Wednesday 16 April 2014

அபிராமி அந்தாதி ( 60 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  60


பாலினும்  சொல் இனியாய் !

பனி மாமலர்  
பாதம் வைக்க, 

மாலினும் தேவர் 
வணங்க நின்றோன்
கொன்றைவார் சடையின் மேலினும்,

கீழ் நின்று  வேதங்கள் பாடும் 
மெய்ப்பீடம் ஒரு நாலினும்,

சால நன்றோ,  
அடியேன் 
முடைநாய்த் தலையே ? 



பாலை விட   இனிய  சொற்களை உடைய தேவி !

குளிர்சியுடைய  தாமரை மலர் போன்ற நின் திருவடிகளை
வத்தருள,

திருமாலும், மற்றுமுள்ள  தேவர்களும்  வணங்கும்படி நின்ற
சிவா பிரானின் , கொன்றை மலர் அணிந்த  நீள் சடையின்
மேலிடத்தைக் காட்டிலும் ,

வேதங்களும் பாடிப் போற்றும் , உண்மையான பிரணவ  பீடங்கள்
நான்கினைக் காட்டிலும்,

நாற்றமுடைய நாய்த்தலையைப் போன்ற ,
அடியேனின் தலையும்  மிகவும் நன்றோ ?


தொடரும் .......






Monday 14 April 2014

அபிராமி அந்தாதி ( 59 )

அபிராமி  அந்தாதி

பாடல்  59


தஞ்சம்  பிறிதில்லை
ஈதல்லது என்று
உன் தவ நெறிக்கே   நெஞ்சம்  பயில
நினைக்கின்றிலேன்,

ஒற்றை  நீள்  சிலையும் ,
அஞ்சு  அம்பும்  இக்கு
அலராக   நின்றாய் !

அறியார்  எனினும்
பஞ்சு அஞ்சு  மெல்லடியார், 
அடியார்
பெற்ற  பாலரையே !

தொடரும் ....







தமிழ்  புத்தாண்டு  


சந்திரன்  பூமியைச் சுற்றி வரும்  அடிப்படையில்   வருடங்களைக் 
கணக்கிட்டு வரும்   புது வருடப் பிறப்பை  சந்திரமான  யுகாதி  என்பர். 
 இது  ஆந்திராவிலும், கர்நாடகத்திலும் , மற்றைய  பகுதிகளிலும்  கடைபிடிக்கப்படுகிறது. 


பூமி  சூரியனைச்  சுற்றி வரும்  அடிப்படையில்   வருடங்களைக் 
கணக்கிடுவது  மற்றொரு  முறை!    இம்முறை. தமிழகத்திலும், கேரளாவிலும்  கடைப்பிடிக்கப்படுகிறது.

ஜோதிட  சாஸ்த்திரத்தில்,  சூரியனும், சந்திரனும்  ராஜ கிரகங்கள்  ஆவர்.

பன்னிரண்டு  வீடுகளைக் கொண்ட  ராசி  மண்டலத்தில், 
முதல் வீடான  மேஷத்தை  சூரியனுக்கும், இரண்டாம்  வீடான  ரிஷபத்தை 
சந்திரனுக்கும்  அர்பணித்துள்ளனர், முன்னோர் .

மேஷத்தில்  சூரியனும்,  ரிஷபத்தில்  சந்திரனும்  உச்சமாக,  மிகவும்  பலம் வாய்ந்தவர்களாக  அருள்  பாலிக்கின்றனர்.

மேஷ ராசியில்  சூரியன்  பிரவேசிக்கும்  நாளையே,  வருடத்தின்  முதல் நாளாகக் கொண்டு,  புது வருடப் பிறப்பை  கொண்டாடுகின்றனர்.

தமிழ் புத்தாண்டாம்  நன்னாளில்,  இன்று  சூரியனை  வணங்கி  
 அவன் அருள்  பெறுவோம் !

தமிழ்  புத்தாண்டு  வாழ்த்துக்கள்  !

Wednesday 9 April 2014

அபிராமி அந்தாதி ( 58 )

அபிராமி  அந்தாதி  

பாடல்  58  


அருணாம்  புயத்தும் 
என் 
சித்தாம்  புயத்தும் 
அமர்ந்திருக்கும் 

தருணாம் புய
முலைத் தையல் நல்லாள் 
தகை சேர்  நயனக் 
கருணாம்  புயமும்,
சரணாம் புயமும்  அல்லால் 
கண்டிலேன்  
ஒரு  தஞ்சமுமே ! !


