Monday 14 April 2014

தமிழ்  புத்தாண்டு  


சந்திரன்  பூமியைச் சுற்றி வரும்  அடிப்படையில்   வருடங்களைக் 
கணக்கிட்டு வரும்   புது வருடப் பிறப்பை  சந்திரமான  யுகாதி  என்பர். 
 இது  ஆந்திராவிலும், கர்நாடகத்திலும் , மற்றைய  பகுதிகளிலும்  கடைபிடிக்கப்படுகிறது. 


பூமி  சூரியனைச்  சுற்றி வரும்  அடிப்படையில்   வருடங்களைக் 
கணக்கிடுவது  மற்றொரு  முறை!    இம்முறை. தமிழகத்திலும், கேரளாவிலும்  கடைப்பிடிக்கப்படுகிறது.

ஜோதிட  சாஸ்த்திரத்தில்,  சூரியனும், சந்திரனும்  ராஜ கிரகங்கள்  ஆவர்.

பன்னிரண்டு  வீடுகளைக் கொண்ட  ராசி  மண்டலத்தில், 
முதல் வீடான  மேஷத்தை  சூரியனுக்கும், இரண்டாம்  வீடான  ரிஷபத்தை 
சந்திரனுக்கும்  அர்பணித்துள்ளனர், முன்னோர் .

மேஷத்தில்  சூரியனும்,  ரிஷபத்தில்  சந்திரனும்  உச்சமாக,  மிகவும்  பலம் வாய்ந்தவர்களாக  அருள்  பாலிக்கின்றனர்.

மேஷ ராசியில்  சூரியன்  பிரவேசிக்கும்  நாளையே,  வருடத்தின்  முதல் நாளாகக் கொண்டு,  புது வருடப் பிறப்பை  கொண்டாடுகின்றனர்.

தமிழ் புத்தாண்டாம்  நன்னாளில்,  இன்று  சூரியனை  வணங்கி  
 அவன் அருள்  பெறுவோம் !

தமிழ்  புத்தாண்டு  வாழ்த்துக்கள்  !

No comments:

Post a Comment