| திருவெண்ணைநல்லூர் |
|
இறைவன் பெயர் :
தடுத்து ஆட்கொண்ட நாதர், கிருபாபுரீஸ்வரர், வேணுபுரீஸ்வரர் |
| இறைவி பெயர் :
வேற்கண்ணி அம்மை, மங்களாம்பிகை |
|
திருக்கோவிலூரில்
இருந்து தென்கிழக்கே சுமார் 20 கி.மி. தொலைவிலும், விழுப்புரத்திலிருந்து 22
கி.மீ. தொலைவிலும் பெண்ணையாற்றின் தென்கரையில் |
| திருவெண்ணைநல்லூர் தலம் அமைந்துள்ளது. |
| திருக்கோவிலூரில்
இருந்து அரசூர் செல்லும் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். |
|
இவ்வாலயம்
தினந்தோறும் காலை 6-00 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5-00 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
|
|
| ஆலய
தொடர்புக்கு: 93456 60711 |
|
| இத்தலத்தில்,
இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார். |
| கிழவராக
வந்து , சிவா லிங்கத்தில் ஐக்கியமாகும் முன் , கருவறை வாசலில் |
| சிவபெருமான்
கழற்றி வைத்த பாதுகைகள் இன்றும் இத்தலத்தில் உள்ளது. |
சுந்தரருக்கும்,
கிழவராக வந்த சிவபெருமானுக்கும் பெரியோர்களால், பஞ்சாயத்து நடத்தப்பட்ட மண்டபம்
இன்றும் உள்ளது. |
| பரமன்
சாய்ந்திருந்த தூண் இன்றும் வெதுவெதுப்பாக உள்ளது. |
| அருச்சுனனுக்கு
மகப்பேறு அளித்த விஜய லிங்கம் உள்ளது. |
| தேவேந்திரன்
பூஜித்த சுந்தர லிங்கம் உள்ளது. |
| மஹாவிஷ்ணு
பூஜித்த சங்கர லிங்கம் உள்ளது. |
தன்
மீது திருப்புகழ் பாடிய அருணகிரிநாதருக்கு , முருகன் மயிலோடு நடனமாடி காட்சி
தந்த திருத்தலம் இது. |
|
| தருமனும்,
பாஞ்சாலியும் தனித்திருந்ததை பார்த்ததால் உண்டான பாவத்தை , |
| அருச்சுனன்,
இங்கு இறைவனை நோக்கி தவமிருந்து போக்கிக் கொண்டான். |
கருவுற்ற பசுவை வேள்வி செய்த
பாவத்தை, வித கோத்திரர் எனும் அந்தணர் , இங்கு வந்து அருள்துறை தீர்த்தத்தில் நீராடி, |
| இறைவனை
பாடி பணிந்து போக்கிக் கொண்டார். |
|
மகிஷனை
வதம் செய்த ஆக்ரோஷம் தீர நதியில் குளித்து , மங்களம் பெற்றதால் , அம்பிகைக்கு
மங்களாம்பிகை என்று பெயர் . |
| அம்பிகை , நான்கு திருக்கரங்களுடன் , நின்ற கோலத்தில் அருள் புரிகிறார். |
சங்கநிதி,
பதும நிதி, ஸ்ரீ சக்கரத்துடனும், சிம்ம வாகனத்துடனும் இருக்கும் |
அம்பிகையை
தரிசனம் செய்வது என்பது, முற்பிறவியின் பயனே ! |
|
| தல
புராணம் |
|
திருமண
நாளன்று, திரு நாவலூரில் திருமணக்கோலத்தில் இருந்த சுந்தரரை, ஈசன்
தடுத்து ஆட்கொள்கிறார். |
சுத்தரருக்கும்,
சிவபெருமானுக்கும் வழக்கு நடந்த இடம் இதுவே. இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட
சுந்தரர், |
| "
பித்தா பிறை சூடி " என்ற புகழ்பெற்ற பாடலை பாடிய தலம் இதுவே. |
தாருகாவனத்து
முனிவர்கள் இறைவனை கொல்ல , வேள்வியில் தோன்றிய யானையை ஏவினர். |
அவர்கள் எண்ணம்
ஈடேரவில்லை. அவர்கள் ஆணவம் அழிந்து, இத்தலத்தில், இறைவனை நோக்கி தவம்
புரிந்தனர். |
இறைவனும்,
அவர்களின் தவறை மன்னித்து அருள் புரிந்தார். எனவே இத்தலம் அருள் துறை என
பெயர் பெற்றது. |
|
| பித்தா பிறைசூடீ பெருமானே
அருளாளா |
| எத்தான் மறவாதே நினைக்கின்றேன்
மனத்துன்னை |
| வைத்தாய் - பெண்ணைத்
தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்
துறையுள் |
| அத்தா உனக் காளாய் இனி அல்லேன்
எனலாமே. |
|
| திருப்புகழ் |
| தனதன
தத்தன தனதன தத்தன |
| தனதன
தத்தன தனதன தத்தன |
| தனதன
தத்தன தனதன தத்தன ...... தனதான |
|
|
| .........
