| காசி யாத்திரை | ||||
| சுற்றுலா என்பதற்கும் யாத்திரை | ||||
| என்பதற்கும் அடிப்படையில் வேறுபாடுண்டு. | ||||
| சுற்றுலா என்பது கேளிக்கைக்கு | ||||
| முக்கியத்துவம் கொடுத்து மேற்கொள்வது. | ||||
| யாத்திரை என்பது முழுக்க முழுக்க பக்தி, | ||||
| ஆன்மிகம், சடங்குகள், இறைவழிபாடு | ||||
| போன்றவற்றை அடிப்படையாகக் | ||||
| கொண்டது. | ||||
| பண்டைக் காலம் தொட்டே யாத்திரை | ||||
| என்பது ஹிந்துக்களின் வாழ்வோடு | ||||
| பின்னிப் பிணைந்த ஒன்றாகவே இருந்து | ||||
| வந்துள்ளது. யாத்திரைகள் பல இருந்தாலும் | ||||
| ‘காசி யாத்திரை’ புனிதமானதாகக் | ||||
| கருதப்படுகிறது. காசிக்குச் சென்று | ||||
| கங்கையில் நீராடினால் பாவங்கள் | ||||
| தொலைந்து விடும் என்ற நம்பிக்கை | ||||
| காலம் காலமாக இருந்து வருவதே | ||||
| இதற்குக் காரணம். | ||||
| காசி யாத்திரை முறைகள் | ||||
| காசி யாத்திரையை நாம் முதலில் | ||||
| இராமேஸ்வரத்தில் துவங்க வேண்டும். | ||||
| அங்குள்ள அக்னி தீர்த்தத்தில் புனித நீராடி, | ||||
| ஆலயத்தில் உள்ள 22 தீர்த்தங்களிலும் | ||||
| நீராடி பின் இறைவனை வேண்டி, | ||||
| சேதுக்கரையில் மணலால் லிங்கம் செய்து | ||||
| பூஜித்து யாத்திரையைத் துவங்க வேண்டும். | ||||
| காசி ஆலயங்கள் | ||||
| சடங்குகளை முறையாகச் செய்து விட்டு | ||||
| இறைவழிபாட்டிற்குச் செல்லலாம். | ||||
| பக்தர்களுக்கு அருள் புரிவதற்காகவே | ||||
| காசியில் சிவன், விஷ்ணு, துர்க்கை, | ||||
| விநாயகர், ஆஞ்சநேயர், பைரவர் என பல | ||||
| மூர்த்தங்கள் எழுந்தருளியிருக்கின்றனர். | ||||
| பல நூற்றுக்கணக்கான ஆலயங்கள் | ||||
| காசியில் அமைந்துள்ளன. அவற்றுள் | ||||
| தரிசிக்க வேண்டிய முக்கிய | ||||
| தெய்வங்களைப் பற்றி : | ||||
| விஸ்வேசம் மாதவம் டுண்டிம் | ||||
| தண்டபாணிம்ச பைரவம் | | ||||
| வந்தே காசீம் குஹாம் கங்காம் | ||||
| பவானீம் மணிகர்ணிகாம் || | ||||
| விஸ்வேசம் | ||||
| விஸ்வேசம்’ என்று குறிப்பிடப்படுவது | ||||
| காசி விஸ்வநாதரை. இந்தியாவின் | ||||
| முதன்மையான ஜோதிர்லிங்கத் தலம் இது. | ||||
| ஆலயத்தின் உள்ளே உள்ள கிணற்றில் | ||||
| பழமையான லிங்கம் இருப்பதாய் ஐதீகம். | ||||
| பிந்து மாதவர் ஆலயம் | ||||
| மாதவம்’ என்பது பிந்து மாதவரைக் | ||||
| குறிக்கும். இராமேஸ்வரத்தில் சேது | ||||
| மாதவராகவும், திரிவேணி சங்கமத்தில் | ||||
