| காசி யாத்திரை | ||||
| சுற்றுலா என்பதற்கும் யாத்திரை | ||||
| என்பதற்கும் அடிப்படையில் வேறுபாடுண்டு. | ||||
| சுற்றுலா என்பது கேளிக்கைக்கு | ||||
| முக்கியத்துவம் கொடுத்து மேற்கொள்வது. | ||||
| யாத்திரை என்பது முழுக்க முழுக்க பக்தி, | ||||
| ஆன்மிகம், சடங்குகள், இறைவழிபாடு | ||||
| போன்றவற்றை அடிப்படையாகக் | ||||
| கொண்டது. | ||||
| பண்டைக் காலம் தொட்டே யாத்திரை | ||||
| என்பது ஹிந்துக்களின் வாழ்வோடு | ||||
| பின்னிப் பிணைந்த ஒன்றாகவே இருந்து | ||||
| வந்துள்ளது. யாத்திரைகள் பல இருந்தாலும் | ||||
| ‘காசி யாத்திரை’ புனிதமானதாகக் | ||||
| கருதப்படுகிறது. காசிக்குச் சென்று | ||||
| கங்கையில் நீராடினால் பாவங்கள் | ||||
| தொலைந்து விடும் என்ற நம்பிக்கை | ||||
| காலம் காலமாக இருந்து வருவதே | ||||
| இதற்குக் காரணம். | ||||
| காசி யாத்திரை முறைகள் | ||||
| காசி யாத்திரையை நாம் முதலில் | ||||
| இராமேஸ்வரத்தில் துவங்க வேண்டும். | ||||
| அங்குள்ள அக்னி தீர்த்தத்தில் புனித நீராடி, | ||||
| ஆலயத்தில் உள்ள 22 தீர்த்தங்களிலும் | ||||
| நீராடி பின் இறைவனை வேண்டி, | ||||
| சேதுக்கரையில் மணலால் லிங்கம் செய்து | ||||
| பூஜித்து யாத்திரையைத் துவங்க வேண்டும். | ||||
| காசி ஆலயங்கள் | ||||
| சடங்குகளை முறையாகச் செய்து விட்டு | ||||
| இறைவழிபாட்டிற்குச் செல்லலாம். | ||||
| பக்தர்களுக்கு அருள் புரிவதற்காகவே | ||||
| காசியில் சிவன், விஷ்ணு, துர்க்கை, | ||||
| விநாயகர், ஆஞ்சநேயர், பைரவர் என பல | ||||
| மூர்த்தங்கள் எழுந்தருளியிருக்கின்றனர். | ||||
| பல நூற்றுக்கணக்கான ஆலயங்கள் | ||||
| காசியில் அமைந்துள்ளன. அவற்றுள் | ||||
| தரிசிக்க வேண்டிய முக்கிய | ||||
| தெய்வங்களைப் பற்றி : | ||||
| விஸ்வேசம் மாதவம் டுண்டிம் | ||||
| தண்டபாணிம்ச பைரவம் | | ||||
| வந்தே காசீம் குஹாம் கங்காம் | ||||
| பவானீம் மணிகர்ணிகாம் || | ||||
| விஸ்வேசம் | ||||
| விஸ்வேசம்’ என்று குறிப்பிடப்படுவது | ||||
| காசி விஸ்வநாதரை. இந்தியாவின் | ||||
| முதன்மையான ஜோதிர்லிங்கத் தலம் இது. | ||||
| ஆலயத்தின் உள்ளே உள்ள கிணற்றில் | ||||
| பழமையான லிங்கம் இருப்பதாய் ஐதீகம். | ||||
| பிந்து மாதவர் ஆலயம் | ||||
| மாதவம்’ என்பது பிந்து மாதவரைக் | ||||
| குறிக்கும். இராமேஸ்வரத்தில் சேது | ||||
| மாதவராகவும், திரிவேணி சங்கமத்தில் | ||||
| வேணி மாதவராகவும் எழுந்தருளியிருக்கும் | ||||
| விஷ்ணு, காசியில் பிந்து மாதவராகக் | ||||
| காட்சி தருகிறார். இவரது ஆலயம் | ||||
| பஞ்ச கங்கா காட்டில் அமைந்திருக்கிறது. | ||||
| பிரம்மா வழிபட்ட சிறப்புக்குரியவர். | ||||
| சங்கு, சக்கரத்துடன் கதாயுதம் ஏந்திக் | ||||
| காட்சி தருகிறார். ஆலயத்திற்கு வெளியே | ||||
| விஷ்ணு பாதம் இருக்கின்றது. அதற்கு | ||||
| கங்கை நீரை அபிஷேகம் செய்து, | ||||
| மலர்களைத் தூவி வழிபடுகின்றனர். | ||||
| டுண்டி கணபதி | ||||
| டுண்டி’ கணபதி காசியின் முக்கியமான | ||||
| தெய்வங்களுள் ஒன்று. காசியின் சிறிய | ||||
| சந்துகளில் பல கடைகளுக்கு நடுவே | ||||
| ஒளிந்து கொண்டிருக்கும் இவரை தேடித் | ||||
| தான் கண்டுபிடிக்க வேண்டும். காசிக்குச் | ||||
| செல்பவர்கள் மணிகர்ணிகையில் | ||||
| நீராடிவிட்டு தேவ, ரிஷி, பித்ரு கடன்களை | ||||
| முடித்து விட்டு பின்னர் டுண்டி கணபதியை | ||||
| வணங்க வேண்டும். டுண்டி விநாயகரைக் | ||||
| காலையில் வணங்கினால் ஒருவருடைய | ||||
| அனைத்து இடையூறுகளும் நீங்கி | ||||
| வாழ்க்கையில் வளமுண்டாகும். | ||||
| “சகல சித்திகளையும் அளிக்கும் டுண்டி | ||||
| விநாயகரை ஒருவன் அனுதினமும் | ||||
| தொழுது வந்தால் | ||||
| அளவற்ற நன்மைகளை அடைகிறான்” | ||||
| என்கிறது ஸ்காந்த புராணம். | ||||
| தண்டபாணி ஆலயம் | ||||
| ‘தண்டபாணி’ ஆலயம் கால பைரவர் | ||||
| ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ளது. | ||||
| காசியின் தண்டல் நாயகர் இவர் | ||||
| அதனால்தான் இப்பெயர். கால பைரவரின் | ||||
| தளபதியான இவர், காசியில் உள்ள | ||||
| கணங்களுக்கெல்லாம் அதிபதியும் கூட. | ||||
| சலவைக் கல்லால் ஆன ஆலயத்தில் இரு | ||||
| கைகளிலும் ஒரு தண்டத்தைப் | ||||
| பிடித்துக்கொண்டு குத்திட்டு அமர்ந்துள்ளார் | ||||
| தண்டபாணி. கழுத்திலும், தலையைச் | ||||
| சுற்றியும் ருத்திராட்ச மாலைகள் அழகு | ||||
| செய்கின்றன. கால பைரவரின் ஆக்ஞைக்கு | ||||
| உட்பட்டு தண்டனைகளை நிறைவேற்றுபவர் | ||||
| இவர்தான். ‘தண்டுபாணி’என்று சொல்லி | ||||
| வட நாட்டவர்கள் இவரை வழிபடுகின்றனர். | ||||
| கால பைரவர் | ||||
| காசி நகரத்தின் காவல் தெய்வமும், | ||||
| க்ஷேத்திர பாலகரும் ‘கால பைரவர்’தான். | ||||
| இவர் கட்டுப்பாட்டில்தான் காசி மாநகரே | ||||
| உள்ளது. இவர் கண்ணசைவின்றி காசியில் | ||||
| ஏதும் நிகழாது என்பது ஐதீகம். இவரைத் | ||||
| தரிசிக்காமல் காசி யாத்திரை பூர்த்தி | ||||
| ஆவதில்லை. உருண்டையான முகம், | ||||
| பெரிய கண்கள், அடர்ந்த மீசை என | ||||
| கம்பீரமாக இவர் காட்சி தருகிறார். உள்ளே | ||||
| நுழைந்து பைரவரை வணங்கியதும் | ||||
| ஆலயத்தில் உள்ள பண்டா மயிற்பீலியால் | ||||
| நம் முதுகில் தட்டுவார். அதனைத் | ||||
| தொடர்ந்து ‘தண்டம்’ வழங்கப்படுகிறது. | ||||
| தண்டம் என்பது ஒரு நீண்ட கோல். | ||||
| அதைப் பக்தர்களின் தலையில் வைத்து | ||||
| ஆசீர்வதிக்கிறார்கள். கோயில் வாயிலில் | ||||
| ’காசிக்கயிறு’என்னும் கறுப்புக் கயிறு | ||||
| விற்கிறார்கள். காசிக்குவந்து சென்றதற்கும், | ||||
| கால பைரவரைத் தரிசித்து அவர் அருள் | ||||
| பெற்றதற்கும் அதுவே அடையாளம். | ||||
| அந்தக் கயிறுகளை வாங்கி, அதனை | ||||
| பைரவரின் திருவடியில் வைத்து வணங்கி | ||||
| தாங்களும் கட்டிக் கொள்வதுடன் காசி | ||||
| யாத்திரை நிறைவேறியதும் | ||||
| நண்பர்களுக்கும் உறவினர்களுக்கு | ||||
| அளிக்கலாம். ஆதிசங்கரர் காசி பைரவர் | ||||
| மீது “கால பைரவாஷ்டகம்.” என்றொரு | ||||
| அற்புதத் துதியை இயற்றியுள்ளார். | ||||
| காசி | ||||
| இங்கே காசி என்று குறிப்பிடுவது ஆதிகாசி. | ||||
| இது ஒருசிறு கோயில். இங்கு ஒரு சிறிய | ||||
| லிங்கமும், சிவமூர்த்தியும் இருக்கின்றன. | ||||
| குஹாம் | ||||
| மிருத்யுயேஞ்சஸ்வரர் ஆலயம் அருகே ஒரு | ||||
| குளம் உள்ளது. இதுதான் ஆதி கங்கை | ||||
| என்று சிலர் கூறுகின்றனர். இதன் அருகே | ||||
| உள்ள குகையே குஹாம் என்று | ||||
| அழைக்கப்படுகிறது. | ||||
| கங்காம் | ||||
| இது ஆதிகங்கை இருந்த இடம். இங்குதான் | ||||
| பகீரதன் கங்கையைப் பூமிக்குக் கொண்டு | ||||
| வந்தான் என்கிறது புராணம். | ||||
| ஆதிகங்கையின் நீரை தலையில் | ||||
| தெளித்துக் கொண்டால்தான் கங்கையில் | ||||
| முழுமையாக நீராடிய பலன் கிடைக்கும். | ||||
