Wednesday, 8 January 2014



அட்சய  திருதியை

சித்திரை மாதம்  வளர்பிறை 'திருதியை'      திதியை  அட்சய  திரிதியை ஆக கொண்டாடுகிறோம்.  'அட்சய'  என்றால் வளர்தல் என்று பொருள்.

கௌரவர்களின் சபைக்கு  துச்சாதனனால் இழுத்து வரப்பட்ட  பாஞ்சாலி,   பீஷ்மர் முதலியவர்களிடம்  நீதி கேட்டு முறையிட , அது கிடைக்காத நிலையில், பாஞ்சாலியின் துகிலை உரிய துச்சாதனன் முற்படுகின்றான். தன்  பலத்தால் அதைத தடுக்க முயன்று,  இயலாத நிலையில் இரு கைகளையும் கூப்பி,   கண்ணனிடம் சரணகதி அடைகிறாள், பாஞ்சாலி .  கண்ணனின்  பதினாறு நாமங்களைச் சொல்லிக்  கதறுகிறாள். 

கண்ணனும் அங்கு வந்து   ' அட்சய' என்கிறார். பாஞ்சாலியின்  துகிலும்  வளர்ந்து கொண்டே போனது.  துகிலுரித்த துச்சாதனனும்  மயங்கியே விழுந்தான். 

' அட்சய'  என்ற சொல்,  அந்த அளவிற்கு  வளர்ச்சியைத்  தரக்கூடியது.

இதனால்தான், அட்சய திருதியை என்னும் நன்னாளில், பொருட்களை வாங்கினால்  அவை பல மடங்காக பெருகும் என்ற நம்பிக்கை உள்ளது.  இந்த நாளில் ,  தங்கம் வாங்குவதில்தான், அநேகர்  கவனம் செலுத்துகின்றனர்.

இந்த நாளில், வெள்ளி, கிரைண்டர், மிக்சி, பிரிட்ஜ், ஏ .சி ., என  எந்த பொருளையும்  வாங்கலாம்.  

இந்நாளில்,  புத்தாடை உடுத்துவதும், தானம் செய்வதும் விசேஷம். 

இந்த நாளில்,  பாத்திரங்கள்  வாங்கலாம்.  இவற்றை, முதன்முதலாக அடுப்பில் வைக்கும் போது, இஷ்ட தெய்வத்துக்குரிய ஸ்லோகங்களையோ, பாடல்களையோ சொல்லி வைப்பதன் மூலம், ஆண்டு முழுவதும் தடையற்ற முறையில் உணவு கிடைக்கும்.  

சிலப்பதிகாரத்து  மாதவியின் மகள், மணிமேகலை  வைத்திருந்த பாத்திரத்துக்குப்  பெயரே  ' அட்சய  பாத்திரம் '.

இவை எல்லாவற்றிற்கும்  மேல், ஓர் எளிய மற்றும் முக்கியமானது ஒன்று உண்டு.  திரிதியை திதி  லட்சுமிக்கு உரியது என்பதால், அவளுக்கு பிடித்தமான மஞ்சள் மற்றும் உப்பை வாங்கி வைப்பதுதான்.

அட்சய திருதியை அன்று, தங்கத்தை மட்டுமல்ல, வேறு எந்த பொருளானாலும் சரி, லட்சுமிக்கு உகந்ததை வாங்குங்கள். லட்சுமி கடாட்சத்தைப் பெறுங்கள். 

நன்றி :  காலைக்கதிர் , 28/04/13. Bangalore Edition 










  

ஸ்ரீ  வல்லப  கணபதி  மந்திரம்


ஓம்  ஸ்ரீம்    ஹ்ரீம்   க்லீம்  க்லௌம்   கம்  கணபதயே
           வரவரத  ஸர்வ ஜனம் மேவசானய   ஸ்வாஹா !

இம்மந்திரத்தை  மகான்  சேஷாத்திரி  சுவாமிகள்
S. பரசுராம அய்யர்  என்ற பக்தருக்கு உபதேசித்திருக்கிறார்,

----  மகான் ஸ்ரீ சேஷாத்திரி  சுவாமிகளின்  சரித்திரம்,
        ஸ்ரீ சேஷாத்திரி  சுவாமிகள் டிரஸ்ட்,
        திருவண்ணாமலை.
       




