Tuesday 26 May 2020

செவ்வாய் தோஷம்

செவ்வாய் தோஷம்


செவ்வாய் தோசம் என்றால் என்ன?? செவ்வாய் தோஷத்திற்கான விதிவிலக்குகள் என்ன என்ன??

முதலில் செவ்வாயை கொண்டு ஒருவரின் தைரியம், பராக்கிரமம், வீரதீர செயல்கள், துணிச்சல்,யுத்தம், சண்டை, வெட்டுக்காயம், எதிரிகள்,பேராசை, அதிகமான காம உணர்வு, முன் கோபம்,ரௌடித்தனம்,அடி,தடி , வெட்டு குத்து, கலவரம் , ஆணவம், கர்வம், பொறாமை, பிறர் மீது ஆதிக்கம் செலுத்துதல் போன்றவற்றையும்
ஜாதகத்தில் செவ்வாய் சுபத்தன்மை அடைந்து இருந்தால் அதிகாரம் செலுத்தும் பதவியையும், போலீஸ், ராணுவம், காவல் துறை போன்ற காவல் காக்கும் யூனிபார்ம் வேலைகளையும்,
ஒரு ஜாதகத்தில் செவ்வாய் அதிக சுபத்தன்மை அடைந்து இருந்தால் மண்,மனை போன்ற பூமி யோகங்களையும், விவசாயத்தின் மூலமாக லாபங்களையும், மருத்துவர்கள், இன்ஜினியர், விஞ்ஞானிகள்,மில்கள், நெருப்புடன் சம்பந்தப்பட்ட ஒர்க் ஷாப்புகள், போன்றவற்றின் மூலமாக லாபங்களை தருவார்..

பொதுவாக ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் வலுத்தவர்கள் அதிகமான காம எண்ணம் உடையவர்களாக இருப்பதை காணலாம். அதிலும் செவ்வாய் சுக்கிரனுடன் இணைந்து இருந்தாலோ, சந்திரனுடன் இணைந்து இருந்தாலோ அல்லது இந்த இருவருடனும் இணைந்து இருந்தாலோ அதிகமான காம எண்ணங்களை தந்து பிறமாதர் தொடர்புகளை ஏற்படுத்தி விடுகிறது.பெண்களாக இருந்தால் பிற ஆடவர் தொடர்பு ஏற்படுத்தி விடுகிறார்.குருபகவான் பார்வை இல்லாத பட்சத்தில் குணாதிசயத்தை கெடுத்து விடுகிறது.

செவ்வாய் குணக்கேடுகளை உருவாக்குபவர் என்பதால் ,உடல் உறவு பிரச்னைகளை பிரதானமாக உருவாக்குபவர் என்பதால் தான் செவ்வாய் தோஷம் பார்க்கப்பட வேண்டியதாக இருக்கிறது.. சிலர் சொல்வதைப்போல செவ்வாய் தோசம் உயிரை பறித்து விடும் என்பதெல்லாம் ஜோதிடம் தெரியாதவர் சொல்லக்கூடிய கருத்தாக இருக்குமே அல்லாமல் ஜோதிடம் தெரிந்தவர் செவ்வாய் தோஷம் உயிரை பறிக்கும் என்றெல்லாம் சொல்லவே மாட்டார். செவ்வாய் தோசம் குணக்கேடுகளை உருவாக்கும்..

முக்கியமாக செவ்வாய் தோசம் பெண்களுக்கு ரொம்ப முக்கியமாக பார்க்க பட வேண்டியதாக இருக்கிறது..
உதாரணமாக தற்போது டாஸ்மாக் திறந்து பல மாநிலங்களில் விற்பனை அமோகமாக நடந்து கொண்டு இருக்கும் வேலையில் ஆண்கள் கிலோமீட்டர் கணக்கில் வரிசையில் நின்று மதுவாங்கி செல்லும் நிலையில் யாரும் இதைப்பற்றி அதிகம் விமர்சனம் செய்யாத நிலையில் ஒரு சில நவநாகரீகபெண்கள் வரிசையில் நின்று மதுவாங்கி சென்றது,மது அருந்தியது மிக அதிகமாக விமர்சிக்கப்பட்டது.. பலரும் அந்த பெண்களை திட்டித் தீர்த்ததை எல்லாம் அறிவோம்..