| பவானி | ||||
| காசி விசாலாட்சியே பவானி ஆகப் | ||||
| போற்றப்படுகிறாள் என்பதாக ஒரு கருத்து | ||||
| உண்டு. பவானி என்பது காசியில் உள்ள | ||||
| துர்கை அம்மன் ஆலயமே என்றும் சிலர் | ||||
| கருதுகின்றனர். விசாலாட்சி ஆலயம், | ||||
| விஸ்வநாதர் ஆலயத்திற்குப் பின்புறம் | ||||
| சற்றுத் தொலைவில் அமைந்துள்ளது. | ||||
| தனிச் சன்னதியில் அன்னை விசாலாட்சி | ||||
| நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி | ||||
| இருக்கிறாள். வெள்ளிக் கவசத்தில், | ||||
| சாந்தமான திருமுகத்துடன், கருணை | ||||
| பொங்கும் திருவிழிகளுடன் அன்னை | ||||
| காட்சி தருகிறாள். இவ்வாலயம் | ||||
| அன்னையின் 51 சக்தி பீடங்களில் | ||||
| ஒன்றாகக் கருதப்படுகிறது. அன்னையின் | ||||
| பின்புறம் உற்றுக் கவனித்தால் மற்றொரு | ||||
| திருவுருவத்தைக் காண இயலும். அதுவே | ||||
| ‘பவானி’ என்று சிலர் கூறுகின்றனர். காசி | ||||
| நகரத்தாரின் பொறுப்பில் இவ்வாலயம் | ||||
| அமைந்துள்ளது. | ||||
| மணிகர்ணிகா | ||||
| மணிகர்ணிகா தீர்த்தம் மிகப் புனிதமானது. | ||||
| காசித் திருத்தலத்தின் மிக முக்கியமான | ||||
| படித்துறை இது. இங்குள்ள மயானம் மிகப் | ||||
| புனிதமானதாகப் போற்றப்படுகின்றது. | ||||
| இங்கு தகனம் செய்வது மோட்சத்தைத் | ||||
| தரும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. | ||||
| உடல்கள் வண்டியில் கொண்டுவரப்பட்டு, | ||||
| மணி கர்ணிகையில் நீராட்டப்பட்டு பின்னர் | ||||
| தகனம் செய்யப்படுகின்றது. இங்கு நீராடி | ||||
| நீத்தார் கடன்களைச் செய்வதன் மூலம் | ||||
| முன்னோர்கள் மேலுலகம் செல்வதாக | ||||
| நம்பிக்கை. இங்கு நீராடி | ||||
| மணிகர்ணிகேஸ்வரரை தரிசித்த | ||||
| பின்தான் காசியின் பிற தெய்வங்களை | ||||
| வணங்கச் செல்ல வேண்டும் என்ற நியதி | ||||
| உள்ளது. இங்குள்ள இறைவன் உள்ளது. | ||||
| இங்குள்ள இறைவன் மணிகர்ணேஸ்வரர் | ||||
| என்று போற்றப்படுகிறார். காசியில் | ||||
| மரிப்போரின் காதுகளில் ஈசன் குனிந்து | ||||
| ராம நாமத்தை ஓதும் போது அவர் | ||||
| காதுகளில் அணிந்துள்ள குண்டங்கள் | ||||
| தரையில் படுவதால் இறைவனுக்கு | ||||
| இப்பெயர். (மணி – குண்டலம்; கர்ணிகா – | ||||
| காது). “மணிகர்ணிகையில் குளித்து | ||||
| மணிகர்ணிகேஸ்வரரைத் | ||||
| தியானிப்பவர்களுக்கு மீண்டும் பிறவி | ||||
| இல்லை. மணிகர்ணிகையில் ஒருமுறை | ||||
| மூழ்கி எழுந்தால் அது அனைத்துப் | ||||
| புண்ணிய நதிகளிலும் நீராடிய பலனைத் | ||||
| தரும். மணிகர்ணிகைக்குச் சமமான | ||||
| தீர்த்தம் எந்த லோகத்திலும் இல்லை” | ||||
| என்கிறது ஸ்காந்த புராணம். | ||||
| அன்னபூரணி | ||||
| காசியின் அதி முக்கிய தெய்வங்களுள் | ||||
| ஒன்று அன்னபூரணி. காசி முழுக்க முழுக்க | ||||
| அன்னையின் அருளாட்சிதான். | ||||
| கங்கா ஆரத்தி | ||||
| காசிக்குச் செல்பவர்கள் தவற விடக்கூடாத | ||||
| ஒன்று கங்கா ஆரத்தி. தசாஸ்வமேத | ||||
| காட்டில் தினசரி நடக்கும் நிகழ்வு இது. | ||||
| மாலை சுமார் 6.30க்கு ஆரம்பித்து 7.30க்கு | ||||
| முடியும். இளம் வயதுள்ள ஏழு ஆண்கள் | ||||
| கங்கை நதிக்குச் செய்யும் பூஜையே | ||||
| ‘கங்கா ஆரத்தி’ எனப்படுகிறது. முதலில் | ||||
| புனிதமான சங்கை ஊதி, மணியை அடித்து | ||||
| பூஜையை ஆரம்பிக்கின்றனர். அடுத்தடுத்து | ||||
| ஊதுபத்தி, சாம்பிராணி, மலர்கள் என | ||||
| ஒவ்வொன்றின் மூலமும் ஆரத்தி | ||||
| நடைபெறுகிறது. பார்க்கக் கண்கொள்ளாக் | ||||
| காட்சியாக இது இருக்கும். | ||||
| இவை தவிர காசியில் தரிசிக்க வேண்டிய | ||||
| ஆலயங்கள் பல இருக்கின்றன. | ||||
| கேதாரேஸ்வரர் ஆலயம், ஹனுமான்காட் | ||||
| ஆஞ்சநேயர், துர்கா மந்திர், வராகி அம்மன் | ||||
| கோவில், துளசி மானஸ் மந்திர், சங்கட் | ||||
| மோசன் ஹனுமான் ஆலயம் போன்றவை | ||||
| இவற்றில் குறிப்பிடத்தகுந்தவை. | ||||
| கௌடி மாதா | ||||
| எல்லா ஆலய தரிசனங்களையும் முடித்து | ||||
| விட்டு இறுதியில் கௌடி மாதா என்னும் | ||||
| சோழி அம்மன் கோவிலை அவசியம் | ||||
| தரிசிக்க வேண்டும். ‘காசீ பல் ஹம் கோ; | ||||
| கௌடீ பல் தும்கோ’ என்று சொல்லி | ||||
| சோழிகளைக் கையால் அளைந்து இங்கே | ||||
| வழிபட வேண்டும் என்பது ஐதீகம். படி | ||||
| ஏறிச் சென்றுதான் இவளைத் தரிசிக்க | ||||
| வேண்டும். இந்த அம்மன் முன் | ||||
| வைக்கப்பட்டிருக்கும் சோழிகளைக் | ||||
| கையால் அளைந்து இவளை வணங்கி | ||||
| விடை பெற்றால்தான் காசி யாத்திரை | ||||
| காசியில் பூர்த்தி ஆவதாக ஐதீகம். | ||||
| கங்கை நீரைக் கொண்டு வந்து, | ||||
| இராமேஸ்வரத்தில் உள்ள ஸ்படிக | ||||
| லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதுடன்தான் | ||||
| காசி யாத்திரை என்பது முழுமையாகப் | ||||
| பூர்த்தி ஆகிறது. | ||||
| உண்மையில் காசி யாத்திரை என்பது | ||||
| வெறும் யாத்திரை மட்டுமல்ல; அது, | ||||
| ஹிந்துக்கள் தங்களது பண்பாட்டை, | ||||
| கலாசாரத்தை, வேற்றுமையில் ஒற்றுமை | ||||
| காணும் ஒருமை உணர்வை | ||||
| ஒருங்கிணைக்கும் ஒரு புனிதப் பயணம். | ||||
| ஹிந்துக்கள் ஒவ்வொருவரும் தம் | ||||
| வாழ்வில் ஒருமுறையாவது மேற்கொள்ள | ||||
| வேண்டிய யாத்திரை காசி யாத்திரை | ||||
| எனலாம். ஹரி ஓம் !!! |
||||
Tuesday, 31 March 2020
காசி யாத்திரை
காசி மஹாத்மியம்
|
||||||||||||||
| வ. சு. செங்கல்வராய பிள்ளை | ||||||||||||||
திருச்சிற்றம்பலம் |
||||||||||||||
| சிவபக்த சிரோமணிகளாகிய | ||||||||||||||
| நைமிசாரணிய
முநிவர்கள் சூத முநிவரை |
||||||||||||||
| நோக்கி 'முநிபுங்கவரே! எங்கள் | ||||||||||||||
| வினைகளைப் போக்கக் கூடிய | ||||||||||||||
| சிவசரிதங்கள் தங்கள் திருவாக்கால் | ||||||||||||||
| எண்ணில்லாதன உரைத்தீர். | ||||||||||||||
| க்ஷேத்திரங்களுக்கெல்லாம் நாயகமாகிய | ||||||||||||||
| ஸ்ரீ காசி நகரத்தின்
சிறப்பையுந் தயை |
||||||||||||||
| கூர்ந்து உரைத்தருளல்
வேண்டும்' என்று |
||||||||||||||
| கேட்டுக்கொள்ள, சூத முநிவரும் | ||||||||||||||
| மனமகிழ்ச்சியுடன் 'அன்பர்களே, உங்கள் | ||||||||||||||
| இஷ்டத்தை நிறைவேற்றுகின்றேன்' என்று | ||||||||||||||
| சொல்லிப் பின்வருந் திவ்ய சரிதத்தை | ||||||||||||||
| அவர்களுக்கு உரைத்தருளுகின்றார்: | ||||||||||||||
| திருவளர்ந்தோங்கும் பரதகண்டத்தில் | ||||||||||||||
| சிம்ஹள தீபம் என்னும் தேசத்தில் | ||||||||||||||
| சிம்ஹத்வஜன் என்றொரு அரசன் | ||||||||||||||
| இருந்தான். அவன் சகல நற்குண நற் | ||||||||||||||
| செய்கைகளும் வாய்ந்தவன். போரில் | ||||||||||||||
| மஹாவீரன். அவனுடைய
மனைவி பெயர் |
||||||||||||||
| மந்தாரலக்ஷ்மி. பெண்டிர்க்குரிய | ||||||||||||||