| வேணி மாதவராகவும் எழுந்தருளியிருக்கும் | ||||
| விஷ்ணு, காசியில் பிந்து மாதவராகக் | ||||
| காட்சி தருகிறார். இவரது ஆலயம் | ||||
| பஞ்ச கங்கா காட்டில் அமைந்திருக்கிறது. | ||||
| பிரம்மா வழிபட்ட சிறப்புக்குரியவர். | ||||
| சங்கு, சக்கரத்துடன் கதாயுதம் ஏந்திக் | ||||
| காட்சி தருகிறார். ஆலயத்திற்கு வெளியே | ||||
| விஷ்ணு பாதம் இருக்கின்றது. அதற்கு | ||||
| கங்கை நீரை அபிஷேகம் செய்து, | ||||
| மலர்களைத் தூவி வழிபடுகின்றனர். | ||||
| டுண்டி கணபதி | ||||
| டுண்டி’ கணபதி காசியின் முக்கியமான | ||||
| தெய்வங்களுள் ஒன்று. காசியின் சிறிய | ||||
| சந்துகளில் பல கடைகளுக்கு நடுவே | ||||
| ஒளிந்து கொண்டிருக்கும் இவரை தேடித் | ||||
| தான் கண்டுபிடிக்க வேண்டும். காசிக்குச் | ||||
| செல்பவர்கள் மணிகர்ணிகையில் | ||||
| நீராடிவிட்டு தேவ, ரிஷி, பித்ரு கடன்களை | ||||
| முடித்து விட்டு பின்னர் டுண்டி கணபதியை | ||||
| வணங்க வேண்டும். டுண்டி விநாயகரைக் | ||||
| காலையில் வணங்கினால் ஒருவருடைய | ||||
| அனைத்து இடையூறுகளும் நீங்கி | ||||
| வாழ்க்கையில் வளமுண்டாகும். | ||||
| “சகல சித்திகளையும் அளிக்கும் டுண்டி | ||||
| விநாயகரை ஒருவன் அனுதினமும் | ||||
| தொழுது வந்தால் | ||||
| அளவற்ற நன்மைகளை அடைகிறான்” | ||||
| என்கிறது ஸ்காந்த புராணம். | ||||
| தண்டபாணி ஆலயம் | ||||
| ‘தண்டபாணி’ ஆலயம் கால பைரவர் | ||||
| ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ளது. | ||||
| காசியின் தண்டல் நாயகர் இவர் | ||||
| அதனால்தான் இப்பெயர். கால பைரவரின் | ||||
| தளபதியான இவர், காசியில் உள்ள | ||||
| கணங்களுக்கெல்லாம் அதிபதியும் கூட. | ||||
| சலவைக் கல்லால் ஆன ஆலயத்தில் இரு | ||||
| கைகளிலும் ஒரு தண்டத்தைப் | ||||
| பிடித்துக்கொண்டு குத்திட்டு அமர்ந்துள்ளார் | ||||
| தண்டபாணி. கழுத்திலும், தலையைச் | ||||
| சுற்றியும் ருத்திராட்ச மாலைகள் அழகு | ||||
| செய்கின்றன. கால பைரவரின் ஆக்ஞைக்கு | ||||
| உட்பட்டு தண்டனைகளை நிறைவேற்றுபவர் | ||||
| இவர்தான். ‘தண்டுபாணி’என்று சொல்லி | ||||
| வட நாட்டவர்கள் இவரை வழிபடுகின்றனர். | ||||
| கால பைரவர் | ||||
| காசி நகரத்தின் காவல் தெய்வமும், | ||||
| க்ஷேத்திர பாலகரும் ‘கால பைரவர்’தான். | ||||
| இவர் கட்டுப்பாட்டில்தான் காசி மாநகரே | ||||
| உள்ளது. இவர் கண்ணசைவின்றி காசியில் | ||||
| ஏதும் நிகழாது என்பது ஐதீகம். இவரைத் | ||||
