| திருவதிகை |
| இறைவன் பெயர் : அதிகை வீரட்டேஸ்வரர் |
| இறைவி பெயர் : திரிபுரசுந்தரி |
| இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் |
| மாலை 4-30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும் |
| தல புராண வரலாறு: |
| சிவபெருமானின்
வீரம் வெளிப்பட்ட எட்டு தலங்களில் முக்கியமான தலம் திருவதிகை. அட்ட வீரட்டானத் தலங்களில் ஒன்றாகத் திகழும் திருவதிகையில் தான் சிவபெருமான் |
| திரிபுர சம்ஹாரம் செய்தார்.
வித்யுந்மாலி, தாருகாட்சன், கம்லாட்சன் என்ற மூன்று அசுரர்கள் முறையே |
| பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் மூன்று கோட்டைகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர். |
| இந்த கோட்டைகளுக்கு விமானம் போல் நினைத்த இடங்களுக்குச் |
| செல்ல வசதியாக
சிறகுகளும் இருந்தன. இந்த முப்புரங்களையும் வைத்துக் கொண்டு இந்த அசுரர்கள் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர். |
| தேவர்கள் அசுரகள் தொல்லை பொறுக்கமுடியாமல் |
| சிவபெருமானிடம்
முறையிட்டனர். மூன்று அசுரர்களையும் அழிக்க சிவபெருமான் பூமியைத் தேராக்கி, |
| நான்கு
வேதங்களையும் குதிரைகளாக்கி, பிரம்மாவை சாரதியாக்கி, சூரிய சந்திரர்களை சக்கரங்களாக்கி மற்ற எல்லா உலகப் படைப்புகளையும் |
| போர் புரிவதற்கான ஒவ்வொரு உறுப்பாகி புறப்பட்டார். இச்சமயம் ஒவ்வொரு உறுப்பும் தன்னால் தான் முப்புரங்களையும் |
| சிவபெருமான் வெல்லப் போகிறார் என்று நினைத்து கர்வம் கொள்ளத் தொடங்கின. |
| இறைவன் இவ்வாறு
ஒவ்வொருவரும் கர்வம் கொண்டிருப்பதைக் கண்டார். தன் பங்கு இல்லாமல் இப்படையில் எந்த ஒரு பயனும் இல்லை |
| என்று அவர்களுக்குப் புரிய வைக்க நினைத்து, தேவர்களின் செருக்கு அடங்கப் புன்னகையும் |
| ,சிவபூஜை தவறாத திரிபுர அசுரர்கள் உய்யுமாறு தண்ணகையும்,
சிவபூஜை தவறிய முப்புரவாசிகள் மடியுமாறு வெந்நகையும் |
| ஆகிய இம்மூன்றையும் இத்தல சிவபெருமான் செய்தார். |
| அவர் சிரித்த
உடனேயே கோட்டைகள் மூன்றும் பொடிப்பொடியாக பொசுங்கிப் போயின. இச்சம்பவம் நடந்த இடம் தான் திருவதிகை. |
| திருநாவுக்கரசர்: |
| திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூர் என்ற ஊரில் புகழனார் மாதினியார் தம்பதிகளுக்கு |
| மகளாக திலவதியும்,
மகனாக மருள்நீக்கியாரும் பிறந்தனர். மருள்நீக்கியார் வளர்ந்தவுடன் சமண சமயத்தில் |
| ஈடுபாடு கொண்டு சமண
சமயத்தைச் சார்ந்து தருமசேனர் என்று பெயரோடு வாழ்ந்து வருகிறார். தமக்கை திலவதியாரோ தனக்கு மணம் புரிய நிச்சயிக்கப்பட்ட |
| கலிப்பகையார் போரில் இற்ந்துபோக, இனி தனக்கு திருமணம் வேண்டாம் என்று வெறுத்து சைவ சமயம் சார்ந்து |
| இறைப்பணி செய்து வாழ்ந்து வருகிறார்.
