Friday, 12 December 2014

அபிராமி அந்தாதி ( 79 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  79

விழிக்கே  அருள் உண்டு 
அபிராமவல்லிக்கு ;

வேதம் சொன்ன  வழிக்கே ...
வழிபட  நெஞ்சுண்டு ;

எமக்கு  அவ்வழி கிடக்க,

பழிக்கே சுழன்று ,
வெம் பாவங்களே செய்து ,
பாழ்  நரகக் குழிக்கே  அழுந்தும் 
கயவர் தம்மோடு 
என்ன கூட்டு  ... இனியே ?

தொடரும்...




Thursday, 11 December 2014

அபிராமி அந்தாதி ( 78 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  78



செப்பும் கனகக் கலசமும் போலும் 
திருமுலை  மேல் 
அப்பும் களப 
அபிராமவல்லி  அணி தரளக் 
கொப்பும் , வயிரக் குழையும் 
விழியின்  கொழுங்கடையும் 
துப்பும் நிலவும்  
எழுதி  வைத்தேன் ,
என் விழித் துணைக்கே !

தொடரும் .........

Wednesday, 10 December 2014

அபிராமி அந்தாதி ( 77 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  77


பயிரவி,
பஞ்சமி  ,
பாசாங்குசை ,
பஞ்ச பாணி ,
வஞ்சர்  உயிரவி  உண்ணும்  உயர் சண்டி ,
காளி,
ஒளிரும்  கலா வயிரவி,
மண்டலி ,
மாலினி ,
சூலி , 
வராகி   
என்றே  செயிரவி 
நான்மறைசேர்  திருநாமங்கள் 
செப்புவரே ! 

தொடரும்  ....


Friday, 7 November 2014

அபிராமி அந்தாதி ( 76 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  76



குறித்தேன் ,  
மனதில்  நின்  கோலமெல்லாம் .. !

மறித்தேன்,
மறலி  வருகின்ற  நேர்வழி !

வண்டு கிண்டி,
வெறித்தேன்,
அவிழ்  கொன்றை வேணிப் பிரான்  ஒரு கூற்றை,
மெய்யில் பறித்தே  குடி புகுதும் ,
பஞ்ச பாண்  பயிரவியே  !!


தொடரும்............



Thursday, 30 October 2014

அபிராமி அந்தாதி ( 75 )

அபிராமி  அந்தாதி


பாடல்  75




தங்குவர் ,
கற்பகத் தருவின்  நிழலில் ;
தாயார்  இன்றி
மங்குவர் ;

மண்ணில்  வழுவாப்  பிறவியை ,
மால் வரையும்
பொங்குவர் ;

ஆழியும்,
ஈரேழ்  புவனமும் பூத்த  உந்தி
கொங்கிவர்
பூங்குழலாள்  திருமேனி
குறித்தவரே !

தொடரும் .............




Tuesday, 28 October 2014

அபிராமி அந்தாதி ( 74 )

அபிராமி அந்தாதி 

பாடல் 74



நயனங்கள்  மூன்றுடை  நாதனும் ,
வேதமும்,
நாரணனும் ,
அயனும் பரவும் 
அபிராமவல்லி  அடியிணையைப்  
பயனென்று  கொண்டவர் ,
பாவையர்  ஆடவும். பாடவும் ,
பொன் சயனம் பொருந்து ,
தமனியக் காவினில்  .... தங்குவரே !

தொடரும்​​​ ___ 


Monday, 27 October 2014

அபிராமி அந்தாதி ( 73 )


அபிராமி  அந்தாதி 

பாடல்  73



தாமம்  -   கடம்பு ,

படை  -  பஞ்ச பாணம் , தனுக் கரும்பு ,

யாமம்  - வயிரவர்  ஏத்தும்  பொழுது ,

எமெக்கென்று  வைத்த  சேமம் - 
செங்கைகள் நான்கு ,

ஒளி  - செம்மை ,

அம்மை நாமம்  - திரிபுரை ,

ஒன்றோடு  இரண்டு  நயனங்களே !


தொடரும் -----