Thursday 23 July 2020

சிவபுராணம் ( 62 )

62.  ஸ்ரீராமனைப் பரீக்ஷித்த பார்வதி 



ஒரு சமயம் சிவபக்தன் ஒருவன் சிவபெருமானையும் தேவியையும் ஒருங்கே தரிசனம் செய்ய விரும்பினான். பக்தனுக்கு அருளப் புறப்பட்ட ஈசன், தம்மோடு தேவியையும் வருமாறு அழைத்தார்.

ஈசனால் தமக்கு உபதேசிக்கப்பட்ட விஷ்ணு சகஸ்ரநாம பாராயணத்தில் தேவி அப்போதுதான் ஈடுபட்டிருந்தாள். பிரபோ, பாராயணம் முடியவில்லையே!" என்றார் தேவி.

லகுவான பாராயணம் செய்து வா?" என்றார் ஈசன்.

பாராயணத்தை லகுவாக முடிக்கும் உபாயம் என்ன?" என்று கேட்டாள் தேவி.

ஸ்ரீராம, ராம என்பதைக் கூறுவதே விஷ்ணு சகஸ்ரநாம பாரயணத்தில் லகுவான பாராயணம் என்பதை எடுத்துக் கூறினார் ஈசன். தேவியும் அவ்விதமே பாராயணத்தை முடித்துக் கொண்டு அவரோடு புறப்பட்டாள்.

போகும் வழியில் அவர்கள் தண்டகாரண்யத்தை அடைந்தனர். அங்கே சீதையைப் பிரிந்த ஸ்ரீராமன் பித்தனைப் போல்சீதே, சீதேஎனக் கதறி அழுதுகொண்டிருப்பதைக் கண்டாள் தாக்ஷாயணி. பிரபோ, பித்தனைப் போல் கதறும் இவர் நாமமா ஸஹஸ்ர நாம ஜபம்?" என்று கேட்டாள் ஈசனிடம்.

தேவி, நீயே அதைப் பரீக்ஷித்துப் பாரேன்" என்றார் சிவன்தாக்ஷாயணியும் சீதையைப் போன்று வேடம் கொண்டு ஸ்ரீராமனின் முன் சென்றாள். அவளைக் கண்டதும் ஸ்ரீராமன், தேவி, இதென்ன கோலம்? சிவனை விட்டுப் பிரிய எண்ணம் கொண்டா இந்த வேஷம் பூண்டாய்?" என்று கேட்டார்.

தேவிக்கு அவமானமாகிவிட்டது. தான் பூண்ட வேடத்தை விட்டு விட்டு சிவனிடம் வந்து ஸ்ரீராமனின் வார்த்தைகளைக் கூறினாள்.

அந்த வார்த்தைகள் விரைவிலேயே பலித்துவிட்டன. தக்ஷன் சிவபெருமானிடம் விரோதம் கொண்டு அவருக்கு அவிர்ப்பாகமில்லாது யாகம் செய்ய, தேவி அவமானம் பொறுக்காது யாக குண்டத்திலேயே தம் உடலை விடுத்துப் பர்வதராஜனுக்குப் புத்திரியாகப் பிறந்தாள்

ஹரி ஓம் !!







No comments:

Post a Comment