தம்பி சமண மதத்தில் இருந்து விலகி சைவ சமயம் சார |
| அருள்புரிய வேண்டி சிவபெருமானிடம் முறையிடுகிறார். |
| இந்நிலையில் தம்பி
தருமசேனரை கொடிய சூலைநோய் தாக்குகிறது. சூலைநோயின் கொடுமை தாங்க முடியாமல் |
| தம்பி
துன்பப்படுவதைக் கண்ட திலகவதி திருவதிகை இறைவனிடம் கூட்டிச் சென்று அங்குள்ள |
| திருநீறை அவருக்குப் பூசி இறைவன் மேல் மனமுருகிப் பாடச் சொல்கிறார். அவரும் |
| கூற்றாயின வாறு விலக்ககிலீர் |
| கொடுமைபல செய்தன் நான் அறியேன் |
| ஏற்றாய அடிக்கே இரவும் பகலும் |
| பிரியாது வணங்குவன் எப்பொழுதும் |
| தோற்றாது என் வயிற்றின் அகம் படியே |
| குடரோடு துடக்கி முடக்கியிட |
| ஆற்றேன் அடியேன் அதி கைக்கெடில |
| வீரட்டானத் துறை அம்மானே |
| என்ற பாடலுடன்
தொடங்கும் பதிகத்தைப் பாடி சூலை நோய் நீங்கப் பெற்றார். மேலும் நாவுக்கரசர் என்று சிவபெருமானால் அழைக்கப்பட்டு |
| தருமசேனராக இருந்தவர் திருநாவுக்கரசர் என்று சிவபெருமான் சூட்டிய திருநாமத்துடன் |
| சைவ
சமயத்திற்குப் பெரும் தொண்டு செய்யத் தொடங்கினார். தனது சூலை நோய் நீங்கப் |
| பாடிய பதிகமே இவர் பாடிய முதல் பதிகமாகும். |
| கோவில் அமைப்பு: |
| கோவில் சுமார் 7
ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு பெரிய கோவிலாகும். கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் 7 நிலைகளுடனும், 7 கலசங்களுடனும் காட்சி தருகிறது. |
| கோயிலுக்கு முன்னால் பதினாறுகால் மண்டபம் உள்ளது. |
| இதைத் திருநீற்று
மண்டபம் என்றழைக்கிறார்கள். இம்மண்டபத் தூண்களில் ரிஷபாரூடர், அப்பர், மயில் வாகனன் முதலிய சிற்பங்களும், |
| இக்கோயிலைத் திருப்பணி செய்வித்த செட்டியார் சிற்பங்களும் உள்ளன.
கோபுர வாயிலின் இரு பக்கமும் நாட்டியக் கலையின் |
| 108 தாண்டவ லட்சணங்களை விளக்கும் வகையில்
பெண்கள் அழகிய சிற்பங்களாகக் காட்சி அளிக்கின்றனர். |
| வலப்பக்கத்தில் சற்று உயரத்தில்
திரிபுமெரித்த கோலம் மிக அழகாக வடிக்கப்பட்டுள்ளது. |
| அதன் கீழ் கஜசம்ஹாரகோலம். கோபுர வாயில் வழியாக உள்ளே நுழந்தவுடன் |
| உட்புறத்தில்
மற்றொரு பதினாறுகால் மண்டபம் உள்ளது. திறந்த வெளி முற்றத்தின் தென்பக்கம் சங்கர தீர்த்தமும், |
| வடப்பக்கம் 5 அடி உயரமுள்ள பத்மாசனக் கோலத்தில் காணப்படும் ஒரு புத்தர் சிலையும் உள்ளன. |
| 2வது கோபுர வாயிலின் வெளிப்புறம் விநாயகர், கொடிமரம், பலிபீடம் ஆகியவை உள்ளன. |
| 5 நிலைகளையுடைய
இரண்டாவது கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் ஒரு பெரிய நந்தியின் உருவசிலைக் காணப்படுகிறது. |
| ஒருபுறம் முருகப் பெருமானும், மறுபுறம் கணபதியும் காட்சியளிக்கின்றனர். |
| 2வது சுற்றின் தென்புறத்தில்
திருநாவுக்கரசருக்கும், அவர் தமக்கை திலகவதிக்கும் தனித் தனியாக சந்நிதி உள்ளது. |
| அதற்கடுத்து பைரவர், சனீஸ்வரர், மற்றும் துர்க்கையம்மன் சந்நிதிகள் உள்ளன.
