Thursday 27 February 2014

அபிராமி அந்தாதி ( 23 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  23


கொள்ளேன் 
மனதில்  நின் 
கோலமல்லாது,

அன்பர் 
கூட்டம் தன்னை 
விள்ளேன் !

பர சமயம் 
விரும்பேன் !

வியன்  
மூவுலகுக்கு 
உள்ளே,

அனைத்தினுக்கும் 
புறம்பே,

உள்ளத்தே 
விளைந்த  
கள்ளே !

களிக்கும் 
களியே !

அளிய 
என் 
கண்மணியே !!



தொடரும் ....




அபிராமி அந்தாதி ( 22 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  22


கொடியே!
இளவஞ்சிக்  கொம்பே 
எனக்கு  வம்பே,
பழுத்த படியே,

மறையின் 
பரிமளமே !

பனிமால் 
இமயப் 
பிடியே !

பிரமன் முதலாய்த் 
தேவரைப் பெற்ற 
அம்மே !

அடியேன் இறந்து,
இங்கு இனி பிறவாமல் 
வந்து 
ஆண்டு  கொள்ளே !!

தொடரும் ....

Wednesday 26 February 2014

சிவ புராணம் - மாணிக்க வாசகர்

மாணிக்க வாசகர்   
அருளிய
சிவ புராணம் 

தொல்லை இரும்பிறவி
சூழும்  தளை  நீக்கி
அல்லல்  அறுத்து
ஆனந்தம்  ஆக்கியதே...

எல்லை
மருவா  நெறியளிக்கும்
வாதவூர்  எங்கோன்
திருவாசகம்
எனும்  தேன் !

சிவ  புராணம் 

நமச்சிவாய   வாஅழ்க ,
நாதன் தாள்  
வாழ்க !

இமைப் பொழுதும் 
என் நெஞ்சில் 
நீங்காதான் 
தாள்  வாழ்க !

கோகழி  ஆண்ட 
குரு  மணி,
தன்  தாள்  வாழ்க !

ஆகமம் ஆகி 
நின்றண்ணிப்பான் 
தாள் 
வாழ்க !

ஏகன்,
அநேகன்,
இறைவன் 
அடி  வாழ்க !

வேகம் 
கெடுத்தாண்ட 
வேந்தன் 
அடி வெல்க !

பிறப்பறுக்கும் 
பிஞ்ஞகன்  தன் 
பெய்கழல்கள் 
வெல்க !

புறத்தார்க்கு 
சேயோன் தன் 
பூங்கழல்கள் 
வெல்க !

கரம் குவிவார் 
உள் மகிழும் 
கோன்  கழல்கள் 
வெல்க !

சிரம் குவிவார் 
ஓங்குவிக்கும் 
சீரோன் ....
கழல் வெல்க !

ஈசன் 
அடி  போற்றி,
எந்தை 
அடி போற்றி !

தேசன் 
அடி போற்றி,
சிவன்சே வடி போற்றி !

நேயத்தே நின்ற 
நிமலன் 
அடி  போற்றி !

மாயப் பிறப்பறுக்கும் 
மன்னன் 
அடி 
போற்றி !

சீர்ஆர் 
பெருந்துறை நம் 
தேவன்  
அடி போற்றி !

ஆராத  இன்பம் 
அருளும் 
மலை 
போற்றி !

சிவன் 
அவன் என் 
சிந்தையுள் 
நின்ற...
அதனால்,

அவன்  
அருளாலே,
அவன் தாள் 
வணங்கி,

சிந்தை 
மகிழச் 
சிவ  புராணம் 
தன்னை,

முந்தை  
வினை  முழுதும் 
ஓய 
உரைப்பன்  யான் !

கண் நுதலான் ....
தன்  கருணை 
கண் காட்ட 
வந்தெய்தி,

எண்ணுதற்கு  
எட்டா 
எழிலார் 
கழல் இறைஞ்சி,

விண்  நிறைந்தும்,
மண் நிறைந்தும் 
மிக்காய்!
விளங்கொளியாய் !

