )
7ம் திருமுறை 
6 வது பாடல் 

தென்னூர் கைம்மைத் திருச்சுழி யல்திருக் கானப்பேர் 
பன்னூர் புக்குறை யும்பர மர்க்கிடம் பாய்நலம் 
என்னூர் எங்கள் பிரான்உறை யுந்திருத் தேவனூர் 
பொன்னூர் நாட்டுப் பொன்னூர் புரிசைநாட்டுப் புரிசையே
அருள்மிகு  கமலேஸ்வரி உடனுறை 
திருநாதீஸ்வரர்  அருள் புரியும் திருத்தலம் 

ஒரு கால பூஜை 
அர்ச்சகர்  ஆலயத்தின் அருகில் உள்ளார்.
தொடர்புக்கு : 99403 96051

சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோவில்.
பின்னர், பாண்டியர்களாலும், 
விஜய நகர மன்னர்களாலும் திருப்பணி 
செய்யப்பட்ட கோவில்.

ஆற்காடு நவாப் காலத்தில், கோயில்கள் 
இடிக்கப்பட்டு, களவாடப்பட்டது.

ஆற்காடு நவாப்பிற்கும், ராஜா தேசிங்கிற்கும் 
நடந்த போரில் ஏற்பட்ட சிதிலங்கள் உள்ளது.

இத்தல முருகன்,  ஒரு முகத்துடன், 
நான்கு கரங்களுடன் மயில்  மேல் 
அமர்ந்த கோலத்தில் 
அருள் பாலிக்கின்றார்.

பழனி முருகன் அமைப்பில் உள்ள 
உருவமும் உள்ளது.

இங்கிருந்து 27 கி மீ  தொலைவில் 
தெள்ளாறு  என்ற தேவார வைப்புத் தலம் 
உள்ளது.

Click below  to view the Route Map 











Wednesday 30 May 2018

அதிராமபட்டினம்
PIN 614 701

தேவார வைப்புத் தலம்

திருவாதிரை நட்சத்திரத்திற்கு உரிய தலம் 


Route  Map

திருத்துறைப்பூண்டியில் இருந்து 42 km 

அமைவிடம் 

கோவிலைப்  பற்றிய தகவல்கள் 

தலவரலாறு 


குண்டையூர்
PIN 610 204


தேவார வைப்புத் தலம்

Route Map 

திருக்குவளையில் இருந்து 1 கி மீ 

கோவிலைப் பற்றிய தகவல்கள்

தலவரலாறு  
திருக்குவளை ( எ )  திருக்கோளிலி   
PIN  610 204

தேவாரப் பாடல் பெற்ற தலம் 
காவிரி தென் கரையில் 
பாடல் பெற்ற 123 வது தலம் 

சப்த விடங்க தலம் 
இங்கு அருள் பாலிப்பவர் 
அவனி விடங்கர்  

Route  Map 

எட்டுக்குடியில் இருந்து 3 கி மீ  

திருக்கோவிலைப் பற்றிய 
தகவல்கள்

1 தலவரலாறு 

2 தலவரலாறு 

3 தலவரலாறு  




எட்டுக்குடி
PIN  610 204


சித்தர் வன்மீக நாதர்  ஜீவ சமாதி 

முருகன் கோவில்

Route  Map

திருவாய்மூரில் இருந்து 3 கி மீ 


திருக்கோவிலைப்  பற்றிய தகவல்கள் 

தல வரலாறு 
திருவாய்மூர் 
PIN 610 204


தேவார பாடல் பெற்ற தலம்
காவிரி தென் கரையில்
பாடல் பெற்ற 124 வது தலம்

சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று .
இங்கு அமைந்துள்ளவர் நீல விடங்கர் 

