Tuesday 26 December 2017



ஈங்கோய்  மலை 

திரு ஈங்கோய் மலை எனப்படும் இந்த தலம்
திருச்சி மாவட்டத்தில், திருச்சியில் இருந்து 
சுமார் 50 கி.மீ  தொலைவிலும், முசிறியில் 
இருந்து நாமக்கல் செல்லும் பாதையில் 6 கி. மீ 
தொலைவிலும் உள்ளது 

மூவர் பெருமக்களால் பாடப்பெற்ற இந்த தலம் 
காவிரியின் வடகரையிலுள்ள 63 வது தலமாகும் .

Google வரைபடத்தில், NC063 Maragathaleswara Swamy Temple 
என குறிப்பிடப்பட்டுள்ள இந்த தலத்தின் அமைவிடத்தைக் 
காண இங்கே சொடுக்கவும் 

இம்மலையின் அடிவாரத்தில் , சித்தர் போகரின் 
ஆலயமும், கைலாச நாதர் ஆலயமும் உள்ளது.
இவைகளின் இருப்பிடத்தைக் காண 
இங்கே சொடுக்கவும் 

இறைவன்  : மரகதாலீஸ்வரர் 
இறைவி      : மரகதாம்பிகை, மரகதவல்லி 

இறைவன் மரகதத்தால் ஆன சுயம்பு மூர்த்தியாக 
அருள்பாலிக்கின்றார்.

பிருங்கி முனிவர் அம்மனை வழிபடாது, ஈசனை 
மட்டுமே வணங்கி வந்தார், இறைவன் வழிபாட்டில் 
அம்மனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் 
என்ற காரணத்தினால், இறைவனின் திருவிளையாடலின் 
மூலமாக இங்கு வந்த உமையவள், தனக்கு 
இறைவனின் உடலில் இடதுபாகத்தைத் தரும்படி 
தவமிருக்கிறாள். இறைவனும் காட்சி  அளித்து ,
இடதுபாகத்தைத் தருவதாக உறுதி அளிக்கின்றார்.
அம்மனின் சக்திபீடங்களில், இது சாயா சக்திபீடம் 
என கருதப்படுகிறது.

தென்திசைக்கு வந்த அகத்தியர், இந்த தலத்திற்கு 
வந்தபோது, ஆலயம் மூடப்பட்டிருந்ததால் , தனக்கு 
காட்சி அளிக்கும்படி இறைவனை வேண்டுகிறார். 
அப்போது ' அடிவாரத்தில் உள்ள தீர்த்தத்தில் 
நீராடிவிட்டு வந்தால் தன்னை தரிசிக்கலாம் என 
அசரீரியாய், இறைவன் உரைக்கின்றார். 

அடிவாரம் வந்து தீர்த்தத்தில் நீராடியவுடன் " ஈ " வடிவம் 
பெற்ற அகத்தியர், மலை மேலே சென்று, மூடப்பட்டிருந்த 
கதவின் சாவித்துவாராம் வழியே உள்ளே சென்று 
இறைவனை தரிசித்துத் திரும்புகிறார். 

அகத்தியர் ஈ வடிவத்தில் இறைவனை வழிபட்டதால் 
இத்தலம் ஈங்கோய் மலை என்றழைக்கப்படுகிறது. 
இறைவனுக்கு ஈங்கோய் நாதர் என்ற பெயரும் உண்டு.

இறைவனின் நண்பரான சுந்தரர் பொன் வேண்டி 
இந்த தளத்திற்கு வந்தபோது, அவருடன் விளையாட 
எண்ணிய இறைவன், புளிய மரத்தில் ஒளிந்து கொள்கிறார்.
எவ்வளவு வேண்டியும் காட்சி அளிக்காத இறைவன், 
தந்கத்தினாலான ஒரு புளியம்பழத்தை  அருளுகிறார்,
சுந்தரர் அதை எடுத்தவுடன், அதுவும் மறைந்துவிடுகிறது. 
விரக்தி அடைந்த சுந்தரர், தனக்கு கிடைக்காத புளி 
யாருக்கும் கிடைக்கவேண்டாம் என சபித்துவிட்டு 
திரும்பிவிடுகின்றார்.

இந்த ஆலயத்தின் தல விருக்ஷம் புளியமரம், ஆனால் 
இப்னு புளியமரம் இல்லை.

சிவராத்ரியின்போது, மூன்று நாட்கள் சூரிய ஒளி 
இறைவனின் மீது விழும்போது, லிங்கத்தின் நிறம் மாறி காட்சி அளிக்குமாம்.

தீபாராதனையின் போது, லிங்கத்தில் ஜோதி 
ஜொலிப்பதைக் காணலாம்.

கோஷ்டத்தில் ஒரு தக்ஷிணாமூர்த்தி, 
விமானத்தில் வினை தக்ஷிணாமூர்த்தி ,
கால் மாறி அமர்ந்த தக்ஷிணாமூர்த்தி  
என வித்தியாசமான உருவங்களில் 
தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.

அம்பாள் சன்னதி கோஷ்டத்தில்,
மகிஷாசுரனின் தலைமேல் நின்ற 
கோலத்தில் ஒரு துர்க்கையையும்,
சாந்த ஸ்வரூபிணியாக 
மற்றொரு துர்க்கையையும் 
தரிசிக்கலாம்.

500 படிகள் ஏறிச்சென்று இறைவனை 
தரிசிக்க வேண்டும்.:

நடை திறந்திருக்கும் நேரம் :
காலை 9.00 முதல் மாலை 6.00வரை.

ஆலயத்து தோற்றங்களில் சில :




மலை அடிவாரத்தில் உள்ள சித்தர் போகரின் 
ஆலய தோற்றம் 

கைலாச நாதர் ஆலயத்தோற்றம் 



படங்கள் உதவி : Google Maps 

No comments:

Post a Comment