| நால்வகைக் குணமும் பொருந்தியவள். | ||||||||||||||
| அழகிற் சிறந்தவள். தன் கணவன் மேல் | ||||||||||||||
| நிறைந்த காதலும் பக்தியும் உடையவள். | ||||||||||||||
| எவ்வாற்றானும் மேன்மையுற்றும் புத்திர பாக்கியம் | ||||||||||||||
| இல்லாக் குறையால் | ||||||||||||||
| அரசனுக்குத் தினந்தோறும் கவலை | ||||||||||||||
| வளர்ந்து கொண்டே வந்தது. புத்திரப் | ||||||||||||||
| பேற்றைக் குறித்துப் பலவித தருமங்களை | ||||||||||||||
| மன்னவன் உவப்போடு செய்தான். | ||||||||||||||
| கோயில்களுக்குத் தீப கட்டளை, அன்ன | ||||||||||||||
| கட்டளை முதலிய ஏற்படுத்தினான். | ||||||||||||||
| தினந்தோறும் குடை, உடை, பசு, பூமி | ||||||||||||||
| முதலிய தானங்கள் செய்தான். | ||||||||||||||
| என்ன செய்தும் புத்திரோற்பத்தி | ||||||||||||||
| அடையாமையால் அரசன் மிகக் | ||||||||||||||
| கவலையுடன் தன் மனைவியை நோக்கி, | ||||||||||||||
| ஹே! மந்தார லக்ஷ்மி! மனோமணி! | ||||||||||||||
| நாம் இருவரும் பாக்கிய ஹீனர்கள். ஒரு | ||||||||||||||
| குழந்தையின் தாமரைப் பூப் போலும் | ||||||||||||||
| முகத்தைக் கண்டு களிக்கும் பாக்கியம் | ||||||||||||||
| நமக்கு இல்லாமற் போய் விட்டது. | ||||||||||||||
| இங்ஙனம் புத்திரனில்லாது இப்போது | ||||||||||||||
| வருந்தும்படி நாம் முன் ஜன்மத்தில் | ||||||||||||||
| என்ன பாவஞ் செய்தோமோ? | ||||||||||||||
| புத்திரனில்லாதவனுக்கு நாடும் நகரமும் | ||||||||||||||
| நாநா பதார்த்தங்களும், தனங்களும், | ||||||||||||||
| சுற்றமும் யாது பயனைத் தரும்? | ||||||||||||||
| அவனுக்கு இம்மையினுந் துக்கம், | ||||||||||||||
| மறுமையினுந் துக்கம். நமது கர்ம | ||||||||||||||
| வினையைப் பார்த்தாயா? பிதிர்த்தொழில் | ||||||||||||||
| செய்ய மக்களில்லாவிட்டால் நமக்கு | ||||||||||||||
| நல்ல கதி எங்கனங் கிடைக்கும்?' என்று | ||||||||||||||
| கூறி இருவருங் கவலுந் தருணத்தில் | ||||||||||||||
| ஆநந்த ஸ்வரூபியாகிய
ஸ்ரீ நாரத முநிவர் |
||||||||||||||
| அரசனது சபா மண்டபத்திற்கு வந்தார். | ||||||||||||||
| அரசன் அவரைப் பேராநந்தத்தோடு | ||||||||||||||
| எதிரேற்று வந்தித்துப் பூசித்து | ||||||||||||||
| சிம்ஹாசனத்தில் வீற்றிருக்கச் செய்தான். | ||||||||||||||
| பின்பு அவரது பாதார விந்தத்தில் வீழ்ந்து | ||||||||||||||
| நமஸ்கரித் தெழுந்து அவரை நோக்கி, | ||||||||||||||
| வீணாதரரே! முநிபுங்கவரே! உமது பாத | ||||||||||||||
| பதுமத்தை யான் காண்பதனாலேயே | ||||||||||||||
| எனக்கு எல்லா நன்மையுங் கைகூடின. | ||||||||||||||
| எனது துக்கமெல்லாம் ஒழிந்தன. நான் | ||||||||||||||
| மக்கட் பேறடைய யாதோர் ஐயமும் | ||||||||||||||
| இல்லை. புண்ணிய புருஷர்கள் ஒருவன் | ||||||||||||||
| திருஷ்டியிற் பட்டபோதே நன்மைகள் | ||||||||||||||
| எல்லாம் அவனை நாடிவரும். இன்று | ||||||||||||||
| நான் பரிசுத்தனாயினேன்; மிகப் | ||||||||||||||
| பிரசித்தனாயினேன்; சிம்ஹள தேசத்து | ||||||||||||||
| அரசர்களுள் மிக்க நிலை பெற்றவன் | ||||||||||||||
| ஆயினேன். ஹே! மந்தாரலக்ஷ்மி! இங்கே வா! | ||||||||||||||
| முநிபுங்கவரது பாத தாமரையைச் | ||||||||||||||
| சிரசிற்றரித்துக் கொள். இவரோ திவ்யர். | ||||||||||||||
| மஹா முநிவர். பிரமபுத்திரர். நினைத்த | ||||||||||||||
| காரியத்தை நிமிஷத்தில் முடிக்க | ||||||||||||||
| வல்லவர். இவர் கடாக்ஷம் பெற்றாய்; | ||||||||||||||
| புத்திரப் பேறுற்றாய் எனப் பலவாறு கூறி, | ||||||||||||||
| முநிபுங்கவரைப் பணிந்து நின்றான். | ||||||||||||||
| இவ்வார்த்தைகளைச் செவியேற்ற | ||||||||||||||
| ஸ்ரீ நாரத முநிவர; சந்திரிகை போலும் | ||||||||||||||
| ஒளி பொருந்திய புன்சிரிப்போடு தமது | ||||||||||||||
| அமுத வாயைத் திறந்து, | ||||||||||||||
| "பூபதே! நீ ஸ்ரீ நீலகண்டப் பெருமானைப் | ||||||||||||||
| பூசித்தல் வேண்டும். அவரே தேவாதி | ||||||||||||||
| தேவர். மூவர்கள் முதல்வர், அடியார்க்கு | ||||||||||||||
| நல்லார், நச்சினார்க் கினியர். அவரை | ||||||||||||||
| வழிபட்டால் உனக்குமங்களம் உண்டாகும். | ||||||||||||||
| உனது பூர்வ கர்ம வினையால் உனக்குச் | ||||||||||||||
| சந்ததி யில்லாதாயிற்று. நீ முன் | ||||||||||||||
| ஜன்மத்தில் அந்தணருடைய பொருளை | ||||||||||||||
| மோசஞ் செய்து கவர்ந்தாய். உன் | ||||||||||||||
| முற்பிறப்பின் வரலாற்றைக் கூறுகிறேன்; | ||||||||||||||
| கேட்பாயாக -- | ||||||||||||||
| 'நீ குந்தள தேசத்தில் அந்திய வமிசத்திற் | ||||||||||||||
| பிறந்து வளர்ந்தாய். பலர் பொருளைக் | ||||||||||||||
| கவர்ந்து வீடு, வாசல் முதலிய கட்டிக் | ||||||||||||||
| கொண்டாய். தாடங்கன் என்பது உன் | ||||||||||||||
| பெயர். உன்னுடைய பண ஆசையால் நீ | ||||||||||||||
| ஒரு முறை பிராமணர் வீதியில் | ||||||||||||||
| தேவேந்திரனுக்குச் சமமான செல்வத்தை | ||||||||||||||
| யுற்ற கோவிந்தசருமன் என்பவனுடைய | ||||||||||||||
| வீட்டில் இரவிற் கன்னம் வைத்துச் | ||||||||||||||
| சுவரைத் தொளைத்து உள்ளே புகுந்து | ||||||||||||||
| நவனும் அவன் மனைவியும் குழந்தையும் | ||||||||||||||
| உறங்குவதைக் கண்டு ஆண்டுள்ள | ||||||||||||||
| பொருள்க ளெல்லாவற்றையுங் | ||||||||||||||
| களவாடினாய். அப்போது அங்கே வைரக் | ||||||||||||||
| கடுக்கன், பொற்றோடு, பொன் அறைநாண், | ||||||||||||||
| பொற்சிலம்பு முதலிய அணிந்து உறங்கும் | ||||||||||||||
| குழந்தையை அதிக குதூகலத்துடன் | ||||||||||||||
| மெதுவாய் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு | ||||||||||||||
| வெளியே வந்து அருகிலுள்ள காட்டில் | ||||||||||||||
| நுழைந்து, ஆபரணங்களெல்லாவற்றையும் | ||||||||||||||
| எடுத்துக்கொண்டு, குழந்தையைக் | ||||||||||||||
| கழுத்தைப் பற்றித் திருகி முறித்து ஓர் | ||||||||||||||
| ஆழ்ந்த கிணற்றில் எறிந்து சென்றாய். | ||||||||||||||
| வீட்டிற் கோவிந்த சருமனும் அவன் | ||||||||||||||
| மனைவியும் தங்குழந்தையைக்காணாது | ||||||||||||||
| பிரமித்து வாய்விட்டலறினார்கள். | ||||||||||||||
| இங்ஙனம் இவர்கள் அழ, இத் துக்க | ||||||||||||||
| சமாசாரம் ஊர் முழுவதும் பரவிற்று. | ||||||||||||||
| அவ்வூர் அரசன் செங்கோல் நடாத்துஞ் | ||||||||||||||
| சீரிய குணத்துச் செல்வன். அவன் | ||||||||||||||
| இதனைக் கேட்கவே, வேதனை யகத்து | ||||||||||||||
| மிக்குக் காவலரைக் கூவி, 'நீங்கள் | ||||||||||||||
| நாற்புறத்துங் காற்றிற் பறந்தோடித் | ||||||||||||||
| துருவித் திருடனை உடனே கொணருதிர்' | ||||||||||||||
| எனப் பணித்தான். அங்ஙனம் புறப்பட்ட | ||||||||||||||
| காவலருட்சிலர் தாடங்கனாய உன்னைப் | ||||||||||||||
| பிடித்தார்கள்.