Route  Map  

திருத்துறைப்பூண்டியில் இருந்து  16 கி மீ 

திருக்கோவிலைப் பற்றிய தகவல்கள் 

1. தல வரலாறு 

2. தல வரலாறு  

3. தல வரலாறு 


திருத்துறைப்பூண்டி
PIN  614713

அஸ்வினி நட்சத்திரத்துக்கு உரிய கோவில்

அமைவிடம்  

Route  Map 

திருவாரூரில் இருந்து  30 கி மீ 
நாகப்பட்டினத்தில் இருந்து 42 கி மீ 

மன்னார்குடியில் இருந்து  29 கி மீ 


திருக்கோவிலைப் பற்றிய தகவல்கள் 
தல வரலாறு 


இவ்வூரில் அமைந்துள்ள மற்றுமொரு சிவாலயம் 

வன்மீகநாதர்  திருக்கோவில் 

அமைவிடம்  



தண்டலச்சேரி ( எ ) திருத்தண்டலை நீள்நெறி 
PIN 614 715

தேவாரப்  பாடல் பெற்ற தலம் .
பாடல் பெற்ற காவிரி தென் கரைத் தலங்களின் 
வரிசையில் 110


Route  Map 




திருக்கோவிலைப் பற்றிய தகவல்கள் 




கண்ணமங்கலம் ( எ ) கண்ணத்தங்குடி
PIN  614 711

தேவார வைப்புத்  தலம்

அரிவாட்டாய நாயன்மார் அவதார,
முக்தி தலம் 


Route Map 

சிற்றேமத்தில் இருந்து 12 கி மீ  

திருத்துறைப்பூண்டியில் இருந்து 6 கி மீ   

நாகப்பட்டினத்தில் இருந்து 47 கி மீ  

திருக்கோவிலைப் பற்றிய விவரங்கள் 

தண்டலச்சேரிக்கு கிழக்கே சுமார் 2 கி.மீ. தூரத்தில் உள்ள கண்ணமங்கலம் என்ற ஊரில் (இந்த ஊர் தற்போது கண்ணந்தங்குடி என அழைக்கப்படுகிறது) வேளாளர் குலத்தில் தாயனார் என்ற சிவனடியார் அவதரித்தார். இவர் சிவனடியார்களிடத்தில் மிகவும் அன்பு கொண்டிருந்தார். தண்டலச்சேரியில் அருள்பாலிக்கும் இறைவனுக்கு நாள்தோறும் சம்பா அரிசியில் உணவும், செங்கீரையும், மாவடுவும் நைவேத்தியம் வைத்து வழிபாடு செய்து வந்தார். இவரது மனைவியும் இவரைப்போலவே இறைவனிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். இவர்களுக்கு ஒரு சமயம் வறுமை ஏற்பட்டது. வறுமையைக்கண்டு அடியார் மனம் தளராமல் தெய்வத்திருப்பணியை விடாமல் செய்து வந்தார். கூலிக்கு ஆள் வைத்து நெல் அறுத்து வந்த இவர், வறுமை காரணமாக தானே கூலிக்கு நெல் அறுக்க சென்றார். வேலைக்கு கூலியாக கிடைக்கும் நெல்லைக்கொண்டு இறைவனுக்கு நைவேத்தியம் செய்து வந்தார். பின்னரும் இவரை இறைவன் சோதிக்க நினைத்தார். இவருக்கு கூலியாக கிடைத்ததெல்லாம் இறைவனுக்கு நைவேத்தியம் செய்ததால், இவரது குடும்பத்திற்கு உணவில்லாமல் போனது. இவரும் இவரது மனைவியும் கீரையை மட்டும் சாப்பிடத் தொடங்கினர். நாளடைவில் கீரைக்கும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது தண்ணீரை குடித்து வாழத்தொடங்கினர். இறைவனுக்கு நைவேத்தியம் செய்வதற்காவது நெல் கிடைக்கிறதே என்ற மகிழ்ச்சியில் வாழ்ந்து வந்தார்.