எண்ணிறந்து 
எல்லை...
இலாதானே!
நின் 
பெருஞ்சீர் ..!

பொல்லா  
வினையேன்,
புகழுமாறு 
ஒன்றறியேன் !

புல்லாகி,
பூடாய்,
புழுவாய்,
மரமாகி,

பல் 
விருகமாகிப் 
பறவையாய்ப் 
பாம்பாகி,

கல்லாய்,
மனிதராய்ப் 
பேயாய்க் 
கணங்களாய்,

வல் 
அசுரராகி,
முனிவராய்த் 
தேவராய்ச் 

செல்லாஅ  
நின்ற 
இத் தாவரச் 
சங்கமத்துள்,

எல்லாப் 
பிறப்பும்,
பிறந்திளைத்தேன்,
எம் பெருமான் !

மெய்யே !
உன் பொன்னடிகள் 
கண்டின்று 
வீடுற்றேன் !

உய்ய 
என்  உள்ளத்துள் 
ஓங்காரமாய் 
நின்ற 

மெய்யா !
விமலா !
விடைப்பாகா !

வேதங்கள் 
ஐயா 
என ஓங்கி
ஆழ்ந்தகன்ற 
நுண்ணியனே !

வெய்யாய் !
தணியாய் !
இயமானன்  
ஆம் விமலா!

பொய்யாயின 
எல்லாம் 
போயகல 
வந்தருளி,

மெய்ஞ் ஞானமாகி 
மிளிர்கின்ற 
மெய்ச்சுடரே !

எஞ்ஞானம் 
இல்லாதேன்..
இன்பப் பெருமானே ! 

அஞ்ஞானம் தன்னை 
அகல்விக்கும் 
நல்லறிவே !


ஆக்கம் 
அளவிறுதி 
இல்லாய் !

அனைத்துலகும்,
ஆக்குவாய்:
காப்பாய்;
அழிப்பாய்;
அருள் தருவாய் !

போக்குவாய் ...
என்னை 
புகுவிப்பாய் 
நிந்தொழும்பில் ;

நாற்றத்தின் 
நேரியாய் !
சேயாய் !
நணியானே !

மாற்றம் 
மனம் கழிய 
நின்ற 
மறையோனே !

கறந்த பால் 
கன்னலொடு 
நெய் கலந்தாற் 
போலச் 

சிறந்த 
அடியார் 
சிந்தனையுள் 
தேனூறி
நின்று,

பிறந்த 
பிறப்பறுக்கும் 
எங்கள் 
பெருமான் !

நிறங்கள் 
ஓர் 
ஐந்துடையாய்,
விண்ணோர்கள் 
ஏத்த,
மறந்திருந்தாய் 
எம் பெருமான் !

வல் வினையேன் 
தன்னை ,
மறைந்திட 
மூடிய 
மாய  
இருளை,
அறம் பாவம் 
என்னும் 
அரும் கயிற்றால் 
கட்டிப் 
புறம் தோல் 
போர்த்தெங்கும் 
புழு அழுக்கு 
மூடி,
மலம்  சோரும் 
ஒன்பது வாயில் 
குடிலை,

மலங்கப் 
புலனைந்தும் 
வஞ்சனையைச் 
செய்ய 

விலங்கு 
மனத்தால்,
விமலா!,
உனக்குக் 
கலந்த 
அன்பாகிக் 

கசிந்துள் 
உருகும்,

நலந்தான் 
இலாத 
சிறியேற்கு
நல்கி,

நிலம்தான் மேல் 
வந்தருளி 
நீள் கழல்கள் 
காஅட்டி 

நாயிற்க் 
கடையாய் 
கிடந்த 
அடியேற்குத் 

தாயிற்  
சிறந்த 
தயா ஆனா 
தத்துவனே !

மாசற்ற 
சோதி,
மலர்ந்த 
மலர்ச்சுடரே !

தேசனே 
தேன் ஆர் 
அமுதே !
சிவபுரனே !

பாசமாம் 
பற்றறுத்து 
பாரிக்கும் 
ஆரியனே !

