Wednesday 16 April 2014

அபிராமி அந்தாதி ( 60 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  60


பாலினும்  சொல் இனியாய் !

பனி மாமலர்  
பாதம் வைக்க, 

மாலினும் தேவர் 
வணங்க நின்றோன்
கொன்றைவார் சடையின் மேலினும்,

கீழ் நின்று  வேதங்கள் பாடும் 
மெய்ப்பீடம் ஒரு நாலினும்,

சால நன்றோ,  
அடியேன் 
முடைநாய்த் தலையே ? 



பாலை விட   இனிய  சொற்களை உடைய தேவி !

குளிர்சியுடைய  தாமரை மலர் போன்ற நின் திருவடிகளை
வத்தருள,

திருமாலும், மற்றுமுள்ள  தேவர்களும்  வணங்கும்படி நின்ற
சிவா பிரானின் , கொன்றை மலர் அணிந்த  நீள் சடையின்
மேலிடத்தைக் காட்டிலும் ,

வேதங்களும் பாடிப் போற்றும் , உண்மையான பிரணவ  பீடங்கள்
நான்கினைக் காட்டிலும்,

நாற்றமுடைய நாய்த்தலையைப் போன்ற ,
அடியேனின் தலையும்  மிகவும் நன்றோ ?


தொடரும் .......






1 comment:

  1. "உண்மை சற்றே வெண்மை" விமர்சனம் அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

    வைகோ ஐயாவின் தளம் மூலம் தான் (http://gopu1949.blogspot.in/2014/04/vgk-12-03-03-third-prize-winner.html) உங்கள் தளத்திற்கு வருகை... தொடர்கிறேன்...

    ReplyDelete