ஒரு நாள் இவர் இறைவனுக்கு நைவேத்தியம் படைப்பதற்காக செந்நெல், கீரை, மாவடு ஆகியவற்றை ஒரு கூடையில் சுமந்து கொண்டு புறப்பட்டார். சாப்பிடாததால் இவரை பசி வாட்டியது. மனைவிக்கும் பசி மயக்கம். தாயனார் பசியினால் கீழே விழப்போனார். அவரை மனைவி தாங்கி கொண்டார். கூடையில் சுமந்து வந்த நைவேத்தியப் பொருள்கள் நிலத்தில் விழுந்து சிதறின. தாயனார் மனம் கலங்கினர். அவருக்கு உயிர் வாழவே விருப்பமில்லை. எனவே தம்மிடம் நெல் அறுக்க வைத்திருந்த அரிவாளை எடுத்து தன் கழுத்தை அரிந்து கொள்ள துணிந்தார். அவரது பக்தியின் ஆவேசத்தை கண்டு உடன் வந்த மனைவி திகைத்தாள். தன் மாங்கல்யத்தை எடுத்து கண்ணில் ஒற்றிக்கொண்டு இறைவனை வேண்டினாள். அப்போது நைவேத்தியப் பொருள் விழுந்த இடத்தில் வெடிப்பு ஏற்பட்டு, உள்ளிருந்து ருத்ராட்ச மாலையும், திருநீரும் அணியப்பெற்ற திருக்கரம் ஒன்று வெளிப்பட்டது.. அத்திருக்கரம் தாயனாரின் கையைப்பற்றியது. மாவடுவை கடித்துச் சாப்பிடும் சப்தமும் கேட்டது. இறைவனின் திருக்கரம் பட்டவுடன் மெய்மறந்து நின்றார் தாயனார். தாயனாரின் பக்தியை மெச்சிய இறைவன் இத்தலத்தில் பார்வதியுடன் தரிசனம் தந்தார். அரிவாளால் தம் கழுத்தை அரியத்துணிந்தமையால் இவருக்கு "அரிவாட்ட நாயனார்" என்ற சிறப்பு பெயர் ஏற்பட்டது.







சித்தாய்மூர் ( எ ) திருசிற்றேமம் 
PIN  610 203

தேவார பாடல் பெற்ற தலம் 
பாடல் பெற்ற காவிரி தென் கரைத்
தலங்களின் வரிசையில் 106

Route  Map 

கச்சினத்தில் இருந்து 6 கி மீ  

திருத்துறைப்பூண்டியில்  இருந்து 18 கி மீ 

நாகப்பட்டினத்தில் இருந்து 36 கி மீ  

திருக்கோவிலைப் பற்றிய விவரங்கள் 

1. தலவரலாறு 

2. தலவரலாறு

3. தலவரலாறு 


கச்சனம்( எ ) திருகைச்சினம்
PIN 610 201


தேவார பாடல் பெற்ற தலம் 

பாடல் பெற்ற காவிரித் தென் கரைத் 
தலங்களின் வரிசையில் 122 


Route Map 

திருக்காரவாசலில்  இருந்து 6 கி மீ 

திருத்துறைப்பூண்டியில் இருந்து  13 கி மீ 

நாகப்பட்டினத்தில் இருந்து 42 கி மீ  

திருக்கோவிலைப் பற்றிய விவரங்கள் 

1. தல வரலாறு 
2 தல வரலாறு 
3 தல வரலாறு 



திருக்காரவாசல் (எ ) திருக்காறாயில் 


தேவார பாடல்  பெற்ற தலம்
காவிரியின் தென் கரையில் அமைந்துள்ள
பாடல் பெற்ற தலங்களின் வரிசையில் 119
சப்த விடங்க தலங்களில் ஒன்று
இங்கு உள்ளவர்  ஆதி விடங்கர்


Route  Map 

திருவாரூரில் இருந்து   14 கி மீ 

நாகைப்பட்டினத்தில் இருந்து 40 கி மீ 

திருத்துறைப்பூண்டியில் இருந்து 18 கி மீ

ஏமப்பூரில் இருந்து 5 கி மீ  



1. தல வரலாறு 

2 தல வரலாறு

3 தல வரலாறு 






ஏமப்பேறூர் ( எ ) திரு நெய்ப்பேறு     

தேவார வைப்புத் தலம் 
நாயன்மார் நமிநந்தி அடிகளார்  அவதார தலம்.
சாலை ஓரத்தில் அடிகளாருக்கு கோயில் உள்ளது.
இதன் எதிரே செல்லும் பாதையில் சென்றால்
சிவன் கோவிலை அடையலாம்.