நேச 
அருள்புரிந்து 
நெஞ்சில் 
வஞ்சம் கெடப் 

பேராது 
நின்றப் 
பெருங்கருணைப் 
பேராறே !

ஆரா 
அமுதே,
அளவிலாப் 
பெம்மானே !

ஓராதார் 
உள்ளத்து 
ஒளிக்கும் 
ஒளியானே !

நீராய் 
உருக்கியென் 
ஆருயிராய் 
நின்றானே !

இன்பமும்,
துன்பமும் 
இல்லானே,
உள்ளானே !

அன்பருக்கு 
அன்பனே !
யாவையுமாய் 
அல்லையுமாம் 

சோதியனே !
துன்னிருளே !
தோன்றாப் 
பெருமையனே !

ஆதியனே !
அந்தம் 
நடுவாகி 
அல்லானே !

ஈர்தென்னை 
ஆட்கொண்ட 
எந்தைப் 
பெருமானே !

கூர்த்த 
மெய்ஞ்ஞானத்தால் 
கொண்டுணர்வார் 
தம் கருத்தின் 

நோக்கரிய 
நோக்கே,
நுணுக்கரிய  
நுண்ணுணர்வே !

போக்கும் 
வரவும்
புணர்வுமிலாப் 
புண்ணியனே !

காக்கும் எம் 
காவலனே,
காண்பரிய 
 பேரொளியே !

ஆற்றின்ப 
வெள்ளமே,
அத்தா!  
மிக்காய் 
நின்ற 

தோற்றச் 
சுடரொளியாய்,
சொல்லாத 
நுண்ணுணர்வாய் !

மாற்றமாம்  
வையகத்தே 
வெவ்வேறே 
வந்தறிவாம் 

தேற்றனே!
தெற்றத் 
தெளிவே !
என்  சிந்தனையுள் 

ஊற்றான 
உண் ஆர் 
அமுதே !
உடையானே !

வேற்று 
விகார 
விடக்குடம்பின் 
உட்கிடப்ப 

ஆற்றேன் 
எம் ஐயா 
அரனேயோ 
என்றென்று 

போற்றிப் 
புகழ்ந்திருந்து 
பொய் கெட்டு 
மெய் ஆனார் 

மீட்டிங்கு 
வந்து 
வினைப்பிறவி 
சாராமே 

கள்ளப் 
புலக்குரம்பை 
கட்டழிக்க 
வல்லானே !

நள்ளிருளில் 
நட்டம் 
பயின்றாடும் 
நாதனே !

தில்லையுட் 
கூத்தனே,
தென் பாண்டி 
நாட்டானே !

அல்லற் 
பிறவி 
அறுப்பானே !
ஓ என்று 

சொல்லற்கு 
அரியானைச் 
சொல்லித் 
திருவடிக் கீழ்ச் 

சொல்லிய 
பாட்டின் 
பொருளுணர்ந்து 
சொல்லுவார் 

செல்வர் 
சிவபுரத்தின் 
உள்ளார் 
சிவன்  அடிக்கீழ் 
பல்லோரும் 
ஏத்தப் 
பணிந்து,


திருச்சிற்றம்பலம்.





 





 










 



 



 

















 

Tuesday 25 February 2014

அபிராமி அந்தாதி ( 21 )

அபிராமி அந்தாதி 

பாடல்  21

மங்கலை !
செங்கமலம்  முலையாள் !
வருணச் 
சங்கு அலை  செங்கை 
சகலகலா  மயில் !

தாவு கங்கை
பொங்கு அலை தாங்கும் 
புரிசடையோன் 
புடையாள் !

உடையாள் !
பிங்கலை !
நீலி !
செய்யாள் !
வெளியாள் !

பசும் 
பொற்கொடியே  !!


தொடரும்  ...



Monday 24 February 2014

அபிராமி அந்தாதி ( 20 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  20



உறைகின்ற நின் திருக்கோயில்,
நின்  கேள்வர் ,
ஒரு பக்கமோ !

அறைகின்ற 
நான் மறையின் 
அடியோ, முடியோ !

