Sunday 8 March 2020

விருபாக்ஷா ஆலயம்

விருபாக்ஷா ஆலயம் 
முல்பாகல் தாலுக்கா
Pin  :  563131


கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டம், 
முல்பாகல் தாலுக்காவில் உள்ள புகழ் 
பெற்ற சிவாலயம் விருபாக்ஷா ஆலயம்.

ஓசூரில் இருந்து மல்லூர் சாலை வழியாக
சுமார் 90 கி மீ தொலைவில் உள்ளது.

ஆயிரம் வருடங்கள் பழமையான இந்த 
கோவிலில் இரு திருமேனிகள் உண்ணது.

ஆத்ரேய முனிவர் மார்க தர்ஷனேஸ்வர
லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து 
எம்பெருமானை நோக்கித் தவம் செய்து
வழிபட்டு வந்தார். முனிவரின் தவத்தை
மெச்சிய சிவபெருமான், காட்சி அளித்து 
அவரை ஆட்கொண்டதுடன்,  விருபாக்ஷ 
ஆத்ம லிங்கத்தையும் அளித்தார். 

தற்போது, இந்த இரண்டு லிங்கங்களும்
வழிபாட்டில் உள்ளது. 

இறைவன் அளித்த ஆத்ம லிங்கம், காலையில் 
செந்நிறமாகவும்,  நண்பகலில் வெண்மையாகவும்,
மாலையில் தேன் நிறத்திலும் மாறும் 
தன்மை உடையது.

இதன் சூத்திரம் இதுநாள் வரை யாருக்கும்
புலப்படவில்லை.

















ஹரி ஓம் !!












No comments:

Post a Comment