மௌனம்
| படித்ததில் பிடித்தது ! |
| மௌனத்துக்குப் பல படித்தரங்கள் |
| உண்டு. ஒயாது மிகைபடப் பொருளற்ற |
| பேச்சுக்களைப் பேசிக்கொண்டு |
| இருப்பதைத் தவிர்த்து, பொருள் உள்ள |
| பேச்சுக்களை மட்டும் பேசுவது |
| மௌனமாகும். |
| பொருள் உள்ள பேச்சுக்களை |
| மிகைபடப் பேசுவதைத் தவிர்த்து |
| அவைகளை அளவுபடப் பேசுதல் |
| மௌனமாகும். |
| பேச வேண்டிய எந்த ஒரு நல்ல |
| விஷயத்தையும் பிறர் கேட்டாலொழியப் |
| பேசாதிருப்பது அதிலும் உயர்ந்த |
| மௌனமாகும். |
| பிறர் பேசும்படி தூண்டினாலும் |
| அப்பேச்சு பிறருக்கோ தனக்கோ அதிகம் |
| பயன்படாது என்று தெரிந்த பின் பேசாது |
| அடங்கியிருப்பது அதிலும் உயர்ந்த |
| மௌனமாகும். |
| இப்படி மௌனத்திலேயே போகப் |
| போக மனம் அடங்கியிருப்பதற்கு அந்த |
| மௌன நிலையே ஆதாரம் ஆகிறது |
| ஒருவன் வாய் பேசாதிருந்தாலும் |
| மனதுக்குள்ளே விதவிதமான எண்ணங்கள் |
| உதித்துக் கொண்டிருக்கும். |
| அது கிட்டத்தட்ட பேசுதற்குக் சமமாகிறது. |
| அத்தகைய எண்ணங்களும் உதிக்காமல் |
| இருப்பதுதான் மௌனம் ! |
| இறை சிந்தனை வலுத்து வந்தால் வேறு |
| எண்ணங்கள் அடிபட்டுப்போகும். |
| கடவுளைப் பற்றிய ஒரே எண்ணம் |
| நிலைத்து நின்றுவிட்டால் அது பண்பட்ட |
| நிலை. |
| அந்தப் பண்பட்ட நிலையில் மனதை |
| நிறுத்திவிட்டால் மௌனம் ஆங்குப் |
| பூர்த்தியாகிறது. |
| எஞ்சியிருப்பது பிரம்ம சொரூபம் மட்டுமே ! ஹரி ஓம் |
No comments:
Post a Comment