Saturday 6 June 2020

சிவ புராணம் ( 28 )

28. நரசிம்மருக்குத் தரிசனம் தந்த சரபர்

ஒரு சமயம் சனகாதி முனிவர்கள் மஹாவிஷ்ணுவைத் தரிசனம் செய்ய வைகுந்தம் வந்தனர். அப்போது வாயிற் காவலர்களான ஜய விஜயர் இருவரும் முனி குமாரர்களை உள்ளே செல்லக் கூடாதென தடுத்து நிறுத்தி விட்டனர். அதனால் கோபமுற்ற அவர்கள், காவலர் இருவரையும் வைகுந்தப் பதவியை இழந்து பூலோகத்திலே மானிடனாகப் பிறந்து துன்புறும்படி சபித்து விட்டனர்.
இதை அறிந்தபோது விஷ்ணு வருத்தமடைந்து ஜய விஜயர் இருவரையும் கடிந்துகொண்டு முனி குமாரர்களிடம் மன்னிப்புக் கோரும்படி கூறினார். அவரும் சனகாதி முனிவர்களை சாந்தப்படுத்தி அவர்கள் இருவரையும் மன்னித்து அருளுமாறு தெரிவித்தார்.
பிரபோ, அவர்கள் செய்த குற்றத்துக்கான தண்டனையை அனுபவித்துத்தான் ஆகவேண்டும். இருப்பினும் ஒரு மாறுதல் செய்யலாம். உங்கள் பக்தர்களாக ஏழு ஜென்மமெடுத்துப் பின்னர் உங்களை வந்து அடையட்டும். அல்லது உங்களுக்கு விரோதியாக மூன்று ஜென்மங்கள் எடுத்து உமது கையால் அழிக்கப்பட்டு வைகுந்தத்தை அடையட்டும். இதில் எது விருப்பமோ அவ்வாறு செய்யலாம்" என்றனர் முனிவர்கள்.
ஏழு ஜென்மங்கள் விஷ்ணுவை விட்டுப் பிரிந்திருக்க விரும்பாத அவர்கள் இருவரும் மூன்று ஜென்மங்கள் அவருக்கு விரோதியாக இருந்து அவரால் அழிவு பெறுவதையே விரும்பினர். அவ்வாறே ஜய விஜயர் இருவரும் காசிபர் வமிசத்தில் ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு என்னும் பெயருடைய அசுரர்களாக வந்து பிறந்தனர்.
ஒரு சமயம் சனகாதி முனிவர்கள் மஹாவிஷ்ணுவைத் தரிசனம் செய்ய வைகுந்தம் வந்தனர். அப்போது வாயிற் காவலர்களான ஜய விஜயர் இருவரும் முனி குமாரர்களை உள்ளே செல்லக் கூடாதென தடுத்து நிறுத்தி விட்டனர். அதனால் கோபமுற்ற அவர்கள், காவலர் இருவரையும் வைகுந்தப் பதவியை இழந்து பூலோகத்திலே மானிடனாகப் பிறந்து துன்புறும்படி சபித்து விட்டனர்.
இதை அறிந்தபோது விஷ்ணு வருத்தமடைந்து ஜய விஜயர் இருவரையும் கடிந்துகொண்டு முனி குமாரர்களிடம் மன்னிப்புக் கோரும்படி கூறினார். அவரும் சனகாதி முனிவர்களை சாந்தப்படுத்தி அவர்கள் இருவரையும் மன்னித்து அருளுமாறு தெரிவித்தார்.
பிரபோ, அவர்கள் செய்த குற்றத்துக்கான தண்டனையை அனுபவித்துத்தான் ஆகவேண்டும். இருப்பினும் ஒரு மாறுதல் செய்யலாம். உங்கள் பக்தர்களாக ஏழு ஜென்மமெடுத்துப் பின்னர் உங்களை வந்து அடையட்டும். அல்லது உங்களுக்கு விரோதியாக மூன்று ஜென்மங்கள் எடுத்து உமது கையால் அழிக்கப்பட்டு வைகுந்தத்தை அடையட்டும். இதில் எது விருப்பமோ அவ்வாறு செய்யலாம்" என்றனர் முனிவர்கள்.
