அபிராமி அந்தாதி
பாடல் 30
அன்றே
தடுத்து என்னை
ஆண்டு கொண்டாய்,
கொண்டதல்ல
என் கை,
நன்றே உனக்கு ;
இனி
யான்
என் செயினும்,
நடுக் கடலுள்
சென்றே வீழினும்,
கரை ஏற்றுகை
நின்
திருவுளமே !
ஒன்றே !
பல உருவே !
அருவே !
என்
உமையவளே !!
தொடரும் .....
அபிராமி அந்தாதி
பாடல் 29
சித்தியும்,
சித்திதரும் தெய்வமாகித்
திகழும்
பரா சக்தியும்,
சக்தி தழைக்கும்
சிவமும்,
தவ முயல்வார்
முக்தியும்,
முக்திக்கு வித்தும்,
வித்தாகி
முளைத்தெழுந்த
புத்தியும்,
புத்தியின் உள்ளே
புரக்கும்
புரத்தை அன்றே !!
தொடரும் .....
அபிராமி அந்தாதி
பாடல் 28
சொல்லும்,
பொருளும் என
நடமாடும்
துணைவருடன்
புல்லும்
பரிமளப் பூங்கொடியே !!
நின்
புது மலர்த் தாள்
அல்லும் பகலும்
தொழும் அவர்க்கே,
அழியா அரசும்,
செல்லும் தவ நெறியும்,
சிவ லோகமும்
சித்திக்குமே !!
தொடரும் ....
அபிராமி அந்தாதி
பாடல் 27
உடைத்தனை,
வஞ்சப் பிறவியை !
உள்ளம் உருகும்
அன்பு
படைத்தனை !
பத்மபத யுகம்
சூடும் பணி
எனக்கே
அடைத்தனை !
நெஞ்சத்து
அழுக்கையெல்லாம்,
நின்
அருட் புனலால்
துடைத்தனை !
சுந்தரி !!
நின்
அருள்
ஏதென்று
சொல்லுவதே !!
தொடரும் ....
அபிராமி அந்தாதி
பாடல் 26
ஏத்தும் அடியவர்
ஈரேழ் உலகினையும்
படைத்தும் ,
காத்தும் ,
அழித்தும்
திரிபவராம் ;
கமழ் பூக்கடம்பு சாத்தும்
குழல் அணங்கே !
மணம் நாறும்
நின் தாள் இணைக்கு
என் நாத்தங்கு
புன்மொழி ஏறியவாறு
நகை உடைத்தே !!
தொடரும் ----
அபிராமி அந்தாதி
பாடல் 25
பின்னே திரிந்து,
உன் அடியாரைப் பேணி,
பிறப்பறுக்க,
முன்னே
தவங்கள் முயன்று கொண்டேன் ;
முதல் மூவருக்கும்
அன்னே !!
உலகுக்கு,
அபிராமி என்னும்
அருமருந்தே !
என்னே!
இனி
உன்னை யான் மறவாமல்
நின்று
ஏத்துவனே !!
தொடரும் ....
அபிராமி அந்தாதி
பாடல் 24
மணியே !
மணியின் ஒளியே !
ஒளிரும்
மணி புனைந்த
அணியே !
அணியும் அணிக்கு
அழகே !
அணுகாதவர்க்குப் பிணியே !
பிணிக்கு மருந்தே !
அமரர் பெருவிருந்தே !
பணியேன் ஒருவரை,
நின்
பத்ம பாதம்
பணிந்த பின்னே !!
தொடரும் ....