Friday 8 June 2018

ஆனைமங்களம் ( எ ) ஆனைமாகாளம் 
PIN 610101
வட்டம் : திருவாரூர் 
மாவட்டம் : திருவாரூர் 

தேவார வைப்புத்தலம் 

அப்பர் அருளிய திருவீழி மிழலை 
திருத்தாண்டகம்  ( 6- 51 - 7 )

மறைக்காட்டார் வலிவலத்தார் வாய்மூர் மேயார்
வாழ்கொளி புத்தூரார் மாகா ளத்தார்
கறைக்காட்டுங் கண்டனார் காபா லியார்
கற்குடியார் விற்குடியார் கானப் பேரார்
பறைக்காட்டுங் குழிவிழிகட் பல்பேய் சூழப் 
பழையனூர் ஆலங்காட் டடிகள் பண்டோ ர்
மிறைக்காட்டுங் கொடுங்காலன் வீடப் பாய்ந்தார்
வீழி மிழலையே மேவி னாரே.



சுந்தரர் அருளிய ஊர்த்தொகை  
தேவாரத் திருப்பதிகம் ( 7 - 47 - 5 )

மருகல்  உறைவாய் மாகா ளத்தாய் மதியஞ் சடையானே 
அருகற் பிணிநின் னடியார் மேல அகல அருளாயே 
கருகற்  குரலாய் வெண்ணிக் கரும்பே கானுர்க் கட்டியே 
பருகப் பணிவாய் அடியார்க் குன்னைப்  பவளப் படியானே 





பாடல் பெற்ற தலமான,
கீவளூரில் உள்ள சிவனை முருகன் 
பூஜிக்க வந்தபோது, அவனைக் காக்கும் 
பொருட்டு யானை மேல் ஏறி வந்து  , சிவனை 
காளி  பூஜித்ததால் , ஆனை  மாகாளம் 
எனப்பட்டது. 

இதர மாகாளங்கள் :

அம்பர் மாகாளம் 
உஜ்ஜையினி  மாகாளம் 
இரும்பை மாகாளம் 

அருள்பாலிப்பவர் :
அருள்மிகு மங்களநாயகி உடனுறை 
மகாகாளேஸ்வரர் 

கோவில் குருக்கள் : 
98433 59496

தரிசன நேரம் :
கோவில் குருக்களைத் தொடர்பு கொள்ளவும்.

கீழ்வேளூர் (கீவளூர்) வந்து பிரதான சாலையில் விசாரித்து 
'வடகரை' சாலையில் சிறிது தூரம் சென்றால் ஊரையடையலாம் -
 'வெட்டாற்றை'க் கடந்தால் மறுகரையில் கோயில் உள்ளது.



அமைவிடம் : ( கீழே சொடுக்கவும் )

கீழ் வேளூரில் இருந்து  7 கி மீ 

மயிலாடுதுறையில் இருந்து  50 கி மீ 

திருவாரூரில் இருந்து 22 கி மீ 

நாகை ப்பட்டினத்தில் இருந்து   20 கி மீ 










No comments:

Post a Comment