Wednesday 17 December 2014




திருவெம்பாவை

பாடல் 3


முத்தன்ன வெண் நகையாய் !
முன் வந்து , எதிரெழுந்து ,
" எப் அத்தன் , ஆனந்தன் , அமுதன் "
என்று  அள்ளூறி ,
தித்திக்க  பேசுவாய்  ,
வந்துன் கடை திறவாய் !

பத்துடையீர் !
ஈசன் பழ அடியீர் !!
பாங்குடையீர் !!!
புத்தடியோர்   புன்மை தீர்த்து
ஆட்கொண்டார்  பொல்லாதோ ?

எத்தோ ...
நின் அன்புடைமை
எல்லோம் அறியோமோ ?
சித்தம்  அழகியார்
பாடாரோ நம் சிவனை !
இத்தனையும் வேண்டும்
நமக்கேலோர்  எம்பாவாய் !




தோழியர் ;  முத்து போன்று  ஒளிரும்  புன்னகையை உடையவளே !
                         எல்லோருக்கும்  முன்பாகவே எழுந்திருந்து ,
                         " என் அத்தன் , ஆனந்தன் , அமுதன் " என்று
                         வாய் திளைக்க,  இனிக்க , இனிக்க  பேசுவாய் !
                         (  என்ன ஆயிற்று உனக்கு , இன்று ? )  வந்து  கதவை திற !

நாயகி     :   பத்து குணங்களை உடையவர்களே !
                       இறைவனின் அடியார்களே  முதிர்ச்சி பெற்றவர்களே !
                       நட்புடையவர்களே !
                       புதியவளாகிய  என்னுடைய குற்றத்தையும்  நீக்கி ,
                       என்னையும்  அடியாராக ஆக்கிக் கொண்டால்  குற்றமா ?

தோழியர்  :  நீ  இறைவன்பால் வைத்துள்ள அன்பு  எமக்கு  தெரியாதா
                         என்ன ?  உள்ளம் ஒழுங்குபட  இருப்பவர்  நம் சிவனை
                          பாடாது இருப்பாரா ?  இவ்வளவும்  எங்களுக்கு தேவைதான் !







தொடரும் .......


No comments:

Post a Comment