| வீரட்டேஸ்வரர்
கோவில், திருக்கோவிலூர் |
| இறைவன் பெயர் : வீரட்டேஸ்வரர் |
| இறைவி பெயர் : சிவானந்தவல்லி |
| இவ்வாலயம்
தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4-30 மணி முதல் |
| இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும். |
| ஆலய தொடர்புக்கு: 93456 60711 |
| இத்தலத்தில்,
இறைவன் சுயம்பு மூர்த்தியாக, பைரவ சொரூபமாக அருள்பாலிக்கின்றார். |
| இது சுக்கிரன் சாப விமோசனம் பெற்ற ஸ்தலம் |
| திரிபுர பைரவி உற்பத்தி ஸ்தலம் . |
| சப்த மாதாக்கள் உற்பத்தியான ஸ்தலம். |
| 64 பைரவர்கள் , 64 பைரவிகள் உற்பத்தியான ஸ்தலம் . |
| தல விருட்சம் : சரக் கொன்றை . |
| சிவபெருமான் வீரச்
செயல்கள் புரிந்த அட்டவீரட்டத் தலங்களில் அந்தாகாசுரனை வதைத்த தலம், 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திரிவிக்ரமப் பெருமாள் வைணவ ஆலயமும், |
| ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம் என்று |
| சொல்லப்படும் முதல் மூன்று ஆழ்வார்களின் வரலாற்று நிகழ்ச்சி இடம் பெற்ற தலம், |
| தஞ்சை பெரிய கோவிலைக் கட்டியவனும், |
| திருமுறை கண்ட
சோழன் என்று போற்றபடுவனும் ஆன ராஜராஜன் பிறந்த தலம் என்று பல |
| பெருமைகளை உடையது திருக்கோவலூர் தலம். |
| தல வரலாறு: |
| பார்வதி,
சிவபெருமானின் இரு கண்களை ( சூரியன், சந்திரன் ) விளையாட்டாக மூடியதால், எங்கும் இருள் சூழ்கிறது. |
| அந்த
இருளே , அந்தகாசுரன் என்னும் அரக்கனாக உருவெடுக்கிறது. அந்தகாசுரனை அழிக்க சிவபெருமான் யுத்தம் புரியும்போது, |
| அசுரனின் தலையில் , கதையால் ஓங்கி அடிக்கிறார். அசுரனின் |
| தலையிலிருந்து
பீரிட்ட இரத்தம் பூமியில் விழுகிறது. ஒவ்வொரு துளி இரத்தத்திலிருந்தும் பல அசுரர்கள் |
| உற்பத்தி ஆக, யுத்தம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. |
| அசுரர்களின்
உற்பத்தியை தடுக்க, உமையவள், காளி சொரூபம் கொண்டு, அந்தகாசூரனின் தலையிலிருந்து விழும் இரத்தத் துளிகளை , |
| கையில் கபாலம் கொண்டு எந்துகிறாள். |
| அசுரனின்
தலையிலிருந்து வெளிப்பட்ட ரத்தங்கள், ரத்தக் கோடுகளாகி , எட்டத் திசையிலும் , குறுக்கும் |
| நெடுக்குமாக 8 , 8
ஆக, 64 ( சதுரங்கள் ) பதங்களாக விழுகிறது. அந்த பதங்களில் , சிவபெருமான் , தன் அருளால் |
| 64 பைரவர்களை
உற்பத்தி செய்து, அந்த பதங்களில் இருத்தி, அசுர உற்பத்தியை தடுத்து, அந்தகாசுரனை வதம் |
| செய்து,
தேவர்களுக்கு அனுக்கிரகம் செய்கிறார். ( இதுவே, இக்காலத்தில் வாஸ்து சாந்தி என்று கிரக பிரவேச |
| காலங்களிலும்,
வீடு கட்டும் காலங்களிலும் செய்யப்படும் வாஸ்து சாந்தி தோஷ நிவர்த்தியாகும் ) |
| இவ்வாறு , அந்தகனை அழித்து , அஞ்ஞானத்தை நீக்கி , மெய்ஞானத்தை அருளியவர் , |
| வீரட்டானேசுவரர் ஆவார். |
| வீரட்டேஸ்வரர்
கோவிலும், அம்பாள் சிவானந்தவல்லி கோவிலும் தனித்தனி கோவில்களாக சுற்று மதிலுடன் |
| மேற்கு நோக்கி
அருகருகே அமைந்துள்ளன. சுவாமி கோவிலுக்கு இடதுபுறம் அம்பாள் கோவில் |
| அமைந்துள்ளது.
இரண்டு கோவில்களுக்கும் 3 நிலை கோபுரங்கள் உள்ளன. கோபுரங்களுக்கு முன்னால் விசாலமான வெளியிடம் உள்ளது |
| சுவாமி கோவில்
கோபுர வழியே உள்ளே நுழைந்ததும் கவசமிட்ட கொடிமரம், முன்னால் நந்தி உள்ளதைக் காணலாம். வெளிப்பிராகாரத்தில் சந்நிதி ஏதுமில்லை. |
| முகப்பு வாயிலில் மேலே பஞ்சமூர்த்திகள் வைக்கப்பட்டுள்ளன. முன்தூணில் |
| இடதுபுறம் மெய்ப்பொருள்நாயனார் சிற்பம் உள்ளது. வலதுபுறம் கணபதியின் |
| சந்நிதி உள்ளது.
ஒளவையாரால் வழிபடப்பட்ட விநாயகர் இவர். சுந்தரர் வெள்ளை யானை மீதேறியும், அவரது தோழரான சேரமான் பெருமாள் நாயனார் |
| குதிரை மீதேறியும் கைலாயம் செல்லும் போது ஒளவையாரையும் உடன் வருமாறு |
| அழைத்தனர். ஒளவையார் தானும் கயிலை செல்ல எண்ணி அவசரமாக |
| பூஜை செய்ய,
விநாயகர் காட்சி தந்து பொறுமையாக பூஜை செய்யும் படியும், கயிலைக்கு தான் அழைத்துச் செல்வதாகவும் அருளினார். இத்தல கணபதியை |
| வழிபட்டுக்கொண்டிருந்த ஒளவையார் வழிபாட்டைத் தொடர்ந்து |
| விநாயகர்
அகவல் பாடி பூஜையை முடித்தார். வழிபாடு முடிந்த பிறகு ஒளவையாரை தனது துதிக்கையால் சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரும் |
| கயிலையை அடைவதற்கு முன்பு சேர்த்து விட்டார். |
| இவ்வாறு ஒளவையைத்
தூக்கிவிட்ட கணபதி இவரே என்பர். விநாயகர் சந்ந்திக்கு முன்புறம சுவரில் புடைப்புச் சிற்பமாக |
| இந்த வரலாறு காணப்படுகிறது. வாயிலின் இடதுபுறம் வள்ளி தெய்வயானை சமேத |
| ஆறுமுகப்பெருமான்
சந்நிதி உள்ளது. பக்கத்தில் கஜலட்சுமி சந்நிதியும், நடராசசபையும் உள்ளன. |
| திருப்புகழ்
தலம்: திருக்கோவிலூர் ஒரு திருப்புகழ் தலமாகும். இத்தல முருகப்பெருமானை அருணகிரிநாதர் |
| தனது திருப்புகழில்
பாடியுள்ளார். ஓரு திருப்புகழ் பாடல் இத்தலத்திற்கு உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறுமுகராக ஆறு திருமுகத்துடனும் |
| 12 திருக்கரங்களுடனும் தேவியர் இருவருடம் மயில் மீது அமர்ந்து |
| அருள்பாலிக்கின்றார். |
| தலமூர்த்தியாகிய
அந்தகாசுர சம்ஹார மூர்த்தி விசேஷமானது. பக்கத்தில் நரசிங்க முனையரையர், மெய்ப்பொருள் நாயனார் ஆகியோரின் உற்சவத் |
| உள்ளன. துவாரபாலகரை வணங்கி உள்ளே சென்றால் மூலவர் திருமேனிகள் |
| வீரட்டேஸ்வரர்
சுயம்பு சிவலிங்கத் திருமேனி, பெரிய உருவத்துடன் தரிசனம் தருகிறார். கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் |
| துர்க்கை ஆகியோரைக் காணலாம். துர்க்கை எட்டுக் கரங்களுடன் |
| காட்சியளிக்கின்ற
நின்ற திருக்கோலம் மிகவும் விசேஷமாகவுள்ளது. விழிகள் மிகவும் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளன |
| அம்பாள் கோயில்
தனியே 3 நிலை கோபுரத்துடன் உள்ளது. முன்மண்டபத்தில் இருபுறமும் துவாரகாலகர்களாக |
| விநாயகரும்
சுப்பிரமணியரும் உள்ளனர். சந்நிதிக்கு முன்னால் நந்தி பலிபீடம் உள்ளன. அம்பாள் |
| அபயவரதத்துடன்
கூடிய நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகிறாள். |
| விநாயகர் அகவல் |
| சீதக் களபச் செந்தா மரைப்பூம் |
| பாதச் சிலம்பு பலவிசை பாடப் |
| பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் |
| வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் |
| பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05) |
| வேழ முகமும் விளங்குசிந் தூரமும் |
| அஞ்சு கரமும் அங்குச பாசமும் |
| நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் |
| நான்ற வாயும் நாலிரு புயமும் |
| மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10) |
| இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் |
| திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் |
| சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான |
| அற்புதம் நிறைந்த கற்பகக் களிறே! |
| முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15) |
| இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித் |
| தாயா யெனக்குத் தானெழுந் தருளி |
| மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத் |
| திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப் |
| பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20) |
| குருவடி வாகிக் குவலயந் தன்னில் |
| திருவடி வைத்துத் திறமிது பொருளென |
| வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக் |
| கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே |
| உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25) |
| தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி |
| ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் |
| இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் |
| கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து) |
| இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30) |
| தலமொரு நான்கும் தந்தெனக் கருளி |
| மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே |
| ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால் |
| ஐம்புலக் கதவை குழாத்துடன் காட்டி |
| ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35) |
| பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே |
| இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக் |
| கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி |
| மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின் |
| நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40) |
| குண்டலி யதனிற் கூடிய அசபை |
| விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து |
| மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக் |
| காலால் எழுப்பும் கருத்தறி வித்தே |
| அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45) |
| குமுத சகாயன் குணத்தையும் கூறி |
| இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும் |
| உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச் |
| சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும் |
| எண் முகமாக இனிதெனக் கருளிப் (50) |
| புரியட்ட காயம் புலப்பட எனக்குத் |
| தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக் |
| கருத்தினில் கபால வாயில் காட்டி |
| இருத்தி முத்தி யினிதெனக் கருளி |
| என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55) |
| முன்னை வினையின் முதலைக் களைந்து |
| வாக்கும் மனமும் இல்லா மனோலயம் |
| தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து) |
| இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன |
| அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60) |
| எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து) |
| அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச் |
| சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச் |
| சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி |
| அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65) |
| கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி |
| வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் |
| கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி |
| அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை |
| நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70) |
| தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட |
| வித்தக விநாயக விரைகழல் சரணே! (72) |
| ( திருச்சிற்றம்பலம் ) |
Saturday, 13 February 2016
அகஸ்திய மகரிஷியை தரிசிக்க
அகஸ்திய மகரிஷியை தரிசிக்க
மந்திரம்
ஓம் சிம் பம் அம் உம் மம்
மகத்தான அகஸ்தியரே
என் குருவே
வா வா
வரம் அருள்க
அருள் தருக
அடியேன் தொழுதேன்
வழிமுறை
அமாவாசை அன்று இரவில் , இரவு 8 மணிக்குள்ளாக ,
ஒரு சுத்தமான அறையில் ,
கிழக்கு அல்லது வடக்கு முகமாக
ஒரு விரிப்பு அல்லது பலகையை அமைக்கவும்.
அதிலிருந்து 8 அடி தூரத்தில் , நம் கண்களுக்கு நேராக வருமாறு
ஒரு நெய்தீபம், தாமரை நூலில் எரியவேண்டும்.
தீபத்தின் முன்பக்கம், ஒரு காசி சொம்பில் சுத்தமான நீரை
நிரப்பி வைக்க வேண்டும்.
காசி சொம்பின் முன்புறத்தி.ல் , பழங்களை
நிவேதனமாக வைக்கவும்
இரவு 8 மணிக்கு , விரிப்பில் அமர்ந்து கொண்டு ,
உதடு பிரியாமல் , மேற்கூறிய மந்திரத்தை ,
அகஸ்தியரின் பெயரை அல்லது
மூல மந்திரத்தை கூறிவிட்டு ,
சுமார் ஒரு மணி நேரம் ஜெபிக்க வேண்டும்.
9 மணி ஆனதும், தீபத்தை வணங்கிவிட்டு ,
காசி சொம்பில் உள்ள தீர்த்தத்தை பருகவும்.
நிவேதனமாக இடப்பட்ட பழங்களை அருந்தவும்.
இரவில் பால் சாதம் உண்ணவும்.
இவ்வாறு தொடர்ந்து 45 நாட்கள்
( அசைவம் தவிர்த்து, உணவில் உப்பு,
புளி , காரம் குறைத்து ) ஜெபித்துவர ,
அகஸ்தியர் காட்சி தந்தருளுவார்.
அவரை குருவாக ஏற்று ,
வாழ்வில் வளம் காணுங்கள் .
விரதமிருக்கும் இந்த நாட்களில் ( தெரியாமல் கூட )
மது , மாமிசம் சேர்க்கக்கூடாது . உடலுறவை
தவிர்க்க வேண்டும். துக்க ஜனன வீடுகளுக்கு
செல்வதையும் தவிர்க்க வேண்டும்.
முற்பிறவியில், கடுமையான பாவங்களைச்
செய்திருந்தால், இந்த கட்டுரையை வாசிக்கும்
சந்தர்ப்பம்கூட அமையாது. ஓரளவு பாபம்
செய்திருந்தால், கனவில் அகஸ்தியர் தோன்றுவார்.