Route  Map 

1. தல வரலாறு 



வலிவலம் 

தேவார பாடல்  பெற்ற தலம்
காவிரியின் தென் கரையில் அமைந்துள்ள
பாடல் பெற்ற தலங்களின் வரிசையில் 121வது  தலம் 


Tuesday 29 May 2018

கோயில் கண்ணாப்பூர்

தேவார பாடல்  பெற்ற தலம்
காவிரியின் தென் கரையில் அமைந்துள்ள
பாடல் பெற்ற தலங்களின் வரிசையில் 120


Route Map 

சாட்டியக்குடி  வேதபுரீஸ்வரர்  கோவிலில் 
இருந்து சுமார் 4.5 கி  மீ  தொலைவில் உள்ளது .
1. தல வரலாறு 

2 தல வரலாறு 

3 தல வரலாறு 


சாட்டியக்குடி 

 பசுபதீஸ்வரர்  கோவிலில் இருந்து
திருத்துறைப்பூண்டி  செல்லும் சாலையில்
உள்ள ஊர்  சாட்டியக்குடி
இங்குஊரின்   சிவன் கோவிலில் 
உள்ள இறைவனின் பெயர்
வேதபுரீஸ்வரர்.

தேவூரில் இருந்து சுமார் 7 கி  மீ 
தொலைவில் அமைந்துள்ளது.

அமைவிடம் 


பசுபதீச்சுரம் 

மாணிக்க வாசகரின்  திருக்கீர்த்தி
அகவலில் இடம் பெற்ற
" தேவூர் தென்பால் திகழ் " எனது தொடங்கும்
பாடலில் இடம் பெற்ற பசுபதீச்சுரம்  என்ற
மிகப் பழமை வாய்ந்த திருத்தலம்,,
தேவூரின் அருகே , தென் பகுதியில்
உள்ள    வ உ சி  நகர் என்ற பகுதியில்
அமைந்துள்ளது.

தேவயக்ஞனன்  என்ற அக்னிஹோத்ரி
வளர்த்து வந்த பசு கன்றை ஈந்தவுடன்  இறந்துபட்ட,
பசுவின் கன்று பால் குடிக்க முடியாமல்
வருந்துவதைக் கண்ட  அக்னிஹோத்ரி ,
இறைவனிடம் முறையிடுகிறார். 

பக்தனின் துயர் தீர்க்க,
சிவபெருமான்  பசுவாகத் தோன்றி ,
கன்றுக்கு பாலூட்டிய தலம்.
இதை விவரிக்கும் சிதைச் சிற்பம் உள்ளது.
இத்தலம், தேவருக்கும்,
முற்பட்ட தலமாகும்.

அமைவிடம் 




தேவூர் 

தேவார பாடல்  பெற்ற தலம்
காவிரியின் தென் கரையில் அமைந்துள்ளபாடல் பெற்ற தலங்களின் வரிசையில் 085

Route Map from  கீழ் வேளூர் 


1. தல வரலாறு 

2. தல வரலாறு 

3. தல வரலாறு 
கீழ் வேளூர்  ( எ ) கீவளூர்

 தேவார பாடல்  பெற்ற தலம்
காவிரியின் தென் கரையில் அமைந்துள்ள
பாடல் பெற்ற தலங்களின் வரிசையில் 084

அமைவிடம் 

1. தல வரலாறு 

2. தலவரலாறு 

3 தல வரலாறு 

கீழ் வேளூரில் உள்ள மற்றோர்  சிவாலயம்
அனந்தீஸ்வரர்  ஆலயம்

அமைவிடம்