Saturday 2 June 2018

தகட்டூர் 
Pin  614714

தேவார வைப்புத்தலம் 
சுந்தரரின் திருநாட்டு தொகையில்
குறிப்பிடப்பட்டுள்ள தலம் .

கடிக்குளம் கற்பகநாதர் கோவிலில்
இருந்து 12 km
வாய்மேடு - வேதாரண்யம் பாதையில்
இடதுபுறம் திரும்ப வேண்டும்.


வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த விலங்கலான் 
கூழை ஏறுகந் தானிடங் கொண்டதுங் கோவலூர்
தாழையூர் தகடூர் தக்களூர் தருமபுரம்
வாழை காய்க் கும்வளர் மருகல் நாட்டு மருகலே

இறைவன் : பைரவநாதர் 
8.00 - 12.00 ; 5.00 - 8.00
ஞாயிறு, திங்கள், வெள்ளி
ஆகிய தினங்களில்
மதியம் 1.00 வரை.



யந்த்ரபுரி என பெயர் பெற்ற தலம்.
யந்திரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு
மஹாசக்தி வாய்ந்த தலமாகக்
கருதப்படுகிறது.

இராமாயண காலத்துப் பிண்ணனி
உள்ள கோவில்.

இராவண சம்ஹாரம் முடிந்த பின்னர்
பிரம்மஹத்தி தோஷம் நீங்க இராமர்
சிவலிங்கம் அமைத்து பூஜை செய்ய
விரும்பினார்.

கங்கைக் கரையில் இருந்து சிவலிங்கத்தைக்
கொண்டுவர அனுமனிடம் கேட்டபோது,
அனுமனோ ஒரு கோவிலுக்குத் தேவையான
அனைத்தையும் கொண்டு வந்தார்.

மகா மண்டபத்தில் உள்ள
காசி விஸ்வநாதரும்,
பைரவரும் அனுமன் கொண்டுவந்தாகும்.

பூலோகத்தில், பைரவர்
பரமேஸ்வரரின் திருஅவதாரம்.

எனவே, கருவறையில் பைரவருக்கே
பிரதான வழிபாடு. காசி விஸ்வநாதர்
மறுபுறம் உள்ளார்.

சத்ரு உபாதை, மரண பயம்,
வியாதி தொந்திரவு, திருமணத் தடை
ஆகியவற்றிற்கு தீர்வு தரும் பைரவர்












No comments:

Post a Comment