| தரிசிக்காமல் காசி யாத்திரை பூர்த்தி | ||||
| ஆவதில்லை. உருண்டையான முகம், | ||||
| பெரிய கண்கள், அடர்ந்த மீசை என | ||||
| கம்பீரமாக இவர் காட்சி தருகிறார். உள்ளே | ||||
| நுழைந்து பைரவரை வணங்கியதும் | ||||
| ஆலயத்தில் உள்ள பண்டா மயிற்பீலியால் | ||||
| நம் முதுகில் தட்டுவார். அதனைத் | ||||
| தொடர்ந்து ‘தண்டம்’ வழங்கப்படுகிறது. | ||||
| தண்டம் என்பது ஒரு நீண்ட கோல். | ||||
| அதைப் பக்தர்களின் தலையில் வைத்து | ||||
| ஆசீர்வதிக்கிறார்கள். கோயில் வாயிலில் | ||||
| ’காசிக்கயிறு’என்னும் கறுப்புக் கயிறு | ||||
| விற்கிறார்கள். காசிக்குவந்து சென்றதற்கும், | ||||
| கால பைரவரைத் தரிசித்து அவர் அருள் | ||||
| பெற்றதற்கும் அதுவே அடையாளம். | ||||
| அந்தக் கயிறுகளை வாங்கி, அதனை | ||||
| பைரவரின் திருவடியில் வைத்து வணங்கி | ||||
| தாங்களும் கட்டிக் கொள்வதுடன் காசி | ||||
| யாத்திரை நிறைவேறியதும் | ||||
| நண்பர்களுக்கும் உறவினர்களுக்கு | ||||
| அளிக்கலாம். ஆதிசங்கரர் காசி பைரவர் | ||||
| மீது “கால பைரவாஷ்டகம்.” என்றொரு | ||||
| அற்புதத் துதியை இயற்றியுள்ளார். | ||||
| காசி | ||||
| இங்கே காசி என்று குறிப்பிடுவது ஆதிகாசி. | ||||
| இது ஒருசிறு கோயில். இங்கு ஒரு சிறிய | ||||
| லிங்கமும், சிவமூர்த்தியும் இருக்கின்றன. | ||||
| குஹாம் | ||||
| மிருத்யுயேஞ்சஸ்வரர் ஆலயம் அருகே ஒரு | ||||
| குளம் உள்ளது. இதுதான் ஆதி கங்கை | ||||
| என்று சிலர் கூறுகின்றனர். இதன் அருகே | ||||
| உள்ள குகையே குஹாம் என்று | ||||
| அழைக்கப்படுகிறது. | ||||
| கங்காம் | ||||
| இது ஆதிகங்கை இருந்த இடம். இங்குதான் | ||||
| பகீரதன் கங்கையைப் பூமிக்குக் கொண்டு | ||||
| வந்தான் என்கிறது புராணம். | ||||
| ஆதிகங்கையின் நீரை தலையில் | ||||
| தெளித்துக் கொண்டால்தான் கங்கையில் | ||||
| முழுமையாக நீராடிய பலன் கிடைக்கும். | ||||
| பவானி | ||||
| காசி விசாலாட்சியே பவானி ஆகப் | ||||
| போற்றப்படுகிறாள் என்பதாக ஒரு கருத்து | ||||
| உண்டு. பவானி என்பது காசியில் உள்ள | ||||
| துர்கை அம்மன் ஆலயமே என்றும் சிலர் | ||||
| கருதுகின்றனர். விசாலாட்சி ஆலயம், | ||||
| விஸ்வநாதர் ஆலயத்திற்குப் பின்புறம் | ||||
| சற்றுத் தொலைவில் அமைந்துள்ளது. | ||||
| தனிச் சன்னதியில் அன்னை விசாலாட்சி | ||||
| நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி | ||||