அதன்பின் இறைவி பெரியநாயகி சந்நிதி இருக்கிறது |
| . அம்பிகையின் கோவில் வாசலில் இருந்து இறைவி சந்நிதி விமானத்தைக் காணலாம். |
| விமானத்தில் உள்ள சுதை வேலைப்பாடு சிற்பங்கள் பல வண்ணங்களில் நம் கருத்தைக் கவரும். |
| இவைகளில் பிரச்சித்தமான வடிவம் திரிபுராந்தகர் சிற்பம். 12 திருக்கரங்கள், சூலம் ஏந்திய கை ஒன்று, |
| வில்லேந்திய கை ஒன்று, ஒரு கால் தேர்த்தட்டிலும், மற்றொரு காலை உயர்த்தியும் . |
| வில் வளைத்து நிற்கிறார் |
| 3வது சுற்றில் தான்
மூலவர் அதிகை வீரட்டேஸ்வரர் சந்நிதி இருக்கிறது. கருவறையில் காட்சி அளிக்கும் வீரட்டேஸ்வரர் |
| 16
பட்டைகளுடன் கூடிய சுயம்பு லிங்கம் ஆவார். இவருக்குப் பின்னால் கருவறைச் சுவற்றில் |
| பார்வதி, சிவன் கல்யாணத் திருக்கோலம் காட்சி
தருகிறது. மூலஸ்தானத்தின் மேல் உள்ள விமானம் பல்லவர் காலத்தைச் சார்ந்தது. |
| இறைவன் கருவறை விமானம் நிழல் பூமியில் சாயாதபடிக் கட்டப்பட்டுள்ளது.
கருடன், பிரம்மா, திருமால், பஞ்சபாண்டவர் ஆகியோர் |
| இத்தலத்தில் வீரட்டேஸ்வரரை பூஜித்திருக்கின்றனர். |
| உள் சுற்றின்
தென்மேற்கே உள்ள பஞ்சமுக லிங்கம் காணவேண்டிய ஒன்று. இதுவம் பல்லவர் காலத்தைச் சார்ந்தது. |
| இத்தகைய
பஞ்சமுக லிங்கம் தமிழ்நாட்டில் வேறெங்கும் காண முடியாது. மூன்று திக்குகளை நோக்கி நானகு முகங்கள் உள்ளன. |
| ஒரு முகம் மேல் நோக்கி உள்ளதாக ஐதீகம். எனவே பஞ்சமுக லிங்கம் என்று கூறுவர். |
| இது
ஒரு அரிய தரிசனம் ஆகும். வரிசையாகப் பல சிவலிங்கத் திருமேனிகள் உள்ளன. |
| யாகசாலை, நவக்கிரக சந்நிதிகளையடுத்து, நடராச சபை உள்ளது. |
| இத்தலத்து
முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 2 பாடல்கள் உள்ளன. |
| இத்தலத்தில் ஆறுமுகப் பெருமான் தனது தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார் |
| . உற்சவரும் தன் இரு தேவியருடன் சணமுகப் பெருமானாகக் காட்சி தருகிறார். |
| திருநாவக்கரசர்
உழவாரப்பணி செய்த இத்தலத்தை மிதிக்க அஞ்சி சுந்தரர் அருகிலிருந்த சித்தவடமடத்தில் .தங்கி |
| இத்தலப்
பெருமானை வழிபட்டார். சுந்தரர் இரவு மடத்தில் தூங்கிக் கொண்டு இருந்த போது அவரின் மேல் யாரோ காலால் இடிப்பது தெரிந்து |
| சுந்தரர் நகர்ந்து படுத்தார். மீண்டும் யாரோ அவர் தலையில் கால் படும்படி படுக்க |
| ,
சுந்தரர் எழுந்து காலால் தலையை தீண்டியவரை கடுமையாகப் பேச, பின் இறைவன் தான் இவ்வாறு திருவிளையாடல் செய்துள்ளார் |
| என்பதைப் புரிந்து கொண்டு அவரை வணங்கினார்.