கைகளிலும், உடல் மீதும், |
||||||||||||||
| இரத்தக் கறை இருக்கக் கண்டு உன்னை | ||||||||||||||
| அவர்கள் இறுகப் பிணித்து நையப் | ||||||||||||||
| புடைக்கவே, நோய் தாளாது நீ | ||||||||||||||
| உண்மையை ஒப்புக்கொண்டாய். நீ | ||||||||||||||
| கவர்ந்த சொத்துக்களை உன்னிடமிருந்து | ||||||||||||||
| பற்றிக் கொண்டு துஷ்டனாகிய | ||||||||||||||
| உன்னையும் கழுமுனையி லேற்றும்படி |
||||||||||||||
| அரசன் ஆக்ஞாபித்தான். ராஜ வீதியின் | ||||||||||||||
| கோடியில் ஒரு புறத்தில் உன்னைக் | ||||||||||||||
| கழுவேற்றினார்கள். | ||||||||||||||
| தாடங்கனாகிய நீ கழுமுனையில் | ||||||||||||||
| தினந்தோறும் மரணவாஸ்தையோடு | ||||||||||||||
| துடித்துக் கொண்டிருந்தாய். அப்போது | ||||||||||||||
| காசி யாத்திரை செய்கின்ற புண்ணியசீலர் | ||||||||||||||
| ஒருவர் அவ்வூரில் இரவில் நீ இருந்த | ||||||||||||||
| இடத்திற்குச் சமீபத்தில் வந்து தங்கினார். | ||||||||||||||
| அவர் உன் கூக்குரலைக் கேட்டு உன்னை | ||||||||||||||
| உற்றுப் பார்த்துப் பயந்து பின் வாங்கினார். | ||||||||||||||
| அப்போது நீ அவரை நோக்கி, 'ஐயரே! | ||||||||||||||
| அஞ்சுதல் வேண்டாம், தயை செய்து | ||||||||||||||
| சமீபத்தில் வாருங்கோள்' என்று சொல்ல, | ||||||||||||||
| அவரும் சமீபித்து வந்தார். வருதலும் நீ | ||||||||||||||
| அவரை நோக்கி, 'ஐயரே! தனது தீய | ||||||||||||||
| நடத்தையால் வரும் ஆபத்துக்களை | ||||||||||||||
| ஒருவன் நீக்க முடியுமா? நான் செய்த | ||||||||||||||
| தீமையோ மிகவுங்கொடியது. அவனவனது | ||||||||||||||
| கர்ம பலத்தை அவனவனே அனுபவித்தல் | ||||||||||||||
| வேண்டும். நீங்கள் தீர்த்த யாத்ரிகர் | ||||||||||||||
| போலத் தோன்றுகின்றது. புண்ணிய | ||||||||||||||
| தீர்த்தங்களில் ஆடி வரும் நீங்கள் எனது | ||||||||||||||
| வேண்டுகோள் ஒன்றைச் செவியேற்றருள | ||||||||||||||
| வேண்டும்; கங்கைக் கரையிற் கயா | ||||||||||||||
| சிரார்த்தம் வெகு விசேஷமென்று நான் | ||||||||||||||
| கேள்விப்பட்டிருக்கின்றேன். அங்கே | ||||||||||||||
| நீங்கள் சிரார்த்தம் செய்வதால் வரும் | ||||||||||||||
| பலனில் நூற்றில் ஒரு கூறு தனியாய் | ||||||||||||||
| எனது நற்கதிக்கென்று தத்தஞ் செய்ய | ||||||||||||||
| வேண்டுகின்றேன். இதுவே என் | ||||||||||||||
| பிரார்த்தனை. இப்பிறப்பில் இனி ஒன்றும் | ||||||||||||||
| என்னால் இயலாதாதலின் இவ்வுதவிக்குக் | ||||||||||||||
| கைம்மாறு நான் மறுபிறப்பிலேனுஞ் | ||||||||||||||
| செய்கிறேன், என்று இரந்து கேட்டுக் | ||||||||||||||
| கொண்டாய். இம்மொழியைக் கேட்ட | ||||||||||||||
| தயாளுவாகிய அவ்வழிப்போக்கர் | ||||||||||||||
| அங்ஙனே செய்கிறேன், அஞ்சுதல் | ||||||||||||||
| வேண்டா' என வாக்குத்தத்தஞ் செய்து | ||||||||||||||
| சென்றார். | ||||||||||||||
| இங்ஙனம் நாலைந்து நாள் நீ | ||||||||||||||
| கழுமுனையில் துன்புற்றாய். அப்போது | ||||||||||||||
| ஓர்நாள் நள்ளிருளிற் பேய்க் கூட்டங்கள் | ||||||||||||||
| உன் அருகிற் போந்து சூழ்ந்தன | ||||||||||||||
| பேய்க் குழாத்தில் இருந்த ஒரு பெண் | ||||||||||||||
| பேய், 'தெய்வமே! இப்பூமியில் எனது | ||||||||||||||
| சாபத்தைப் போக்குவாரும் உண்டோ? ஒரு | ||||||||||||||
| மனிதன்கூட எனக்கு அருகில் | ||||||||||||||
| வருகின்றானில்லையே" என்று | ||||||||||||||
| ஏக்கத்தோடு கதறி நின்றது. இதனைக் | ||||||||||||||
| கேட்ட ஏனைய பேய்கள்
'உனக்குச் சாபம் |
||||||||||||||
| எங்ஙனம் வந்தது?' என அப்பெண் பேய் | ||||||||||||||
| சொல்லலுற்றது: | ||||||||||||||
| "கேளுங்கோள் என் கதையை. யான் | ||||||||||||||
| முன் ஜன்மத்திற் பெண்கள் சிகாமணியாய் | ||||||||||||||
| வேசியர் குலத்துக்கு ஓர் | ||||||||||||||
| ரத்நமாலிகையாய்ப் பிறந்தேன். என் | ||||||||||||||
| இச்சைபோன வழியெல்லாஞ் | ||||||||||||||
| சுகித்திருந்தேன். குபேர நிதியும் | ||||||||||||||
| தேவேந்திர போகமும் என்னிடத்து | ||||||||||||||
| ஒருங்கு இருந்தன.
தனப் பெருமையாலும் |
||||||||||||||
| சௌந்தரியப் பெருமையாலும் நான் | ||||||||||||||
| அரசர்களுக்கும் அஞ்சவில்லை. | ||||||||||||||
| ரூபலாவண்யத்தாலும், வெகு ரம்யமாய்ச் | ||||||||||||||
| சல்லாபஞ் செய்யுஞ் சாமர்த்யத்தாலும், | ||||||||||||||
| ஆடல், பாடல் முதலியவற்றிலிருந்த | ||||||||||||||
| முதற்றர தேர்ச்சியாலும், மற்றும் | ||||||||||||||
| வேசியர்க்கு வேண்டிய லக்ஷணங்களாலும் | ||||||||||||||
| வேசியர் யாவரினும் மேம்பட்டு | ||||||||||||||
| வேசியர்திலகம் எனப் பிரசித்தி பெற்றேன். | ||||||||||||||
| பொருள் பறிப்பதில் எனக்கு இருந்த | ||||||||||||||
| சாமர்த்யம் வேறு எவருக்குங் கிடையாது. | ||||||||||||||
| இங்ஙனஞ் செல்வ மமதையாற் கண் | ||||||||||||||
| கெட்டிருந்ததால் நான் ஒரு பெரிய | ||||||||||||||
| தோஷத்திற்கு இடந்
தந்தேன். ஒரு நாள் |
||||||||||||||
| அந்தி வேளையில் எனது தோழியரோடு | ||||||||||||||
| விளையாடிக்களித்து மாளிகையின் | ||||||||||||||
| மேன்மாடியி லிருந்தேன். அப்போது | ||||||||||||||
| வாயிலிருந்த
தம்பலத்தை மென்று கீழே |
||||||||||||||
| உமிழ்ந்தேன். அந்தோ! என் பாபம்! அது கீழே |
||||||||||||||
| தெருவிற் போய்க்கொண்டிருந்த ஒரு | ||||||||||||||
| விப்பிர சிகாமணியின்
தலை மீது வீழ்ந்தது. |
||||||||||||||
| அம் மறையோன் நிமிர்ந்து நோக்கி, 'அடீ! | ||||||||||||||
| வேசி! நீ நசிப்பாயாக!
