Thursday 19 March 2020

பிச்சையும் பிட்ஷையும்

பிச்சையும் பிட்ஷையும்


படித்ததில் பிடித்தது
( படித்த வலத்தளம் )

பிச்சைக்கும் பிட்சைக்கும் நிறைய 
வித்தியாசம் உண்டு. 

பிச்சை என்பது எதைக் கொடுத்தாலும் 
வாங்கிக் கொள்வது, 
ஆனால் அரிசியை மட்டும் தான் 
பிட்சையில் அளிக்க முடியும். 

பிச்சை எடுப்பவர் விதி வசத்தால் 
வாழ முடியாது.,வறுமையில் விழுந்தவர். 

ஆனால் பிட்சை கேட்பவர் வாழ வழி 
இருந்தும் சொத்து சுகங்கள் இருந்தும் 
அவைகளை உதறி விட்டு துறவிக் 
கோலம் பூண்டவர். 

பிச்சை அளிப்பது நம் கருணையாகும். 

பிட்சை கேட்பவருக்கு நாம் பிட்சை 
போடுவது கடமையாகும். 

பிச்சை கேட்பவருக்கு இல்லை 
என்று சொன்னால் நமக்கு குறை 
ஒன்றும் நேராது. பிச்சையிட்ட 
புண்ணியம் வேண்டுமானால் 
இல்லாமல் போகலாம். 

பிட்சை கேட்டு வருபவருக்கு மறுப்பது 
என்பது பாவச் செயலாகும். ஏன் 
என்றால் பிட்சை கேட்டு வருபவர் 
நம்மிடம் இருந்து அரிசியை மட்டும் 
பெறுவதில்லை. நாம் செய்யும் 
தீவினைகளையும் அவர் நமக்காக 
சேர்த்தே பெற்றுச் செல்கிறார்.


சித்தர்கள் பிட்சை பெற்று அரிசியை 
அமுது செய்து ஒரு கவளம் மட்டுமே 
உண்பர். மீதம் உள்ளதை காக்கை, 
குருவிகளுக்கு போடுவர். 

பின்பு பானையை கவிழ்த்து வைத்து 
விடுவர். அதாவது உறங்கச் செல்லும் 
போது அவர்களிடம் அவரது 
உடம்பைத் தவிர வேறு
எதுவும் இருக்காது; 
இருக்கவும் கூடாது.


ஹரி ஓம் !!!!

No comments:

Post a Comment