மந்திரம்
ஓம் சிம் பம் அம் உம் மம்
மகத்தான அகஸ்தியரே
என் குருவே
வா வா
வரம் அருள்க
அருள் தருக
அடியேன் தொழுதேன்
வழிமுறை
அமாவாசை அன்று இரவில் , இரவு 8 மணிக்குள்ளாக ,
ஒரு சுத்தமான அறையில் ,
கிழக்கு அல்லது வடக்கு முகமாக
ஒரு விரிப்பு அல்லது பலகையை அமைக்கவும்.
அதிலிருந்து 8 அடி தூரத்தில் , நம் கண்களுக்கு நேராக வருமாறு
ஒரு நெய்தீபம், தாமரை நூலில் எரியவேண்டும்.
தீபத்தின் முன்பக்கம், ஒரு காசி சொம்பில் சுத்தமான நீரை
நிரப்பி வைக்க வேண்டும்.
காசி சொம்பின் முன்புறத்தி.ல் , பழங்களை
நிவேதனமாக வைக்கவும்
இரவு 8 மணிக்கு , விரிப்பில் அமர்ந்து கொண்டு ,
உதடு பிரியாமல் , மேற்கூறிய மந்திரத்தை ,
அகஸ்தியரின் பெயரை அல்லது
மூல மந்திரத்தை கூறிவிட்டு ,
சுமார் ஒரு மணி நேரம் ஜெபிக்க வேண்டும்.
9 மணி ஆனதும், தீபத்தை வணங்கிவிட்டு ,
காசி சொம்பில் உள்ள தீர்த்தத்தை பருகவும்.
நிவேதனமாக இடப்பட்ட பழங்களை அருந்தவும்.
இரவில் பால் சாதம் உண்ணவும்.
இவ்வாறு தொடர்ந்து 45 நாட்கள்
( அசைவம் தவிர்த்து, உணவில் உப்பு,
புளி , காரம் குறைத்து ) ஜெபித்துவர ,
அகஸ்தியர் காட்சி தந்தருளுவார்.
அவரை குருவாக ஏற்று ,
வாழ்வில் வளம் காணுங்கள் .
மது , மாமிசம் சேர்க்கக்கூடாது . உடலுறவை
தவிர்க்க வேண்டும். துக்க ஜனன வீடுகளுக்கு
செல்வதையும் தவிர்க்க வேண்டும்.
முற்பிறவியில், கடுமையான பாவங்களைச்
செய்திருந்தால், இந்த கட்டுரையை வாசிக்கும்
சந்தர்ப்பம்கூட அமையாது. ஓரளவு பாபம்
செய்திருந்தால், கனவில் அகஸ்தியர் தோன்றுவார்.
சித்தர்களை தரிசிக்க
பெரிய ஞானக்கோவை என்ற புத்தகத்தில் இருந்து
கிடைத்த தகவல்.
நாம் தரிசிக்க விரும்பும் சித்தர்களைக் காண
ஓம் சிங் ரங் அங் சிங்
என்ற மந்திரத்தை ஜெபிக்க வேண்டும் .
வழிமுறை
அமாவாசை அன்று இரவில் , இரவு 8 மணிக்குள்ளாக ,
ஒரு சுத்தமான அறையில் ,
கிழக்கு அல்லது வடக்கு முகமாக
ஒரு விரிப்பு அல்லது பலகையை அமைக்கவும்.
அதிலிருந்து 8 அடி தூரத்தில் , நம் கண்களுக்கு நேராக வருமாறு
ஒரு நெய்தீபம், தாமரை நூலில் எரியவேண்டும்.
தீபத்தின் முன்பக்கம், ஒரு காசி சொம்பில் சுத்தமான நீரை
நிரப்பி வைக்க வேண்டும்.
காசி சொம்பின் முன்புறத்தி.ல் , பழங்களை
நிவேதனமாக வைக்கவும்
இரவு 8 மணிக்கு , விரிப்பில் அமர்ந்து கொண்டு ,
உதடு பிரியாமல் , மேற்கூறிய மந்திரத்தை ,
நாம் காண / தரிசிக்க விரும்பும் சித்தரின்
பெயரை அல்லது மூல மந்திரத்தை கூறிவிட்டு ,
சுமார் ஒரு மணி நேரம் ஜெபிக்க வேண்டும்.
9 மணி ஆனதும், தீபத்தை வணங்கிவிட்டு ,
காசி சொம்பில் உள்ள தீர்த்தத்தை பருகவும்.
நிவேதனமாக இடப்பட்ட பழங்களை அருந்தவும்.
இரவில் பால் சாதம் உண்ணவும்.
இவ்வாறு தொடர்ந்து 90 நாட்கள்
( அசைவம் தவிர்த்து, உணவில் உப்பு,
புளி , காரம் குறைத்து ) ஜெபித்துவர ,
விரும்பிய சித்தர் காட்சி தந்தருளுவார்.
அவரை குருவாக ஏற்று ,
வாழ்வில் வளம் காணுங்கள் .
பெரிய ஞானக்கோவை என்ற புத்தகத்தில் இருந்து
கிடைத்த தகவல்.
நாம் தரிசிக்க விரும்பும் சித்தர்களைக் காண
ஓம் சிங் ரங் அங் சிங்
என்ற மந்திரத்தை ஜெபிக்க வேண்டும் .
வழிமுறை
அமாவாசை அன்று இரவில் , இரவு 8 மணிக்குள்ளாக ,
ஒரு சுத்தமான அறையில் ,
கிழக்கு அல்லது வடக்கு முகமாக
ஒரு விரிப்பு அல்லது பலகையை அமைக்கவும்.
அதிலிருந்து 8 அடி தூரத்தில் , நம் கண்களுக்கு நேராக வருமாறு
ஒரு நெய்தீபம், தாமரை நூலில் எரியவேண்டும்.
தீபத்தின் முன்பக்கம், ஒரு காசி சொம்பில் சுத்தமான நீரை
நிரப்பி வைக்க வேண்டும்.
காசி சொம்பின் முன்புறத்தி.ல் , பழங்களை
நிவேதனமாக வைக்கவும்
இரவு 8 மணிக்கு , விரிப்பில் அமர்ந்து கொண்டு ,
உதடு பிரியாமல் , மேற்கூறிய மந்திரத்தை ,
நாம் காண / தரிசிக்க விரும்பும் சித்தரின்
பெயரை அல்லது மூல மந்திரத்தை கூறிவிட்டு ,
சுமார் ஒரு மணி நேரம் ஜெபிக்க வேண்டும்.
9 மணி ஆனதும், தீபத்தை வணங்கிவிட்டு ,
காசி சொம்பில் உள்ள தீர்த்தத்தை பருகவும்.
நிவேதனமாக இடப்பட்ட பழங்களை அருந்தவும்.
இரவில் பால் சாதம் உண்ணவும்.
இவ்வாறு தொடர்ந்து 90 நாட்கள்
( அசைவம் தவிர்த்து, உணவில் உப்பு,
புளி , காரம் குறைத்து ) ஜெபித்துவர ,
விரும்பிய சித்தர் காட்சி தந்தருளுவார்.
அவரை குருவாக ஏற்று ,
வாழ்வில் வளம் காணுங்கள் .
ரத சப்தமி
நாளை ரத சப்தமி.
காலையில் ஸ்நானம் செய்யும்போது ,
தலையில் ஒரு வெள்ளெருக்கு இலையை வைத்து
கீழ் கண்ட ஸ்லோகத்தை சொல்லியவாறு
ஸ்நானம் செய்யவேண்டும்.
சப்த சப்த மஹா சப்த
சப்த த்வீப வசுந்தரா
சப்த அர்க மஹாதேவா
சப்தமி ரத சப்தமி
அதேபோல் ,
வலது தோள்பட்டை,
இடது தோள்பட்டை.
வலது தொடை,
இடது தொடை ,
உந்தி மற்றும் முதுகு
ஆகிய இடங்களிலும் வெள்ளெருக்கு இலையை
வைத்து ஸ்நானம் செய்ய வேண்டும்.
( யாரோ சொல்லியது )
Thursday, 4 February 2016
வீரட்டன திருத்தலங்கள்
கடந்த இரண்டு வருடங்களாக, தை அமாவாசையன்று , திருக்கடையூர் சென்று அன்னை அபிராமியை தரிசித்து வந்த நானும், என் நண்பரும், இந்த வருடமும் திருக்கடையூர் செல்ல ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தபோது, தற்செயலாக " இந்த பயணத்தை , அனைத்து வீரட்டான திருத்தலங்களையும் தரிசிக்கும் பயணமாக மாற்றக்கூடாது ? " என்ற எண்ணம் தோன்றியது.
தேவயான விவரங்களை சேகரிக்க ஆரம்பித்தேன் .
கடந்த இரண்டு வருடங்களாக, தை அமாவாசையன்று , திருக்கடையூர் சென்று அன்னை அபிராமியை தரிசித்து வந்த நானும், என் நண்பரும், இந்த வருடமும் திருக்கடையூர் செல்ல ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தபோது, தற்செயலாக " இந்த பயணத்தை , அனைத்து வீரட்டான திருத்தலங்களையும் தரிசிக்கும் பயணமாக மாற்றக்கூடாது ? " என்ற எண்ணம் தோன்றியது.
தேவயான விவரங்களை சேகரிக்க ஆரம்பித்தேன் .
| காவிரியின் கரைக் கண்டி வீரட்டானம் |
| கடவூர் வீரட்டானம் காமரு சீர் அதிகை |
| மேவிய வீரட்டானம் வழுவை வீரட்டம் |
| வியன்பறியல் வீரட்டம் விடையூர்திக்கு இடமாம் |
| கோவல்நகர் வீரட்டம் குறுக்கை வீரட்டம் |
| கோத்திட்டைக் குடிவீரட்டானம் இவை கூறி |
| நாவில் நவின்று உரைப்பார்க்கு நணுகச் சென்றால் |
| நமன்தமரும் சிவன்தமர் என்று அகல்வர் நன்கே. ( தேவாரம் ) |
| உரை : |
| காவிரியின் கரையிலுள்ள கண்டியூர் வீரட்டானம், |
| கடவூர் வீரட்டானம், |
| விரும்பத்தக்க புகழினை உடைய அதிகை வீரட்டானம், |
| வழுவூர் வீரட்டானம், |
| பரப்பு மிக்க பறியலூர் வீரட்டானம், |
| இடபத்தை ஊர்தியாக உடைய
சிவபெருமானுக்குரிய இடமாகிய கோவலூர் வீரட்டானம், |
| குறுக்கை வீரட்டானம், |
| தலைமையும் மேன்மையுமுடைய விற்குடி வீரட்டானம் |
| என்னும் வீரட்டானங்கள் எட்டினையும் |
| முறைப்பட முன்னர் ஒருமுறை மொழிந்து பின்னர் அம்முறையே நாவில் |
| பழகிப் பலகாலும் போற்றுவார்க்கு அருகில் இயமதூதர்கள் ஒருகால் செல்ல |
| நேரிடின் இவர் சிவபெருமானுக்கு அடியர் என்று உடனே உணர்ந்து |
| அவரைவிட்டு வெகு தொலைவு அகல
நீங்குவர் . எட்டு வீரட்டான திருத்தலங்களையும் கருத்தில் கொண்டு, மற்றும் சில திருத்தலங்களையும் சேர்த்து , ஒரு பயண திட்டத்தை உருவாக்கியுள்ளோம். Feb - 8 . திருகோவிலூர் , திருவெண்ணைநல்லூர். திருவதிகை கீழப்பெரும்பள்ளம் திருவெண்காடு திருக்கடையூர் Feb - 9 திருக்கடையூர் திருமெய்ஞானம் , திருப்பறியலூர் திருக்குறுக்கை திரு வழுவூர் திருவிற்குடி திரு நாகேச்வரம் திருவிடைமருதூர் திருவையாறு பிப் 10 திரு கண்டியூர் திரு கண்டியூர் ஸ்ரீ ஹர சாப விமோசன பெருமாள் ஆலயம் திருமுது குன்றம் ( விருதாசலம் ) முகாசா பரூர் ( சித்தர் கோரக்கர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் ) " அவன் அருளாலே அவன்தாள் வணங்கி " பின்னர் நான் சேகரித்த தகவல்களை பகிர்ந்துகொள்கிறேன் . |
Thursday, 15 October 2015
அபிராமி அந்தாதி.
மாணிக்கவாசகப் பெருமான்,
தன்னுடைய சிவபுராணத்தை
முடிக்கும்போது
" சொல்லிய பாட்டின்
பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின்
உள்ளார் சிவனடிக்கீழ்
பல்லோரும் ஏத்தப் பணிந்து "
என்று பாடுகிறார்.
அபிராமி அந்தாதியில் உள்ள
பாடல்களை அதன் பொருள் உணர்ந்து
பாராயணம் செய்தால்,
சகல நன்மைகளும் கிடைக்கும்
என்பது உறுதி .
மாணிக்க வாசகர்,
அதே சிவபுராணத்தில்,
" அவன் அருளாலே
அவன் தாள் வணங்கி..."
என்று பாடுகிறார்.
அபிராமி அந்தாதியில்
உள்ள பாடல்களைப்
பாராயணம் செய்யவும்
அவள் அருள் வேண்டும்.
அபிராமியின் அருள் பெற்று,
பாடல்களின் பொருள் உணர்ந்து
பாராயணம் செய்திடுவீர்!
உமை மைந்தனே !
உலகேழும் பெற்ற
பாடல் 1
உதிக்கின்ற செங்கதிர்
உச்சித் திலகம் !
உணர்வுடையோர் மதிக்கின்ற
மாணிக்கம்.!
மாதுளம் போது !
மலர் கமலை துதிக்கின்ற
மின்கொடி !
மென்கடிக்
குங்குமத் தோயமென்ன
விதிர்கின்ற மேனி,
அபிராமி,
எந்தன் விழுத் துணையே !