துஷ்டே! நீ பிசாசாகக் |
||||||||||||||
| கடவது' எனச் சபித்தான். | ||||||||||||||
| இதனைக் கேட்ட நான் மனங் கலங்கி | ||||||||||||||
| விரைவிற் கீழிறங்கி ஓடி அவன் பாதத்து | ||||||||||||||
| வீழ்ந்து நமஸ்கரித்து, 'அறியாது செய்த | ||||||||||||||
| அபராதத்தை, அந்தணர் பெருமான் | ||||||||||||||
| க்ஷமித்தருளல் வேண்டும். கருணாநிதியே! | ||||||||||||||
| பெரியோர் சிறு நாய்களின் பிழையைப் | ||||||||||||||
| பொறுத்தல்
வேண்டுமன்றே' எனப் பல நய |
||||||||||||||
| வசனங் கூறி எனது
வீட்டுக்கு அழைத்து வந்து |
||||||||||||||
| அப்யங்க ஸ்நாநஞ் செய்வித்து | ||||||||||||||
| சோடசோபசாரங்களுஞ் செய்தேன். | ||||||||||||||
| அன்னமும் பாலும் புசிப்பித்தேன். வெண் பட்டுஞ் | ||||||||||||||
| செம்பொன்னும் அளித்தேன். | ||||||||||||||
| பன்முறை பணிந்து வணங்கினேன். | ||||||||||||||
| அவ்வந்தணர்
பெருமானும் உள்ளம் உவந்து |
||||||||||||||
| நன்றாகுக' எனக் கூறி என்னை நோக்கி, | ||||||||||||||
| தாமரைக் கண்ணீ! என் மனத்திற் கோபம் அடங்கி | ||||||||||||||
| உவகை உண்டாயிற்று, உனக்குச் | ||||||||||||||
| சாப விமோசனந் தருகின்றேன். நீ பேய் | ||||||||||||||
| உருவத்தோடு பூமியிற் பல இடங்களிலுந் | ||||||||||||||
| திரிவாய். எப்போது
உன்னை ஒரு மனிதன் |
||||||||||||||
| பாணிக்கிரஹணஞ்
செய்வானோ அப்போது |
||||||||||||||
| உனக்குச் சுகம்
உண்டாகும்' எனக் கூறிச் |
||||||||||||||
| சென்றான். அன்றே நானும் இப்பேய் | ||||||||||||||
| உருவத்தை யடைந்தேன். பல இடங்களிலும் | ||||||||||||||
| உழன்றேன். பிராணி வர்க்கங்கள் என்னைக் | ||||||||||||||
| காணும்போதே பயப்பட்டு ஓடுகின்றன. | ||||||||||||||
| அப்படி யிருக்க என்னை எவன் | ||||||||||||||
| பாணிக்கிரஹணஞ் செய்வான்? ஈஸ்வரா! | ||||||||||||||
| என்ன
தௌர்ப்பாக்கியம்! நான் யாரோடு |
||||||||||||||
| நோகேன்! யார்க்கெடுத் துரைப்பேன்! | ||||||||||||||
| என்னைக் கலியாணஞ் செய்து | ||||||||||||||
| கொள்பவனுக்கும் சுபமுண்டாகும் என | ||||||||||||||
| அவ்வந்தணர் கூறியுள்ளார். யாரும் | ||||||||||||||
| பயத்தால் எனக்குச் சமீபத்திலும் | ||||||||||||||
| வருகிறதில்லை;
எனக்குத் தினந்தோறும் |
||||||||||||||
| துக்கம் பெருகுகின்றது" -- என்று இவ் | ||||||||||||||
| வண்ணம் தன் வரலாற்றை விஸ்தாரமாய்க் | ||||||||||||||
| கூறி அப்பெண் பேய் புலம்பிற்று. | ||||||||||||||
| இவ்விருத்தாந்தங்க ளெல்லாவற்றையும் | ||||||||||||||
| கழுமுனையிலிருந்து கவனமாய்க் | ||||||||||||||
| கேட்டுக்கொண் டிருந்த தாடங்களாய நீ, | ||||||||||||||
| பேய் மணியே! உன்னை நான் கலியாணஞ் | ||||||||||||||
| செய்து கொள்ளுகிறேன். ஆனால் நானோ | ||||||||||||||
| மகாதுஷ்டன்,
கழுமுனையி லிருப்பவன். |
||||||||||||||
| காலனூர்க்கேருந் தருணத்தினன். ஆயினும் | ||||||||||||||
| இருவருக்கும் நன்மை உண்டாகுமாதலால் | ||||||||||||||
| உன்னைக் காந்தருவ விவாகஞ் | ||||||||||||||
| செய்துகொள்ளுகிறேன்; உன்னைச் | ||||||||||||||
| சாபத்தினின்றும் மீட்பேன்' என்று சொல்ல, | ||||||||||||||
| அப்பிசாசும் உடனே தன் குழுவினின்றும் | ||||||||||||||
| பிரிந்து தானுங் கழு முனையிலேறிப் | ||||||||||||||
| பாணிக்கிரஹணஞ் செய்து கொண்டது. | ||||||||||||||
| பின்னர் மறுபிறப்பில்
அப்பேய் |
||||||||||||||
| ராஜகுமாரியாய்ப்
பிறந்தது. சாக்ஷாத் அந்த |
||||||||||||||
| ராஜகுமாரியே உன் மனைவி மந்தாரலக்ஷ்மி. | ||||||||||||||
| தாடங்கனாய நீயோ,
கயாசிரார்த்த பலனில் |
||||||||||||||
| அற்பமாகிய ஒரு சிறு கூறு | ||||||||||||||
| அவ்வழிப்போக்கர் உனக்குத் தத்தம் | ||||||||||||||
| பண்ணினதால், இத்துணைக் கீர்த்தியையும் | ||||||||||||||
| பெருமையையும்
இப்பிறப்பில் அடைந்து, |
||||||||||||||
| இந்த சிம்ஹள தேயத்துக்கு அரசனா | ||||||||||||||
| யிருக்கின்றாய். நீ செய்த சிசு ஹத்தியே |
||||||||||||||
| உனக்குச் சந்ததி யில்லாமற் செய்துவிட்டது. | ||||||||||||||
| ஆதலின், மன்னவ, நீ காசிக்குப் போய்க் |
||||||||||||||
| கங்கைக் கரையிற் கயா சிரார்த்தம் செய்து |
||||||||||||||
| முற்பிறப்பில் அவ்வழிப்போக்கருக்கு நீ | ||||||||||||||
| வாக்களித்தபடியே கடனை நிறைவேற்றினால், | ||||||||||||||
| சிவசாமீப
பதவியிலிருக்கும் அவரும் சிவ |
||||||||||||||
| சாரூபம் பெற்று சிவ கணத்தவருள் | ||||||||||||||
| ஒருவராவார்; உனக்குந்
தவறாது புத்திரப் |
||||||||||||||
| பேறுண்டாகும்.
சிம்ஹத்வஜ! நீ கவலுதல் |
||||||||||||||
| வேண்டாம். காசிக்குச்
செல்லுக, கங்கா |
||||||||||||||
| ஸ்நாநஞ் செய்க, விசுவநாதருக்கன்பனாகுக. | ||||||||||||||
| நாகபூஷணரது அன்பு
கிடைக்க வேண்டின் |
||||||||||||||
| பாகீரதி ஸ்நாநஞ் தான்
அதற்கு ஔஷத மாகும். |
||||||||||||||
| காசித் தலத்தின் பெருமையையும் | ||||||||||||||
| அவ் விசுவேசரது
பெருமையையும் யான் |
||||||||||||||
| என்னென்றெடுத்துரைப்பேன். ஆயிரம் | ||||||||||||||
| நாவுடைய ஆதிசேடனாலுஞ் சொல்ல | ||||||||||||||
| முடியாது. ஆயினும் என் ஆசை அடங்க | ||||||||||||||
| யான் சிறிது கூறுவேன்:-- | ||||||||||||||
| காசிநாதரை வணங்காத
மனிதன் வஞ்சகன். |
||||||||||||||
| ஒருவன் காசிக்குப் போகின்றேன் என்று | ||||||||||||||
| தனது பாதத்தை முன்னிட்டு முன்னிட்டு | ||||||||||||||
| வைத்தால் அவனுடைய பாபங்களெல்லாம் | ||||||||||||||
| பின்னிட்டுப் பின்னிட்டு ஓடிப்போகும். | ||||||||||||||
| காசிக்குப் போகின்றேன் நான்' என்ற | ||||||||||||||
| உரைகளைக்கேட்ட அளவில் | ||||||||||||||
| பிரமஹத்தியாதிகள் பயப்பட்டு ஓடும். | ||||||||||||||
| கங்கா' என்னும் பதத்திலுள்ள | ||||||||||||||
| அக்ஷரங்களைத் தியானஞ்செய்தால் | ||||||||||||||
| மனிதன் சுத்தனாவான். நமது கையின் | ||||||||||||||
| பயன் விசுவேசரைத் தொழக் கூப்புவதே. | ||||||||||||||
| காலின் பயன் அவர்கோயிலை வலம் | ||||||||||||||
| வருவதே. செவியின் பயன் அவர் புகழைக் | ||||||||||||||
| கேட்பதே. கண்ணின் பயன் அவர் |
||||||||||||||
| ஸ்தலத்தைக் காண்பதே.
தலையின் பயன் |
||||||||||||||
| அவரை வணங்குவதே.