இவ்வாறு சுந்தரர் இறைவனிடம் திருவடி தீட்சை பெற்றதும், |
| பல்லவனான மகேந்திர வர்மனின் மனத்தை மாற்றிச் |
| சமணபள்ளிகளை
இடித்துக் குணபரவீச்சரம் என்ற கோவிலை எழுப்பச் செய்ததும் இத்தலத்தின் பெருமையைப் பறைசாற்றும் நிகழ்ச்சிகளாம் |
Showing posts with label verattanam. Show all posts
Showing posts with label verattanam. Show all posts
Saturday, 5 March 2016
Saturday, 13 February 2016
| வீரட்டேஸ்வரர்
கோவில், திருக்கோவிலூர் |
| இறைவன் பெயர் : வீரட்டேஸ்வரர் |
| இறைவி பெயர் : சிவானந்தவல்லி |
| இவ்வாலயம்
தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4-30 மணி முதல் |
| இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும். |
| ஆலய தொடர்புக்கு: 93456 60711 |
| இத்தலத்தில்,
இறைவன் சுயம்பு மூர்த்தியாக, பைரவ சொரூபமாக அருள்பாலிக்கின்றார். |
| இது சுக்கிரன் சாப விமோசனம் பெற்ற ஸ்தலம் |
| திரிபுர பைரவி உற்பத்தி ஸ்தலம் . |
| சப்த மாதாக்கள் உற்பத்தியான ஸ்தலம். |
| 64 பைரவர்கள் , 64 பைரவிகள் உற்பத்தியான ஸ்தலம் . |
| தல விருட்சம் : சரக் கொன்றை . |
| சிவபெருமான் வீரச்
செயல்கள் புரிந்த அட்டவீரட்டத் தலங்களில் அந்தாகாசுரனை வதைத்த தலம், 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திரிவிக்ரமப் பெருமாள் வைணவ ஆலயமும், |
| ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம் என்று |
| சொல்லப்படும் முதல் மூன்று ஆழ்வார்களின் வரலாற்று நிகழ்ச்சி இடம் பெற்ற தலம், |
| தஞ்சை பெரிய கோவிலைக் கட்டியவனும், |
| திருமுறை கண்ட
சோழன் என்று போற்றபடுவனும் ஆன ராஜராஜன் பிறந்த தலம் என்று பல |
| பெருமைகளை உடையது திருக்கோவலூர் தலம். |
| தல வரலாறு: |
| பார்வதி,
சிவபெருமானின் இரு கண்களை ( சூரியன், சந்திரன் ) விளையாட்டாக மூடியதால், எங்கும் இருள் சூழ்கிறது. |
| அந்த
இருளே , அந்தகாசுரன் என்னும் அரக்கனாக உருவெடுக்கிறது. அந்தகாசுரனை அழிக்க சிவபெருமான் யுத்தம் புரியும்போது, |
| அசுரனின் தலையில் , கதையால் ஓங்கி அடிக்கிறார். அசுரனின் |
| தலையிலிருந்து
பீரிட்ட இரத்தம் பூமியில் விழுகிறது. ஒவ்வொரு துளி இரத்தத்திலிருந்தும் பல அசுரர்கள் |
| உற்பத்தி ஆக, யுத்தம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. |
| அசுரர்களின்
உற்பத்தியை தடுக்க, உமையவள், காளி சொரூபம் கொண்டு, அந்தகாசூரனின் தலையிலிருந்து விழும் இரத்தத் துளிகளை , |
| கையில் கபாலம் கொண்டு எந்துகிறாள். |
| அசுரனின்
தலையிலிருந்து வெளிப்பட்ட ரத்தங்கள், ரத்தக் கோடுகளாகி , எட்டத் திசையிலும் , குறுக்கும் |
| நெடுக்குமாக 8 , 8
ஆக, 64 ( சதுரங்கள் ) பதங்களாக விழுகிறது. அந்த பதங்களில் , சிவபெருமான் , தன் அருளால் |
| 64 பைரவர்களை
உற்பத்தி செய்து, அந்த பதங்களில் இருத்தி, அசுர உற்பத்தியை தடுத்து, அந்தகாசுரனை வதம் |
| செய்து,
தேவர்களுக்கு அனுக்கிரகம் செய்கிறார். ( இதுவே, இக்காலத்தில் வாஸ்து சாந்தி என்று கிரக பிரவேச |
| காலங்களிலும்,
வீடு கட்டும் காலங்களிலும் செய்யப்படும் வாஸ்து சாந்தி தோஷ நிவர்த்தியாகும் ) |
| இவ்வாறு , அந்தகனை அழித்து , அஞ்ஞானத்தை நீக்கி , மெய்ஞானத்தை அருளியவர் , |
| வீரட்டானேசுவரர் ஆவார். |
| வீரட்டேஸ்வரர்
கோவிலும், அம்பாள் சிவானந்தவல்லி கோவிலும் தனித்தனி கோவில்களாக சுற்று மதிலுடன் |
| மேற்கு நோக்கி
அருகருகே அமைந்துள்ளன. சுவாமி கோவிலுக்கு இடதுபுறம் அம்பாள் கோவில் |
| அமைந்துள்ளது.