பாடல் 2
துணையும்,
தொழும் தெய்வமும்,
பெற்ற தாயும்,
சுருதிகளின் பணையும்,
கொழுந்தும்,
பதிகொண்ட வேரும்,
பனிமலர் பூங்கணையும் ,
கருப்புச் சிலையும்,
மென் பாசாங்குசமும்,
கையில் அணையும்
திரிபுர சுந்தரி,
ஆவது
அறிந்தனமே !
பாடல் 3
அறிந்தேன்
எவரும் அறியா மறையை !
அறிந்து கொண்டு செறிந்தேன்,
உனது திருவடிக்கே, திருவே !
வெருவிப் பிறிந்தேன்,
நின் அன்பர் பெருமை
எண்ணாத கரும நெஞ்சால்,
மறிந்தே விழும்
நரகுக்கு உறவாய
மனிதரையே ! !
பாடல் 4
மனிதரும்,
தேவரும்,
மாயா முனிவரும் வந்து
சென்னி குனிதரும்
சேவடிக் கோமளமே !!
கொன்றை வார்சடை மேல்
பனி தரும் திங்களும்,
பாம்பும்,
பகீரதியும் படைத்த
புனிதரும், நீயும்
என்புந்தி எந்நாளும்
பொருந்துகவே !!
பாடல் 5
பொருந்திய முப்புரை,
செப்புரை செய்யும்
புணர் முலையாள் !
வருந்திய வஞ்சி
மருங்குல் மனோன்மணி,
வார் சடையோன்
அருந்திய நஞ்சு
அமுதாக்கிய அம்பிகை !
அம்புய மேல்
திருந்திய சுந்தரி !
அந்தரி பாதம்
என்
சென்னியதே !
பாடல் 6
சென்னியது
உன்பொன் திருவடித் தாமரை !
சிந்தையுள்ளே மன்னியது,
உன்
திரு மந்திரம் !
சிந்தூர வண்ணப் பெண்ணே !
நின் அடியாருடன் கூடி
முறை முறையே பன்னியது
என்றும் ,
உந்தன்
பரம ஆகம
பத்ததியே !!
பாடல் 7
ததியுறு மத்தில் சுழலும்
என் ஆவி
தளர்விலதோர்,
கதிஉறு வண்ணம்
கருது கண்டாய் !
கமலாலயனும்,
மதிஉறு வேணி மகிழ்நனும் ,
மாலும்
வணங்கி என்றும்
துதிஉறு சேவடியாய் !!
சிந்தூரானன
சுந்தரியே !!
பாடல் 8
சுந்தரி !!
எந்தைத் துணைவி !
என்
பாசத் தொடரை எல்லாம்
வந்து அரி !
சிந்தூர வண்ணத்தினாள் !
மகிடன் தலைமேல்
அந்தரி !
நீலி !!
அழியாத கன்னிகை !!
ஆரணத்தோன் சுந்தரி !
கைத்தலத்தாள்!
மலர்த்தாள்
என் கருத்தனவே !
பாடல் 9
கருத்தன,
எந்தைதன் கண்ணென,
வண்ணக் கனக வெற்பிற்
பெருத்தன,
பால்
அழும் பிள்ளைக்கு
நல்கின!
பேரருள் கூர் திருத்தன பாரமும்,
ஆரமும்,
செங்கைச் சிலையும்,
முருத்தன மூரலும்,
நீயும் அம்மே !!
வந்து என்முன்
நிற்கவே !!
பாடல் 10
நின்றும்,
இருந்தும்,
கிடந்தும்,
நடந்தும்
நினைப்பது உன்னை !!
என்றும் வணங்குவது
உன் மலர்த்தாள் !!
எழுதா மறையின்
ஒன்றும் அரும்பொருளே !
அருளே !
உமையே !!
இமயத்து அன்றும்
பிறந்தவளே !!
அழியா முக்தி
ஆனந்தமே !!
*******
பாடல் 11
ஆனந்தமாய்,
என் அறிவாய்,
நிறைந்த அமுதமாய்,
வான் அந்தமான
வடிவுடையாள் !
மறை நான்கினுக்கும்,
தான் அந்தமான
சரணார விந்தம் ,
தவள நிறக் கானம்,
தம் ஆடரங்காம்,
எம்பிரான் முடிக்
கண்ணியதே !!
பாடல் 12
கண்ணியது,
உன் புகழ்.!
கற்பது
உன் நாமம் !
கசிந்து பத்தி
பண்ணியது,
உன் இரு பாதம்
புயத்தில் !
பகல் இரவா
நண்ணியது,
உன்னை நயந்தோர்
அவையத்து !
நான்
முன் செய்த
புண்ணியம் ஏது?
என் அம்மே !!
புவி ஏழையும்,
பூத்தவளே !!
பாடல் 13
பூத்தவளே !
புவனம் பதினான்கையும்,
பூத்த வண்ணம்
காத்தவளே !
பின் கரந்தவளே !
கறைக் கண்டனுக்கு
மூத்தவளே !
என்றும்
மூவா முகுந்தற்கு
இளையவளே !
மாத்தவளே !
உன்னை அன்றி
மற்றோர் தெய்வம்....
வந்திப்பதே !!
பாடல் 14
வந்திப்பவர்
உன்னை,
வானவர், தானவர்
ஆனவர்கள்!
சிந்திப்பவர்,
நல் திசைமுகர்
நாரணர் !
சிந்தையுள்ளே பந்திப்பவர்,
அழியாப்
பரமானந்தர் !
பாரில்
உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம்,
எம்பிராட்டி!
நின்
தண் அளியே !!
பாடல் 15
தண் அளிக்கு என்று,
முன்னே
பல கோடி
தவங்கள் செய்வார்,
மண் அளிக்கும்
செல்வமோ
பெறுவார் ?
மதிவானவர் தம்
விண் அளிக்கும்
செல்வம்
அழியா முக்தியும்,
வீடும்
அன்றோ ?
பண் அளிக்கும் சொல்
பரிமள யாமளைப்
பைங்கிளியே !!
பாடல் 16
கிளியே !!
கிளைஞர் மனத்தே
கிடந்து
கிளர்ந்து
ஒளிரும்
ஒளியே ! !
ஒளிரும்
ஒளிக்கு, இடமே !!
எண்ணில்,
ஒன்றுமில்லா வெளியே !!
வெளி முதல் பூதங்களாகி
விரிந்த,
அம்மே !!
அளியேன்
அறிவு அளவிற்கு,
அளவானது
அதிசயமே !!
பாடல் 17
அதிசயமான வடிவுடையாள் !!
அரவிந்தமெல்லாம்,
துதிசயமான சுந்தரவல்லி !!
துணை இரதி
பதிசயமானது
அபசயமாக,
முன்
பார்த்தவர் தம்
மதிசயம் ஆக அன்றோ ?
வாம பாகத்தை
வவ்வியதே !!
பாடல் 18
வவ்விய பாகத்து
இறைவரும்,
நீயும்,
மகிழ்ந்திருக்கும் செவ்வியும்,
உங்கள் திருமணக் கோலமும் ,
சிந்தையுள்ளே அவ்வியம் தீர்த்து,
என்னை ஆண்ட
பொற்பாதமும் ஆகிவந்து,
வெவ்விய காலன்,
என்மேல் வரும்போது
வெளி நிற்கவே !!
பாடல் 19
வெளிநின்ற
நின் திருமேனியைப் பார்த்து,
என் விழியும்,
நெஞ்சும்,
களிநின்ற வெள்ளம்
கரை கண்டதில்லை !
கருத்தின் உள்ளே
தெளிகின்ற ஞானம்
திகழ்கின்றது
என்ன திருவுளமோ ?
ஒளி நின்ற கோணங்கள் ,
ஒன்பதும்
மேவி உறைபவளே !!
பாடல் 20
உறைகின்ற நின் திருக்கோயில்,
நின் கேள்வர் ,
ஒரு பக்கமோ !
அறைகின்ற
நான் மறையின்
அடியோ, முடியோ !
அமுதம் நிறைகின்ற
வெண் திங்களோ ,
கஞ்சமோ !
எந்தன் நெஞ்சகமோ !
மறைகின்ற வாரிதியோ !
பூரணாசல மங்கலையே !!
பாடல் 21
மங்கலை !
செங்கமலம் முலையாள் !
வருணச்
சங்கு அலை செங்கை
சகலகலா மயில் !
தாவு கங்கை
பொங்கு அலை தாங்கும்
புரிசடையோன் புடையாள் !
உடையாள் !
பிங்கலை !
நீலி !
செய்யாள் !
வெளியாள் !
பசும் பொற்கொடியே !!
பாடல் 22
கொடியே!
இளவஞ்சிக் கொம்பே !
எனக்கு வம்பே
பழுத்த படியே,
மறையின் பரிமளமே !
பனிமால்
இமயப் பிடியே !
பிரமன் முதலாய்த் தேவரைப்
பெற்ற அம்மே !
அடியேன் இறந்து,
இங்கு இனி பிறவாமல்
வந்து ஆண்டு கொள்ளே !!
பாடல் 23
கொள்ளேன்
மனதில் நின்
கோலமல்லாது,
அன்பர்
கூட்டம் தன்னை
விள்ளேன் !
பர சமயம் விரும்பேன் !
வியன்
மூவுலகுக்கு உள்ளே,
அனைத்தினுக்கும்
புறம்பே !
உள்ளத்தே
விளைந்த கள்ளே !
களிக்கும் களியே !
அளிய என் கண்மணியே !!
பாடல் 24
மணியே !
மணியின் ஒளியே !
ஒளிரும்
மணி புனைந்த
அணியே !
அணியும் அணிக்கு
அழகே !
அணுகாதவர்க்குப் பிணியே !
பிணிக்கு மருந்தே !
அமரர் பெருவிருந்தே !
பணியேன் ஒருவரை,
நின் பத்ம பாதம் ,
பணிந்த பின்னே !!
பாடல் 25
பின்னே திரிந்து,
உன் அடியாரைப் பேணி,
பிறப்பறுக்க,
முன்னே
தவங்கள் முயன்று கொண்டேன் ;
முதல் மூவருக்கும்
அன்னே !!
உலகுக்கு,
அபிராமி என்னும்
அருமருந்தே !
என்னே!
இனி
உன்னை யான் மறவாமல்
நின்று
ஏத்துவனே !!
பாடல் 26
ஏத்தும் அடியவர்
ஈரேழ் உலகினையும்
படைத்தும் ,
காத்தும் ,
அழித்தும்
திரிபவராம் ;
கமழ் பூக்கடம்பு சாத்தும்
குழல் அணங்கே !
மணம் நாறும்
நின் தாள் இணைக்கு ,
என் நாத்தங்கு
புன்மொழி ஏறியவாறு
நகை உடைத்தே !!
பாடல் 27
உடைத்தனை,
வஞ்சப் பிறவியை !
உள்ளம் உருகும்
அன்பு படைத்தனை !
பத்மபத யுகம்
சூடும் பணி
எனக்கே அடைத்தனை !
நெஞ்சத்து அழுக்கையெல்லாம்,
நின்
அருட் புனலால் துடைத்தனை !
சுந்தரி !!
நின்
அருள் ஏதென்று
சொல்லுவதே !!
பாடல் 28
சொல்லும்,
பொருளும் என
நடமாடும்
துணைவருடன் ,
புல்லும்
பரிமளப் பூங்கொடியே !!
நின்
புது மலர்த் தாள் ,
அல்லும் பகலும்
தொழும் அவர்க்கே,
அழியா அரசும்,
செல்லும் தவ நெறியும்,
சிவலோகமும்
சித்திக்குமே !!
பாடல் 29
சித்தியும்,
சித்திதரும் தெய்வமாகித்
திகழும்
பரா சக்தியும்,
சக்தி தழைக்கும்
சிவமும்,
தவ முயல்வார்
முக்தியும்,
முக்திக்கு வித்தும்,
வித்தாகி
முளைத்தெழுந்த
புத்தியும்,
புத்தியின் உள்ளே
புரக்கும்
புரத்தை அன்றே !!
பாடல் 41
புண்ணியம் செய்தனை மனமே,
புதுப் பூங்குவளைக் கண்ணியும்
செய்யக் கணவரும் கூடி
நம் காரணத்தால் நண்ணி
இங்கே வந்து
தம் அடியார்கள் நடுவிருக்கம் பண்ணி
நம் சென்னியின் மேல்
பத்ம பாதம் பதித்திடவே !
பாடல் 42
இடம் கொண்டு விம்மி
இணை கொண்டு இறுகி, இளகி
முத்து வடம் கொண்ட
கொங்கை மலை கொண்டு
இறைவர் வலிய நெஞ்சை
நடம் கொண்ட
கொள்கை நலம் கொண்ட நாயகி,
விட அரவின்
படம் கொண்ட அல்குல்
பனி மொழி
வேதப் பரிபுரையே !
பாடல் 43
பரிபுரச் சீறடி !
பாசாங்குசை !
பஞ்ச பாணி !
இன்சொல் திரிபுர சுந்தரி !
சிந்துர மேனியள் !
தீமை நெஞ்சில்
பரிபுர வஞ்சரை அஞ்சக் குனி
பொரும்புச் சிலைக்கை
எரிபுரை மேனி !
இறைவர் செம் பாகத்து
இருந்தவளே !
பாடல் 44
தவளே !
இவள் ,
எங்கள் சங்கரனார்
மனை மங்கலமாம் !
அவளே ,
அவர் தமக்கு
அன்னையும் ஆயினள் !
ஆகையினால்,
இவளே,
கடவுளர் யாவர்க்கும்
மேலை இறைவியும் ஆம் !
துவளேன் இனி,
ஒரு தெய்வம் உண்டாக
மெய்த் தொண்டு செய்தே !
பாடல் 45
தொண்டு செய்யாது,
நின் பாதம் தொழாது,
துணிந்து
இச்சையே பண்டு செய்தார்
உளரோ, இலரோ ?
அப்பரிசு,
அடியேன் கண்டு செய்தால்,
அது கை தவமோ ,
அன்றிச் செய்தவமோ ?
மிண்டு செய்தாலும்
பொறுக்கை நன்றே,
பின் வெறுக்கை யன்றே !