நெஞ்சின் பயன் |
||||||||||||||
| அவரை நினைவதே. | ||||||||||||||
| சிம்ஹத்வஜ! சிவபிரான் மெய்யர்க்கே | ||||||||||||||
| மெய்ய ராதலின் அவர்மாட்டுக் கெடாத | ||||||||||||||
| உறுதியும்
நம்பிக்கையும் உனக்கு இருத்தல் |
||||||||||||||
| வேண்டும். நல்வழி ஒன்று தோன்றும்போது |
||||||||||||||
| அதனை உடனே கைப்பற்றுதல்வேண்டும். | ||||||||||||||
| காசிக்குப் போவது மகாகஷ்டம்; வழியிற் | ||||||||||||||
| பலவித இடையூறுகள் நேரிடக்கூடும். | ||||||||||||||
| அடியார்களது உறுதியைச் சோதிப்பதிற் | ||||||||||||||
| சிவபெருமானுக்கு எப்போதும் ஆசையுண்டு. | ||||||||||||||
| உறுதியுள்ளவர்களுக்கு எம்பிரான் அருள் புரிவார். | ||||||||||||||
| ஆதலின், சிம்ஹத்வஜ! நீ காசிக்கு | ||||||||||||||
| அவசியம் போகவேண்டும். | ||||||||||||||
| சந்திரசேகரமூர்த்தியின் கருணையினால் | ||||||||||||||
| புத்திரபாக்கியம்
முதலிய சகல சம்பத்தும் |
||||||||||||||
| உனக்கு உண்டாகும். இது நிச்சயம், நிச்சயம், | ||||||||||||||
| முக்காலும் நிச்சயம்" என்று உரைத்து | ||||||||||||||
| அரசனுக்கு ஆசி கூறி அவன்பால் | ||||||||||||||
| விடைபெற்றுப் போயினர். | ||||||||||||||
| அரசனும் அப்போதே வேறு ஆலோசனை |
||||||||||||||
| ஒன்றுஞ் செய்யாது காசியாத்திரைக்கு | ||||||||||||||
| வேண்டிய ஏற்பாடுகளெல்லாஞ் செய்தான். | ||||||||||||||
| வைதிக பிராமண சிரேஷ்டர்களும் சிவ | ||||||||||||||
| முநிவர்களுந் தன்னொடு வரத் தனது | ||||||||||||||
| மனைவி மந்தாரலக்ஷ்மியுடன் புறப்பட்டான். | ||||||||||||||
| காட்டுவழிக்கு இன்றி
யமையாத வில், |
||||||||||||||
| அம்பு, முதலிய ஆயுதங்களையும் | ||||||||||||||
| எடுத்துச் சென்றான். | ||||||||||||||
| பலநாள் யாத்திரை செய்து வந்தவர்கள் | ||||||||||||||
| ஒரு நாள் அந்தி வேளையில் | ||||||||||||||
| விந்தமலையின் பக்கத்திலுள்ள | ||||||||||||||
| காட்டிற்றங்கும்படி நேரிட்டது. அப்போது | ||||||||||||||
| திடீரென்று மலையின் ஒரு சாரலினின்று | ||||||||||||||
| அநேகங் கள்ளர்கள் வந்து அரசனைச் | ||||||||||||||
| சூழ்ந்து
கொண்டார்கள். சூழ்ந்தவர் அரசனது |
||||||||||||||
| பொக்கிஷத்தை ஒரு நொடியிற் கவர்ந்தனர். | ||||||||||||||
| அவர்கள் தலைவன் மந்தாரலக்ஷ்மியைத் | ||||||||||||||
| தூக்கிச் சென்றான். இதனைக் கண்ட | ||||||||||||||
| அரசன் அக் கள்ளர் தலைவனைத் துரத்திச் | ||||||||||||||
| சென்று யுத்தஞ்செய்யப் பிரயத்தனப்பட்டான். | ||||||||||||||
| கள்ளர் தலைவன் மந்தஹாஸத்துடன் | ||||||||||||||
| அரசனை நோக்கி, 'ஏடா! மூடா! இந்த | ||||||||||||||
| மஹாவிந்த கோரகானன
வழியில் அந்தி |
||||||||||||||
| வேளையில் வந்து பாளையத்துடன் | ||||||||||||||
| இறங்கினாய். உன் மதியை யிழந்தாய்; | ||||||||||||||
| நிதியை யிழந்தாய்;
தாரத்தையு மிழந்தாய். |
||||||||||||||
| இங்ஙனம் இழந்தது மல்லாமல் எதிர்த்து | ||||||||||||||
| மீட்கவும்
புறப்பட்டாய். இது சுத்த மதிஹீனம். |
||||||||||||||
| வழிபோக்கரிடத்
திருந்து தட்டிப் பறிப்பதில் |
||||||||||||||
| மஹா சாமர்த்யமுள்ள
தும்பீரன் என்பவன் |
||||||||||||||
| நான். உன்னுடைய இந்த மனைவியைப் |
||||||||||||||
| போல இவ்விதத்திற் கிடைத்த ஆயிரம் | ||||||||||||||
| மனைவிமார் எனக்கு உண்டு. ஏடா! | ||||||||||||||
| இன்றல்ல இந்த சௌரியம் எனக்குப் | ||||||||||||||
| பிறந்தது. இங்ஙனம்
வழி பறித்தல் நாங்கள் |
||||||||||||||
| தலைமுறை தலைமுறையாகச் செய்து வரும் | ||||||||||||||
| தருமமாம்' என்று சொல்ல, | ||||||||||||||
| மகாவீரனாகிய அரசன் அடங்காக் | ||||||||||||||
| கோபத்தோடு 'அடே, துஷ்டா! உனது | ||||||||||||||
| புன்னெறி இன்றோடு முடிவு பெறுகின்றது, | ||||||||||||||
| பார்! சற்சனங்களுடைய திரவியத்தை | ||||||||||||||
| அபகரிக்கிற துர்ச்சனத் தலைவா! நில்லடா. | ||||||||||||||
| இதோ எனது கொடிய பாணங்களுக்கு | ||||||||||||||
| உன்னை இரையாக்குகின்றேன். | ||||||||||||||
| கள்ளப்பயலே! உன்னுடைய தலை இதோ | ||||||||||||||
| தூள் தூளாகப் போகிறது பார். | ||||||||||||||
| பிழைத்தோட வேண்டு மென்றிருந்தால் | ||||||||||||||
| எனது மனைவி மந்தாரலக்ஷ்மியை | ||||||||||||||
| விட்டுவிட்டுப் போடா. என்னை யாரென்று | ||||||||||||||
| நினைத்தாயடா? உங்களைப்போன்ற | ||||||||||||||
| மிருகங்களை அழிப்பதற்கென்றேற்பட்ட | ||||||||||||||
| மிருகேந்திரனாய சிம்ஹத்வஜன் என்னும் | ||||||||||||||
| அரசன் நான். சங்காருத்திரனுடைய பக்தன் | ||||||||||||||
| நான். ஆயிரங் காக்கைக்கு ஓர் கல் | ||||||||||||||
| போதாதா? இதோ உன்னையும் உன் | ||||||||||||||
| இனத்தாரையும் ஒரு நொடியிற் | ||||||||||||||
| சங்கரிக்கின்றேன்; துஷ்ட பிண்டமே! | ||||||||||||||
| சண்டாள ஜன்மமே! அர்த்தத்திற்கு | ||||||||||||||
| ஆசைப்பட்ட உனக்கு அநர்த்தம் | ||||||||||||||
| சமீபித்துவிட்டது' என்று கூறி எதிர்த்தான். | ||||||||||||||
| இங்ஙனம் வாதித்த
அரசனுக்குங் கள்ளர் |
||||||||||||||
| தலைவனுக்கும் யுத்தம் வெகு | ||||||||||||||
| கோரமாய் நடந்தது. கோபத்தினாற் கண் | ||||||||||||||
| சிவந்து புருவத்தை நெறித்துத் தனது | ||||||||||||||
| வில்லை விளைத்துச் சரமாரி பெய்தனன் | ||||||||||||||
| அரசன். அவைகளை எல்லாந் தடுத்துத் |
||||||||||||||
| தானும் மறுமாரி பெய்தான் தும்பீரன். | ||||||||||||||
| அதிக கோலாகலத்துடன் வெகுநேரம் | ||||||||||||||
| இருவர்க்கும் சண்டை நடந்தது. ஈற்றில் | ||||||||||||||
| மஹா கொடியனான தும்பீரன் | ||||||||||||||
| சிம்ஹத்வஜனுடைய வில்லை முறித்துச் | ||||||||||||||
| சிம்ஹநாதஞ் செய்தான்.
அரசன் உடனே |
||||||||||||||
| முஷ்டியுத்தத்திற்குப் பாய்ந்தடுத்தான். அந்த யுத்தத்தில் | ||||||||||||||
| தும்பீரன் அரசனைப் பிண்டம் | ||||||||||||||
| பிடித்து விட்டான். அரசனும் மூர்ச்சித்துத் | ||||||||||||||
| தரையில் வீழ்ந்தான்.
