Friday 17 July 2020

சிவ புராணம் ( 56 )


56. சிவ க்ஷேத்திரங்கள்





சிவபெருமான்
 அறுபத்தெட்டு க்ஷேத்திரங்களில் எழுந்தருளியுள்ளதை விசேஷமாகக் கூறுவர். அந்த க்ஷேத்திரங்களும் அங்கே எழுந்தருளியுள்ள பகவானின் திருநாமங்களும் பின்வருமாறு கூறப்பட்டுள்ளன.

வாரணாசியில் மகாதேவன்;
பிரயாகையில் மகேசுவரன்;
நைமிசாரண்யத்தில் தேவதேவன்;
கயையில் பிதாமகன்
குரு க்ஷேத்திரத்தில் காலேசன்;
பிரபாசத்தில் சசிபூஷணேசன்,
புஷ்கரத்தில் கந்தேசன்;
விமலேசுவரத்தில் விசுவேசன்;
அட்ட காசத்தில்  மகாநாதேசன்;
மருகோடத்தில் மகோற்கடேசன்
சங்கு கர்ணத்தில் மகாதேஜசன்;
கோகர்ணத்தில் மகாபலேசன்;
ருத்திர கோடியில் மகாயோகீசன்;
ஸ்தலேசத்தில் மகாலிங்கேசன்;
அவந்தியில் மகாகானேசன்;
மத்தியமேசத்தில் சர்வேசன்;
கேதாரத்தில் ஈசானேசன்;
ஹிமாசலத்தில் ருத்திரேசன்
சுவர்ணாக்ஷத்தில் காசிராசன்;
விருக்ஷத்தில் ரிஷபத்துவ ஜேசன்
பைரவத்தில் பைரவேசன்;
பத்திரபதத்தில் பத்திரேசன்;
கனகலையில் உக்கிரேசன்;
பத்திர கர்ணத்தில் இடுதபேசன்;
தேவதாரு வனத்தில் பின்னேசன்;
கபிஜங்கலத்தில் சண்டேசன்
சுரண்டத்தில் ஊர்த்துவகேது;
மங்களாண்டத்தில் அமர்த்தீசன்;
கிருத்திவாசத்தில் வரதேசன்;
ஆமிராடிகத்தில் சூக்க்ஷமேசன்;
காளஞ்சரத்தில் நீலகண்டேசன்;
மண்டலேசுவரத்தில் ஸ்ரீகண்டேசன்;
சித்தேசத்தில் தியான சித்தேசன்;
உத்தரதேசத்தில் காயத்திரி ஈசன்;
காஷ்மீரத்தில் விஜயேசன்;
சமருகேசத்தில் ஜயேசன்;
யமசியங்கத்தில் தாணேசன்;
காவீரகத்தில் காபிலேசன்;
காயாவதாரத்தில் லகுளீசன்
தேவி காவில் உமாபதி;
ஹரிசந்திரத்தில் ஈசுவரன்;
புரசந்திரத்தில் சங்கரன்;
காலேசுவரத்தில் ஜடேசன்;
குக்குடேசத்தில் கௌமியேசன்;
சந்தியாக்ஷேத்திரத்தில் தாமிரேசன்;
வெதிரியில் திரிலோசனேசன்;
ஜலேசத்தில் திரிசூலி;
ஸ்ரீசைலத்தில் திரிபுராந்தகேசன்;
லேபனத்தில் பசுபதி;
அங்கேசத்தில் தீப்தேசன்;
கங்காசாகர சங்கமத்தில் அமருகேசன்;
அமரகண்டத்தில் ஓங்காரேசன்;
சப்த கோதாவரியில் பீமேசன்;
பாதாளத்தில் ஆமகேசன்;
கர்ணிகாரத்தில் கணத்தியக்ஷன்;
சைலாசத்தில் திரிபுராந்தகேசன்;
ஹேமகூடத்தில் விரூபாக்ஷன்;
சந்தமானத்தில் பூர்ப்புவஸ்ஸூவஸ்வேசன்;
திடீசத்தில் அனலேசன்;
தலேசத்தில் ஜ்வலலிங்கேசன்;
கிராதத்தில் கைராதேசன்;
விந்தகிரியில் வாரகேசன்;
கங்காஹ்ருதத்தில் ஹிமஸ்தானேசன்;
வடவா முகத்தில் மானவேசன்;
தீர்த்தத்தில் சிரேஷ்ட கோடீசன்;
இஷ்டகா பதத்தில் விசிஷ்டேசன்;
குசுமபுரத்தில் பிரகாசேசன்;
இலங்கையில் அளகேசன்.


இந்த விதமாக அறுபத்து எட்டு இடங்களில் பகவான் எழுந்தருளியிருப்பது சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த க்ஷேத்திரங்களுக்குச் சென்று தரிசிக்க முடியாதவர்கள் இந்தப் பெயர்களை ஸ்மரித்தாலே அந்தப் பலனை அடைவார்கள்.

ஹரி ஓம் !!
















No comments:

Post a Comment