பாடல் ......... |
| பலபல
தத்துவ மதனையெ ரித்திருள் |
| பரையர
ணப்படர் வடவன லுக்கிரை |
| படநட
நச்சுடர் பெருவெளி யிற்கொள ...... விடமேவிப் |
|
| பவனமொ
ழித்திரு வழியைய டைத்தொரு |
| பருதிவ
ழிப்பட விடல்கக னத்தொடு |
| பவுரிகொ
ளச்சிவ மயமென முற்றிய ...... பரமூடே |
|
| கலகலெ
னக்கழல் பரிபுர பொற்பத |
| வொலிமலி
யத்திரு நடனமி யற்றிய |
| கனகச
பைக்குளி லுருகிநி றைக்கட ...... லதில்மூழ்கிக் |
|
| கவுரிமி
னற்சடை யரனொடு நித்தமொ |
| டனகச
கத்துவம் வருதலு மிப்படி |
| கழியந
லக்கினி நிறமென விற்றுட ...... லருள்வாயே |
|
| புலையர்பொ
டித்தளும் அமணரு டற்களை |
| நிரையில்க
ழுக்களி லுறவிடு சித்திர |
| புலவனெ
னச்சில விருதுப டைத்திடு ...... மிளையோனே |
|
| புனமலை
யிற்குற மகளய லுற்றொரு |
| கிழவனெ
னச்சுனை தனிலவ ளைப்புய |
| புளகித
முற்றிபம் வரவணை யப்புணர் ...... மணிமார்பா |
|
| மலைசிலை
பற்றிய கடவுளி டத்துறை |
| கிழவிய
றச்சுக குமரித கப்பனை |
| மழுகொடு
வெட்டிய நிமலிகை பெற்றருள் ...... முருகோனே |
|
| மகிழ்பெணை
யிற்கரை பொழில்முகில் சுற்றிய |
| திருவெணெய்
நற்பதி புகழ்பெற அற்புத |
| மயிலின்மி
சைக்கொடு திருநட மிட்டுறை ...... பெருமாளே. |
|
| .........
சொல் விளக்கம் ......... |
|
| பலபல
தத்துவம் அதனை எரித்து இருள் பரை அரணப் படர் |
| வட
அனலுக்கு இரை பட ... பலபல தத்துவ சேஷ்டைகளையும், |
| அஞ்ஞான
இருளையும் எரித்து, சிவசக்தியே காவலாக துக்கங்களை |
| வடவா
முகாக்கினிக்கு இரையாகும்படி ஆக்கி, |
|
| நடநச்
சுடர் பெரு வெளியில் கொ(ள்)ள இடம் மேவி பவனம் |
| ஒழித்து
இரு வழியை அடைத்து ... நடன ஜோதியை பரந்த ஆகாச |
| வெளியில்
கண்டு கொள்ளும்படியாக (விந்து நாதம் கூடும்) முகப்பில் |
| சேர்ந்து,
வாயுவை அடக்கி, இடகலை, பிங்கலை* என்ற இரண்டு |
| வழிகளையும்
மாற்றி அடைத்து, |
|
| ஒரு
பருதி வழிப் படவிடல் ககனத்தொடு பவுரி கொ(ள்)ளச் |
| சிவமயம்
என முற்றிய பரம் ஊடே ... ஒப்பற்ற சூரிய ஜோதியின் |
| பிரகாச
நிலையில் அமைந்து, ஆகாய வெளியில் நடனம் கொள்ள சிவ |
| மயமாய்
முற்றும் பரந்த பர வெளியில், |
| திருவெண்ணைநல்லூர் ( 5 ) |
| கலகல
எனக் கழல் பரிபுர(ம்) பொன் பத ஒலி மலியத் திரு |
| நடனம்
இயற்றிய கனக சபைக்குளில் உருகி நிறைக் கடல் |
| அதில்
மூழ்கி ... கலகல என்று கழலுகின்ற சிலம்பும் அழகிய
திருவடியின் |
| ஒலி
நிரம்ப, திரு நடனம் புரிந்த பொன் அம்பலத்தில் உருகி, நிறைந்த |
| சுகானந்தக்
கடலில் முழுகி, |
|
| கவுரி
மின்னல் சடை அரனொடு நித்தமொடு அனக |
| சகத்துவம்
வருதலும் இப்படி கழிய நலக்கு இனி நிறம் என் |
| நவிற்று
உடல் அருள்வாயே ... பார்வதி தேவி மின்னலை ஒத்த |
| சடையையுடைய
சிவபெருமான் ஆகியவரோடு தினந்தோறும் குற்றமற்ற |
| உலக
தத்துவமே நீயாகத் தோன்றும் நிலை வந்து கூடவும், இவ்வாறு |
| கழியும்படியான
நன்மையால், இனி புகழொளி எனக் கூறப்படும் உடலை |
| எனக்குத்
தந்தருளுக. |
|
| புலையர்
பொடித்தளும் அமணர் உடல்களை நிரையில் |
| கழுக்களில்
உற விடு சித்திர புலவன் எனச் சில விருது |
| படைத்திடும்