ஐயன் அளந்தபடி
இரு நாழி கொண்டு,
அண்டமெல்லாம் உய்ய
அறம் செய்யும் உன்னையும் போற்றி,
ஒருவர் தம்பால்
செய்யப் பசுந்தமிழ் பாமாலையும்
கொண்டு சென்று ,
பொய்யும் மெய்யும்
இயம்ப வைத்தாய் ,
இதுவோ உன்தன்
மெய் அருளே !!
பாடல் 58
அருணாம் புயத்தும் ,
என்
சித்தாம் புயத்தும் ,
அமர்ந்திருக்கும் ,
தருணாம் புய
முலைத் தையல் நல்லாள்
தகை சேர் நயனக்
கருணாம் புயமும்,
சரணாம் புயமும் அல்லால் ,
கண்டிலேன்
ஒரு தஞ்சமுமே ! !
பாடல் 59
தஞ்சம் பிறிதில்லை
ஈதல்லது என்று
உன் தவ நெறிக்கே நெஞ்சம் பயில
நினைக்கின்றிலேன்,
ஒற்றை நீள் சிலையும் ,
அஞ்சு அம்பும் இக்கு
அலராக நின்றாய் !
அறியார் எனினும்
பஞ்சு அஞ்சு மெல்லடியார்,
அடியார்
பெற்ற பாலரையே !
பாடல் 60
பாலினும் சொல் இனியாய் !
பனி மாமலர்
பாதம் வைக்க,
மாலினும் தேவர்
வணங்க நின்றோன்
கொன்றைவார் சடையின் மேலினும்,
கீழ் நின்று வேதங்கள் பாடும்
மெய்ப்பீடம் ஒரு நாலினும்,
சால நன்றோ,
அடியேன்
முடைநாய்த் தலையே ?
பாடல் 61
நாயேனையும்,
இங்கு ஒரு பொருளாக
நயந்து வந்து,
நீயே,
நினைவின்றி ஆண்டு கொண்டாய் !
நின்னை,
உள்ள வண்ணம்
பேயேன் அறியும்
அறிவு தந்தாய் !
என்ன பேறு பெற்றேன் !
தாயே !
மலைமகளே !
செங்கண் மால்
திருத் தங்கச்சியே !!
பாடல் 62
தங்கச் சிலை கொண்டு
தானவர் முப்புரம் சாய்த்து ,
மத வெங்கண்
கரியுரி போர்த்த செஞ்சேவகன்
மெய் அடைய
கொங்கைக் குரும்பைக்
குறியிட்ட நாயகி !
கோ கனகச்
செங்கைக் கரும்பும்,
மலரும் ,
எப்போதும் என் சிந்தையதே !
பாடல் 63
தேறும்படி சில ஏதுவும் காட்டி
முன்செல் கதிக்கு கூறும் பொருள்
குன்றில் கொட்டும் தறி குறிக்கும் !
சமயம் ஆறும்
தலைவி இவளாய் இருப்பது
அறிந்திருந்தும்,
வேறு சமயம் உண்டென்று
கொண்டாடிய, வீணருக்கே !
பாடல் 64
வீணே ,
பலிகவர் தெய்வங்கள் பால் சென்று ,
மிக்க அன்பு பூணேன் !
உனக்கு அன்பு பூண்டு கொண்டேன் !
நின் புகழ்ச்சி அன்றிப் பேணேன் !
ஒருபொழுதும் திருமேனிப் பிரகாசம்
அன்றிக் காணேன்,
இருநிலமும்,
திசை நான்கும் ,
ககனமுமே !
பாடல் 66
வல்லபம் ஒன்றறியேன் சிறியேன் ,
நின் மலரடிச் செம் பல்லவம் அல்லது
பற்றொன்று இலேன் ,
பசும் பொற் பொருப்பு
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய் !
வினையேன் தொகுத்த
சொல் அவமாயினும்,
நின் திரு நாமங்கள்,
தோத்திரமே !
பாடல் 67
தோத்திரம் செய்து ,
தொழுது,
மின்போலும் நின் தோற்றம்
ஒருமாத்திரைப் போதும்
மனத்தில் வையாதவர் ,
வண்மை,
குலம் ,
கோத்திரம் ,
கல்வி,
குணம் குன்றி ,
நாளும் குடிகள் தோறும்
பாத்திரம் கொண்டு
பலிக்கு உழலா நிற்பர்,
பாரெங்குமே !
பாடல் 68
பாரும்,
புனலும்,
கனலும்,
வெங்காலும் ,
படர் விசும்பும்.
ஊரும்,
முருகு,
சுவை,
ஒளி,
ஊறொலி
ஒன்றுபடச் சேரும் ,
தலைவி சிவகாம சுந்தரி
சீரடிக்கே
சாரும் தவமுடையார் ,
படையாத
தனமில்லையே !
பாடல் 70
கண் களிக்கும்படி
கண்டு கொண்டேன் !
கடம்பாடவியில் ,
பண்களிக்கும் குரல் வீணையும்,
கையும் ,
பயோரமும் ,
மண் களிக்கும்
பச்சை வண்ணமுமாகி ,
மதங்கர் குலப்
பெண்களில் தோன்றிய
எம்பெருமாட்டி தன்
பேரழகே !
பாடல் 71
அழகுக்கு ,
ஒருவரும் ஒவ்வாத வல்லி !
அருமறைகள் ,
பழகிச் சிவந்த பாதாம்புயத்தாள் !
பனி மாமதியின்
குழவித் திருமுடிக்
கோமள, யாமளைக் கொம்பிருக்க,
இழவுற்று நின்ற நெஞ்சே !
இரங்கேல் !
உனக்கென் குறையே .... ?
பாடல் 72
என் குறை தீர,
நின்று ஏத்துகின்றேன் !
இனி யான் பிறக்கின் ,
நின் குறையே அன்றி ,
யார் குறை காண் ?
இருநீள் விசும்பின்
மின் குறை காட்டி ,
மெலிகின்ற
நேரிடை மெல்லியலாய் !
தன் குறை தீர,
என்கோன்
சடைமேல் வைத்த
தாமரையே !
பாடல் 73
தாமம் - கடம்பு ,
படை - பஞ்ச பாணம் , தனுக் கரும்பு ,
யாமம் - வயிரவர் ஏத்தும் பொழுது ,
எமெக்கென்று வைத்த சேமம் -
செங்கைகள் நான்கு ,
ஒளி - செம்மை ,
அம்மை நாமம் - திரிபுரை ,
ஒன்றோடு இரண்டு நயனங்களே !
பாடல் 75
தங்குவர் ,
கற்பகத் தருவின் நிழலில் ;
தாயார் இன்றி
மங்குவர் ;
மண்ணில் வழுவாப் பிறவியை ,
மால் வரையும்
பொங்குவர் ;
ஆழியும்,
ஈரேழ் புவனமும் பூத்த உந்தி
கொங்கிவர்
பூங்குழலாள் திருமேனி
குறித்தவரே !
பாடல் 78
செப்பும் கனகக் கலசமும் போலும்
திருமுலை மேல்
அப்பும் களப
அபிராமவல்லி அணி தரளக்
கொப்பும் , வயிரக் குழையும்
விழியின் கொழுங்கடையும்
துப்பும் நிலவும்
எழுதி வைத்தேன் ,
என் விழித் துணைக்கே !
பாடல் 79
விழிக்கே அருள் உண்டு
அபிராமவல்லிக்கு ;
வேதம் சொன்ன வழிக்கே ...
வழிபட நெஞ்சுண்டு ;
எமக்கு அவ்வழி கிடக்க,
பழிக்கே சுழன்று ,
வெம் பாவங்களே செய்து ,
பாழ் நரகக் குழிக்கே அழுந்தும்
கயவர் தம்மோடு
என்ன கூட்டு ... இனியே ?
பாடல் 80
கூட்டியவா,
என்னைத் தன் அடியாரில் ;
கொடிய வினை ஒட்டியவா ,
தன்னை உள்ள வண்ணம்
காட்டியவா ;
கண்ட கண்ணும் . மனமும்
களிக்கின்றவா ;
ஆட்டியவா ,
நடம் ஆடகத் தாமரை ஆரணங்கே !
பாடல் 81
அணங்கே !
அணங்குகள் நின் பரிவாரங்கள்
ஆகையினால் ,
வணங்கேன் ,
ஒருவரை வாழ்த்துகிலேன் ;
நெஞ்சில் வஞ்சகரோடு
இணங்கேன் ;
எனது , உனது என்றிருப்பார்
சிலர் யாவரொடும் பிணங்கேன் ;
அறிவொன்றிலேன் ,
என்கண் நீ வைத்த பேரளியே !
பாடல் 82
அளியார் கமலத்தில்
ஆரணங்கே!
அகில அண்டமும் நின் ஒளியாகி
நின்ற ஒளிர் திருமேனியை
உள்ளுந்தோறும் ,
களியாகி ,
அந்த கரணங்கள் விம்மிக்
கரை புரண்டு
வெளியாய்விடின் ,
எங்கனே மறப்பேன் ,
நின் விரகினையே ?
பாடல் 83
விரவும் புது மலரிட்டு
நின் பாத விரைக் கமலம்
இரவும் பகலும் இறைஞ்ச வல்லார் ,
இமையோர் எவரும் பரவும் ,
பதவும் , அயிராவதமும் ,
பகீரதியும்,
உரவும் குலிசமும் ,
கற்பகக் காவும் ,
உடையவரே !
பாடல் 84
உடையாளை ,
ஒல்கு செம்பட்டுடையாளை ,
ஒளிர் மதி செஞ்சடையாளை ,
வஞ்சகர் நெஞ்சை அடையாளை ,
தயங்கு நுண்ணூல் இடையாளை ,
எங்கள் எம்மான் இடையாளை ,
இங்கு என்னை இனி படையாளை ,
உங்களையும் படையா வண்ணம்
பார்த்திருமே !
பாடல் 86
மால், அயன் தேட ,
மறை தேட ,
வானவர் தேட
நின்ற காலையும்,
சூடகக் கையையும் கொண்டு ,
கதித்த கப்பு வேலை ,
வெங்காலன் என் மேல்
விடும் போது ,
வெளிநில் கண்டாய் !
பாலையும்,
தேனையும் ,
பாகையும் போலும்
பனி மொழியே !
பாடல் 87
மொழிக்கும் ,
நினைவுக்கும் எட்டாத
நின் திரு மூர்த்தி ,
எந்தன் விழிக்கும் ,
வினைக்கும் வெளி நின்றதால் ,
விழியால் மதனை அழிக்கும்
தலைவர் அழியா விரதத்தை ,
அண்டமெல்லாம் பழிக்கும்படி
ஒருபாகம் கொண்டாளும் ,
பராபரையே !
பாடல் 88
பரமென்று உனை அடைந்தேன் !
தமியேனும்
உன் பக்தருக்குள்
தரம் அன்று இவன்
என்று
தள்ளத் தகாது !
தரியலார் தம்
புர மொன்று எரிய
பொறுப்பு வில் வாங்கிய போதில் ,
அயன் சிரமொன்று
சென்ற கையான்
இடப்பாகம் சிறந்தவளே !
பாடல் 90
வருந்தா வகை
என் மனத் தாமரையில்
வந்து புகுந்து இருந்தாள் ,
பழைய இருப்பிடமாக !
இனி
எனக்கும்
பொருந்தாத ஒரு பொருளில்லை !
விண்மேவும் புலவருக்கு விழுந்தார்
வேலை மருந்தானதை
நல்கும் மெல்லியலே !
பாடல் 91
மெல்லிய நுண்ணிடை
மின்னனையாளை,
யானை விரிசடையோன் புல்லிய
மென்முலை பொன் அனையாளை ,
புகழ்ந்து ,
மறை சொல்லியவண்ணம்
தொழும் அடியாரை
தொழும் அவர்க்கு ,
பல்லியம் ஆர்த்தெழ
வெண்பகடு ஊரும்
பதம் தருமே !
பாடல் 93
நகையே இது !
இந்த ஞாலமெல்லாம்
பெற்ற நாயகிக்கு,
முகையே !
முகிழ் முலை மானே !
முதுகண் முடிவுயில்
அந்த வகையே பிறவியும் !
வம்பே !
மலைமகள் என்பது நாம்,
மிகையே !
இவள்தன் தகைமையை
நாடி விரும்புவதே !
பாடல் 94
விரும்பித் தொழும் அடியார்
விழிநீர் மல்கி ,
மெய்புகளம் அரும்பி ,
ததும்பிய ஆனந்தமாகி ,
அறிவிழந்து ,
கரும்பிற் களித்து ,
மொழி தடுமாறி ,
முன் சொன்ன எல்லாம் தரும்
பித்தர் ஆவாரென்றால் ,
அபிராமி சமயம் நன்றே !
பாடல் 99
குயிலாய் இருக்கும் ,
கடம் பாடவியிடை !
கோல இயல்
மயிலாய் இருக்கும் ,
இமாசலத்திடை !
வந்துதித்த வெயிலாயிருக்கும்
விசும்பில் !
கமலத்தின் மீது அன்னமாம் !
கயிலாயருக்கு,
அன்று இமவான் அளித்த
கணங்குழையே !
பாடல் 100
குழியைத் தழுவிய
கொன்றையந் தார் கமழ்
கொங்கைவல்லி !
கழியைப் பொருத
திருநெடுந் தோளும் ,
கருப்பு வில்லும் .
விழையப் பொறு திறல்
வேரியம் பாணமும் ,
வெண்ணகையும் ,
உழையைப் பொரு கண்ணும் ,
நெஞ்சில்
எப்போதும் உதிக்கின்றவே !
முற்றும்.
நூற் பயன்
ஆத்தாளை ,
எங்கள் அபிராம வல்லியை ,
அண்டம் எல்லாம் பூத்தாளை ,
மாதுளம்பூ நிறத்தாளை ,
புவி அடங்க காத்தாளை ,
அங்கையில் பாசாங்குசமும் ,
கரும்பும்
அங்கை சேர்த்தாளை ,
முக்கண்ணியைத் தொழுவார்க்கு ,
ஒரு தீங்கில்லையே !!