| இருக்கிறாள். வெள்ளிக் கவசத்தில், | ||||
| சாந்தமான திருமுகத்துடன், கருணை | ||||
| பொங்கும் திருவிழிகளுடன் அன்னை | ||||
| காட்சி தருகிறாள். இவ்வாலயம் | ||||
| அன்னையின் 51 சக்தி பீடங்களில் | ||||
| ஒன்றாகக் கருதப்படுகிறது. அன்னையின் | ||||
| பின்புறம் உற்றுக் கவனித்தால் மற்றொரு | ||||
| திருவுருவத்தைக் காண இயலும். அதுவே | ||||
| ‘பவானி’ என்று சிலர் கூறுகின்றனர். காசி | ||||
| நகரத்தாரின் பொறுப்பில் இவ்வாலயம் | ||||
| அமைந்துள்ளது. | ||||
| மணிகர்ணிகா | ||||
| மணிகர்ணிகா தீர்த்தம் மிகப் புனிதமானது. | ||||
| காசித் திருத்தலத்தின் மிக முக்கியமான | ||||
| படித்துறை இது. இங்குள்ள மயானம் மிகப் | ||||
| புனிதமானதாகப் போற்றப்படுகின்றது. | ||||
| இங்கு தகனம் செய்வது மோட்சத்தைத் | ||||
| தரும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. | ||||
| உடல்கள் வண்டியில் கொண்டுவரப்பட்டு, | ||||
| மணி கர்ணிகையில் நீராட்டப்பட்டு பின்னர் | ||||
| தகனம் செய்யப்படுகின்றது. இங்கு நீராடி | ||||
| நீத்தார் கடன்களைச் செய்வதன் மூலம் | ||||
| முன்னோர்கள் மேலுலகம் செல்வதாக | ||||
| நம்பிக்கை. இங்கு நீராடி | ||||
| மணிகர்ணிகேஸ்வரரை தரிசித்த | ||||
| பின்தான் காசியின் பிற தெய்வங்களை | ||||
| வணங்கச் செல்ல வேண்டும் என்ற நியதி | ||||
| உள்ளது. இங்குள்ள இறைவன் உள்ளது. | ||||
| இங்குள்ள இறைவன் மணிகர்ணேஸ்வரர் | ||||
| என்று போற்றப்படுகிறார். காசியில் | ||||
| மரிப்போரின் காதுகளில் ஈசன் குனிந்து | ||||
| ராம நாமத்தை ஓதும் போது அவர் | ||||
| காதுகளில் அணிந்துள்ள குண்டங்கள் | ||||
| தரையில் படுவதால் இறைவனுக்கு | ||||
| இப்பெயர். (மணி – குண்டலம்; கர்ணிகா – | ||||
| காது). “மணிகர்ணிகையில் குளித்து | ||||
| மணிகர்ணிகேஸ்வரரைத் | ||||
| தியானிப்பவர்களுக்கு மீண்டும் பிறவி | ||||
| இல்லை. மணிகர்ணிகையில் ஒருமுறை | ||||
| மூழ்கி எழுந்தால் அது அனைத்துப் | ||||
| புண்ணிய நதிகளிலும் நீராடிய பலனைத் | ||||
| தரும். மணிகர்ணிகைக்குச் சமமான | ||||
| தீர்த்தம் எந்த லோகத்திலும் இல்லை” | ||||
| என்கிறது ஸ்காந்த புராணம். | ||||
| அன்னபூரணி | ||||
| காசியின் அதி முக்கிய தெய்வங்களுள் | ||||
| ஒன்று அன்னபூரணி. காசி முழுக்க முழுக்க | ||||
| அன்னையின் அருளாட்சிதான். | ||||
| கங்கா ஆரத்தி | ||||
| காசிக்குச் செல்பவர்கள் தவற விடக்கூடாத | ||||
