Thursday 31 May 2018

தெள்ளாறு 
Pin  604406

வட்டம் : வந்தவாசி 
மாவட்டம் : திருவண்ணாமலை 

தேவார வைப்புத் தலம்.

அருள்மிகு  அகிலாண்டேஸ்வரி  உடனுறை
திருமூலட்டானேஸ்வரர்  
அருள்பாலிக்கும் திருத்தலம்.

தெள்ளாறு நாட்டு தெள்ளாறு  என்ற பெயர்
கொண்ட இந்த ஊர், நிறைய கல்வெட்டுச்
செய்திகளைக் கொண்டுள்ளது.

நந்திக்  கலம்பக  நாயகன்,
நந்திவர்மன், கி பி 832 இல்
இங்கு, தெள்ளாரில் போரிட்டு
வெற்றி பெற்றான்.

இவரே பிற்காலத்தில், கழற் சிங்க நாயனாராக
அழைக்கப்பட்டவர்.

இந்த  ஊரில், பெண்கள் தண்ணீர் எடுத்துச்
செல்லும் பொது, ஒரு நாள் மாலையில்,
ஓரூ வான் மது மயக்கத்தில்  அவர்களை
ஏளனம் செய்த  குற்றத்திற்காக,
இத்திருக்கோவிலில் சில  நாட்கள் 
விளக்கிட வேண்டும் என்று தீர்ப்பு  வழங்கப்பட்டது.
தீர்ப்பை வழங்கியவர், அவரது மனைவி.
ஓர் நாள், அவளே விளக்கிடச் சென்ற போது ,
நீதிபதி என்ற முறையில் அன்று தீர்ப்பும்,
மனைவி என்ற முறையில் கணவனின்
காரியத்தை இன்று செய்வதாகவும்
கூறியிருப்பதை, கல்வெட்டுச் செய்தி
ஒன்று கூறுகின்றது .




No comments:

Post a Comment