Monday, 24 February 2014

அபிராமி அந்தாதி ( 20 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  20



உறைகின்ற நின் திருக்கோயில்,
நின்  கேள்வர் ,
ஒரு பக்கமோ !

அறைகின்ற 
நான் மறையின் 
அடியோ, முடியோ !

அமுதம்  நிறைகின்ற 
வெண் திங்களோ ,
கஞ்சமோ !
எந்தன்  நெஞ்சகமோ !

மறைகின்ற  வாரிதியோ !

பூரணாசல  மங்கலையே !!


தொடரும்  ...


Monday, 17 February 2014

அபிராமி அந்தாதி ( 19 )

அபிராமி அந்தாதி 

பாடல்  19



வெளிநின்ற  
நின்  திருமேனியைப்  பார்த்து,
என்  விழியும்,
நெஞ்சும்,
களிநின்ற  வெள்ளம் 
கரை  கண்டதில்லை !

கருத்தின் உள்ளே 
தெளிகின்ற  ஞானம்
திகழ்கின்றது 
என்ன  திருவுளமோ ?

ஒளி  நின்ற  கோணங்கள் ,
ஒன்பதும் 
மேவி  உறைபவளே  !!


தொடரும் .....
  

அபிராமி அந்தாதி ( 18 )

அபிராமி  அந்தாதி  

பாடல்  18


வவ்விய  பாகத்து 
இறைவரும்,
நீயும்,
மகிழ்ந்திருக்கும்  செவ்வியும்,

உங்கள்  திருமணக் கோலமும் ,

சிந்தையுள்ளே  அவ்வியம்  தீர்த்து,
என்னை  ஆண்ட 
பொற்பாதமும்  ஆகிவந்து,

வெவ்விய  காலன்,
என்மேல்  வரும்போது 

வெளி நிற்கவே  !!

தொடரும் ....

Saturday, 15 February 2014

அபிராமி அந்தாதி ( 17 )

அபிராமி  அந்தாதி 

 பாடல் 17



அதிசயமான  வடிவுடையாள்  !!

அரவிந்தமெல்லாம், 
துதிசயமான  சுந்தரவல்லி  !!

துணை  இரதி 
பதிசயமானது
அபசயமாக, 

முன் 
பார்த்தவர் தம் 
மதிசயம்  ஆகவன்றோ  ?

வாம  பாகத்தை 
வவ்வியதே  !!

தொடரும்.....


Friday, 14 February 2014

அபிராமி அந்தாதி ( 16 )

அபிராமி அந்தாதி  

பாடல்  16






கிளியே !!

கிளைஞர்   மனத்தே
கிடந்து 
கிளர்ந்து 
ஒளிரும் 
ஒளியே  ! !

ஒளிரும்  
ஒளிக்கு,  இடமே !!

எண்ணில்,
ஒன்றுமில்லா  வெளியே  !!

வெளி முதல்  பூதங்களாகி 
விரிந்த,
அம்மே !!

அளியேன் 
அறிவு அளவிற்கு, 
அளவானது 
அதிசயமே !!




கிளி போன்ற தாயே! உன் அடியார் மனத்தினில்  சுடர் விட்டுப் பிரகாசிக்கும் 
  
ஒளியே! அவ்வாறு ஒளிரும் ஒளிக்கு நிலையாக இருப்பவளே! ஒன்றுமே

இல்லாத அண்டமாகவும், அவ்வண்டத்தினில் ஐம்பெரும் பூதங்களாகவும்

விரிந்து நின்ற தாயே! எளியேனாகிய என் சிற்றறிவு அறியும் அளவிற்கு நீ

நின்றதும் அதிசயமே !!


தொடரும்.....

அபிராமி அந்தாதி ( 15 )

அபிராமி அந்தாதி 

பாடல்  15



தண்  அளிக்கு  என்று,
     முன்னே 
     பல  கோடி  
      தவங்கள்  செய்வார்,

மண்  அளிக்கும் 
     செல்வமோ 
     பெறுவார்  ?

மதிவானவர்  தம் 
    விண்  அளிக்கும் 
    செல்வம் 

அழியா முக்தியும்,
    வீடும் 
    அன்றோ ?

பண்  அளிக்கும் சொல் 
   பரிமள  யாமளைப் 
பைங்கிளியே  !!


தொடரும்  ...


Wednesday, 12 February 2014

அபிராமி அந்தாதி ( 14 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  14 


வந்திப்பவர்  
உன்னை,
வானவர், தானவர் 
ஆனவர்கள்!

சிந்திப்பவர்,
நல் திசைமுகர்  
நாரணர் !

சிந்தையுள்ளே  பந்திப்பவர்,
அழியாப் 
பரமானந்தர் !

பாரில் 
உன்னைச் 
சந்திப்பவர்க்கு  எளிதாம்,

எம்பிராட்டி!

நின்
தண்  அளியே !!

தொடரும்....