ஆண்களை போல அந்த பெண்களும் அதிகமாக குடித்து விட்டு மதுபோதையில் ரோட்டில் கிடந்தால் அந்த பெண்ணின் மானத்திற்கும்,மரியாதைக்கும்,கற்புக்கும் உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதம் கிடையாது என்பதை நாமெல்லாம் அறிவோம்.. இப்போது புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்

ஏன் பெண்களுக்கு அதிகமாக செவ்வாய் தோசம் பார்க்கப்படவேண்டும் என்பது..
இன்னொரு நிலையில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் காம எண்ணம் அதிகம் உள்ளவர்களாக இருப்பார்கள்.. இருவருக்கும் செவ்வாய் தோசம் இருக்கும் போது இருவருக்கும் உடல் உறவு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எழுவது இல்லை.
செவ்வாய் குருதியோன்
இரத்தத்திற்கு காரகன்.எலும்பில் உள்ள எலும்பு மஞ்சைக்கு ஆதிபத்தியம் பெறுபவர்.எனவே ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்து இன்னொருவருக்கு இல்லாமல் இருந்தால் உடல் உறவு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் எழும்போது
திருமண முறிவுகள் ஏற்படுவதை தவிர்க்க இயலாது என்பது நான் சொல்லாமலே உங்களுக்கு புரிந்து இருக்கும்.

என்னிடம் ஜாதகம் பார்க்க வரும் பலபேர் சொல்லக்கூடிய வார்த்தை என்னவென்றால் இரண்டு பேர் செவ்வாய் தோஷம் இருக்குதுங்கறாங்க
இரண்டு பேர் செவ்வாய் தோஷம் இல்லை என்கிறார்கள்.. இரண்டு பேர் திருமணம் செய்யலாம் என்கின்றனர்.இரண்டு பேர் திருமணம் செய்யக்கூடாது என்கின்றனர்.. எங்களுக்கு எதை நம்புவது என்று தெரியவில்லை.. அதனால் தான் இறுதி முடிவாக உங்களை பார்க்க பல மைல்கள் கடந்து வந்திருக்கிறோம் என்று பலர் சொல்ல கேட்டிருக்கிறேன்..

உயிர் லக்னத்துக்கு 2,4,7,8,12 போன்ற இடங்களில் செவ்வாய் இருந்தால் அது "செவ்வாய் தோசம் "என்று அழைக்கப்படுகிறது.

அதேபோல ராசி என்ற என்று சொல்லப்படும் சந்திரா லக்னத்திற்கும்,2 4 7 8 12 போன்ற இடங்களில் செவ்வாய் இருந்தாலும் அது செவ்வாய் தோஷம்.

அதேபோல சுக்கிரனுக்கும் பார்க்கணும். சுக்கிரனுக்கு 2,4 ,7, 8, 12 போன்ற இடங்களில் செவ்வாய் இருந்தாலும் அது செவ்வாய் தோஷம் என்று அழைக்கப்படுகிறது.

 இன்னும் புரியும் படியாக லக்னத்திற்கு, ராசிக்கு, சுக்கிரனுக்கு என்று மூன்று நிலைகளிலும் செவ்வாய் 2, 4, 7, 8, 12 போன்ற இடங்களில் அமையப் பெற அது வலுத்த செவ்வாய்தோஷம் என்று ஜோதிடரான என் தகப்பனார் சொல்ல கேட்டிருக்கிறேன்.

செவ்வாயானவர் லக்னம் , ராசி சுக்கிரன் இந்த மூன்றுக்கும் 2 ,4, 7 ,8 ,12 ஆகிய இடத்தில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் ஆகும். இது விதி.

எந்த ஒரு விதிக்கும் விதிவிலக்குகள் கண்டிப்பாக இருந்தே தீரும் இல்லையா??
செவ்வாய் தோஷ விதிவிலக்குகள் என்ன என்ன என்பதை இப்போது நாம் பார்ப்போம்.

1)மேற்படி இந்த அமைப்புகளில் செவ்வாய் இருந்து அந்த செவ்வாய் இருக்கும் இடம் மேசம், விருச்சிகம் ,மகரம், கடகம் இந்த ராசிகளில் செவ்வாய் இருக்குமேயானால் செவ்வாய்க்கு கொஞ்சம்கூட தோஷமே இல்லை.

