Monday 6 March 2017


வாசுதேவன்பட்டு 


வாசுதேவன்பட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர்.
செய்யாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. செங்கத்தில் இருந்து போளுர்  செல்லும் சாலையில் சுமார் 24 km தூரத்தில் உள்ளது. இந்த சிற்றுரில் அப்படி என்னதான் விஷேசம் ?

அம்பிகையின் பாதம் பதிந்த இடம் என்பதே விஷேசமல்லவா?

அம்பிகை இங்கு வரக் காரணம், ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு.

காஞ்சிபுரத்தில், தவமிருந்து இறைவனை அடைந்த காமாட்சி, இறைவனிடம் இடப்பாகம் வேண்டுகிறாள். மனமிரங்கிய இறைவனும், அம்பிகையை திருவண்ணாமலை வர பணிக்கிறார். திருவண்ணாமலை நோக்கி பயணிக்கும் அம்பிகை , வாழைப்பந்தல் எனும் இடத்தில் தங்க நேரிடுகிறது. அங்கு இறைவனை பூஜிப்பதற்காக தண்ணீர் தேவைப்படுகிறது. உடன் வந்த முருகனை குறிப்பாக நோக்குகிறாள், அம்பிகை. குறிப்பறிந்த வேலவனும், மேற்கு நோக்கி வேலை எறிந்து,
ஒரு ஆற்றை உருவாக்குகிறார். சேயால் உருவாக்கப்பட்ட ஆறு சேயாறு. பின்னர் மருவி செய்யாறு ஆகிவிட்டது. 

ஆற்றில் வெள்ளம் பருகிவர, தண்ணீரின் நிறம் மாறுபடுகின்றது. காரணத்தை ஆராய்கிறான், வேலவன். வேலை எரிந்து, மலையைப் பிளந்த இடத்தில், தவம் செய்துகொண்டிருந்த ஏழு முனிவர்களின் மரணமே இந்த நிறமாற்றத்திற்குக் காரணம் என்பதை உணர்கிறான், வேலவன். 

இதனால் ஏற்பட்ட தோஷத்தைப் போக்குவதற்காக, சேயாற்றின் வடகரையில், ஏழு சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து , இறைவனை வழிபாட்டு, தன தோஷத்தைக் கரைத்துக் கொள்கிறான், வேலவன். 

முருகனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபடப்பட்ட ஏழு சிவலிங்கங்களும், கரைகண்டீஸ்வரர் என்ற பெயருடன் விளங்குகின்றது. 

முனிவர்களின் இறப்புக்கு, தானும் ஒரு காரணம் என்று கருதிய உமையவள், சேயாற்றின் தென்கரையில் ஏழு சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து தன் பாவங்களையும் போக்கிக்கொள்கிறாள், உமையவள். 

தாயும், சேயும் வணங்கிய இறைனை தரிசிப்பதுதான், எங்கள் குழுவின் நோக்கம்.

இந்த தளங்கள் எல்லாம், சிற்றுர்களில் சரியான கவனிப்பின்றி இருப்பதால், இறைவனை தரிசிக்க சிவராத்திரி தினத்தைத் தேர்ந்தெடுத்தோம், கோவிலை சத்தம் செய்வதற்காகவாது கோவில் திறந்திருக்கும் என்ற நம்பிக்கையில். எங்கள் நம்பிக்கை வீண்போகவில்லை..

இந்த ஊரில், நாங்கள் சென்றபோது, கோவில் மூடி  இருந்தாலும்,  அருகில் இருந்தவர்களை விசாரித்தபோது, அவர்கள் உடனடியாக,  எங்களின்  தரிசனத்திற்கு ஏற்பாடு செய்தனர். 

செய்யாரின் தென்கரையில், அம்பிகை வழிபட்ட முதல் தலம் , வாசுதேவன்பாட்டு.


இறைவன்  :  ஆட்கொண்டீஸ்வரர் 
இறைவி      :  சவுந்தர்யநாயகி 

நன்றி : google  Maps  




எங்களின்  அடுத்த பயணம் கடலாடி என்ற தலத்தை நோக்கி....



No comments:

Post a Comment