@@@@@@@
மாணிக்கவாசகப் பெருமான்,
தன்னுடைய சிவபுராணத்தை
முடிக்கும்போது
" சொல்லிய பாட்டின்
பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின்
உள்ளார் சிவனடிக்கீழ்
பல்லோரும் ஏத்தப் பணிந்து "
என்று பாடுகிறார்.
அபிராமி அந்தாதியில் உள்ள
பாடல்களை அதன் பொருள் உணர்ந்து
பாராயணம் செய்தால்,
சகல நன்மைகளும் கிடைக்கும்
என்பது உறுதி .
மாணிக்க வாசகர்,
அதே சிவபுராணத்தில்,
" அவன் அருளாலே
அவன் தாள் வணங்கி..."
என்று பாடுகிறார்.
அபிராமி அந்தாதியில்
உள்ள பாடல்களைப்
பாராயணம் செய்யவும்
அவள் அருள் வேண்டும்.
அபிராமியின் அருள் பெற்று,
பாடல்களின் பொருள் உணர்ந்து
பாராயணம் செய்திடுவீர்!
பிள்ளையார் காப்பு.
தாரமர் கொன்றையும்
சென்பகமாலையும் சாத்தும்,
தில்லை ஊரர் தம் பாகத்து
உலகேழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி ,
எப்போதும் என்
சிந்தை உள்ளே,
காரமர் மேனிக்
கணபதியே !
நிற்கக் கட்டுரையே !
நூல்
உதிக்கின்ற செங்கதிர்
உச்சித் திலகம் !
உணர்வுடையோர் மதிக்கின்ற
மாணிக்கம்.!
மாதுளம் போது !
மலர் கமலை துதிக்கின்ற
மின்கொடி !
மென்கடிக்
குங்குமத் தோயமென்ன
விதிர்கின்ற மேனி,
அபிராமி,
எந்தன் விழுத் துணையே !
பாடல் 2
துணையும்,
தொழும் தெய்வமும்,
பெற்ற தாயும்,
சுருதிகளின் பணையும்,
கொழுந்தும்,
பதிகொண்ட வேரும்,
பனிமலர் பூங்கணையும் ,
கருப்புச் சிலையும்,
மென் பாசாங்குசமும்,
கையில் அணையும்
திரிபுர சுந்தரி,
ஆவது
அறிந்தனமே !
பாடல் 3
அறிந்தேன்
எவரும் அறியா மறையை !
அறிந்து கொண்டு செறிந்தேன்,
உனது திருவடிக்கே, திருவே !
வெருவிப் பிறிந்தேன்,
நின் அன்பர் பெருமை
எண்ணாத கரும நெஞ்சால்,
மறிந்தே விழும்
நரகுக்கு உறவாய
மனிதரையே ! !
பாடல் 4
மனிதரும்,
தேவரும்,
மாயா முனிவரும் வந்து
சென்னி குனிதரும்
சேவடிக் கோமளமே !!
கொன்றை வார்சடை மேல்
பனி தரும் திங்களும்,
பாம்பும்,
பகீரதியும் படைத்த
புனிதரும், நீயும்
என்புந்தி எந்நாளும்
பொருந்துகவே !!
பாடல் 5
பொருந்திய முப்புரை,
செப்புரை செய்யும்
புணர் முலையாள் !
வருந்திய வஞ்சி
மருங்குல் மனோன்மணி,
வார் சடையோன்
அருந்திய நஞ்சு
அமுதாக்கிய அம்பிகை !
அம்புய மேல்
திருந்திய சுந்தரி !
அந்தரி பாதம்
என்
சென்னியதே !
பாடல் 6
சென்னியது
உன்பொன் திருவடித் தாமரை !
சிந்தையுள்ளே மன்னியது,
உன்
திரு மந்திரம் !
சிந்தூர வண்ணப் பெண்ணே !
நின் அடியாருடன் கூடி
முறை முறையே பன்னியது
என்றும் ,
உந்தன்
பரம ஆகம
பத்ததியே !!
பாடல் 7
ததியுறு மத்தில் சுழலும்
என் ஆவி
தளர்விலதோர்,
கதிஉறு வண்ணம்
கருது கண்டாய் !
கமலாலயனும்,
மதிஉறு வேணி மகிழ்நனும் ,
மாலும்
வணங்கி என்றும்
துதிஉறு சேவடியாய் !!
சிந்தூரானன
சுந்தரியே !!
பாடல் 8
சுந்தரி !!
எந்தைத் துணைவி !
என்
பாசத் தொடரை எல்லாம்
வந்து அரி !
சிந்தூர வண்ணத்தினாள் !
மகிடன் தலைமேல்
அந்தரி !
நீலி !!
அழியாத கன்னிகை !!
ஆரணத்தோன் சுந்தரி !
கைத்தலத்தாள்!
மலர்த்தாள்
என் கருத்தனவே !
பாடல் 9
கருத்தன,
எந்தைதன் கண்ணென,
வண்ணக் கனக வெற்பிற்
பெருத்தன,
பால்
அழும் பிள்ளைக்கு
நல்கின!
பேரருள் கூர் திருத்தன பாரமும்,
ஆரமும்,
செங்கைச் சிலையும்,
முருத்தன மூரலும்,
நீயும் அம்மே !!
வந்து என்முன்
நிற்கவே !!
பாடல் 10
நின்றும்,
இருந்தும்,
கிடந்தும்,
நடந்தும்
நினைப்பது உன்னை !!
என்றும் வணங்குவது
உன் மலர்த்தாள் !!
எழுதா மறையின்
ஒன்றும் அரும்பொருளே !
அருளே !
உமையே !!
இமயத்து அன்றும்
பிறந்தவளே !!
அழியா முக்தி
ஆனந்தமே !!
*******
பாடல் 11
ஆனந்தமாய்,
என் அறிவாய்,
நிறைந்த அமுதமாய்,
வான் அந்தமான
வடிவுடையாள் !
மறை நான்கினுக்கும்,
தான் அந்தமான
சரணார விந்தம் ,
தவள நிறக் கானம்,
தம் ஆடரங்காம்,
எம்பிரான் முடிக்
கண்ணியதே !!
கண்ணியது,
உன் புகழ்.!
கற்பது
உன் நாமம் !
கசிந்து பத்தி
பண்ணியது,
உன் இரு பாதம்
புயத்தில் !
பகல் இரவா
நண்ணியது,
உன்னை நயந்தோர்
அவையத்து !
நான்
முன் செய்த
புண்ணியம் ஏது?
என் அம்மே !!
புவி ஏழையும்,
பூத்தவளே !!
பாடல் 13
பூத்தவளே !
புவனம் பதினான்கையும்,
பூத்த வண்ணம்
காத்தவளே !
பின் கரந்தவளே !
கறைக் கண்டனுக்கு
மூத்தவளே !
என்றும்
மூவா முகுந்தற்கு
இளையவளே !
மாத்தவளே !
உன்னை அன்றி
மற்றோர் தெய்வம்....
வந்திப்பதே !!
பாடல் 14
வந்திப்பவர்
உன்னை,
வானவர், தானவர்
ஆனவர்கள்!
சிந்திப்பவர்,
நல் திசைமுகர்
நாரணர் !
சிந்தையுள்ளே பந்திப்பவர்,
அழியாப்
பரமானந்தர் !
பாரில்
உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம்,
எம்பிராட்டி!
நின்
தண் அளியே !!
பாடல் 15
தண் அளிக்கு என்று,
முன்னே
பல கோடி
தவங்கள் செய்வார்,
மண் அளிக்கும்
செல்வமோ
பெறுவார் ?
மதிவானவர் தம்
விண் அளிக்கும்
செல்வம்
அழியா முக்தியும்,
வீடும்
அன்றோ ?
பண் அளிக்கும் சொல்
பரிமள யாமளைப்
பைங்கிளியே !!
பாடல் 16
கிளியே !!
கிளைஞர் மனத்தே
கிடந்து
கிளர்ந்து
ஒளிரும்
ஒளியே ! !
ஒளிரும்
ஒளிக்கு, இடமே !!
எண்ணில்,
ஒன்றுமில்லா வெளியே !!
வெளி முதல் பூதங்களாகி
விரிந்த,
அம்மே !!
அளியேன்
அறிவு அளவிற்கு,
அளவானது
அதிசயமே !!
பாடல் 17
அதிசயமான வடிவுடையாள் !!
அரவிந்தமெல்லாம்,
துதிசயமான சுந்தரவல்லி !!
துணை இரதி
பதிசயமானது
அபசயமாக,
முன்
பார்த்தவர் தம்
மதிசயம் ஆக அன்றோ ?
வாம பாகத்தை
வவ்வியதே !!
வவ்விய பாகத்து
இறைவரும்,
நீயும்,
மகிழ்ந்திருக்கும் செவ்வியும்,
உங்கள் திருமணக் கோலமும் ,
சிந்தையுள்ளே அவ்வியம் தீர்த்து,
என்னை ஆண்ட
பொற்பாதமும் ஆகிவந்து,
வெவ்விய காலன்,
என்மேல் வரும்போது
வெளி நிற்கவே !!
பாடல் 19
வெளிநின்ற
நின் திருமேனியைப் பார்த்து,
என் விழியும்,
நெஞ்சும்,
களிநின்ற வெள்ளம்
கரை கண்டதில்லை !
கருத்தின் உள்ளே
தெளிகின்ற ஞானம்
திகழ்கின்றது
என்ன திருவுளமோ ?
ஒளி நின்ற கோணங்கள் ,
ஒன்பதும்
மேவி உறைபவளே !!
பாடல் 20
உறைகின்ற நின் திருக்கோயில்,
நின் கேள்வர் ,
ஒரு பக்கமோ !
அறைகின்ற
நான் மறையின்
அடியோ, முடியோ !
அமுதம் நிறைகின்ற
வெண் திங்களோ ,
கஞ்சமோ !
எந்தன் நெஞ்சகமோ !
மறைகின்ற வாரிதியோ !
பூரணாசல மங்கலையே !!
பாடல் 21
மங்கலை !
செங்கமலம் முலையாள் !
வருணச்
சங்கு அலை செங்கை
சகலகலா மயில் !
தாவு கங்கை
பொங்கு அலை தாங்கும்
புரிசடையோன் புடையாள் !
உடையாள் !
பிங்கலை !
நீலி !
செய்யாள் !
வெளியாள் !
பசும் பொற்கொடியே !!
பாடல் 22
கொடியே!
இளவஞ்சிக் கொம்பே !
எனக்கு வம்பே
பழுத்த படியே,
மறையின் பரிமளமே !
பனிமால்
இமயப் பிடியே !
பிரமன் முதலாய்த் தேவரைப்
பெற்ற அம்மே !
அடியேன் இறந்து,
இங்கு இனி பிறவாமல்
வந்து ஆண்டு கொள்ளே !!
பாடல் 23
கொள்ளேன்
கோலமல்லாது,
அன்பர்
கூட்டம் தன்னை
விள்ளேன் !
பர சமயம் விரும்பேன் !
வியன்
மூவுலகுக்கு உள்ளே,
அனைத்தினுக்கும்
புறம்பே !
உள்ளத்தே
விளைந்த கள்ளே !
களிக்கும் களியே !
அளிய என் கண்மணியே !!
பாடல் 24
மணியே !
மணியின் ஒளியே !
ஒளிரும்
மணி புனைந்த
அணியே !
அணியும் அணிக்கு
அழகே !
அணுகாதவர்க்குப் பிணியே !
பிணிக்கு மருந்தே !
அமரர் பெருவிருந்தே !
பணியேன் ஒருவரை,
நின் பத்ம பாதம் ,
பணிந்த பின்னே !!
பாடல் 25
பின்னே திரிந்து,
உன் அடியாரைப் பேணி,
பிறப்பறுக்க,
முன்னே
தவங்கள் முயன்று கொண்டேன் ;
முதல் மூவருக்கும்
அன்னே !!
உலகுக்கு,
அபிராமி என்னும்
அருமருந்தே !
என்னே!
இனி
உன்னை யான் மறவாமல்
நின்று
ஏத்துவனே !!
பாடல் 26
ஏத்தும் அடியவர்
ஈரேழ் உலகினையும்
படைத்தும் ,
காத்தும் ,
அழித்தும்
திரிபவராம் ;
கமழ் பூக்கடம்பு சாத்தும்
குழல் அணங்கே !
மணம் நாறும்
நின் தாள் இணைக்கு ,
என் நாத்தங்கு
புன்மொழி ஏறியவாறு
நகை உடைத்தே !!
பாடல் 27
உடைத்தனை,
வஞ்சப் பிறவியை !
உள்ளம் உருகும்
அன்பு படைத்தனை !
பத்மபத யுகம்
சூடும் பணி
எனக்கே அடைத்தனை !
நெஞ்சத்து அழுக்கையெல்லாம்,
நின்
அருட் புனலால் துடைத்தனை !
சுந்தரி !!
நின்
அருள் ஏதென்று
சொல்லுவதே !!
பாடல் 28
சொல்லும்,
பொருளும் என
நடமாடும்
துணைவருடன் ,
புல்லும்
பரிமளப் பூங்கொடியே !!
நின்
புது மலர்த் தாள் ,
அல்லும் பகலும்
தொழும் அவர்க்கே,
அழியா அரசும்,
செல்லும் தவ நெறியும்,
சிவலோகமும்
சித்திக்குமே !!
பாடல் 29
சித்தியும்,
சித்திதரும் தெய்வமாகித்
திகழும்
பரா சக்தியும்,
சக்தி தழைக்கும்
சிவமும்,
தவ முயல்வார்
முக்தியும்,
முக்திக்கு வித்தும்,
வித்தாகி
முளைத்தெழுந்த
புத்தியும்,
புத்தியின் உள்ளே
புரக்கும்
புரத்தை அன்றே !!
பாடல் 30
அன்றே
தடுத்து என்னை
ஆண்டு கொண்டாய்,
கொண்டதல்ல
என்கை,
நன்றே உனக்கு ?
இனி
யான்
என் செயினும்,
நடுக் கடலுள்
சென்றே வீழினும்,
கரை ஏற்றுகை
நின் திருவுளமே !
ஒன்றே !
பல உருவே !
அருவே !
என் உமையவளே !!