அமுதம்  நிறைகின்ற 
வெண் திங்களோ ,
கஞ்சமோ !
எந்தன்  நெஞ்சகமோ !

மறைகின்ற  வாரிதியோ !

பூரணாசல  மங்கலையே !!


தொடரும்  ...


Monday 17 February 2014

அபிராமி அந்தாதி ( 19 )

அபிராமி அந்தாதி 

பாடல்  19



வெளிநின்ற  
நின்  திருமேனியைப்  பார்த்து,
என்  விழியும்,
நெஞ்சும்,
களிநின்ற  வெள்ளம் 
கரை  கண்டதில்லை !

கருத்தின் உள்ளே 
தெளிகின்ற  ஞானம்
திகழ்கின்றது 
என்ன  திருவுளமோ ?

ஒளி  நின்ற  கோணங்கள் ,
ஒன்பதும் 
மேவி  உறைபவளே  !!


தொடரும் .....
  

அபிராமி அந்தாதி ( 18 )

அபிராமி  அந்தாதி  

பாடல்  18


வவ்விய  பாகத்து 
இறைவரும்,
நீயும்,
மகிழ்ந்திருக்கும்  செவ்வியும்,

உங்கள்  திருமணக் கோலமும் ,

சிந்தையுள்ளே  அவ்வியம்  தீர்த்து,
என்னை  ஆண்ட 
பொற்பாதமும்  ஆகிவந்து,

வெவ்விய  காலன்,
என்மேல்  வரும்போது 

வெளி நிற்கவே  !!

தொடரும் ....

Saturday 15 February 2014

அபிராமி அந்தாதி ( 17 )

அபிராமி  அந்தாதி 

 பாடல் 17



அதிசயமான  வடிவுடையாள்  !!

அரவிந்தமெல்லாம், 
துதிசயமான  சுந்தரவல்லி  !!

துணை  இரதி 
பதிசயமானது
அபசயமாக, 

முன் 
பார்த்தவர் தம் 
மதிசயம்  ஆகவன்றோ  ?

வாம  பாகத்தை 
வவ்வியதே  !!

தொடரும்.....


Friday 14 February 2014

அபிராமி அந்தாதி ( 16 )

அபிராமி அந்தாதி  

பாடல்  16






கிளியே !!

கிளைஞர்   மனத்தே
கிடந்து 
கிளர்ந்து 
ஒளிரும் 
ஒளியே  ! !

ஒளிரும்  
ஒளிக்கு,  இடமே !!

எண்ணில்,
ஒன்றுமில்லா  வெளியே  !!

வெளி முதல்  பூதங்களாகி 
விரிந்த,
அம்மே !!

அளியேன் 
அறிவு அளவிற்கு, 
அளவானது 
அதிசயமே !!




கிளி போன்ற தாயே! உன் அடியார் மனத்தினில்  சுடர் விட்டுப் பிரகாசிக்கும் 
  
ஒளியே! அவ்வாறு ஒளிரும் ஒளிக்கு நிலையாக இருப்பவளே! ஒன்றுமே

இல்லாத அண்டமாகவும், அவ்வண்டத்தினில் ஐம்பெரும் பூதங்களாகவும்

விரிந்து நின்ற தாயே! எளியேனாகிய என் சிற்றறிவு அறியும் அளவிற்கு நீ

நின்றதும் அதிசயமே !!


தொடரும்.....

அபிராமி அந்தாதி ( 15 )

அபிராமி அந்தாதி 

பாடல்  15



தண்  அளிக்கு  என்று,
     முன்னே 
     பல  கோடி  
      தவங்கள்  செய்வார்,

மண்  அளிக்கும் 
     செல்வமோ 
     பெறுவார்  ?

மதிவானவர்  தம் 
    விண்  அளிக்கும் 
    செல்வம் 

அழியா முக்தியும்,
    வீடும் 
    அன்றோ ?

பண்  அளிக்கும் சொல் 
   பரிமள  யாமளைப் 
பைங்கிளியே  !!


தொடரும்  ...