தொடரும் .....


அபிராமி அந்தாதி ( 57 )

அபிராமி  அந்தாதி  

பாடல்  57


ஐயன்  அளந்தபடி 
இரு நாழி  கொண்டு 
அண்டமெல்லாம்  உய்ய 
அறம்  செய்யும் உன்னையும்   போற்றி, 

ஒருவர்  தம்பால் 
செய்யப்  பசுந்தமிழ்  பாமாலையும் 
கொண்டு சென்று 
பொய்யும்  மெய்யும்  
இயம்ப  வைத்தாய் ,
இதுவோ   உன்தன் 
மெய்  அருளே  !!


தொடரும் .....








அபிராமி அந்தாதி ( 56 )

அபிராமி  அந்தாதி  

பாடல்  56  


ஒன்றாய்  அரும்பி 
பலவாய்  விரிந்து 
இவ்வுலகு  எங்குமாய்  நின்றாள் !

அனைத்தையும் 
நீங்கி  நிற்பாள் !

என்தன்   நெஞ்சின் உள்ளே 
பொன்றாது  நின்று  புரிகின்றவா !

இப்பொருள்  அறிவார்,  
அன்று 
ஆல்  இலையில்  துயின்ற  பெம்மானும்,
என்  ஐயனுமே  ! !


தொடரும் .....




அபிராமி அந்தாதி (55 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  55


மின் ஆயிரம்  
ஒரு  மெய்  வடிவாகி 
விளங்குகின்ற அன்னாள் 

அகம் மகிழ்  
ஆனந்த வல்லி  

அருமறைக்கு  
முன்னால்,  
நடுவு,  
எங்குமாய் 
முடிவாய  
முதல்வி தன்னை 

உன்னாது  ஒழியினும் 
உன்னினும் 
வேண்டுவது  ஒன்றில்லையே !!


தொடரும் ....

அபிராமி அந்தாதி ( 54 )

அபிராமி  அந்தாதி  

பாடல் 54


இல்லாமை  சொல்லி  
ஒருவர் தம்பால் சென்று 

இழிவுபட்டு  நில்லாமை 
நெஞ்சில்  நிலைகுவரேல். 

நித்தம்  நீடுதவம் கல்லாமை 
கற்ற  கயவர் தம்பால் 

ஒரு காலத்திலும் 
செல்லாமை  வைத்த 

திரிபுரை  பாதங்கள்  
சேர்மின்களே !!

தொடரும் .....




Saturday 5 April 2014

அபிராமி அந்தாதி ( 53 )

அபிராமி  அந்தாதி  

பாடல்  53


சின்னம்  சிறிய  மருங்கினில் 
சாத்திய 
செய்யப் பட்டும்,
பென்னம் பெரிய முலையும் ,
பிச்சி மொய்த்த 
கன்னம் கரிய குழலும் ,
கண்  மூன்றும் 
கருத்தில் வைத்துத் 
தன்னந்தனி  இருப்பார்க்கு 
இதுபோலும் 
தவம்  இல்லையே  !!  


தொடரும்  ....



அபிராமி அந்தாதி ( 52 )

அபிராமி  அந்தாதி  

பாடல்  52


வையம் ,
துரகம் ,
மதகரி ,
மாமகுடம் ,
சிவிகை ,
பெய்யும் கனகம் ,
பெருவிலை  ஆரம் ,
பிறை  முடித்த 
ஐயன்  திருமனையாள் 
திருவடிக்கு , 
அன்பு 
முன்பு செய்யும் 
தவம்  உடையார்க்கு 
உளவாகிய  சின்னங்களே  !!

தொடரும் ....


அபிராமி அந்தாதி ( 51 )

அபிராமி  அந்தாதி  

பாடல்  51


அரணம், பொருள்  என்று 
அருள் ஒன்று  இலாத 
அசுரர்  தங்கள் 
முரண்  அன்று  அழிய  
முனிந்த  பெம்மானும்,
முகுந்தனுமே 
சரணம் சரணம்  எனநின்ற 
நாயகி தன் அடியார் 
மரணம்  பிறவி  
இரண்டும்  எய்தார்,   
இந்த  வையகத்தே !


தொடரும் .....