இளையோனே ... இழிந்தவர்களும், திருநீற்றை |
| விலக்கித்
தள்ளுபவர்களும் ஆகிய சமணர்களின் உடல்களை கழு முனை |
| வரிசைகளில்
பொருந்தவிட்டவனும், சித்திரக் கவி பாடவல்ல புலமை |
| கொண்டவன்
என்று சில வெற்றிச் சின்னங்களைப் பெற்றவனுமாகிய |
| (திருஞானசம்பந்தர்
என்னும்) இளையவனே, |
|
|
|
|
| புன
மலையில் குற மகள் அயல் உற்று ஒரு கிழவன் எனச் |
| சுனை
தனில் அவள் ஐப் புய(ம்) புளகிதம் உற்று இபம் வர |
| அணையப்
புணர் மணி மார்பா ... தினைப் புனம் உள்ள வள்ளி |
| மலையில்
குறப் பெண் வள்ளியின் பக்கத்தில் சென்று, ஒரு கிழவன் |
| என வேடம்
பூண்டு, சுனையில் அவளுடைய அழகிய புயத்தை |
| புளகாங்கிதத்துடன்,
யானை வந்து எதிர்ப்பட, தழுவிப் புணர்ந்த அழகிய |
| மார்பனே, |
|
| மலை சிலை
பற்றிய கடவுள் இடத்து உறை கிழவி அறச் சுக |
| குமரி
தகப்பனை மழு கொ(ண்)டு வெட்டிய நிமலிகை பெற்று |
| அருள்
முருகோனே ... மேரு மலையை வில்லாகப் பிடித்த |
| சிவபெருமானது
இடது பாகத்தில் இருக்கின்ற உரிமை வாய்ந்தவள், |
| தருமமே
புரியும் சுக குமரி, பிதாவாகிய தக்ஷனை மழுவைக் கொண்டு |
| வெட்டிய
தூய்மையானவள் ஆகிய (தாக்ஷாயாணி என்ற) உமாதேவி |
| பெற்றருளிய
முருகோனே, |
|
| மகிழ்
பெ(ண்)ணையில் கரை பொழில் முகில் சுற்றிய |
| திருவெ(ண்)ணெய்
நல் பதி புகழ் பெற அற்புத மயிலின் |
| மிசைக்
கொடு திரு நடம் இட்டு உறை பெருமாளே. ... மகிழ்ச்சி |
| தரும்
பெண்ணையாற்றின் கரையில், சோலையும் மேகங்களும் சூழ்ந்த |
| திருவெண்ணெய்நல்லூர்**
என்னும் நல்ல ஊரில், புகழ் விளங்க |
| அற்புதமான
மயிலின் மீது வீற்றிருந்து திரு நடனம் புரிந்து விளங்கும் |
| பெருமாளே. |
|
|
| * இங்கு
சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. |
| அதன்
சுருக்கம் வருமாறு: |
| நாம்
உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு |
| ரேசகம்'
என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று |
| பெயர்.
உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், |
| சக்கரங்கள்)
மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம |
| கபால'த்தில்
உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். |
| இந்த
ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் |
| ஊட்டப்பட்டு,
மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த |
| ஆதாரங்களை
ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, |
ஆதித்த,
சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை,சுழுமுனை முதலியன)
உள்ளன. |
|
| 'இடைகலை'
பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம். |
| 'பிங்கலை'
பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம். |
| சுழு
முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது. |
| 'சுழு
முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் |
| ஒன்றுக்கொன்று
பின்னி நிற்பன. |
சுவாச
நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும். |
| ( திருச்சிற்றம்பலம் ) |
|