Saturday 23 December 2017


சுகவனேஸ்வரர் ஆலயம் 

சேலம் 

சேலம் நகரின் மையப்பகுதியில்  அமைந்துள்ளது 
சுகவனேஸ்வரர் ஆலயம். 

ஆலயத்தின் அமைவிடத்தைக் காண 
இங்கே சுடுக்கவும்.




இறைவன்:  சுகவனேஸ்வரர்
இறைவி    : ஸ்வர்ணாம்பிகை 

ஆலயம் திறந்திருக்கும் நேரம் :
காலை 6.00 முதல் 12.00 வரை 
மாலை 4.00 முதல் 8.30வரை 

முல லிங்கம் ஒரு பக்கம் சாய்வாக இருக்கும். 
லிங்கத்தின் முடியில் வெட்டுப்பட்ட தழும்பு உள்ளது.

இது  திருப்புகழ் பாடல் பெற்ற தலமாகும்.

இங்குள்ள விகடசக்கர விநாயகரை வழிபட்டால் ,
குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய " பாலாரிஷ்டம் "
தொல்லைகள் நீங்கும்.

தல வரலாறு :

பிரமன் தன் படைப்பில் ஒவ்வொன்றும் எவ்வாறு 
வித்தியாசமாக இருக்கிறது என்ற ரகசியத்தை சில 
முனிவர்களுக்குச் சொல்ல, அதைக் கேட்டுக்கொண்டிருந்த 
சுகர் எனும் முனிவர், அந்த ரகசியத்தை சரஸ்வதி தேவியிடம் 
கூறிவிடுகிறார். இதை அறிந்த பிரம்மா, சுக முனிவரை 
கிளியாக மாறும்படி சபித்துவிடுகிறார்.

சுக முனிவர் சாப விமோசனம் வேண்ட, பிரமனும்,
இந்த பகுதியில் உள்ள சுயம்பு லிங்கத்தை வழிபாட்டு 
வந்தால், தகுந்த நேரத்தில் சாப விமோசனம் கிடைக்கும் 
என்று அருளுகிறார். 

கிளி வடிவில் இங்கு வந்த சுக முனிவர், அங்கிருந்த 
மற்ற கிளைகளுடன் சேர்ந்துகொண்டு, ஒரு புற்றுக்குள் 
சுயம்பு வடிவில் இருந்த சிவனை வழிபட்டுக்கொண்டிருக்கும்  வேளையில், அங்கு வந்த 
வேடன் ஒருவன், புற்றின் அருகே கூட்டமாய் இருந்த 
கிளிகளை விரட்ட , கிளிகள் யாவும் புற்றின் மீது 
பதுங்கின. கோபம் கொண்ட வேடன் , கிளிகளை விரட்ட,
புற்றை வெட்டும்போது, சுக முனிவரைத் தவிர மற்ற 
கிளிகள் எல்லாம் மாண்டன. 

சுக முனிவர், இறைவன் மீது வெட்டுப்படாமல் இருக்க,
சுயம்புவின் முடிமேல் அமர்ந்து சிறகை விரித்துக் காக்க,
வேடன் மறுபடியும் தன வாளை வீசுகிறான். வீசப்பட்ட 
வாள் , கிளையை வெட்டியது மட்டுமல்லாமல், லிங்க த்தையும்                      பதம்  பார்க்க, வெட்டுப்பட்ட லிங்கத்தில் இருந்து இரத்தம் 
பீறிட, இறைவன் வெளிப்பட்டு சுக முனிவருக்கு சாப 
விமோசனம் அருளுகிறார்.

சேராமானுக்கும், ஆதிசேஷனுக்கும் இறைவன் 
தரிசனம் தந்த தலம் .

நவக்கிரகங்களில், ராகுவும் செவ்வாயும் இடம் மாறி 
உள்ளதால், இது ஒரு சிறந்த பரிகாரத் தலம்.

ஒரு பக்கம் சாய்வாக இருக்கும் லிங்கத்தின் முடியில், 
வேடனால் வெட்டுப்பட்ட தழும்பு உள்ளது, 

ஆவுடையார் பிற்பாகம் இரண்டு பிரிவாகவும், 
விஷ்யு பாகம், சோமசுந்தரம் ஒரே பாகமாக 
சேர்க்கப்பட்டுள்ளது. இது மற்ற சிவ தலங்களில் 
காண முடியாத ஒன்று.


நன்றி:
ஆலய பட உதவி : Google  Maps 





2, கைலாசநாதர் ஆலயம் 

கைலாச நாதர் ஆலயம் , சுகவனேஸ்வரர் 
ஆலயத்தில் இருந்து சுமார் 1.2 கி. மீ. 
தூரத்தில் அமைந்துள்ளது. 

இவ்வாலயத்திற்கு செல்லும் வழியினைக் 
காண இங்கே சொடுக்கவும்.


Google Map  வெளியிடப்பட்டுள்ள  இவ்வாலயத்தின் 
தோற்றங்களில் சில உங்கள் பார்வைக்கு :



நன்றி : Google Maps 




No comments:

Post a Comment