Monday, 6 March 2017


கடலாடி  2

கடலாடி வன்னீஸ்வரர் கோவிலில் இருந்து வந்த வழியே சிறிது தூரம் சென்றால், கரைகண்டீஸ்வரர் கோவிலை அடையலாம். இந்த சாலை புதிதாக அமைக்கப்பெற்றிருப்பதால், சிறிது  கரடு முரடாகவே உள்ளது. கூகுள் வரைபடத்திலும்  காண முடியாது. அருகில் உள்ளவர்களை , கரை கண்டீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பாதை என விசாரித்துக்கொள்ள வேண்டும். 

வயல்களின் ஊடே, வளைந்து நெளிந்து செல்லும் பாதை. வாகனத்தில் இருந்து இறங்கி,  சிறிது தூரம் நடக்கவும் வேண்டியிருக்கும் .

மிக மிக பழமையான கோவில்.  
ஆறுமுகனின் திருவடி பட்ட இடம்.
பாவங்கள் கரைந்த இடம். 


செய்யாரின் வடகரையில் அமைந்துள்ள ஆலயம்.
இறைவன் :  கரைகண்டீஸ்வரர் 
இறைவி     :  பிருஹந்நாயகி 



நன்றி : Google Maps 





எமது  அடுத்த பயணம், செய்யாற்றின் வட கரையில் உள்ள காஞ்சி எனும் திருத்தலத்தை  நோக்கி..........




கடலாடி 

வாசுதேவன்பட்டு  கோவிலில் இருந்து சுமார் 14 km தொலைவில் உள்ள ஊர் ,
கடலாடி.  


சாலை ஓரத்திலேயே அமைந்திருக்கும், இந்த ஊரில், இரண்டு சிவன் கோவில்கள் உள்ளன. ஒன்று, ஊரின் உள்ளே  அமைந்துள்ளது.

இறைவன்   :  வன்னிஸ்வரர் 
இறைவி       :  காமாட்சி  









நன்றி : google Maps 




எங்களின்  அடுத்த பயணம், 
இந்த ஊரின் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் 
கரைகண்டீஸ்வரர்  ஆலயத்தை நோக்கி......






வாசுதேவன்பட்டு 


வாசுதேவன்பட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர்.
செய்யாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. செங்கத்தில் இருந்து போளுர்  செல்லும் சாலையில் சுமார் 24 km தூரத்தில் உள்ளது. இந்த சிற்றுரில் அப்படி என்னதான் விஷேசம் ?

அம்பிகையின் பாதம் பதிந்த இடம் என்பதே விஷேசமல்லவா?

அம்பிகை இங்கு வரக் காரணம், ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு.

காஞ்சிபுரத்தில், தவமிருந்து இறைவனை அடைந்த காமாட்சி, இறைவனிடம் இடப்பாகம் வேண்டுகிறாள். மனமிரங்கிய இறைவனும், அம்பிகையை திருவண்ணாமலை வர பணிக்கிறார். திருவண்ணாமலை நோக்கி பயணிக்கும் அம்பிகை , வாழைப்பந்தல் எனும் இடத்தில் தங்க நேரிடுகிறது. அங்கு இறைவனை பூஜிப்பதற்காக தண்ணீர் தேவைப்படுகிறது. உடன் வந்த முருகனை குறிப்பாக நோக்குகிறாள், அம்பிகை. குறிப்பறிந்த வேலவனும், மேற்கு நோக்கி வேலை எறிந்து,
ஒரு ஆற்றை உருவாக்குகிறார். சேயால் உருவாக்கப்பட்ட ஆறு சேயாறு. பின்னர் மருவி செய்யாறு ஆகிவிட்டது. 

ஆற்றில் வெள்ளம் பருகிவர, தண்ணீரின் நிறம் மாறுபடுகின்றது. காரணத்தை ஆராய்கிறான், வேலவன். வேலை எரிந்து, மலையைப் பிளந்த இடத்தில், தவம் செய்துகொண்டிருந்த ஏழு முனிவர்களின் மரணமே இந்த நிறமாற்றத்திற்குக் காரணம் என்பதை உணர்கிறான், வேலவன். 

இதனால் ஏற்பட்ட தோஷத்தைப் போக்குவதற்காக, சேயாற்றின் வடகரையில், ஏழு சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து , இறைவனை வழிபாட்டு, தன தோஷத்தைக் கரைத்துக் கொள்கிறான், வேலவன். 

முருகனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபடப்பட்ட ஏழு சிவலிங்கங்களும், கரைகண்டீஸ்வரர் என்ற பெயருடன் விளங்குகின்றது. 

முனிவர்களின் இறப்புக்கு, தானும் ஒரு காரணம் என்று கருதிய உமையவள், சேயாற்றின் தென்கரையில் ஏழு சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து தன் பாவங்களையும் போக்கிக்கொள்கிறாள், உமையவள். 

தாயும், சேயும் வணங்கிய இறைனை தரிசிப்பதுதான், எங்கள் குழுவின் நோக்கம்.

இந்த தளங்கள் எல்லாம், சிற்றுர்களில் சரியான கவனிப்பின்றி இருப்பதால், இறைவனை தரிசிக்க சிவராத்திரி தினத்தைத் தேர்ந்தெடுத்தோம், கோவிலை சத்தம் செய்வதற்காகவாது கோவில் திறந்திருக்கும் என்ற நம்பிக்கையில். எங்கள் நம்பிக்கை வீண்போகவில்லை..

இந்த ஊரில், நாங்கள் சென்றபோது, கோவில் மூடி  இருந்தாலும்,  அருகில் இருந்தவர்களை விசாரித்தபோது, அவர்கள் உடனடியாக,  எங்களின்  தரிசனத்திற்கு ஏற்பாடு செய்தனர். 

செய்யாரின் தென்கரையில், அம்பிகை வழிபட்ட முதல் தலம் , வாசுதேவன்பாட்டு.


இறைவன்  :  ஆட்கொண்டீஸ்வரர் 
இறைவி      :  சவுந்தர்யநாயகி 

நன்றி : google  Maps  




எங்களின்  அடுத்த பயணம் கடலாடி என்ற தலத்தை நோக்கி....



செங்கம் 


24/02/2017, மகாசிவராத்திரியன்று, நானும், எனது நண்பர்களும் சிவாலயங்களை தரிசிக்க, முதலில் சென்றடைந்த தலம் செங்கம். 

திருவண்ணாமலை - பெங்களூர் சாலையில், திருவண்ணாமலையில் இருந்து சுமார் 35 km தொலைவில் உள்ளது. மிகப் பழமையான சிவாலயம். மூவர் பெருமக்களில் ஒருவரான திருநாவுக்கரசரால்  தேவாரத்தில் குறிப்பிடப்பட்டு, வைப்புத்தலமாகக் கருதப்படுகிறது.

மண்ணிப் படிக்கரை வாழ்கொளிபுத்தூர்
வக்கரை மந்தாரம் வாரணாசி
வெண்ணி விளத்தொட்டி வேள்விக்குடி
விளமர் விராடபுரம் வேட்களத்தும்
பெண்ணை அருட்டுறை தண் பெண்ணாகடம்
பிரம்பில் பெரும்புலியூர் பெருவேளூரும்
கண்ணை களர் காறை கழிப்பாலையும்
கயிலாய நாதனையே காணலாமே.


சிறு வாகனம் என்றால் ஆலயம் வரை செல்லலாம். 





நன்றி ; Google Maps

Add caption

அடுத்ததாக எங்கள் பயணம் வாசுதேவன்பட்டு என்ற சிற்றுரை நோக்கி........

அடுத்ததாக 

Saturday, 5 March 2016


திருப்புன்கூர்
இறைவன் பெயர்  :  சிவலோகநாதர்
இறைவி பெயர்  :  சௌந்தர நாயகி, சொக்கநாயகி
வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில்
மேற்கே 3 கி.மி. சென்றால் 
ஒருபுறம் திருப்புன்கூர் கைகாட்டியும்,
 மறுபுறம் திருப்புன்கூர் சிவலோக நாதசுவாமி கோயில் என்ற வளைவும்  உள்ளது.
 அதனுள் - அச்சாலையில் 1.5 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம்.
சாலை ஓரத்திலேயே கோயில் 
உள்ளது. 
கோயில் வரை வாகனங்கள் செல்லும்.
இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும்,
மாலை 4 மணி முதல்  
இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

