Friday 14 February 2014

அபிராமி அந்தாதி ( 16 )

அபிராமி அந்தாதி  

பாடல்  16






கிளியே !!

கிளைஞர்   மனத்தே
கிடந்து 
கிளர்ந்து 
ஒளிரும் 
ஒளியே  ! !

ஒளிரும்  
ஒளிக்கு,  இடமே !!

எண்ணில்,
ஒன்றுமில்லா  வெளியே  !!

வெளி முதல்  பூதங்களாகி 
விரிந்த,
அம்மே !!

அளியேன் 
அறிவு அளவிற்கு, 
அளவானது 
அதிசயமே !!




கிளி போன்ற தாயே! உன் அடியார் மனத்தினில்  சுடர் விட்டுப் பிரகாசிக்கும் 
  
ஒளியே! அவ்வாறு ஒளிரும் ஒளிக்கு நிலையாக இருப்பவளே! ஒன்றுமே

இல்லாத அண்டமாகவும், அவ்வண்டத்தினில் ஐம்பெரும் பூதங்களாகவும்

விரிந்து நின்ற தாயே! எளியேனாகிய என் சிற்றறிவு அறியும் அளவிற்கு நீ

நின்றதும் அதிசயமே !!


தொடரும்.....

No comments:

Post a Comment