Friday 19 April 2019

கேதார்நாத் பயணம்
நாள்  5 6 7

17/05/2019;18/05/2019;19/05/2019

இங்கு வந்தவுடன் தங்குமிடத்தை தேர்வு செய்து
சிரம பரிகாரங்களை முடித்துக் கொண்டு
ஐயனை தரிசிக்க வேண்டும்

வரைபடம் 1


வரைபடம் 2 

பைரவநாத்  கோவில்
முதலில் பைரவரை தரிசிக்க வேண்டும்


ஆதி சங்கரர் சமாதி
அடுத்ததாக, இங்கு சிவனை  வழிபட்டு முக்தி
அடைந்த ஆதிசங்கரரை வழிபட்டு
அவர் ஆசியுடன் கேதாரீஸ்வரரை
தரிசிக்க வேண்டும்


கேதாரீஸ்வரர்

பாண்டவர்களால்  கட்டப்பட்ட கோவில்
பின்னர், ஆதி சங்கரரால் புனரமைக்கப் பெற்றது

பரிவார மூர்த்திகள்

பைரவர்
பிள்ளையார்
நந்தி
பாண்டவர்கள்
கண்ணன்
ஆதி சங்கரர்
மாருதி
ஈசாணீஸ்வரர்
விஷ்ணு
கார்த்திகேயன்
அர்த்த நாரீஸ்வரர்

திறந்திருக்கும் நேரம்

காலை 6.00 முதல் மாலை 3.00 வரை

விஷ்ணு, நர நாராயணர்களாக சிவனை வழிபட்ட இடம்
அர்ஜுனன் தவமிருந்த்து பசுபதாஸ்திரம் பெற்ற இடம்
இராவணன் தவமிருந்த இடம்
முக்கோண வடிவில் உள்ள சுயம்பு லிங்கம்
பிரம்ம கமலம் எனப்படும் அபூர்வ தாமரை
மலர்களைக் கொண்டு வழிபடுவது விஷேசம் .

பாண்டவர்கள் கேதாரீஸ்வரரை வணங்கிய \பின்னரே
சுவர்க்க யாத்திரையை தொடங்கினர்

பாரதப் போரில் பல வீரர்களை கொன்ற பாவத்திற்கு
விமோசனம் பெருவதற்காக சிவனை வழிபட காசிக்கு
சென்று, அங்கு அவர் இல்லாததால்  அவரைத் தேட
முற்படும்போது, தான் தெய்வ வடிவிலோ அல்லது
மானிட வடிவிலோ காட்சி தர முடியாது என்றும்
முடிந்தால் தன்னை கண்டுபிடியுங்கள் என்று
அசரீரியாய் கூறுகிறார் சிவன்.


இவ்வாறு சிவனைத் தேடி பாண்டவர்கள் அலைந்து
கொண்டிருக்கும்போது, கேதார்நாத்தில் பெரும்
கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்த எருமைகளின்
மத்தியில் ஒரு எருமையின்  ஒரு காலில்
மட்டும் சலங்கை கட்டியிருப்பதைக் கண்ட பீமன்,
அவ்வெருமையே சிவன் என்றுணர்ந்து, அதை நோக்கி
செல்ல, சிவனும் பூமிக்குள் மறைய முற்படுகிறார்.
அதற்குள் எருமையின் முதுகைத் தொட்டு வணங்க
அந்தப் பதிமட்டும் அப்படியே நின்றுவிட்டது.
எனவே, கேதார்நாத்தில், எருமை உருவில், சிவனின்
முதுகுப் பகுதியை தரிசிக்கலாம் !

ஞான சம்பந்தரும், சுந்தரரும் வழிபட்டு
இறைவனைப் போற்றிப் பாடிய தலம்!

12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்று

இறைவனே மிகவும் விரும்பிய  மாணிக்க வாசகரின்
திருவாசகத்தை இங்கு ஓதுதக் மிகவும் நன்று !

இந்தக் கோவில் மார்கழி மாதம் , கடும் குளிரின்
காரணமாக மூடப்பட்டிருப்பதால்,  வாதவூரார்
அருளிய திருவெம்பாவையை அதிகாலை நேரத்தில்
இந்து ஓதுவது மிகவும் நன்று என்பது என்னுடைய துணிபு !

ஓம் நம சிவாய !


















No comments:

Post a Comment