புங்க மரத்தடியின் கீழே சிவபெருமான் தரிசனம் கொடுப்பதால
திருப்புன்கூர் என்று இத்தலம் வழங்கப்படுகிறது.
திருநாளைப் போவார் நாயனார் (நந்தனார்) தம்மை நேராக தரிசனம் செய்து
வணங்கும் பொருட்டு இத்தலத்து  
இறைவன் சிவலோகநாதர்
 தமக்கு முன்னால் அமர்ந்திருந்த நந்தியை சிறிது விலகி இருக்குமாறு
 செய்தருளிய  
தலம் திருப்புன்கூர்.
 நந்தனார் கீழ் குலத்தில் பிறந்தவராதலால் ஆலயத்திற்குள் செல்வதற்கு
அனுமதி  
இல்லாததால் வெளியில் இருந்தே வழிபடுவார். 
அப்போது இறைவன் முன் இருக்கும் நந்தி
நன்றாக 
அவர் இறைவனைப் பார்க்க முடியாமல் மறைக்கும்.
 அதற்காக கவலைப்பட்டு ஆதங்கப்பட்ட அவருக்கு 
தரிசனம் கொடுக்க நந்தியை விலகச் சொல்லி
நந்தனாரின் பக்தியை உலகிற்கு எடுத்துக் காட்டிய தலம். 
எல்லா சிவன் கோவில்களிலும் உள்ள நந்தியின் நாக்கு வெளியில் தெரியும்படி இருக்கும்.
 ஆனால்  
நந்தனாருக்காக விலகிய இங்குள்ள நந்தியின் நாக்கு வெளியில் தெரிவதில்லை
.இங்குள்ள நந்திகேஸ்வரர்  மிகவும் அழகிய வேலைப்பாடுடன் 
ஒரே கல்லில் சிற்பமாக வடிக்கப்பட்ட சிறப்புடையதாகும். மேலும் 
இத்தலத்தில் ஆலயத்தின் மேற்புறம் உள்ள ரிஷப தீர்த்தம்
 நந்தனாருக்காக விநாயகர் ஒரே இரவில் 
வெட்டிய குளம் என்ற பெருமையுடையதாகும்.

கோவில் அமைப்பு: மூவர் பாடல் பெற்ற தலங்கள் வரிசையில் ஒன்றான இவ்வாலயம்
ஒரு 5 நிலை  
இராஜகோபுரத்துடனும், 2 பிராகாரங்களுடனும் காட்சி அளிக்கிறது.
 கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் 
விசாலமான திறந்த முற்றவெளி உள்ளது.
வெளிப்பிராகாரத்தில் குளம் வெட்டிய விநாயகர் சந்நிதியும், 
சுப்பிரமணியர் சந்நிதியும் தலமரமும் பிரம்மலிங்கமும் உள்ளன.
கவசமிட்ட கொடிமரத்தையும், பெரிய 
நந்தியையும் (சற்று விலகியுள்ளது) 
கடந்து சென்றால் உள் வாயிலை அடையலாம். உள்வாயிலின் மேற்புறத்தில் 
வண்ணச்சுதையில் பஞ்சமூர்த்திகள் காட்சி தருகின்றனர்.
துவார விநாயகரை வணங்கி உள்வாயிலைக் 
கடந்தால்
 உள்பிராகாரத்தில் இடப்பால் சூரியன், நால்வருடன் கலிக்காமரும் சேர்ந்த சந்நிதி.
 சுந்தரவிநாயகர்
  சந்நிதி முதலியவை உள்ளன. 

அடுத்துள்ள சோமாஸ்கந்தர் - பெரிய திருமேனி இத்தலத்திற்குரிய தனிச்சிறப்பு -
 தரிசிக்கத்தக்கது. 
அடுத்து சூரியன் அக்கினி வழிபட்ட லிங்கங்கள்.
ஆறுமுகர்சந்நிதி, தத்புருஷ், அகோர, வாமதேவ, சத்யோஜாத 
முகங்களின் பெயரில் அமைந்துள்ள லிங்கபாணங்கள்,
கஜலட்சுமி முதலிய சந்நிதிகள் உள்ளன. 
இடதுபுறம் அம்பாள் சந்நிதி தனியாக வலம் வரும் அமைப்புடன் உள்ளது.
நவக்கிரகம், பைரவர், சந்திரன்  
சந்நிதிகளைத் தொழுது வலம் முடித்துச் சென்றால்
 நேரே சுவாமி சந்நிதி. மூலவர் சற்று குட்டையான பாணத்துடன் காட்சி தருகிறார். 
இங்குள்ள சிவலிங்கம் மண் புற்றினால் ஆன சுயம்பு மூர்த்தியாகும்.
 சுயம்பு 
லிங்கத்தின் மீது குவளை சார்த்தியே காணப்படுகிறார்.
 புணுகு சட்டம் சார்த்தும் நாளில் மட்டும்
 கவசமின்றி 
மூலவரை தரிசிக்கலாம். 
இறைவன் கருவறை கோஷ்டங்களில் நர்த்தனவிநாயகர், பிட்சாடனர், அகத்தியர், 
தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை,
அர்த்தநாரீஸ்வரர், பைரவர் ஆகியோர் உள்ளனர்.
 பிரம்மா, 
இந்திரன், பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதர் மற்றும்
 ஏயர்கோன் கலிக்காம நாயனார், விறல் மீண்டர் ஆகியோர் 
இத்தலத்து இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றிருக்கின்றனர்.
இறைவன் சந்நிதிக்கு இடதுபுறம்
அம்பா
ள்  சொக்கநாயகியின் சந்நிதி தனிக்கோவிலாக
 ஒரு சுற்றுப் பிராகாரத்துடன் அமைந்துள்ளது

