Wednesday, 9 April 2014

அபிராமி அந்தாதி ( 56 )

அபிராமி  அந்தாதி  

பாடல்  56  


ஒன்றாய்  அரும்பி 
பலவாய்  விரிந்து 
இவ்வுலகு  எங்குமாய்  நின்றாள் !

அனைத்தையும் 
நீங்கி  நிற்பாள் !

என்தன்   நெஞ்சின் உள்ளே 
பொன்றாது  நின்று  புரிகின்றவா !

இப்பொருள்  அறிவார்,  
அன்று 
ஆல்  இலையில்  துயின்ற  பெம்மானும்,
என்  ஐயனுமே  ! !


தொடரும் .....




அபிராமி அந்தாதி (55 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  55


மின் ஆயிரம்  
ஒரு  மெய்  வடிவாகி 
விளங்குகின்ற அன்னாள் 

அகம் மகிழ்  
ஆனந்த வல்லி  

அருமறைக்கு  
முன்னால்,  
நடுவு,  
எங்குமாய் 
முடிவாய  
முதல்வி தன்னை 

உன்னாது  ஒழியினும் 
உன்னினும் 
வேண்டுவது  ஒன்றில்லையே !!


தொடரும் ....

அபிராமி அந்தாதி ( 54 )

அபிராமி  அந்தாதி  

பாடல் 54


இல்லாமை  சொல்லி  
ஒருவர் தம்பால் சென்று 

இழிவுபட்டு  நில்லாமை 
நெஞ்சில்  நிலைகுவரேல். 

நித்தம்  நீடுதவம் கல்லாமை 
கற்ற  கயவர் தம்பால் 

ஒரு காலத்திலும் 
செல்லாமை  வைத்த 

திரிபுரை  பாதங்கள்  
சேர்மின்களே !!

தொடரும் .....




Saturday, 5 April 2014

அபிராமி அந்தாதி ( 53 )

அபிராமி  அந்தாதி  

பாடல்  53


சின்னம்  சிறிய  மருங்கினில் 
சாத்திய 
செய்யப் பட்டும்,
பென்னம் பெரிய முலையும் ,
பிச்சி மொய்த்த 
கன்னம் கரிய குழலும் ,
கண்  மூன்றும் 
கருத்தில் வைத்துத் 
தன்னந்தனி  இருப்பார்க்கு 
இதுபோலும் 
தவம்  இல்லையே  !!  


தொடரும்  ....



அபிராமி அந்தாதி ( 52 )

அபிராமி  அந்தாதி  

பாடல்  52


வையம் ,
துரகம் ,
மதகரி ,
மாமகுடம் ,
சிவிகை ,
பெய்யும் கனகம் ,
பெருவிலை  ஆரம் ,
பிறை  முடித்த 
ஐயன்  திருமனையாள் 
திருவடிக்கு , 
அன்பு 
முன்பு செய்யும் 
தவம்  உடையார்க்கு 
உளவாகிய  சின்னங்களே  !!

தொடரும் ....


அபிராமி அந்தாதி ( 51 )

அபிராமி  அந்தாதி  

பாடல்  51


அரணம், பொருள்  என்று 
அருள் ஒன்று  இலாத 
அசுரர்  தங்கள் 
முரண்  அன்று  அழிய  
முனிந்த  பெம்மானும்,
முகுந்தனுமே 
சரணம் சரணம்  எனநின்ற 
நாயகி தன் அடியார் 
மரணம்  பிறவி  
இரண்டும்  எய்தார்,   
இந்த  வையகத்தே !


தொடரும் .....

Friday, 4 April 2014

அபிராமி அந்தாதி ( 50 )


அபிராமி  அந்தாதி 


பாடல்  50


நாயகி ,
நான்முகி ,
நாராயணி ,
கை நளின பஞ்ச சாயகி ,
சாம்பவி,
சங்கரி,
சாமளை ,
சாதி நச்சு வாய் அகி ,
மாலினி ,
வாராகி ,
சூலினி ,
மாதங்கி  என்று 
ஆய  கியாதியுடையாள் 
சரணம் !

அரண்  நமக்கே !

தொடரும் ......