Tuesday, 7 January 2014

ஐந்தெழுத்து



³ó¦¾ØòÐ


Åﺸô À¢ÈÅ¢¨Â
               ÁÉòЧǠ Å¢ÕõÀ¢§Â

«ïØò¾¢ý ¯ñ¨Á¨Â 
               «È¢¸¢Ä¡¾ Á¡ó¾÷¸¡û

Åïô  À¢ÈÅ¢¨Â
                Ũ¾ò¾¢¼×õ  ÅøÄ¢§Ãø 

«ïØò¾¢ý ¯ñ¨Á¨Â 
                «È¢óÐ ¦¸¡ûÇģ̇Á!


--  º¢Å š츢Â÷.


Å¢ðÎÅ¢¼ô  §À¡ÌР ¯Â¢÷
               Å¢ð¼×¼§É  ¯¼¨Ä

ÍðÎÅ¢¼ô  §À¡¸¢ýÈ¡÷  ÍüÈò¾¡÷
               Àð¼Ð  ÀðΠ

±ó§¿ÃÓõ º¢Å¨É  
               ²òÐí¸û  §À¡üÚí¸û

¦º¡ý§Éý «Ð§Å  ͸õ.

-------ÀðÊÉò¾¡÷


«ó¾Ãò¨¾ Å¢øÄ¡ì¸¢ 
             ³ó¦¾Øò¨¾ «õÀ¡ì¸¢

Áó¾¢Ãò §¾§Ã¡¢Âø§Ä¡ 
             Á¡ý§Å𨼠¬Î¾üÌî 

ºó¾¢ÃÕõ  Ý¡¢ÂÕõ 
             ¾¡ý§À¡ó¾  ¸¡É¸ò§¾

ÅóРŢ¨Ç¡ÊÂø§Ä¡ 
       ±ý  ¸ñ½õÁ¡
             ¸ñ ÌÇ¢Ãì ¸¡ñ§À§É¡!

------------  «Æ¸½¢ º¢ò¾÷



Monday, 6 January 2014


காலையில்  தினமும் பாராயணம் செய்ய 

சிற்றம்   சிறு    காலே
                                வந்துன்னை    சேவித்து  -   உன்

பொற்றாமரை   அடியையே
                                பற்றும்   பொருள்    கேளாய் !

பெற்றம்   மேய்த்துண்ணும்
                                 குலத்தில்   பிறந்து  நீ

 குற்றேவல்   எங்களை
                                  கொள்ளாமல் போகாது

இற்றைப்   பறைகொள்வான்
                                   அன்று  காண்  கோவிந்தா

எற்றைக்கும்    ஏழேழ்
                                    பிறவிக்கும்  உன் தன்னோடு

உற்றோமே    ஆவோம்!
                                   உனக்கே  நாம்  ஆட்செய்வோம் !

மற்றை  நம்   காமங்கள்
                                   மாற்றேலோர்    எம்பாவாய்!


அருளியவர் :  ஸ்ரீ  ஆண்டாள்   (எ )
                             சூடிக் கொடுத்த நாச்சியார்  ( எ )
                             கோதை  நாச்சியார்.

                            பன்னிரு  ஆழ்வார்களில்  ஒரே ஒரு பெண்பாற் புலவர்.
                           ஸ்ரீரங்கத்து அரங்கனையே மணவாளனாகப்  பெற்று
                            அவருடன்  இரண்டற  கலந்தவர்.




   
                                 

Sunday, 5 January 2014

மாணிக்கவாசகரின்  சிவபுராணத்திலிருந்து            சில வரிகள்.

......
புல்லாகி      பூடாய் 
                    புழுவாய்  மரமாகி ..
பல்    விருகமாகி
                    பறவையாய்    பாம்பாகி ....
கல்லாய்     மனிதராய்
                   பேயாய்     கணங்களாய் ....
வல்   அசுரராகி
                    முனிவராய்த்  தேவராய் ....
செல்லாஅ  நின்ற
                    இத் தாவர  சங்கமத்துள் ... 
எல்லா    பிறப்பும்
                   பிறந்திளைத்தேன்   எம்பெருமான்.....
 மெய்யே   உன்  பொன்னடிகள்
                    கண்டின்று  வீடுற்றேன்....
உய்ய என் உள்ளத்துள்
                    ஓங்காரமாய்  நின்ற
மெய்யா  விமலா !.......