பாடல் 31
உமையும்,
உமை ஒரு பாகனும்
ஏக உருவில் வந்து ,
இங்கு
எமையும்
தனக்கு
அன்பு செய்ய வைத்தார் ;
இனி எண்ணுதற்கு
சமயங்களும் இல்லை ;
ஈன்றெடுப்பாள்
ஒரு தாயும் இல்லை ;
அமையும்
அமைஉறு தோளியர் மேல்
வைத்த ஆசையுமே !!
பாடல் 32
ஆசைக் கடலில்
அகப்பட்டு,
அருளற்ற அந்தகன்
கைப் பாசத்தில்
அல்லல்பட இருந்தேனை,
நின் பாதமென்னும்
வாசக்கமலம்,
தலைமேல் வலிய வைத்து
ஆண்டு கொண்ட நேசத்தை
என் சொல்லுவேன் !
ஈசர் பாகத்து
நேரிழையே !
பாடல் 33
இழைக்கும் வினைவழியே
அருங்காலன் எனை
நடுங்க அழைக்கும் போது வந்து
அஞ்சல் என்பாய் ;
அத்தர் சித்தமெல்லாம்
குழைக்கும்
களபக் குவிமுலை
யாமளைக் கோமளமே !
உழைக்கும் பொழுது
உன்னையே,
அன்னையே!
என்பன் ஓடி வந்தே !
பாடல் 34
வந்தே சரணம் புகும்
அடியார்க்கு
வானுலகம் தந்தே ,
பரிவோடு
தான் போயிருக்கும்
சதுர் முகமும்,
பைந்தேன் அலங்கல்
பருமணி ஆகமும் ,
பாகமும் ,
பொன் செந்தேன் மலரும்,
அலர் கதிர்
ஞாயிறும் ,
திங்களுமே !
பாடல் 35
திங்கட் பசுவின்
மணம் நாறும் சீறடி
சென்னி வைக்க,
எங்கட்கு
ஒரு தவம் எய்தியவா !
எண்ணிறைந்த விண்ணோர்
தங்கட்கும்
இந்தத் தவம் எய்துமோ ?
தரங்கக் கடலுள் ,
வெங்கண் பணி
அணைமேல்
துயில் கூரும்
விழுப் பொருளே !!
பாடல் 36
பொருளே !
பொருள் முடிக்கும்
போகமே !
அரும் போகம்
செய்யும் மருளே !
மருளில் வரம் தெருளே !
என் மனத்துள்
வஞ்சத்து இருள்
ஏதும் இன்றி
ஒளிவெளியாகி இருக்கும்
உந்தன் அருளேது
அறிகின்றிலேன்
அம்புயா தனத்து
அம்பிகையே !!
பாடல் 37
கைக்கே அணிவது
கன்னலும் பூவும்;
கமலமன்ன மெய்க்கே
அணிவது
வெண் முத்து மாலை ;
விட அரவின் பைக்கே
அணிவது
பன்மணிக் கோவையும்,
பட்டும் ;
எட்டுத் திக்கே அணியும்
திருவுடையான்
இடம் சேர்பவளே !
பாடல் 38
பவளக் கோடியில் பழுத்த
செவ்வாயும்,
பனிமுறுவல் தவளத்
திருநகையும்
துணையாய்,
எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது
துடி இடை சாய்க்கும்
துணை முலையாள் :
அவளைப் பணிமின் ,
கண்டீர் அமராவதி
ஆளுகைக்கே !!
பாடல் 39
ஆளுகைக்கு ,
உந்தன் அடித் தாமரைகள்
உண்டு :
அந்தகன் பால் மீளுகைக்கு
உந்தன் விழியின்
கடை உண்டு :
மேல் இவற்றின் மூளுகைக்கு
என் குறையே ,
நின் குறை அன்று ;
முப்புரங்கள் மாளுகைக்கு
அம்பு தொடுத்த
வில்லான் பங்கில்
வாள் நுதலே !!
அன்றே
தடுத்து என்னை
ஆண்டு கொண்டாய்,
கொண்டதல்ல
என்கை,
நன்றே உனக்கு ?
இனி
யான்
என் செயினும்,
நடுக் கடலுள்
சென்றே வீழினும்,
கரை ஏற்றுகை
நின் திருவுளமே !
ஒன்றே !
பல உருவே !
அருவே !
என் உமையவளே !!
பாடல் 31
உமையும்,
உமை ஒரு பாகனும்
ஏக உருவில் வந்து ,
இங்கு
எமையும்
தனக்கு
அன்பு செய்ய வைத்தார் ;
இனி எண்ணுதற்கு
சமயங்களும் இல்லை ;
ஈன்றெடுப்பாள்
ஒரு தாயும் இல்லை ;
அமையும்
அமைஉறு தோளியர் மேல்
வைத்த ஆசையுமே !!
பாடல் 32
ஆசைக் கடலில்
அகப்பட்டு,
அருளற்ற அந்தகன்
கைப் பாசத்தில்
அல்லல்பட இருந்தேனை,
நின் பாதமென்னும்
வாசக்கமலம்,
தலைமேல் வலிய வைத்து
ஆண்டு கொண்ட நேசத்தை
என் சொல்லுவேன் !
ஈசர் பாகத்து
நேரிழையே !
பாடல் 33
இழைக்கும் வினைவழியே
அருங்காலன் எனை
நடுங்க அழைக்கும் போது வந்து
அஞ்சல் என்பாய் ;
அத்தர் சித்தமெல்லாம்
குழைக்கும்
களபக் குவிமுலை
யாமளைக் கோமளமே !
உழைக்கும் பொழுது
உன்னையே,
அன்னையே!
என்பன் ஓடி வந்தே !
பாடல் 34
வந்தே சரணம் புகும்
அடியார்க்கு
வானுலகம் தந்தே ,
பரிவோடு
தான் போயிருக்கும்
சதுர் முகமும்,
பைந்தேன் அலங்கல்
பருமணி ஆகமும் ,
பாகமும் ,
பொன் செந்தேன் மலரும்,
அலர் கதிர்
ஞாயிறும் ,
திங்களுமே !
பாடல் 35
திங்கட் பசுவின்
மணம் நாறும் சீறடி
சென்னி வைக்க,
எங்கட்கு
ஒரு தவம் எய்தியவா !
எண்ணிறைந்த விண்ணோர்
தங்கட்கும்
இந்தத் தவம் எய்துமோ ?
தரங்கக் கடலுள் ,
வெங்கண் பணி
அணைமேல்
துயில் கூரும்
விழுப் பொருளே !!
பாடல் 36
பொருளே !
பொருள் முடிக்கும்
போகமே !
அரும் போகம்
செய்யும் மருளே !
மருளில் வரம் தெருளே !
என் மனத்துள்
வஞ்சத்து இருள்
ஏதும் இன்றி
ஒளிவெளியாகி இருக்கும்
உந்தன் அருளேது
அறிகின்றிலேன்
அம்புயா தனத்து
அம்பிகையே !!
பாடல் 37
கைக்கே அணிவது
கன்னலும் பூவும்;
கமலமன்ன மெய்க்கே
அணிவது
வெண் முத்து மாலை ;
விட அரவின் பைக்கே
அணிவது
பன்மணிக் கோவையும்,
பட்டும் ;
எட்டுத் திக்கே அணியும்
திருவுடையான்
இடம் சேர்பவளே !
பாடல் 38
பவளக் கோடியில் பழுத்த
செவ்வாயும்,
பனிமுறுவல் தவளத்
திருநகையும்
துணையாய்,
எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது
துடி இடை சாய்க்கும்
துணை முலையாள் :
அவளைப் பணிமின் ,
கண்டீர் அமராவதி
ஆளுகைக்கே !!
பாடல் 39
ஆளுகைக்கு ,
உந்தன் அடித் தாமரைகள்
உண்டு :
அந்தகன் பால் மீளுகைக்கு
உந்தன் விழியின்
கடை உண்டு :
மேல் இவற்றின் மூளுகைக்கு
என் குறையே ,
நின் குறை அன்று ;
முப்புரங்கள் மாளுகைக்கு
அம்பு தொடுத்த
வில்லான் பங்கில்
வாள் நுதலே !!
பாடல் 40
வாள்நுதல் கண்ணியை ,
விண்ணவர் யாவரும்
வந்து இறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய
எம்பெருமாட்டியை ,
பேதை நெஞ்சில்
காணுதற்கு
அண்ணியள் அல்லாத
கன்னியை ,
காணும் அன்பு பூணுதற்கு
எண்ணிய எண்ணம் அன்றோ
முன்செய் புண்ணியமே !!
வாள்நுதல் கண்ணியை ,
விண்ணவர் யாவரும்
வந்து இறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய
எம்பெருமாட்டியை ,
பேதை நெஞ்சில்
காணுதற்கு
அண்ணியள் அல்லாத
கன்னியை ,
காணும் அன்பு பூணுதற்கு
எண்ணிய எண்ணம் அன்றோ
முன்செய் புண்ணியமே !!
பாடல் 41
புண்ணியம் செய்தனை மனமே,
புதுப் பூங்குவளைக் கண்ணியும்
செய்யக் கணவரும் கூடி
நம் காரணத்தால் நண்ணி
இங்கே வந்து
தம் அடியார்கள் நடுவிருக்கம் பண்ணி
நம் சென்னியின் மேல்
பத்ம பாதம் பதித்திடவே !
இடம் கொண்டு விம்மி
இணை கொண்டு இறுகி, இளகி
முத்து வடம் கொண்ட
கொங்கை மலை கொண்டு
இறைவர் வலிய நெஞ்சை
நடம் கொண்ட
கொள்கை நலம் கொண்ட நாயகி,
விட அரவின்
படம் கொண்ட அல்குல்
பனி மொழி
வேதப் பரிபுரையே !
பாடல் 43
பரிபுரச் சீறடி !
பாசாங்குசை !
பஞ்ச பாணி !
இன்சொல் திரிபுர சுந்தரி !
சிந்துர மேனியள் !
தீமை நெஞ்சில்
பரிபுர வஞ்சரை அஞ்சக் குனி
பொரும்புச் சிலைக்கை
எரிபுரை மேனி !
இறைவர் செம் பாகத்து
இருந்தவளே !
பாடல் 44
தவளே !
இவள் ,
எங்கள் சங்கரனார்
மனை மங்கலமாம் !
அவளே ,
அவர் தமக்கு
அன்னையும் ஆயினள் !
ஆகையினால்,
இவளே,
கடவுளர் யாவர்க்கும்
மேலை இறைவியும் ஆம் !
துவளேன் இனி,
ஒரு தெய்வம் உண்டாக
மெய்த் தொண்டு செய்தே !
பாடல் 45
தொண்டு செய்யாது,
நின் பாதம் தொழாது,
துணிந்து
இச்சையே பண்டு செய்தார்
உளரோ, இலரோ ?
அப்பரிசு,
அடியேன் கண்டு செய்தால்,
அது கை தவமோ ,
அன்றிச் செய்தவமோ ?
மிண்டு செய்தாலும்
பொறுக்கை நன்றே,
பின் வெறுக்கை யன்றே !
பாடல் 46
வெறுக்கும் தகைமைகள்
செய்யினும்
தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை
புதிய தன்றே !
புது நஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான்
இடப்பாகம் கலந்த பொன்னே !
மறுக்கும் தகைமைகள்
செய்யினும்
யான் உன்னை
வாழ்த்துவனே !
பாடல் 47
வாழும்படி
ஒன்று கண்டு கொண்டேன்
மனத்தே !
ஒருவர்
விழும்படி யன்று ,
விள்ளும்படி யன்று .
வேலை நிலம்
எழும் பருவரை
எட்டும் எட்டாமல்
இரவு பகல்
சூழும் சுடர்க்கு
நடுவே கிடந்து
சுடர்கின்றதே !
பாடல் 51
அரணம், பொருள் என்று
அருள் ஒன்று இலாத
அசுரர் தங்கள்
முரண் அன்று அழிய
முனிந்த பெம்மானும்,
முகுந்தனுமே,
சரணம் சரணம் எனநின்ற
நாயகி தன் அடியார் ,
மரணம் , பிறவி
இரண்டும் எய்தார்,
இந்த வையகத்தே !
பாடல் 52
வையம் ,
துரகம் ,
மதகரி ,
மாமகுடம் ,
சிவிகை ,
பெய்யும் கனகம் ,
பெருவிலை ஆரம் ,
பிறை முடித்த
ஐயன் திருமனையாள்
திருவடிக்கு ,
அன்பு
முன்பு செய்யும்
தவம் உடையார்க்கு
உளவாகிய சின்னங்களே !!
பாடல் 55
மின் ஆயிரம்
ஒரு மெய் வடிவாகி ,
விளங்குகின்ற அன்னாள் !
அகம் மகிழ்
ஆனந்த வல்லி !
அருமறைக்கு
முன்னால்,
நடுவு,
எங்குமாய்
முடிவாய
முதல்வி தன்னை ,
உன்னாது ஒழியினும்
உன்னினும்
வேண்டுவது ஒன்றில்லையே !!
பாடல் 56
ஒன்றாய் அரும்பி ,
பலவாய் விரிந்து ,
இவ்வுலகு எங்குமாய் நின்றாள் !
அனைத்தையும்
நீங்கி நிற்பாள் !
என்தன் நெஞ்சின் உள்ளே ,
பொன்றாது நின்று புரிகின்றவா !
இப்பொருள் அறிவார்,
அன்று ....
ஆல் இலையில் துயின்ற பெம்மானும்,
என் ஐயனுமே ! !
பாடல் 57வெறுக்கும் தகைமைகள்
செய்யினும்
தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை
புதிய தன்றே !
புது நஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான்
இடப்பாகம் கலந்த பொன்னே !
மறுக்கும் தகைமைகள்
செய்யினும்
யான் உன்னை
வாழ்த்துவனே !
பாடல் 47
வாழும்படி
ஒன்று கண்டு கொண்டேன்
மனத்தே !
ஒருவர்
விழும்படி யன்று ,
விள்ளும்படி யன்று .
வேலை நிலம்
எழும் பருவரை
எட்டும் எட்டாமல்
இரவு பகல்
சூழும் சுடர்க்கு
நடுவே கிடந்து
சுடர்கின்றதே !
