Friday, 4 April 2014

அபிராமி அந்தாதி ( 49 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  49


குரம்பை அடுத்துக் 
குடி புக்க 
ஆவி 
வெம் கூற்றுக்கு இட்ட 
வரம்பை அடுத்து 
மறுகும் , 

அப்போது 
வளைக்கை  அமைத்து 
அரம்பை  அடுத்த 
அரிவையர்  சூழ வந்து 
அஞ்சல்  என்பாய் !

நரம்பை அடுத்த 
இசைவடிவாய் 
நின்ற   நாயகியே  !

தொடரும் .....



அபிராமி அந்தாதி ( 48 )

அபிராமி  அந்தாதி

பாடல்  48


சுடரும் கலைமதி
துன்றும் 
சடைமுடிக் குன்றில் 
ஒன்றிப் படரும் 
பச்சைக் கொடியைப் 
பதித்து  நெஞ்சில்,

இடரும் தவிர்த்து 
இமைப்போது  இருப்பார் 
பின்னும்  எய்துவரோ 
குடரும்,
கொழுவும், 
குருதியும்  தோயும் 
குரம்பையிலே !

தொடரும் ....

Thursday, 3 April 2014

அபிராமி அந்தாதி ( 47 )

அபிராமி  அந்தாதி  

பாடல்  47


வாழும்படி  
ஒன்று கண்டு கொண்டேன் 
மனத்தே !

ஒருவர் 
விழும்படி யன்று ,
விள்ளும்படி  யன்று .

வேலை நிலம் 
எழும்  பருவரை 
எட்டும் எட்டாமல் 
இரவு பகல் 
சூழும்  சுடர்க்கு 
நடுவே கிடந்து 
சுடர்கின்றதே  !

தொடரும் ......

அபிராமி அந்தாதி ( 46 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  46


வெறுக்கும்  தகைமைகள்  
செய்யினும் 
தம்  அடியாரை  மிக்கோர்  
பொறுக்கும்  தகைமை  
புதிய தன்றே !

புது  நஞ்சை உண்டு 
கறுக்கும்  திருமிடற்றான் 
இடப்பாகம்  கலந்த  பொன்னே !

மறுக்கும்  தகைமைகள்  
செய்யினும் 
யான் உன்னை 
வாழ்த்துவனே  !


தொடரும் ....

Wednesday, 2 April 2014

அபிராமி அந்தாதி ( 45 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  45


தொண்டு  செய்யாது,
நின் பாதம்  தொழாது,
துணிந்து 
இச்சையே  பண்டு செய்தார் 
உளரோ, இலரோ ?

அப்பரிசு,
அடியேன்  கண்டு செய்தால்,
அது  கை தவமோ ,
அன்றிச்  செய்தவமோ ?

மிண்டு  செய்தாலும் 
பொறுக்கை  நன்றே,
பின் வெறுக்கை  யன்றே !

தொடரும் ....

அபிராமி அந்தாதி ( 44 )

அபிராமி  அந்தாதி  

பாடல்  44


தவளே !

இவள் ,
எங்கள்  சங்கரனார் 
மனை  மங்கலமாம் !

அவளே , 
அவர் தமக்கு  
அன்னையும்  ஆயினள் !

ஆகையினால்,
இவளே,
கடவுளர்  யாவர்க்கும்  
மேலை  இறைவியும் ஆம் !

துவளேன் இனி, 
ஒரு  தெய்வம்  உண்டாக 
மெய்த் தொண்டு  செய்தே  !

தொடரும் ......

அபிராமி அந்தாதி ( 43 )

அபிராமி  அந்தாதி  

பாடல்  43


பரிபுரச்  சீறடி !
பாசாங்குசை !
பஞ்ச பாணி  !

இன்சொல்  திரிபுர  சுந்தரி !
சிந்துர  மேனியள்  !

தீமை நெஞ்சில்  
பரிபுர  வஞ்சரை  அஞ்சக்  குனி 
பொரும்புச் சிலைக்கை 
எரிபுரை  மேனி !

இறைவர்  செம் பாகத்து  
இருந்தவளே !


தொடரும் ....