தும்பீரவேடன் |
||||||||||||||
| அரசனுடைய உடம்பை எலுமிச்சம்பழத்தைப் | ||||||||||||||
| பிழிவதுபோற் கசக்கி விட்டு | ||||||||||||||
| மந்தாரலக்ஷ்மியையும்
உடன் கொண்டு |
||||||||||||||
| தனது பரிவாரங்களுடன் போய்விட்டான். | ||||||||||||||
| ஆபத்து வேளையில் அரசனோடு எஞ்சி | ||||||||||||||
| நின்ற சில சந்நியாசிகள் அவனுக்கு | ||||||||||||||
| மூர்ச்சை தெளிவித்தார்கள். அப்போது | ||||||||||||||
| அவன் அவர்களை நோக்கி மிகுந்த | ||||||||||||||
| துக்கத்துடன் கூறுகின்றான் :-- | ||||||||||||||
| 'அந்தோ! ஐயன்மீர்! நமது காலதோஷத்தைக் | ||||||||||||||
| கண்டீர்களா? சண்டையில் தோற்ற என் | ||||||||||||||
| சரீரம் மிகத் தளர்ந்தது. அவயவங்களை | ||||||||||||||
| அசைக்கக்கூட முடியவில்லை. எனது | ||||||||||||||
| சஸ்த்ரங்கள், அஸ்த்ரங்கள், வஸ்த்ரங்கள் | ||||||||||||||
| யாவுந் தொலைந்தனவே. கஷ்டம், நான் | ||||||||||||||
| ஏன் இன்னும் பிழைத்திருக்கின்றேன். | ||||||||||||||
| கங்காதரா! என்னைக் கைவிட்டாயோ? | ||||||||||||||
| எவ்வகைத்தான யுத்தத்திலும் எனக்கு | ||||||||||||||
| ஒப்பாவார் கூட இதுவரையும் நான் | ||||||||||||||
| கண்டதில்லையே! அத்தகைய மஹா | ||||||||||||||
| வீரனாகிய என்னைச்
சயித்த அத் தும்பீரன் |
||||||||||||||
| என்பான் எவனோ? இந்த லோகத்தானோ? | ||||||||||||||
| மற்றெந்த லோகத் தானோ? என்னே அவன் | ||||||||||||||
| ஆற்றல்! பாவி, எனது மந்தாரலக்ஷ்மியையுங் | ||||||||||||||
| கொண்டு போய்விட்டானே. ஈசா! யான் | ||||||||||||||
| பிள்ளைவரங் கேட்க வந்து பெண்டிழந்து | ||||||||||||||
| போனேனே. இஃதென்ன காலகதி.' | ||||||||||||||
| இங்ஙனந் தன்மனைவியை நினைத்து | ||||||||||||||
| நினைத்து, மனம் பதறி அரசன் | ||||||||||||||
| புலம்புகின்றான். புலம்பித் தன்னோடு | ||||||||||||||
| இருந்தவர்களை நோக்கி, 'அன்பர்களே! | ||||||||||||||
| பாகீரதி ஸ்நாநத்தால் வரும் யோகமும் | ||||||||||||||
| புண்ணியமும் பெறுதற்கு நான் | ||||||||||||||
| பாத்திரனல்லன் போலும். ஜன்மஜன்மமாய்ச் | ||||||||||||||
| சேர்ந்த வினைத் தொகுதியோ இங்ஙனந் | ||||||||||||||
| தடைசெய்தது? எது எப்படியானாலும் நாம் | ||||||||||||||
| உறுதியைக் கைவிடக்கூடாது, எடுத்த | ||||||||||||||
| காரியத்தை நிறைவேற்றியே தீர வேண்டும். | ||||||||||||||
| ஸ்ரீநாரத முனிவர் உபதேசித்ததை நான் | ||||||||||||||
| மறக்கவில்லை. எவ்வகையாலும் காசிக்குப் போதலே | ||||||||||||||
| நன்று' எனத் துணிபுடன் கூறித் | ||||||||||||||
| தன் தேகநோயையும் புறக்கணித்துப் | ||||||||||||||
| புறப்பட்டான். | ||||||||||||||
| தலத்தின் சீர்த்தியைப் புகழ்ந்து | ||||||||||||||
| அங்கமாலை பாடியும், ஐயா மாயன் | ||||||||||||||
| மைத்துனரே! உமது வஞ்சனையை | ||||||||||||||
| இன்றறிந்தேன். உம்மைப்போல் என்னையும் | ||||||||||||||
| ஆக்கிவிட்டீரே!
பிச்சை யெடுக்கச் செய்தீரே! |
||||||||||||||
| விபூதியின்றி வேறு அணிகலனில்லாது | ||||||||||||||
| போம்படி
செய்தீரே! கோவணமின்றி வேறு |
||||||||||||||
| ஆடை இல்லா திருக்கவுஞ் செய்தீரே. | ||||||||||||||
| நன்று! நன்று! என அவரை வசை பாடியும், | ||||||||||||||
| வழியின் கஷ்டத்தை மறப்பான். | ||||||||||||||
| இங்ஙனம் பன்னாள் காடு, மலை, ஆறு | ||||||||||||||
| முதலியவற்றைக் கடந்து கண்டவர்க்குக் | ||||||||||||||
| களிப்பளிக்குங் கங்கைக் கரையைக் | ||||||||||||||
| கண்டான்; பேராநந்தங் கொண்டான்; | ||||||||||||||
| குனிப்பான்; [24] சிரிப்பான்; களிப்பான்; | ||||||||||||||
| யானுங் கங்கைக் கரையைக் கண்டேனே, | ||||||||||||||
| கண்டேனே' எனப்பூரித்து மனமகிழ்ந்து | ||||||||||||||
| சாட்டாங்க நமஸ்காரஞ் செய்தெழுந்து, | ||||||||||||||
| சகல லோகத்தவரும் வணங்குகின்ற | ||||||||||||||
| தேவதே! யான் உன்னை வணங்குகின்றேன். | ||||||||||||||
| ஆகாச கங்கையே போற்றி போற்றி! | ||||||||||||||
| லோகமாதாவே போற்றி போற்றி! அன்னாய்! | ||||||||||||||
| கங்காதேவி உனது பெருமையை யான் | ||||||||||||||
| என்னென் றெடுத்துரைப்பேன்' எனப் | ||||||||||||||
| பலவாறு புகழ்ந்து துதிக்கின்றான் | ||||||||||||||
| இங்ஙனம் கங்கையை ஸ்தோத்திரஞ் | ||||||||||||||
| செய்து அதின் மூழ்கி, கயாசிரார்த்தத்தையுஞ் | ||||||||||||||
| செய்து, முன் ஜன்மத்தில் அவ்வழிப்போக்கர் | ||||||||||||||
| தனக்கு அளித்த பலனுக்குக் கைம்மாறான | ||||||||||||||
| பிரதி பலனையுந் தந்து கங்கைக் | ||||||||||||||
| கரையோரமாய்ச் செல்லும்போது காணுதற் கரிய | ||||||||||||||
| ஸ்ரீ காசி மாநகரைக் கண்டான். | ||||||||||||||
| கண்டதும் பேருவகை கொண்டான். | ||||||||||||||
| பொன்மயமான மாடமாளிகைகளும், | ||||||||||||||
| ரத்நசிகரங்களும், ரத்ன தோரணங்களும், | ||||||||||||||
| யாண்டும் பேரொளி வீசுதலைக் | ||||||||||||||
| கண்ணுற்றுப் பேராநந்தம் அடைந்தான். | ||||||||||||||
| சுற்றிலும் விஷ்ணு,
வைரவன், சூரியன், |
||||||||||||||
| சந்திரன் முதலியோருடைய ஆலயங்கள் | ||||||||||||||
| விளங்க, அவற்றின் மத்தியில் எமது | ||||||||||||||
| விசுவேசரது திருக் கோயிலானது செவ்விய | ||||||||||||||
| ரத்தினக் கல்லாலாகிய ஒரு பதக்கத்தில் | ||||||||||||||
| நடுநாயகமாய்ப் பதித்துள்ள விலையிலா | ||||||||||||||
| வைரக்கல் போலத் திகழா நின்றது. | ||||||||||||||
| காசி மாநகர் எங்கும் சிவமயமாய்ப் | ||||||||||||||
| பொலிந்திருந்தது. திருநீறு, ருத்திராக்ஷம், | ||||||||||||||
| புலித்தோல் ,கட்டுவாங்கம், சூலம் முதலிய | ||||||||||||||
| கொண்டுள்ள முநிவரர் குழாம் ஒருபால்; | ||||||||||||||
| சிவநாம சங்கீர்த்தனஞ் செய்யும் பக்தர் | ||||||||||||||
| குழாம் ஒருபால்;
திருக்கோயிலுக்குப் பூத் |
||||||||||||||
| தொடுப்பார் ஒருபால்; அலகிடுவார் ஒருபால்; ' | ||||||||||||||
| இன்னிசை வீணையர்
யாழின ரொருபால்; |
||||||||||||||
| இருக்கொடு தோத்திரம் இயம்பினர் | ||||||||||||||
| ஒருபால்; துன்னிய பிணைமலர்க் கையினர் |
||||||||||||||
| ஒருபால்; தொழுகைய ரழுகையர் |
||||||||||||||
| துவள்கைய ரொருபால்'--ஆக இவ்வாறு | ||||||||||||||
| சாரூப சாம்பிராச்சிய
பதவியில் வாழுங் |
||||||||||||||
| கோடா கோடி, பக்த ஜனங்களைக் | ||||||||||||||
| கண்ணுற்ற அரசன் புளகாங்கிதனாய்ப் | ||||||||||||||
| பன்முறை வீழ்ந்து வீழ்ந்து வணங்கி, | ||||||||||||||
| மனமகிழ்ந்தான். | ||||||||||||||
| பின்பு கங்கையில்
ஸ்நாநஞ் செய்து, விபூதி, |
||||||||||||||
| ருத்தி ராக்ஷமணிந்து, விசுவநாதரது | ||||||||||||||
| திருக்கோயிலை வலம் வருங்கால், | ||||||||||||||
| கங்காநதி பாரிசத்தில்
விசித்திர மண்டபம் |
||||||||||||||
| ஒன்றில் தென்றற் காற்றின் சுகத்தை | ||||||||||||||
| ஏற்றுக்கொண்டு தனது மனைவியாகிய | ||||||||||||||
| மந்தாரலக்ஷ்மி ஓர் சிங்காதனத்தில் | ||||||||||||||
| வீற்றிருப்பதைக் கண்டான்; கண்டதும் | ||||||||||||||
| பிரமித்தவனாய், 'இஃதென்னை! மாயையோ | ||||||||||||||
| அல்லது கனவோ! தும்பீர வேடன் தூக்கிச் |
||||||||||||||
| சென்ற எனது கண்மணி மந்தாரலக்ஷ்மியை | ||||||||||||||
| ஈண்டுக் காண்கின்றேனே! அற்புதம்! | ||||||||||||||
| அற்புதம்! உமாபதீ!
