Thursday 4 February 2016

வீரட்டன திருத்தலங்கள் 

கடந்த இரண்டு வருடங்களாக, தை அமாவாசையன்று , திருக்கடையூர் சென்று  அன்னை அபிராமியை தரிசித்து வந்த நானும், என் நண்பரும்,  இந்த வருடமும்  திருக்கடையூர் செல்ல ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தபோது, தற்செயலாக "  இந்த பயணத்தை , அனைத்து வீரட்டான திருத்தலங்களையும் தரிசிக்கும் பயணமாக மாற்றக்கூடாது ? " என்ற எண்ணம் தோன்றியது.
தேவயான விவரங்களை சேகரிக்க ஆரம்பித்தேன் .

காவிரியின் கரைக் கண்டி வீரட்டானம்         
கடவூர் வீரட்டானம் காமரு சீர் அதிகை
மேவிய வீரட்டானம் வழுவை வீரட்டம்
வியன்பறியல் வீரட்டம் விடையூர்திக்கு இடமாம்
கோவல்நகர் வீரட்டம் குறுக்கை வீரட்டம்
கோத்திட்டைக் குடிவீரட்டானம் இவை கூறி
நாவில் நவின்று உரைப்பார்க்கு நணுகச் சென்றால்
நமன்தமரும் சிவன்தமர் என்று அகல்வர் நன்கே.   ( தேவாரம் ) 
உரை :
காவிரியின் கரையிலுள்ள கண்டியூர் வீரட்டானம், 
கடவூர் வீரட்டானம், 
விரும்பத்தக்க புகழினை உடைய அதிகை வீரட்டானம், 
வழுவூர் வீரட்டானம், 
பரப்பு மிக்க பறியலூர் வீரட்டானம், 
இடபத்தை ஊர்தியாக உடைய சிவபெருமானுக்குரிய இடமாகிய
கோவலூர் வீரட்டானம்,
குறுக்கை வீரட்டானம், 
தலைமையும் மேன்மையுமுடைய விற்குடி வீரட்டானம் 
என்னும் வீரட்டானங்கள் எட்டினையும் 
முறைப்பட முன்னர் ஒருமுறை மொழிந்து பின்னர் அம்முறையே நாவில் 
பழகிப் பலகாலும் போற்றுவார்க்கு அருகில் இயமதூதர்கள் ஒருகால் செல்ல 
நேரிடின் இவர் சிவபெருமானுக்கு அடியர் என்று உடனே உணர்ந்து 
அவரைவிட்டு வெகு தொலைவு அகல நீங்குவர் .

எட்டு வீரட்டான திருத்தலங்களையும் கருத்தில் கொண்டு,
மற்றும் சில திருத்தலங்களையும் சேர்த்து ,  ஒரு பயண திட்டத்தை
உருவாக்கியுள்ளோம்.

Feb  - 8 .  திருகோவிலூர் ,
                திருவெண்ணைநல்லூர்.
                திருவதிகை
                கீழப்பெரும்பள்ளம்
                திருவெண்காடு
                திருக்கடையூர் 
Feb  - 9   திருக்கடையூர் திருமெய்ஞானம் ,
               திருப்பறியலூர்
               திருக்குறுக்கை 
               திரு வழுவூர் 
               திருவிற்குடி 
               திரு நாகேச்வரம்
               திருவிடைமருதூர்
               திருவையாறு

பிப்  10  திரு கண்டியூர் 
               திரு  கண்டியூர்  ஸ்ரீ ஹர சாப விமோசன பெருமாள் ஆலயம்
               திருமுது குன்றம் ( விருதாசலம் )
               முகாசா பரூர் ( சித்தர் கோரக்கர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் )

" அவன் அருளாலே  அவன்தாள் வணங்கி "  பின்னர் நான் சேகரித்த
தகவல்களை பகிர்ந்துகொள்கிறேன் .







No comments:

Post a Comment