பாடல் 48
சுடரும் கலைமதி
துன்றும்
சடைமுடிக் குன்றில் ,
ஒன்றிப் படரும்
பச்சைக் கொடியைப்
பதித்து,
நெஞ்சில்
இடரும் தவிர்த்து ,
இமைப்போது இருப்பார் ,
பின்னும் எய்துவரோ
குடரும்,
கொழுவும்,
குருதியும் தோயும்
குரம்பையிலே !
சுடரும் கலைமதி
துன்றும்
சடைமுடிக் குன்றில் ,
ஒன்றிப் படரும்
பச்சைக் கொடியைப்
பதித்து,
நெஞ்சில்
இடரும் தவிர்த்து ,
இமைப்போது இருப்பார் ,
பின்னும் எய்துவரோ
குடரும்,
கொழுவும்,
குருதியும் தோயும்
குரம்பையிலே !
பாடல் 49
குரம்பை அடுத்துக்
குடி புக்க,
ஆவி
வெம் கூற்றுக்கு இட்ட
வரம்பை அடுத்து
மறுகும் ,
அப்போது ,
வளைக்கை அமைத்து ,
அரம்பை அடுத்த
அரிவையர் சூழ வந்து ,
அஞ்சல் என்பாய் !
நரம்பை அடுத்த
இசைவடிவாய்
நின்ற நாயகியே !
குரம்பை அடுத்துக்
குடி புக்க,
ஆவி
வெம் கூற்றுக்கு இட்ட
வரம்பை அடுத்து
மறுகும் ,
அப்போது ,
வளைக்கை அமைத்து ,
அரம்பை அடுத்த
அரிவையர் சூழ வந்து ,
அஞ்சல் என்பாய் !
நரம்பை அடுத்த
இசைவடிவாய்
நின்ற நாயகியே !
பாடல் 50
நாயகி ,
நான்முகி ,
நாராயணி ,
கை நளின பஞ்ச சாயகி ,
சாம்பவி,
சங்கரி,
சாமளை ,
சாதி நச்சு வாய் அகி ,
மாலினி ,
வாராகி ,
சூலினி ,
மாதங்கி என்று
ஆய கியாதியுடையாள்
சரணம் !
அரண் நமக்கே !
நாயகி ,
நான்முகி ,
நாராயணி ,
கை நளின பஞ்ச சாயகி ,
சாம்பவி,
சங்கரி,
சாமளை ,
சாதி நச்சு வாய் அகி ,
மாலினி ,
வாராகி ,
சூலினி ,
மாதங்கி என்று
ஆய கியாதியுடையாள்
சரணம் !
அரண் நமக்கே !
பாடல் 51
அரணம், பொருள் என்று
அருள் ஒன்று இலாத
அசுரர் தங்கள்
முரண் அன்று அழிய
முனிந்த பெம்மானும்,
முகுந்தனுமே,
சரணம் சரணம் எனநின்ற
நாயகி தன் அடியார் ,
மரணம் , பிறவி
இரண்டும் எய்தார்,
இந்த வையகத்தே !
பாடல் 52
வையம் ,
துரகம் ,
மதகரி ,
மாமகுடம் ,
சிவிகை ,
பெய்யும் கனகம் ,
பெருவிலை ஆரம் ,
பிறை முடித்த
ஐயன் திருமனையாள்
திருவடிக்கு ,
அன்பு
முன்பு செய்யும்
தவம் உடையார்க்கு
உளவாகிய சின்னங்களே !!
பாடல் 53
சின்னம் சிறிய மருங்கினில்
சாத்திய
செய்யப் பட்டும்,
பென்னம் பெரிய முலையும் ,
பிச்சி மொய்த்த
கன்னம் கரிய குழலும் ,
கண் மூன்றும்
கருத்தில் வைத்துத்
தன்னந்தனி இருப்பார்க்கு
இதுபோலும்
தவம் இல்லையே !!
சின்னம் சிறிய மருங்கினில்
சாத்திய
செய்யப் பட்டும்,
பென்னம் பெரிய முலையும் ,
பிச்சி மொய்த்த
கன்னம் கரிய குழலும் ,
கண் மூன்றும்
கருத்தில் வைத்துத்
தன்னந்தனி இருப்பார்க்கு
இதுபோலும்
தவம் இல்லையே !!
பாடல் 54
இல்லாமை சொல்லி .
ஒருவர் தம்பால் சென்று ,
இழிவுபட்டு நில்லாமை
நெஞ்சில் நிலைகுவரேல்.
நித்தம் நீடுதவம் !
கல்லாமை
கற்ற கயவர் தம்பால்
ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த ,
திரிபுரை பாதங்கள்
சேர்மின்களே !!
இல்லாமை சொல்லி .
ஒருவர் தம்பால் சென்று ,
இழிவுபட்டு நில்லாமை
நெஞ்சில் நிலைகுவரேல்.
நித்தம் நீடுதவம் !
கல்லாமை
கற்ற கயவர் தம்பால்
ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த ,
திரிபுரை பாதங்கள்
சேர்மின்களே !!
பாடல் 55
மின் ஆயிரம்
ஒரு மெய் வடிவாகி ,
விளங்குகின்ற அன்னாள் !
அகம் மகிழ்
ஆனந்த வல்லி !
அருமறைக்கு
முன்னால்,
நடுவு,
எங்குமாய்
முடிவாய
முதல்வி தன்னை ,
உன்னாது ஒழியினும்
உன்னினும்
வேண்டுவது ஒன்றில்லையே !!
பாடல் 56
ஒன்றாய் அரும்பி ,
பலவாய் விரிந்து ,
இவ்வுலகு எங்குமாய் நின்றாள் !
அனைத்தையும்
நீங்கி நிற்பாள் !
என்தன் நெஞ்சின் உள்ளே ,
பொன்றாது நின்று புரிகின்றவா !
இப்பொருள் அறிவார்,
அன்று ....
ஆல் இலையில் துயின்ற பெம்மானும்,
என் ஐயனுமே ! !
ஐயன் அளந்தபடி
இரு நாழி கொண்டு,
அண்டமெல்லாம் உய்ய
அறம் செய்யும் உன்னையும் போற்றி,
ஒருவர் தம்பால்
செய்யப் பசுந்தமிழ் பாமாலையும்
கொண்டு சென்று ,
பொய்யும் மெய்யும்
இயம்ப வைத்தாய் ,
இதுவோ உன்தன்
மெய் அருளே !!
பாடல் 58
அருணாம் புயத்தும் ,
என்
சித்தாம் புயத்தும் ,
அமர்ந்திருக்கும் ,
தருணாம் புய
முலைத் தையல் நல்லாள்
தகை சேர் நயனக்
கருணாம் புயமும்,
சரணாம் புயமும் அல்லால் ,
கண்டிலேன்
ஒரு தஞ்சமுமே ! !
தஞ்சம் பிறிதில்லை
ஈதல்லது என்று
உன் தவ நெறிக்கே நெஞ்சம் பயில
நினைக்கின்றிலேன்,
ஒற்றை நீள் சிலையும் ,
அஞ்சு அம்பும் இக்கு
அலராக நின்றாய் !
அறியார் எனினும்
பஞ்சு அஞ்சு மெல்லடியார்,
அடியார்
பெற்ற பாலரையே !
பாடல் 60
பாலினும் சொல் இனியாய் !
பனி மாமலர்
பாதம் வைக்க,
மாலினும் தேவர்
வணங்க நின்றோன்
கொன்றைவார் சடையின் மேலினும்,
கீழ் நின்று வேதங்கள் பாடும்
மெய்ப்பீடம் ஒரு நாலினும்,
சால நன்றோ,
அடியேன்
முடைநாய்த் தலையே ?
பாடல் 61
நாயேனையும்,
இங்கு ஒரு பொருளாக
நயந்து வந்து,
நீயே,
நினைவின்றி ஆண்டு கொண்டாய் !
நின்னை,
உள்ள வண்ணம்
பேயேன் அறியும்
அறிவு தந்தாய் !
என்ன பேறு பெற்றேன் !
தாயே !
மலைமகளே !
செங்கண் மால்
திருத் தங்கச்சியே !!
பாடல் 62
தங்கச் சிலை கொண்டு
தானவர் முப்புரம் சாய்த்து ,
மத வெங்கண்
கரியுரி போர்த்த செஞ்சேவகன்
மெய் அடைய
கொங்கைக் குரும்பைக்
குறியிட்ட நாயகி !
கோ கனகச்
செங்கைக் கரும்பும்,
மலரும் ,
எப்போதும் என் சிந்தையதே !
பாடல் 63
தேறும்படி சில ஏதுவும் காட்டி
முன்செல் கதிக்கு கூறும் பொருள்
குன்றில் கொட்டும் தறி குறிக்கும் !
சமயம் ஆறும்
தலைவி இவளாய் இருப்பது
அறிந்திருந்தும்,
வேறு சமயம் உண்டென்று
கொண்டாடிய, வீணருக்கே !
பாடல் 64
வீணே ,
பலிகவர் தெய்வங்கள் பால் சென்று ,
மிக்க அன்பு பூணேன் !
உனக்கு அன்பு பூண்டு கொண்டேன் !
நின் புகழ்ச்சி அன்றிப் பேணேன் !
ஒருபொழுதும் திருமேனிப் பிரகாசம்
அன்றிக் காணேன்,
இருநிலமும்,
திசை நான்கும் ,
ககனமுமே !
பாடல் 65
ககனமும், வானமும் ,
புவனமும் காண ,
விற் காமன் அங்கம்
முன் தகனம் செய்த
தவம் பெருமாற்கு
தடக்கையும், செம்முகமும்
முந்நான்கு , இரு மூன்றெனத்
தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயதன்றோ ?
வல்லி !
நீ செய்த வல்லபமே !
ககனமும், வானமும் ,
புவனமும் காண ,
விற் காமன் அங்கம்
முன் தகனம் செய்த
தவம் பெருமாற்கு
தடக்கையும், செம்முகமும்
முந்நான்கு , இரு மூன்றெனத்
தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயதன்றோ ?
வல்லி !
நீ செய்த வல்லபமே !
பாடல் 66
வல்லபம் ஒன்றறியேன் சிறியேன் ,
நின் மலரடிச் செம் பல்லவம் அல்லது
பற்றொன்று இலேன் ,
பசும் பொற் பொருப்பு
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய் !
வினையேன் தொகுத்த
சொல் அவமாயினும்,
நின் திரு நாமங்கள்,
தோத்திரமே !
பாடல் 67
தோத்திரம் செய்து ,
தொழுது,
மின்போலும் நின் தோற்றம்
ஒருமாத்திரைப் போதும்
மனத்தில் வையாதவர் ,
வண்மை,
குலம் ,
கோத்திரம் ,
கல்வி,
குணம் குன்றி ,
நாளும் குடிகள் தோறும்
பாத்திரம் கொண்டு
பலிக்கு உழலா நிற்பர்,
பாரெங்குமே !
பாடல் 68
பாரும்,
புனலும்,
கனலும்,
வெங்காலும் ,
படர் விசும்பும்.
ஊரும்,
முருகு,
சுவை,
ஒளி,
ஊறொலி
ஒன்றுபடச் சேரும் ,
தலைவி சிவகாம சுந்தரி
சீரடிக்கே
சாரும் தவமுடையார் ,
படையாத
தனமில்லையே !
பாடல் 69
தனம் தரும் ,
கல்வி தரும்,
ஒரு நாளும் தளர்வறியா
மனம் தரும்,
தெய்வ வடிவும் தரும்,
நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும் ,
நல்லன எல்லாம் தரும்,
அன்பர் என்பவர்க்கே
கனம் தரும்,
பூங்குழலாள்
அபிராமி கடைக்கண்களே !
தனம் தரும் ,
கல்வி தரும்,
ஒரு நாளும் தளர்வறியா
மனம் தரும்,
தெய்வ வடிவும் தரும்,
நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும் ,
நல்லன எல்லாம் தரும்,
அன்பர் என்பவர்க்கே
கனம் தரும்,
பூங்குழலாள்
அபிராமி கடைக்கண்களே !
பாடல் 70
கண் களிக்கும்படி
கண்டு கொண்டேன் !
கடம்பாடவியில் ,
பண்களிக்கும் குரல் வீணையும்,
கையும் ,
பயோரமும் ,
மண் களிக்கும்
பச்சை வண்ணமுமாகி ,
மதங்கர் குலப்
பெண்களில் தோன்றிய
எம்பெருமாட்டி தன்
பேரழகே !
பாடல் 71
அழகுக்கு ,
ஒருவரும் ஒவ்வாத வல்லி !
அருமறைகள் ,
பழகிச் சிவந்த பாதாம்புயத்தாள் !
பனி மாமதியின்
குழவித் திருமுடிக்
கோமள, யாமளைக் கொம்பிருக்க,
இழவுற்று நின்ற நெஞ்சே !
இரங்கேல் !
உனக்கென் குறையே .... ?
பாடல் 72
என் குறை தீர,
நின்று ஏத்துகின்றேன் !
இனி யான் பிறக்கின் ,
நின் குறையே அன்றி ,
யார் குறை காண் ?
இருநீள் விசும்பின்
மின் குறை காட்டி ,
மெலிகின்ற
நேரிடை மெல்லியலாய் !
தன் குறை தீர,
என்கோன்
சடைமேல் வைத்த
தாமரையே !
பாடல் 73
தாமம் - கடம்பு ,
படை - பஞ்ச பாணம் , தனுக் கரும்பு ,
யாமம் - வயிரவர் ஏத்தும் பொழுது ,
எமெக்கென்று வைத்த சேமம் -
செங்கைகள் நான்கு ,
ஒளி - செம்மை ,
அம்மை நாமம் - திரிபுரை ,
ஒன்றோடு இரண்டு நயனங்களே !