Saturday, 4 January 2014

அழகணி சித்தரின்  அழகான பாடல்.

காட்டானை    மீதேறிக்    கடைத்தெருவே    போகையிலே
நாட்டார்    நமைமறித்து    நகைபுரியப்      பார்பதென்றோ
நாட்டார்    நமைமறித்து    நகைபுரியப்     பார்த்தாலும்
காட்டானை    மீதேறி     என்    கண்ணம்மா  
                                                 கண் குளிரக்  காண்பேனோ.




Wednesday, 1 January 2014

Ranga Ranga

2013, 28 டிசம்பர் அன்று காலை 3 மணி அளவில் பெங்களூரிலிருந்து புறப்பட்ட நாங்கள் மாண்டியா வழியாக ஸ்ரீ ரங்கபட்டினத்தை ஐந்தரை மணிக்கு அடைந்தோம். 

வண்ண வண்ண அலங்காரத்திலிருந்த ரங்கநாதரைக் கண்டு சொக்கி, தாயார் மகாலக்ஷ்மியையும் கண்டு மகிழ்ந்த நாங்கள் , வந்த வழியிலேயே சிறிது தூரம் திரும்பி, தலைக்காடு செல்லும் பாதையில் பன்னூர் வழியாக, சிவசமுத்திரத்திற்கு செல்லும் வழியில் ( மிக அருகில் ) மத்ய ரங்கத்தை அடைந்தோம்.

அமைதியான இடம். அதிர்வுகள் உள்ள இடம். அரங்கநாதரை  தரிசித்து பின் தாயார் ரங்கநாயகியையும் தரிசித்தோம். அரசியைப்போல் கம்பீரமாக அமர்ந்திருக்கும் தாயாரிடம் வணங்கி விடைபெற்றோம்.

பின் கொள்ளேகால், ஹனூர், ராம்புரா வழியாக அந்தியூர், பவானி, நாமக்கல், திருச்செங்கோடு என ஸ்ரீரங்கத்தை  சுமார் 4 மணி அளவில் அடைந்தோம். நிறைய பக்தர்கள் அரங்கனின்  தரிசனத்திற்காக காத்திருக்க, அரங்கனின் திருவருள் சுமார் பத்து மணியளவில் கிடைக்கப் பெற்றோம்.

மறுநாள், ஞாயிறு விடியலில், ஆயிரம் கண்ணுடையாளை சமயபுரத்தில் தரிசித்து பின் ஆணைக்காவலில் அகிலாண்டேஸ்வரியின் அருள் பெற்றோம்.

திருச்சியில், மாணிக்க விநாயகரை தரிசிக்க  எண்ணியிருந்த நாங்கள் நேரம் பற்றாக்குறையின் காரணமாக அவரை தவிர்த்து, தஞ்சாவூர் பாதையில் வாகனத்தை திருப்ப, எங்கள் எதிரே கம்பீரமாக ஒரு யானை. அலறி அடித்துக்கொண்டு வாகனத்திலிருந்து  இறங்கி வணங்க, ஓரவிழியால் எங்களைப் பார்த்தவாறே  கடந்தார்.  

மாணிக்க வினாயகரே!   உன் பொற்பாதம் சரணம்.

தஞ்சையில் புன்னை  நல்லூர் மாரியம்மனின் அருள் பெற்று, திருக்கடையூர்  அபிராமியை நோக்கி விரைந்தோம். கண்டோம், அருள் பெற்றோம். 

பின், சிதம்பரத்தில் நடராஜரையும், சிவகாமியையும், தரிசித்து பின் எல்லைக் காளியை வணங்கி திரும்பும் வழியில் அண்ணாமலையாரின் கோபுர தரிசனம் கண்டு, பெங்களூர் திரும்பினோம்.

இப்பயணத்திற்கு, ஆனுமதியும், ஆசீர்வாதமும் வழங்கி, 
உறுதுணையாயிருந்த என் குருவிற்கு கோடானு கோடி நமஸ்காரங்கள்.

குரு பிரம்மா  குரு விஷ்ணு 
குரு தேவோ  மஹேஸ்வரஹ 
குருர் சாட்சாத் பரப்ரும்மா
தஸ்மை ஸ்ரீ  குருவே நமஹ .

களம்பூர் பெருமாள் செட்டியார்