இரண்டு கோவில்களுக்கும் 3 நிலை கோபுரங்கள் உள்ளன. கோபுரங்களுக்கு முன்னால் விசாலமான வெளியிடம் உள்ளது |
| சுவாமி கோவில்
கோபுர வழியே உள்ளே நுழைந்ததும் கவசமிட்ட கொடிமரம், முன்னால் நந்தி உள்ளதைக் காணலாம். வெளிப்பிராகாரத்தில் சந்நிதி ஏதுமில்லை. |
| முகப்பு வாயிலில் மேலே பஞ்சமூர்த்திகள் வைக்கப்பட்டுள்ளன. முன்தூணில் |
| இடதுபுறம் மெய்ப்பொருள்நாயனார் சிற்பம் உள்ளது. வலதுபுறம் கணபதியின் |
| சந்நிதி உள்ளது.
ஒளவையாரால் வழிபடப்பட்ட விநாயகர் இவர். சுந்தரர் வெள்ளை யானை மீதேறியும், அவரது தோழரான சேரமான் பெருமாள் நாயனார் |
| குதிரை மீதேறியும் கைலாயம் செல்லும் போது ஒளவையாரையும் உடன் வருமாறு |
| அழைத்தனர். ஒளவையார் தானும் கயிலை செல்ல எண்ணி அவசரமாக |
| பூஜை செய்ய,
விநாயகர் காட்சி தந்து பொறுமையாக பூஜை செய்யும் படியும், கயிலைக்கு தான் அழைத்துச் செல்வதாகவும் அருளினார். இத்தல கணபதியை |
| வழிபட்டுக்கொண்டிருந்த ஒளவையார் வழிபாட்டைத் தொடர்ந்து |
| விநாயகர்
அகவல் பாடி பூஜையை முடித்தார். வழிபாடு முடிந்த பிறகு ஒளவையாரை தனது துதிக்கையால் சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரும் |
| கயிலையை அடைவதற்கு முன்பு சேர்த்து விட்டார். |
| இவ்வாறு ஒளவையைத்
தூக்கிவிட்ட கணபதி இவரே என்பர். விநாயகர் சந்ந்திக்கு முன்புறம சுவரில் புடைப்புச் சிற்பமாக |
| இந்த வரலாறு காணப்படுகிறது. வாயிலின் இடதுபுறம் வள்ளி தெய்வயானை சமேத |
| ஆறுமுகப்பெருமான்
சந்நிதி உள்ளது. பக்கத்தில் கஜலட்சுமி சந்நிதியும், நடராசசபையும் உள்ளன. |
| திருப்புகழ்
தலம்: திருக்கோவிலூர் ஒரு திருப்புகழ் தலமாகும். இத்தல முருகப்பெருமானை அருணகிரிநாதர் |
| தனது திருப்புகழில்
பாடியுள்ளார். ஓரு திருப்புகழ் பாடல் இத்தலத்திற்கு உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறுமுகராக ஆறு திருமுகத்துடனும் |
| 12 திருக்கரங்களுடனும் தேவியர் இருவருடம் மயில் மீது அமர்ந்து |
| அருள்பாலிக்கின்றார். |
| தலமூர்த்தியாகிய
அந்தகாசுர சம்ஹார மூர்த்தி விசேஷமானது. பக்கத்தில் நரசிங்க முனையரையர், மெய்ப்பொருள் நாயனார் ஆகியோரின் உற்சவத் |
| உள்ளன. துவாரபாலகரை வணங்கி உள்ளே சென்றால் மூலவர் திருமேனிகள் |
| வீரட்டேஸ்வரர்
சுயம்பு சிவலிங்கத் திருமேனி, பெரிய உருவத்துடன் தரிசனம் தருகிறார். கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் |
| துர்க்கை ஆகியோரைக் காணலாம். துர்க்கை எட்டுக் கரங்களுடன் |
| காட்சியளிக்கின்ற
நின்ற திருக்கோலம் மிகவும் விசேஷமாகவுள்ளது. விழிகள் மிகவும் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளன |
| அம்பாள் கோயில்
தனியே 3 நிலை கோபுரத்துடன் உள்ளது. முன்மண்டபத்தில் இருபுறமும் துவாரகாலகர்களாக |
| விநாயகரும்
சுப்பிரமணியரும் உள்ளனர். சந்நிதிக்கு முன்னால் நந்தி பலிபீடம் உள்ளன. அம்பாள் |
| அபயவரதத்துடன்
கூடிய நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகிறாள். |
| விநாயகர் அகவல் |
| சீதக் களபச் செந்தா மரைப்பூம் |
| பாதச் சிலம்பு பலவிசை பாடப் |
| பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் |
| வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் |
| பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05) |
| வேழ முகமும் விளங்குசிந் தூரமும் |
| அஞ்சு கரமும் அங்குச பாசமும் |
| நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் |
| நான்ற வாயும் நாலிரு புயமும் |
| மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10) |
| இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் |
| திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் |
| சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான |
| அற்புதம் நிறைந்த கற்பகக் களிறே! |
| முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15) |
| இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித் |
| தாயா யெனக்குத் தானெழுந் தருளி |
| மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத் |
| திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப் |
| பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20) |
| குருவடி வாகிக் குவலயந் தன்னில் |
| திருவடி வைத்துத் திறமிது பொருளென |
| வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக் |
| கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே |
| உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25) |
| தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி |
| ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் |
| இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் |
| கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து) |
| இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30) |
| தலமொரு நான்கும் தந்தெனக் கருளி |
| மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே |
| ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால் |
| ஐம்புலக் கதவை குழாத்துடன் காட்டி |
| ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35) |
| பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே |
| இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக் |
| கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி |
| மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின் |
| நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40) |
| குண்டலி யதனிற் கூடிய அசபை |
| விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து |
| மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக் |
| காலால் எழுப்பும் கருத்தறி வித்தே |
| அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45) |
| குமுத சகாயன் குணத்தையும் கூறி |
| இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும் |
| உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச் |
| சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும் |
| எண் முகமாக இனிதெனக் கருளிப் (50) |
| புரியட்ட காயம் புலப்பட எனக்குத் |
| தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக் |
| கருத்தினில் கபால வாயில் காட்டி |
| இருத்தி முத்தி யினிதெனக் கருளி |
| என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55) |
| முன்னை வினையின் முதலைக் களைந்து |
| வாக்கும் மனமும் இல்லா மனோலயம் |
| தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து) |
| இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன |
| அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60) |
| எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து) |
| அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச் |
| சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச் |
| சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி |
| அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65) |
| கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி |
| வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் |
| கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி |
| அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை |
| நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70) |
| தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட |
| வித்தக விநாயக விரைகழல் சரணே! (72) |
| ( திருச்சிற்றம்பலம் ) |
Subscribe to:
Posts (Atom)