2) செவ்வாயுடன் குரு சேர்ந்தாலும் செவ்வாயை குரு பார்த்தாலும் செவ்வாய் தோஷம் என்பது கொஞ்சம் கூட கிடையாது. செவ்வாய் குரு இணைவு செவ்வாயை குரு வலுவாக பார்ப்பது குருமங்கள யோகம் என்று அழைக்கப்படும் இது தோஷமில்லை.. "யோகம் "

3) செவ்வாயுடன் வளர்பிறைச் சந்திரன் அல்லது பவுர்ணமி சந்திரன் சேர்ந்தாலும், சந்திரன் செவ்வாய் சமசப்தமமாக பார்த்தாலும் செவ்வாய் தோசம் என்பது கொஞ்சம் கூட கிடையாது இது "சந்திரமங்கள யோகம்" என்று அழைக்கப்படும் பூமி யோகம் ஆகும்.

4) அடுத்து செவ்வாயுடன் சுக்கிர பகவான் இணைந்தாலும் அல்லது சுக்கிரன் சமசப்தமமாக செவ்வாயை பார்த்தாலும் செவ்வாய் தோசம் என்பது கொஞ்சம் கூட கிடையாது .இது "பிருகு மங்கள யோகம்" என்று அழைக்கப்படும். இது யோகம். தோஷம் கிடையாது.

5) அடுத்து செவ்வாய் பகவான் ராகுவுடன் இணைந்து கிரகண தோஷத்தில் இருக்கும்போது செவ்வாய் பகவானின் அந்த முன்கோபம், முரட்டுத்தனம், ரவுடித்தனம், முட்டாள்தனம், அடிதடி வெட்டு ,குத்து, கலகம் ,அடி பணியாமை, எதிர்த்து பேசுவது போன்ற குணங்கள் குறைந்து செவ்வாய் குற்றம் மட்டுப்படுகிறது.

6) மேலும் கடக, சிம்ம லக்னங்களுக்கு செவ்வாய் எங்கே இருந்தாலும் தோஷமில்லை என்று மூல நூல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணம் என்னவென்று நாம் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கும்போது இந்த லக்னங்களுக்கு செவ்வாய் பகவான் யோக ராகவும் இந்த லக்ன அதிபதிகளின் நட்பு கிரகமாகவும் வருவார். ஒரு லக்னத்தின் யோகாதிபதியாக வரும் கிரகம் எங்கே இருந்தாலும் பெரிய அளவில் கெடுதல்களை செய்வதில்லை என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகவே தெரிந்திருக்கும்.

7) செவ்வாய் பகவான் முழுமுதல் சுபகிரகமான குருவின் வீடுகளான தனுசு ,மீனம் போன்ற ராசிகளில் இருக்கும்போது செவ்வாய் சுபத்தன்மை அடைந்து செவ்வாய் குற்றம் பெருமளவில் மட்டுப்படுகிறது. குருபகவானின் வீடுகளான தனுசு, மீனம் ஆகிய இடங்களில் இருக்கும் செவ்வாய்க்கு செவ்வாய் குற்றம் கொஞ்சம்கூட இல்லை..

8) செவ்வாய் பகவான் சுக்கிரனின் வீடுகளான ரிஷபம், துலாத்தில் இருக்கும்போது செவ்வாய் சுபத்தன்மை அடைந்து செவ்வாய் குற்றம் பெருமளவில் மட்டுப்படுகிறது.

9)செவ்வாய் பகவான் புதனுடன் இணைந்து புதனால் பார்க்கப்பட்டாலோ
செவ்வாய் தோஷம்பெருமளவில் மட்டுப்படுகிறது அதாவது குறைகிறது..

10) செவ்வாய் பகவான் மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம் ,தனுசு, மகரம் ,மீனம்
போன்ற லக்னங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் பகவான் 2, 4 ,7, 8 ,12 இந்த ராசியில் இருக்க செவ்வாய் தோஷம் இல்லை.

மேற்படியான விதி விலக்குகளை படித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு ஒரு விஷயம் நன்றாக தெரியவரும். அது என்னவென்றால் இந்த அமைப்பின்படி பார்த்தோமானால் நூத்துக்கு 98 பேருக்கு செவ்வாய் தோஷம் என்று ஒன்று இல்லவே இல்லை என்று புரியவரும்

நன்றி :
"பாரம்பரிய "
ஜோதிடர்
விஸ்வநாதன் S
பாப்பம்பட்டி
பழனி தாலுகா
திண்டுக்கல் மாவட்டம்
8248771464
9543630377


ஹரி ஓம் ! 




No comments:

Post a Comment