சுந்தரர் பதிகம்: ஒருமுறை சுந்தரரும் அவரது நண்பருமான
ஏயர்கோன் கலிக்காம நாயனாரும் இத்தலத்திற்கு 
வருகை புரிந்தனர். அச்சமயம் திருப்புன்கூரும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும்
பல காலமாக மழையின்றி 
இருந்ததால் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டனர்.
 இப்பகுதியை அரசாண்டு வந்த மன்னரிடம் 12 வேலி நிலம் 
ஆலயத்திற்குக் கொடுத்தால் மழை பெய்யும் என்று சுந்தரர் கூற அரசனும் சம்மதித்தான்.
அதன்படி சுந்தரர்  
பதிகம் பாடி மழை பெய்யச் செய்தருளி
 12 வேலி நிலமும், பிறகு விடாது பெய்த மழையை நிறுத்த
12 வேலி  
நிலமும் மன்னனிடம் பெற்று இந்த திருப்புன்கூர் கோவிலுக்குச் சேர்த்தார்.

இந்த வரலாற்றை சுந்தரர் "அந்தணாளன் உன அடைக்கலம் புகுந்த"
என்று தொடங்கும் தனது பதிகத்தின் 
2-வது பாடலில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.
வையகம் முற்றும் மாமழை மறந்து
வயலில் நீர்இலை மாநிலம் தருவோம்
உய்யக் கொள்கமற் றெங்களை என்ன
ஒளிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும்
பெய்யும் மாமழைப் பெருவெள்ளம் தவிர்த்துப்
பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளும்
செய்கை கண்டுநின் திருவடி அடைந்தேன்
செழும்பொ ழிற்றிருப் புன்கூருளானே.
சிவபெருமான் திரிபுரத்தை எரித்தபோது அழியாது பிழைத்த
அசுரர் மூவரில் இருவரை தனது திருக் கோயிலின் 
வாயில் காவலராகும்படி பணித்தபின்பு,
மற்றொருவனை தான் தடனம் ஆடும்பொது அழகிய மத்தளத்தை 
முழக்கும்படி அருள்செய்தார்.
சுந்தரர் தனது பதிகத்தின் 8-வது பாடலில் இதைக் குறிப்பிடுகிறார். 
திரிபுர அசுரர்களுக்கு அருள் செய்ததை அறிந்து அடியேன் உன் திருவடியை அடைந்தேன்,
என்னை ஏற்றுக் 
கொண்டருள் என்று தனது பாடலில் இறைவனை வேண்டுகிறார்.


மூவெயில் செற்ற ஞான்றுய்ந்த மூவரில்
இருவர் நின்திருக் கோயிலின் வாய்தல்
காவ லாளர்என் றேவிய பின்னை
ஒருவன் நீகரி காடரங் காக
மானை நோக்கியோர் மாநடம் மகிழ
மணிமு ழாமுழக் கவருள் செய்த
தேவ தேவநின் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே
இத்தலத்திலுள்ள நடராச சபையில் உள்ள நடராச வடிவம் கலையழகு வாய்ந்தது.
இத்தல
த்தில் சுந்தரர் பதிகத்தில் கூறியபடி 
நடராஜப் பெருமான் பாதத்தில் ஓர் உருவம் அமர்ந்து தன் நான்கு கரங்களாலும் 
பஞ்சமுக வாத்யத்தை அடித்து மணிமுழா முழக்குவதைக் காணலாம்.
 ( திருச்சிற்றம்பலம்  )