| ஒன்று கங்கா ஆரத்தி. தசாஸ்வமேத | ||||
| காட்டில் தினசரி நடக்கும் நிகழ்வு இது. | ||||
| மாலை சுமார் 6.30க்கு ஆரம்பித்து 7.30க்கு | ||||
| முடியும். இளம் வயதுள்ள ஏழு ஆண்கள் | ||||
| கங்கை நதிக்குச் செய்யும் பூஜையே | ||||
| ‘கங்கா ஆரத்தி’ எனப்படுகிறது. முதலில் | ||||
| புனிதமான சங்கை ஊதி, மணியை அடித்து | ||||
| பூஜையை ஆரம்பிக்கின்றனர். அடுத்தடுத்து | ||||
| ஊதுபத்தி, சாம்பிராணி, மலர்கள் என | ||||
| ஒவ்வொன்றின் மூலமும் ஆரத்தி | ||||
| நடைபெறுகிறது. பார்க்கக் கண்கொள்ளாக் | ||||
| காட்சியாக இது இருக்கும். | ||||
| இவை தவிர காசியில் தரிசிக்க வேண்டிய | ||||
| ஆலயங்கள் பல இருக்கின்றன. | ||||
| கேதாரேஸ்வரர் ஆலயம், ஹனுமான்காட் | ||||
| ஆஞ்சநேயர், துர்கா மந்திர், வராகி அம்மன் | ||||
| கோவில், துளசி மானஸ் மந்திர், சங்கட் | ||||
| மோசன் ஹனுமான் ஆலயம் போன்றவை | ||||
| இவற்றில் குறிப்பிடத்தகுந்தவை. | ||||
| கௌடி மாதா | ||||
| எல்லா ஆலய தரிசனங்களையும் முடித்து | ||||
| விட்டு இறுதியில் கௌடி மாதா என்னும் | ||||
| சோழி அம்மன் கோவிலை அவசியம் | ||||
| தரிசிக்க வேண்டும். ‘காசீ பல் ஹம் கோ; | ||||
| கௌடீ பல் தும்கோ’ என்று சொல்லி | ||||
| சோழிகளைக் கையால் அளைந்து இங்கே | ||||
| வழிபட வேண்டும் என்பது ஐதீகம். படி | ||||
| ஏறிச் சென்றுதான் இவளைத் தரிசிக்க | ||||
| வேண்டும். இந்த அம்மன் முன் | ||||
| வைக்கப்பட்டிருக்கும் சோழிகளைக் | ||||
| கையால் அளைந்து இவளை வணங்கி | ||||
| விடை பெற்றால்தான் காசி யாத்திரை | ||||
| காசியில் பூர்த்தி ஆவதாக ஐதீகம். | ||||
| கங்கை நீரைக் கொண்டு வந்து, | ||||
| இராமேஸ்வரத்தில் உள்ள ஸ்படிக | ||||
| லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதுடன்தான் | ||||
| காசி யாத்திரை என்பது முழுமையாகப் | ||||
| பூர்த்தி ஆகிறது. | ||||
| உண்மையில் காசி யாத்திரை என்பது | ||||
| வெறும் யாத்திரை மட்டுமல்ல; அது, | ||||
| ஹிந்துக்கள் தங்களது பண்பாட்டை, | ||||
| கலாசாரத்தை, வேற்றுமையில் ஒற்றுமை | ||||
| காணும் ஒருமை உணர்வை | ||||
| ஒருங்கிணைக்கும் ஒரு புனிதப் பயணம். | ||||
| ஹிந்துக்கள் ஒவ்வொருவரும் தம் | ||||
| வாழ்வில் ஒருமுறையாவது மேற்கொள்ள | ||||
| வேண்டிய யாத்திரை காசி யாத்திரை | ||||
| எனலாம். ஹரி ஓம் !!! |
||||
Tuesday, 31 March 2020
காசி யாத்திரை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment