Thursday 31 May 2018


தேவனுர் 
Pin 604 208

வட்டம் : செஞ்சி 
மாவட்டம் : விழுப்புரம் 

தேவார வைப்புத் தலம் 
திருப்புகழ் பாடல் பெற்ற தலம் 
சந்திரன் வழிபட்ட தலம்.

சுந்தரர் அருளிய திருநாட்டுத் தொகை ( 12 )
7ம் திருமுறை 
6 வது பாடல் 

தென்னூர் கைம்மைத் திருச்சுழி யல்திருக் கானப்பேர் 
பன்னூர் புக்குறை யும்பர மர்க்கிடம் பாய்நலம் 
என்னூர் எங்கள் பிரான்உறை யுந்திருத் தேவனூர் 
பொன்னூர் நாட்டுப் பொன்னூர் புரிசைநாட்டுப் புரிசையே
அருள்மிகு  கமலேஸ்வரி உடனுறை 
திருநாதீஸ்வரர்  அருள் புரியும் திருத்தலம் 

ஒரு கால பூஜை 
அர்ச்சகர்  ஆலயத்தின் அருகில் உள்ளார்.
தொடர்புக்கு : 99403 96051

சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோவில்.
பின்னர், பாண்டியர்களாலும், 
விஜய நகர மன்னர்களாலும் திருப்பணி 
செய்யப்பட்ட கோவில்.

ஆற்காடு நவாப் காலத்தில், கோயில்கள் 
இடிக்கப்பட்டு, களவாடப்பட்டது.

ஆற்காடு நவாப்பிற்கும், ராஜா தேசிங்கிற்கும் 
நடந்த போரில் ஏற்பட்ட சிதிலங்கள் உள்ளது.

இத்தல முருகன்,  ஒரு முகத்துடன், 
நான்கு கரங்களுடன் மயில்  மேல் 
அமர்ந்த கோலத்தில் 
அருள் பாலிக்கின்றார்.

பழனி முருகன் அமைப்பில் உள்ள 
உருவமும் உள்ளது.

இங்கிருந்து 27 கி மீ  தொலைவில் 
தெள்ளாறு  என்ற தேவார வைப்புத் தலம் 
உள்ளது.

Click below  to view the Route Map 











No comments:

Post a Comment