Saturday 2 June 2018

கோயிற்குளம் ( எ ) தளிக்குளம்
Pin 614707

தேவார வைப்புத்தலம்

தகட்டூர் பைரவநாதர் கோவிலில்
இருந்து 12 km

அருள்மிகு  பாலினும் நன்மொழியாள் 
உடனுறை
எழுமேஸ்வரமுடையார் 

8.00 - 11.00 ; 5.00 - 7.00 

V M  உமாபதி சிவம்  91597 28259
வீடு அருகில் உள்ளது.

அப்பர் :
நள்ளாறும் பழையாறுங் கோட்டாற் றோடு
நலந்திகழும் நாலாறுந் திருவை யாறுந்
தெள்ளாறும் வளைகுளமுந் தளிக்கு ளமுநல்
இடைக்குளமுந் திருக்குளத்தோ டஞ்சைக் களம்
விள்ளாத நெடுங்களம்வேட் களம்நெல் லிக்கா
கோலக்கா ஆனைக்கா வியன்கோ டிகா
கள்ளார்ந்த கொன்றையான் நின்ற ஆறுங்
குளங்களங்கா எனவனைத்துங் கூறு வோமே....   



2100 ஆண்டுகள் பழமையான தலம்.
மூலவர் சுயம்பு
எழுமுள்  காணப்படும் ஒருவகை
முற்செடிகள் ( எழு முல்லைக்காடு) இருந்த
குளத்தில் , துளசி மகாராஜன் தன்னுடைய
குஷ்டரோகம் நீங்க இறைவனை வேண்டினான்.

இறைவன் கனவில் தோன்றி ,
மாடு பால் சொரிந்துவரும் இந்த
எழுமுள் காட்டில் உள்ள இறைவனை
வழிபாடாக கூற , அரசனும் அவ்வாறே
108 ஏக்கர் நிகிலத்தில் கோவிலும்,
குளமும் கட்டி இறைவனை வழிபட்டு ,
தன் நோய் தீரப்  பெற்றான்.

கோவில் அருகில் உள்ள புத்திரங்கன் குட்டை
என்னுமிடத்தில் நீராடி, அக்குளத்தில் இருந்த
வெண் தாமரை மலர்களின் தண்டில்  திரி செய்து,
48 நாட்கள் இறைவனை வழிபாட்டு,
புத்திர சந்தானம் பெற்றான்,
துளசி மகாராஜனின் மகன்.

மஹரிஷிகள் வழிபட்ட தலம் .












































No comments:

Post a Comment