Friday 4 April 2014

அபிராமி அந்தாதி ( 50 )


அபிராமி  அந்தாதி 


பாடல்  50


நாயகி ,
நான்முகி ,
நாராயணி ,
கை நளின பஞ்ச சாயகி ,
சாம்பவி,
சங்கரி,
சாமளை ,
சாதி நச்சு வாய் அகி ,
மாலினி ,
வாராகி ,
சூலினி ,
மாதங்கி  என்று 
ஆய  கியாதியுடையாள் 
சரணம் !

அரண்  நமக்கே !

தொடரும் ......




அபிராமி அந்தாதி ( 49 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  49


குரம்பை அடுத்துக் 
குடி புக்க 
ஆவி 
வெம் கூற்றுக்கு இட்ட 
வரம்பை அடுத்து 
மறுகும் , 

அப்போது 
வளைக்கை  அமைத்து 
அரம்பை  அடுத்த 
அரிவையர்  சூழ வந்து 
அஞ்சல்  என்பாய் !

நரம்பை அடுத்த 
இசைவடிவாய் 
நின்ற   நாயகியே  !

தொடரும் .....



அபிராமி அந்தாதி ( 48 )

அபிராமி  அந்தாதி

பாடல்  48


சுடரும் கலைமதி
துன்றும் 
சடைமுடிக் குன்றில் 
ஒன்றிப் படரும் 
பச்சைக் கொடியைப் 
பதித்து  நெஞ்சில்,

இடரும் தவிர்த்து 
இமைப்போது  இருப்பார் 
பின்னும்  எய்துவரோ 
குடரும்,
கொழுவும், 
குருதியும்  தோயும் 
குரம்பையிலே !

தொடரும் ....

Thursday 3 April 2014

அபிராமி அந்தாதி ( 47 )

அபிராமி  அந்தாதி  

பாடல்  47


வாழும்படி  
ஒன்று கண்டு கொண்டேன் 
மனத்தே !

ஒருவர் 
விழும்படி யன்று ,
விள்ளும்படி  யன்று .

வேலை நிலம் 
எழும்  பருவரை 
எட்டும் எட்டாமல் 
இரவு பகல் 
சூழும்  சுடர்க்கு 
நடுவே கிடந்து 
சுடர்கின்றதே  !

தொடரும் ......

அபிராமி அந்தாதி ( 46 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  46


வெறுக்கும்  தகைமைகள்  
செய்யினும் 
தம்  அடியாரை  மிக்கோர்  
பொறுக்கும்  தகைமை  
புதிய தன்றே !

புது  நஞ்சை உண்டு 
கறுக்கும்  திருமிடற்றான் 
இடப்பாகம்  கலந்த  பொன்னே !

மறுக்கும்  தகைமைகள்  
செய்யினும் 
யான் உன்னை 
வாழ்த்துவனே  !


தொடரும் ....

Wednesday 2 April 2014

அபிராமி அந்தாதி ( 45 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  45


தொண்டு  செய்யாது,
நின் பாதம்  தொழாது,
துணிந்து 
இச்சையே  பண்டு செய்தார் 
உளரோ, இலரோ ?

அப்பரிசு,
அடியேன்  கண்டு செய்தால்,
அது  கை தவமோ ,
அன்றிச்  செய்தவமோ ?

மிண்டு  செய்தாலும் 
பொறுக்கை  நன்றே,
பின் வெறுக்கை  யன்றே !

தொடரும் ....

அபிராமி அந்தாதி ( 44 )

அபிராமி  அந்தாதி  

பாடல்  44


தவளே !

இவள் ,
எங்கள்  சங்கரனார் 
மனை  மங்கலமாம் !

அவளே , 
அவர் தமக்கு  
அன்னையும்  ஆயினள் !

ஆகையினால்,
இவளே,
கடவுளர்  யாவர்க்கும்  
மேலை  இறைவியும் ஆம் !

துவளேன் இனி, 
ஒரு  தெய்வம்  உண்டாக 
மெய்த் தொண்டு  செய்தே  !

தொடரும் ......

அபிராமி அந்தாதி ( 43 )

அபிராமி  அந்தாதி  

பாடல்  43


பரிபுரச்  சீறடி !
பாசாங்குசை !
பஞ்ச பாணி  !

இன்சொல்  திரிபுர  சுந்தரி !
சிந்துர  மேனியள்  !

தீமை நெஞ்சில்  
பரிபுர  வஞ்சரை  அஞ்சக்  குனி 
பொரும்புச் சிலைக்கை 
எரிபுரை  மேனி !

இறைவர்  செம் பாகத்து  
இருந்தவளே !


தொடரும் ....