இதனை உருவெளித் |
||||||||||||||
| தோற்றமாக்கி விடாதே! பார்வதி பாகா! | ||||||||||||||
| இவ்வுருவை மாயையாக்கி விடாதே! | ||||||||||||||
| உனதருளின் பிரபாவத்தை ஒளிக்காதே. | ||||||||||||||
| அந்தகாசுரனைச் செற்ற அண்ணலே! உன் | ||||||||||||||
| கிருபா பிரபாவத்தால்
ஐந்து வர்க்கங்களில் |
||||||||||||||
| என்ன அதிசய விளைவுதான் உண்டாகாது?' | ||||||||||||||
| என்று சொல்லி அற்புத மனத்தனாய் | ||||||||||||||
| நிற்கும்போது,
கருணாகர மூர்த்தியாகிய |
||||||||||||||
| விசுவேசர் இடபவாகன ரூடராய்ப் | ||||||||||||||
| பிரத்தியக்ஷமாயினர். | ||||||||||||||
| விசாலாக்ஷியம்மையார் தமது இடப் | ||||||||||||||
| பாகத்தில் விளங்கவும், கங்காதேவியும் | ||||||||||||||
| இளம்பிறையும் சடைமீது பொலியவும், | ||||||||||||||
| விநாயகக் கடவுளும்
வேற்கரத் தண்ணலும் |
||||||||||||||
| தமது அருகிற்
றிகழவும், விஷ்ணு, பிரமன், |
||||||||||||||
| இந்திரன் முதலிய தேவர் தலைவரும், | ||||||||||||||
| அகத்தியர், பிருகு ஆகிய முநிபுங்கர் சூழவும், | ||||||||||||||
| சித்தர், வித்தியாதரர், கின்னரர், இயக்கர் | ||||||||||||||
| முதலிய பதினெண் கணங்களும் தமது | ||||||||||||||
| புகழை எடுத்தோதவும், நாரதர், தும்புரு | ||||||||||||||
| ஆகிய இருவரும் இன்னிசை பயக்கும் | ||||||||||||||
| யாழும் வீணையும் வாசிக்கவும், பேரற்புத | ||||||||||||||
| கோலத்தோடு எம்பிரான் விளங்குவதைக் | ||||||||||||||
| கண்ட அரசன் ஆநந்த பரவசனாய்க், | ||||||||||||||
| கைகளுந் தலைமீ தேறக் கண்ணில் | ||||||||||||||
| ஆநந்த வெள்ளம் மெய்யெலாம் பொழிய, | ||||||||||||||
| வேத முதல்வரைப் பணிந்து போற்றி, | ||||||||||||||
| ஐயனே! அடியனேனை அஞ்சல் என்றருள | ||||||||||||||
| வல்ல மெய்யனே!' எனத் துதித்துப் | ||||||||||||||
| பாடினான்; பரவினான்; பணிந்தான். | ||||||||||||||
| அப்போது கங்காதேவி ஞெரேலென | ||||||||||||||
| இறங்கி மந்தார லக்ஷ்மியின் கரத்தைத் | ||||||||||||||
| தனது திருக்கரத்தாற் பற்றிக் கொண்டு, | ||||||||||||||
| சிம்ஹத்வஜ! வருக! உன் மனைவியைக் கொள்க!' |
||||||||||||||
| எனத் திருவாய் மலர்ந்தருள, | ||||||||||||||
| அரசனும் உவப்புடன் சென்று கங்கா | ||||||||||||||
| தேவியை வணங்கித் தனது மனைவியைப் | ||||||||||||||
| பெற்றுக் கொண்டு, கருணாநிதியாகிய | ||||||||||||||
| கண்ணுதற் கடவுளைத் துதிக்கின்றான்: | ||||||||||||||
| மெய்யன்போடு துதித்தலைக் கேட்ட | ||||||||||||||
| சிவ பெருமான் அரசனை நோக்கி, | ||||||||||||||
| 'சிம்ஹத்வஜ! நமது கண நாதனாகிய | ||||||||||||||
| நந்திகேசுரனைத் தும்பீரன் என்னும் | ||||||||||||||
| வேடனாக அனுப்பி உனது தரும | ||||||||||||||
| பத்தினியை ஈண்டுக் கொணர்வித்ததும், | ||||||||||||||
| சண்டையில் உனது நிதி முதலியவற்றைக் | ||||||||||||||
| கவர்வித்ததும் நாமே. இங்ஙனம் அச்சுறுத்தி | ||||||||||||||
| வெருட்டினால் வந்தவழியே திரும்பிப் | ||||||||||||||
| போய்விடுவாயோ அல்லது உறுதியோடும் | ||||||||||||||
| அன்போடும் இந்த க்ஷேத்திரத்திற்கு | ||||||||||||||
| வருவாயோ என உன்னைப் பரீக்ஷித்தோம். | ||||||||||||||
| எமக்கு இப்போது முற்றுஞ் சந்தோஷமே. | ||||||||||||||
| நீ புத்திமான்,
தைர்யசாலி. இப்போது நீ கயா |
||||||||||||||
| சிரார்த்தம் செய்தமையால் உன் பாபம் | ||||||||||||||
| எல்லாம் அறவே ஒழிந்தன. அதுவுமன்றி, | ||||||||||||||
| முன் பிறப்பில் தனது சிரார்த்த பலனில் | ||||||||||||||
| உனக்கு ஒருகூறு கடன்
கொடுத்த வழிப் போக்கனும் |
||||||||||||||
| நமது கணங்களில் | ||||||||||||||
| ஒருவனாவான். இனி நீ பாரியாஸமேதனாய் | ||||||||||||||
| உன் ஊருக்குப்
போகலாம். இனி உனக்கு |
||||||||||||||
| நன்மையே வரும். இன்னும் பன்னீராயிர | ||||||||||||||
| வருடம் இப் பூவுலகைப் பரிபாலிப்பாய். | ||||||||||||||
| உனக்கு ஓர் அருமைப் புதல்வன் பிறப்பான். |
||||||||||||||
| நீ கவற்சியுற வேண்டாம். ஈற்றில் நீங்கள் |
||||||||||||||
| எமது லோகத்தை
அடைவீர்கள். மந்தார லக்ஷ்மியும் |
||||||||||||||
| நீயும் இம் மந்தாகினியில் | ||||||||||||||
| முழுகுவீரானால் உங்கள் நகரத்து | ||||||||||||||
| அரண்மனை வாவிக் கரையில் எழுவீர்கள். | ||||||||||||||
| உங்களுக்கு என்றும் மங்களமே" | ||||||||||||||
| எனத்திருவாய் மலர்ந்து மறைந்தருளினார். | ||||||||||||||
| வெகு விநயத்தோடு சுவாமியின் | ||||||||||||||
| திருவார்த்தையைக் கேட்டுக் கொண்டிருந்த | ||||||||||||||
| அரசன் ஆநந்தக் கடலுள் திளைத்து, | ||||||||||||||
| யார்க்கும், முன்னவனே முன்னின்றால் | ||||||||||||||
| முடியாத பொருளுளதோ' என வியந்து | ||||||||||||||
| களிகூர்ந்தான். | ||||||||||||||
| சிம்ஹத்வஜன் பலநாள் அம் மஹா | ||||||||||||||
| க்ஷேத்திரத்திற்றங்கி யிருந்து அந்நகர் | ||||||||||||||
| முழுமையுந் தரிசித்துத் | ||||||||||||||
| துண்டி விநாயகரையும், | ||||||||||||||
| கதிர்காம வேலவரையும் வணங்கிப்போற்றி, | ||||||||||||||
| விசுவநாதரையும் | ||||||||||||||
| விசாலாக்ஷியம்மையையும் பன்முறை | ||||||||||||||
| தாழ்ந்து வணங்கி, தோத்திரஞ் செய்து | ||||||||||||||
| பிரியா விடை பெற்றுச், சிவபெருமானைச் | ||||||||||||||
| சிந்தித்தவனாய்ச் தனது மனைவியோடு | ||||||||||||||
| மந்தாகினியில் முழுகுதலும், தங்கள் | ||||||||||||||
| ஊரிலுள்ள மாளிகை வாவிக் கரையில் | ||||||||||||||
| யாவரும் வியக்கும்படி இருவரும் | ||||||||||||||
| எழுந்தார்கள். | ||||||||||||||
| அரசனுக்கும் இறைவன் ஆக்ஞையின்படி | ||||||||||||||
| ஓர் ஆண் குழந்தை
பிறந்தது. அது வெகு |
||||||||||||||
| திவ்விய ரூபத்தோடு பொலிந்தது. அரசன் | ||||||||||||||
| அக் குழந்தைக்குத் தாலத்துவஜன் | ||||||||||||||
| என்ற நாமகரணஞ் செய்தான். பின்னர் | ||||||||||||||
| கால முறையில் தனது மகனுக்குப் | ||||||||||||||
| பட்டங்கட்டி முடியுஞ் சூட்டினான். | ||||||||||||||
| தாலத்வஜன் மன்னுயிர்களைத் | ||||||||||||||
| தன்னுயிரெனக் கருதிச் செங்கோல் | ||||||||||||||
| செலுத்தி உலகைப் புரந்து வருதலைக் | ||||||||||||||
| கண்டு அரசன் பேருவகை பூத்தான். | ||||||||||||||
| பன்னீராயிர வருட முடிவில் | ||||||||||||||
| சிம்ஹத்வஜனும் மந்தாரலக்ஷ்மியும் | ||||||||||||||
| சிவபிரான் றிருவடி நீறலிற் சேர்ந்தனர். | ||||||||||||||
| இருவரும் 'அவன் அருளாலே அவன்றாள் | ||||||||||||||
| வணங்கி' அழியாப் புகழுக்குப் | ||||||||||||||
| பாத்திரரானார்கள். தாலத்வஜனும் பன்னாள் | ||||||||||||||
| இவ்வுலகை ஆண்டிருந்து அரன் | ||||||||||||||
| சேவடியடைந்தான். | ||||||||||||||
| காசித்தலத்தின் அருமையையும் கங்கா | ||||||||||||||
| நாயகன் பெருமையையும் எடுத்தோதும் | ||||||||||||||
| இக்கதையைக் கேட்போர்க்கு அழியா | ||||||||||||||
| மேன்மை உண்டாகும்; அவர்செய்த | ||||||||||||||
| பாபங்களெல்லாம் நசிக்கும்; புகழும் | ||||||||||||||
| புண்ணியமுந் தோன்றும்; | ||||||||||||||
| என்றும் சிவம் பெருகும். | ||||||||||||||
| இங்ஙனம் சிவபக்த சிரோமணியாகிய | ||||||||||||||
| சூதமுநிவர்; இக்கதையைப் பத்திச்சுவை | ||||||||||||||
| நனி சொட்டச் சொட்டச் சொல்லியருள, | ||||||||||||||
| நைமிசாரணிய முநிவர்களும் அன்பினால் | ||||||||||||||
| மனமுருகி 'அரகர' என்று சொல்லித் | ||||||||||||||
| தொழுதார்கள். | ||||||||||||||
Subscribe to:
Comments (Atom)