Tuesday, 11 February 2014

அபிராமி அந்தாதி ( 13 )

அபிராமி அந்தாதி 

பாடல்  13




பூத்தவளே !

புவனம்  பதினான்கையும் 
பூத்த வண்ணம் 
காத்தவளே !

பின்  கரந்தவளே !

கறைக்  கண்டனுக்கு 
மூத்தவளே !

என்றும் 
மூவா  முகுந்தற்கு 
இளையவளே !

மாத்தவளே !

உன்னை அன்றி  
மற்றோர்  தெய்வம்..

வந்திப்பதே !!

தொடரும் ....

அபிராமி அந்தாதி ( 12 )

அபிராமி  அந்தாதி 



பாடல்  12

கண்ணியது, 
உன்  புகழ்.!

கற்பது  
உன்  நாமம் !

கசிந்து  பத்தி 
பண்ணியது,
உன்  இரு பாதம் 
புயத்தில் !

பகல் இரவா 
நண்ணியது,
உன்னை நயந்தோர் 
அவையத்து !

நான் 
முன்  செய்த 
புண்ணியம் ஏது?
என் அம்மே !!

புவி 
ஏழையும், 
பூத்தவளே !!


தொடரும்....







Friday, 7 February 2014

அபிராமி அந்தாதி ( 11 )

அபிராமி  அந்தாதி 






பாடல்  11

ஆனந்தமாய்,
என்  அறிவாய்,
நிறைந்த  அமுதமாய்,
வான்  அந்தமான  
வடிவுடையாள் !

மறை  நான்கினுக்கும்,
தான்  அந்தமான  
சரணார விந்தம் ,
தவள  நிறக்  கானம்,
தம்  ஆடரங்காம்,

எம்பிரான்  முடிக் 
கண்ணியதே !!

தொடரும்..




Thursday, 6 February 2014

அபிராமி அந்தாதி ( 10 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  10



நின்றும்,
இருந்தும்,
கிடந்தும்,
நடந்தும்  
நினைப்பது  உன்னை !!

என்றும்  வணங்குவது  
உன்  மலர்த்தாள்  !!

எழுதா  மறையின்  
ஒன்றும்  அரும்பொருளே !

அருளே !

உமையே !!

இமயத்து  அன்றும்  
பிறந்தவளே  !!

அழியா  முக்தி  
ஆனந்தமே  !!




தொடரும்.



Wednesday, 5 February 2014

அபிராமி அந்தாதி ( 9 )

அபிராமி  அந்தாதி 






பாடல்  9

கருத்தன
எந்தைதன்  கண்ணென,

வண்ணக்  கனக வெற்பிற் 
பெருத்தன,

பால்  அழும்  பிள்ளைக்கு 
நல்கின!

பேரருள் கூர் திருத்தன  பாரமும்,
ஆரமும்,
செங்கைச்  சிலையும்,
முருத்தன மூரலும்,

நீயும்  அம்மே !!

வந்து  என்முன்  
நிற்கவே !!



Tuesday, 4 February 2014

அபிராமி அந்தாதி ( 8 )

அபிராமி  அந்தாதி

பாடல்  8



சுந்தரி  !!

எந்தைத்  துணைவி !

என்

 பாசத்  தொடரை  எல்லாம்

வந்து அரி !

சிந்தூர  வண்ணத்தினாள் !

மகிடன்  தலைமேல்  

அந்தரி !

நீலி !!

அழியாத  கன்னிகை !!

ஆரணத்தோன்  சுந்தரி !

கைத்தலத்தாள்!

மலர்த்தாள்  

என்  கருத்தனவே !


அன்னை அபிராமியின்  பாதங்களே  உறு  துணை.




அபிராமி அந்தாதி ( 7 )

அபிராமி  அந்தாதி

பாடல்  7


ததியுறு  மத்தில் சுழலும் 

என்  ஆவி 

தளர்விலதோர்,  

கதிஉறு   வண்ணம்  

கருது கண்டாய் !

கமலாலயனும்,

மதிஉறு  வேணி  மகிழ்நனும் ,

மாலும்  

வணங்கி  என்றும் 

துதிஉறு   சேவடியாய் !!

சிந்தூரானன  

சுந்தரியே !!



இம்மைக்கும்  மறுமைக்கும்  அன்னை  அபிராமியே  துணை.