பாடல் 74
நயனங்கள் மூன்றுடை நாதனும் ,
வேதமும்,
நாரணனும் ,
அயனும் பரவும்
அபிராமவல்லி அடியிணையைப்
பயனென்று கொண்டவர் ,
பாவையர் ஆடவும். பாடவும் ,
பொன் சயனம் பொருந்து ,
தமனியக் காவினில் .... தங்குவரே !பாடல் 75
தங்குவர் ,
கற்பகத் தருவின் நிழலில் ;
தாயார் இன்றி
மங்குவர் ;
மண்ணில் வழுவாப் பிறவியை ,
மால் வரையும்
பொங்குவர் ;
ஆழியும்,
ஈரேழ் புவனமும் பூத்த உந்தி
கொங்கிவர்
பூங்குழலாள் திருமேனி
குறித்தவரே !
பாடல் 76
குறித்தேன் ,
மனதில் நின் கோலமெல்லாம் .. !
நின் குறிப்பறிந்து
நின் குறிப்பறிந்து
மறித்தேன்,
மறலி வருகின்ற நேர்வழி !
வண்டு கிண்டி,
வெறித்தேன்,
அவிழ் கொன்றை வேணிப் பிரான் ஒரு கூற்றை,
மெய்யில் பறித்தே குடி புகுதும் ,
பஞ்ச பாண் பயிரவியே !!
பாடல் 77
பயிரவி,
பஞ்சமி ,
பாசாங்குசை ,
பஞ்ச பாணி ,
வஞ்சர் உயிரவி உண்ணும்
உயர் சண்டி ,
காளி,
ஒளிரும் கலா வயிரவி,
மண்டலி ,
மாலினி ,
சூலி ,
வராகி
என்றே செயிரவி
நான்மறைசேர் திருநாமங்கள்
செப்புவரே !
பயிரவி,
பஞ்சமி ,
பாசாங்குசை ,
பஞ்ச பாணி ,
வஞ்சர் உயிரவி உண்ணும்
உயர் சண்டி ,
காளி,
ஒளிரும் கலா வயிரவி,
மண்டலி ,
மாலினி ,
சூலி ,
வராகி
என்றே செயிரவி
நான்மறைசேர் திருநாமங்கள்
செப்புவரே !
பாடல் 78
செப்பும் கனகக் கலசமும் போலும்
திருமுலை மேல்
அப்பும் களப
அபிராமவல்லி அணி தரளக்
கொப்பும் , வயிரக் குழையும்
விழியின் கொழுங்கடையும்
துப்பும் நிலவும்
எழுதி வைத்தேன் ,
என் விழித் துணைக்கே !
பாடல் 79
விழிக்கே அருள் உண்டு
அபிராமவல்லிக்கு ;
வேதம் சொன்ன வழிக்கே ...
வழிபட நெஞ்சுண்டு ;
எமக்கு அவ்வழி கிடக்க,
பழிக்கே சுழன்று ,
வெம் பாவங்களே செய்து ,
பாழ் நரகக் குழிக்கே அழுந்தும்
கயவர் தம்மோடு
என்ன கூட்டு ... இனியே ?
பாடல் 80
கூட்டியவா,
என்னைத் தன் அடியாரில் ;
கொடிய வினை ஒட்டியவா ,
தன்னை உள்ள வண்ணம்
காட்டியவா ;
கண்ட கண்ணும் . மனமும்
களிக்கின்றவா ;
ஆட்டியவா ,
நடம் ஆடகத் தாமரை ஆரணங்கே !
அணங்கே !
அணங்குகள் நின் பரிவாரங்கள்
ஆகையினால் ,
வணங்கேன் ,
ஒருவரை வாழ்த்துகிலேன் ;
நெஞ்சில் வஞ்சகரோடு
இணங்கேன் ;
எனது , உனது என்றிருப்பார்
சிலர் யாவரொடும் பிணங்கேன் ;
அறிவொன்றிலேன் ,
என்கண் நீ வைத்த பேரளியே !
பாடல் 82
அளியார் கமலத்தில்
ஆரணங்கே!
அகில அண்டமும் நின் ஒளியாகி
நின்ற ஒளிர் திருமேனியை
உள்ளுந்தோறும் ,
களியாகி ,
அந்த கரணங்கள் விம்மிக்
கரை புரண்டு
வெளியாய்விடின் ,
எங்கனே மறப்பேன் ,
நின் விரகினையே ?
விரவும் புது மலரிட்டு
நின் பாத விரைக் கமலம்
இரவும் பகலும் இறைஞ்ச வல்லார் ,
இமையோர் எவரும் பரவும் ,
பதவும் , அயிராவதமும் ,
பகீரதியும்,
உரவும் குலிசமும் ,
கற்பகக் காவும் ,
உடையவரே !
பாடல் 84
உடையாளை ,
ஒல்கு செம்பட்டுடையாளை ,
ஒளிர் மதி செஞ்சடையாளை ,
வஞ்சகர் நெஞ்சை அடையாளை ,
தயங்கு நுண்ணூல் இடையாளை ,
எங்கள் எம்மான் இடையாளை ,
இங்கு என்னை இனி படையாளை ,
உங்களையும் படையா வண்ணம்
பார்த்திருமே !
பாடல் 85
பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும்,
பனிச் சிறை வண்டு ஆர்க்கும்
புதுமலர் ஐந்தும் ,
கரும்பும் ,
என் அல்லல் எல்லாம் தீர்க்கும்
திரிபுரையாள் திருமேனியும் ,
சிற்றிடையும் ,
வாரக் குங்கும முலையும் ,
முலைமேல் முத்து மாலையுமே !
பாடல் 86
மால், அயன் தேட ,
மறை தேட ,
வானவர் தேட
நின்ற காலையும்,
சூடகக் கையையும் கொண்டு ,
கதித்த கப்பு வேலை ,
வெங்காலன் என் மேல்
விடும் போது ,
வெளிநில் கண்டாய் !
பாலையும்,
தேனையும் ,
பாகையும் போலும்
பனி மொழியே !
பாடல் 87
மொழிக்கும் ,
நினைவுக்கும் எட்டாத
நின் திரு மூர்த்தி ,
எந்தன் விழிக்கும் ,
வினைக்கும் வெளி நின்றதால் ,
விழியால் மதனை அழிக்கும்
தலைவர் அழியா விரதத்தை ,
அண்டமெல்லாம் பழிக்கும்படி
ஒருபாகம் கொண்டாளும் ,
பராபரையே !
பரமென்று உனை அடைந்தேன் !
தமியேனும்
உன் பக்தருக்குள்
தரம் அன்று இவன்
என்று
தள்ளத் தகாது !
தரியலார் தம்
புர மொன்று எரிய
பொறுப்பு வில் வாங்கிய போதில் ,
அயன் சிரமொன்று
சென்ற கையான்
இடப்பாகம் சிறந்தவளே !
பாடல் 89
சிறக்கும் கமலத் திருவே !
நின் சேவடி சென்னி வைக்க,
துறக்கம் தரும்
நின் துணைவரும் ,
நீயும்
துரியமற்ற
உறக்கம் தர வந்து ,
உடம்போடு
உயிர் உறவு அற்று ,
அறிவு மறக்கும் பொழுது ,
என் முன்னே வரல் வேண்டும்
வருந்தியுமே !
சிறக்கும் கமலத் திருவே !
நின் சேவடி சென்னி வைக்க,
துறக்கம் தரும்
நின் துணைவரும் ,
நீயும்
துரியமற்ற
உறக்கம் தர வந்து ,
உடம்போடு
உயிர் உறவு அற்று ,
அறிவு மறக்கும் பொழுது ,
என் முன்னே வரல் வேண்டும்
வருந்தியுமே !
பாடல் 90
வருந்தா வகை
என் மனத் தாமரையில்
வந்து புகுந்து இருந்தாள் ,
பழைய இருப்பிடமாக !
இனி
எனக்கும்
பொருந்தாத ஒரு பொருளில்லை !
விண்மேவும் புலவருக்கு விழுந்தார்
வேலை மருந்தானதை
நல்கும் மெல்லியலே !
பாடல் 91
மெல்லிய நுண்ணிடை
மின்னனையாளை,
யானை விரிசடையோன் புல்லிய
மென்முலை பொன் அனையாளை ,
புகழ்ந்து ,
மறை சொல்லியவண்ணம்
தொழும் அடியாரை
தொழும் அவர்க்கு ,
பல்லியம் ஆர்த்தெழ
வெண்பகடு ஊரும்
பதம் தருமே !
பாடல் 92
பதத்தே உருக்கி ,
நின் பாதத்திலே மனம் பற்றி ,
உன் இதத்தே ஒழுக,
அடிமை கொண்டாய் !
இனி யான்
ஒருவர் மதத்தே
மதி மயங்கேன் !
அவர் போன வழியும், செல்லேன் !
முதல் தேவர் மூவரும் ,
யாவரும் போற்றும்
முகிழ் நகையே !
பாடல் 93
நகையே இது !
இந்த ஞாலமெல்லாம்
பெற்ற நாயகிக்கு,
முகையே !
முகிழ் முலை மானே !
முதுகண் முடிவுயில்
அந்த வகையே பிறவியும் !
வம்பே !
மலைமகள் என்பது நாம்,
மிகையே !
இவள்தன் தகைமையை
நாடி விரும்புவதே !
பாடல் 94
விரும்பித் தொழும் அடியார்
விழிநீர் மல்கி ,
மெய்புகளம் அரும்பி ,
ததும்பிய ஆனந்தமாகி ,
அறிவிழந்து ,
கரும்பிற் களித்து ,
மொழி தடுமாறி ,
முன் சொன்ன எல்லாம் தரும்
பித்தர் ஆவாரென்றால் ,
அபிராமி சமயம் நன்றே !
பாடல் 95
நன்றே வருகினும் ,
தீதே விளைகினும் .
நான் அறிவது ஒன்றேயுமில்லை !
உனக்கே பரம்,
எனக்கு உள்ளதெல்லாம்
அன்றே உனதென்று
அளித்துவிட்டேன் !
அழியாத குணக் குன்றே !
அருட்கடலே !
இமவான் பெற்ற கோமளமே !
பாடல் 96
கோமள வல்லியை ,
அல்லியந் தாமரைக் கோவில் வைகும்
யாமள வல்லியை ,
ஏதம் இலாளை ,
எழுதரிய
சாமள மேனி
சகல கலாப மயில் தன்னை ,
தன்னால்
ஆமளவும் தொழுவார் ,
எழு பாருக்குக்கும் ஆதிபரே !
பாடல் 97
ஆதித்தன்,
அம்புலி,
அங்கி,
குபேரன் ,
அமரர் தம் கோன் ,
போதிற் பிரமன்,
புராரி,
முராரி,
பொதிய முனி,
காதிப் பொருபடை கந்தன் ,
கணபதி,
காமன் முதல்,
சாதித்த புண்ணியர் எண்ணிலர் ,
போற்றுவர் தையலையே !!
பாடல் 98
தைவந்து
நின் அடித் தாமரை சூடிய
சங்கரர்க்கு ,
கை வந்த தீயும்,
தலை வந்த ஆறும் ,
கரலந்தது.. எங்கே ?
மெய்வந்த நெஞ்சில் அல்லால்,
ஒருகாலும்
விரகர் தங்கள்
பொய்வந்த நெஞ்சில்
புக அறியா
மடப் பூங்குயிலே !
நன்றே வருகினும் ,
தீதே விளைகினும் .
நான் அறிவது ஒன்றேயுமில்லை !
உனக்கே பரம்,
எனக்கு உள்ளதெல்லாம்
அன்றே உனதென்று
அளித்துவிட்டேன் !
அழியாத குணக் குன்றே !
அருட்கடலே !
இமவான் பெற்ற கோமளமே !
பாடல் 96
கோமள வல்லியை ,
அல்லியந் தாமரைக் கோவில் வைகும்
யாமள வல்லியை ,
ஏதம் இலாளை ,
எழுதரிய
சாமள மேனி
சகல கலாப மயில் தன்னை ,
தன்னால்
ஆமளவும் தொழுவார் ,
எழு பாருக்குக்கும் ஆதிபரே !
பாடல் 97
ஆதித்தன்,
அம்புலி,
அங்கி,
குபேரன் ,
அமரர் தம் கோன் ,
போதிற் பிரமன்,
புராரி,
முராரி,
பொதிய முனி,
காதிப் பொருபடை கந்தன் ,
கணபதி,
காமன் முதல்,
சாதித்த புண்ணியர் எண்ணிலர் ,
போற்றுவர் தையலையே !!
பாடல் 98
தைவந்து
நின் அடித் தாமரை சூடிய
சங்கரர்க்கு ,
கை வந்த தீயும்,
தலை வந்த ஆறும் ,
கரலந்தது.. எங்கே ?
மெய்வந்த நெஞ்சில் அல்லால்,
ஒருகாலும்
விரகர் தங்கள்
பொய்வந்த நெஞ்சில்
புக அறியா
மடப் பூங்குயிலே !
பாடல் 99
குயிலாய் இருக்கும் ,
கடம் பாடவியிடை !
கோல இயல்
மயிலாய் இருக்கும் ,
இமாசலத்திடை !
வந்துதித்த வெயிலாயிருக்கும்
விசும்பில் !
கமலத்தின் மீது அன்னமாம் !
கயிலாயருக்கு,
அன்று இமவான் அளித்த
கணங்குழையே !
குழியைத் தழுவிய
கொன்றையந் தார் கமழ்
கொங்கைவல்லி !
கழியைப் பொருத
திருநெடுந் தோளும் ,
கருப்பு வில்லும் .
விழையப் பொறு திறல்
வேரியம் பாணமும் ,
வெண்ணகையும் ,
உழையைப் பொரு கண்ணும் ,
நெஞ்சில்
எப்போதும் உதிக்கின்றவே !
முற்றும்.
நூற் பயன்
ஆத்தாளை ,
எங்கள் அபிராம வல்லியை ,
அண்டம் எல்லாம் பூத்தாளை ,
மாதுளம்பூ நிறத்தாளை ,
புவி அடங்க காத்தாளை ,
அங்கையில் பாசாங்குசமும் ,
கரும்பும்
அங்கை சேர்த்தாளை ,
முக்கண்ணியைத் தொழுவார்க்கு ,
ஒரு தீங்கில்லையே !!
@@@@@@@
Subscribe to:
Posts (Atom)