ஏழு ஜென்மங்கள் விஷ்ணுவை விட்டுப் பிரிந்திருக்க விரும்பாத அவர்கள் இருவரும் மூன்று ஜென்மங்கள் அவருக்கு விரோதியாக இருந்து அவரால் அழிவு பெறுவதையே விரும்பினர். அவ்வாறே ஜய விஜயர் இருவரும் காசிபர் வமிசத்தில் ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு என்னும் பெயருடைய அசுரர்களாக வந்து பிறந்தனர்.
வராஹ உருவம் எடுத்த நாராயணன் அரக்கனைத் தேடிக் கொண்டு சமுத்திர தீரத்துக்கு வந்தார். அங்கே நாரதர் சந்தியாவந்தனம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தார்.
நாரதர் விஷ்ணுவை அறிந்து கொண்டு அவரை துதித்தார். நாராயணன் அவரிடம், நாரத மகரிஷி, ஹிரண்யாக்ஷனைத் தேடிக் கொண்டு வந்துள்ளேன். நான் பாதாளலோகம் சென்று திரும்பும் வரை இந்த நீரை பானம் செய்து வைத்திருக்க வேண்டும்" என்றார்.
பிரபோ அப்படியே செய்கிறேன்" என்ற நாரதர் சமுத்திர நீர் அனைத்தையும் உள்ளங்கையிலே ஏந்தி ஆசமனம் செய்து வாயிலே நிறுத்திக் கொண்டார்.
சமுத்திர நீர் வற்றிவிடவே அடியினுள் பதுங்கியிருந்த அரக்கன் வெளிப்பட்டான். நாராயணன் அவனுடன் யுத்தம் செய்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்தார். நாரதரும் வாயிலே வைத்திருந்த நீரை வெளிப்படுத்த மீண்டும் சமுத்திரத்தில் நீர் நிறைந்தது.
தன்னுடைய சகோதரன், விஷ்ணுவால் அழிக்கப்பட்ட செய்தியைக் கேட்டபோது ஹிரண்யகசிபு சீற்றம் அடைந்தான். தேவர்களைப் பழிவாங்க வேண்டுமென்று பிரம்மதேவனைக் குறித்து அனேக ஆண்டுகள் தவம் செய்தான். அவனுடைய கடுந்தவத்தால் விண்ணுலகம் தகிக்கப்பட்டது. அதைக் கண்ட பிரம்மதேவன் அரக்கன் முன்பு தோன்றி, ‘‘ஹிரண்யகசிபு, உனக்கு வேண்டிய வரம் என்ன? " என்று கேட்டார்.
சுவாமி, உங்களால் உண்டாக்கப்பட்ட இவ்வுலகத்தில் எவராலும், எந்த வகை ஆயுதத்தாலும், இரவிலும், பகலிலும் சரி எனக்கு மரணம் சம்பவிக்கக் கூடாதென்று அனுக்கிரகிக்க வேண்டும்" என்றான் ஹிரண்யன்.
பிரம்மதேவன் அவன் கோரிய வரத்தை அளித்தார்.
ஹிரண்யகசிபு தன்னுடைய பட்டணமான சோணித புரிக்குத் திரும்பியதும் உலகிலுள்ள அரக்கர்களை எல்லாம் ஒன்று கூட்டித் தன்னுடைய ஆக்கினையை ஏற்கச்செய்தான். தன் சகோதரனைக் கொன்ற விஷ்ணுவிடம் துவேஷம் கொண்டு நாட்டிலே யாகம் முதலான காரியங்கள் எதையும் செய்யக் கூடாதென்று கட்டளை இட்டான். அவன் உத்தரவை மீறி நடப்பவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுக் கொடுமைக்கு உள்ளானார்கள்.
ஹிரண்யகசிபுவின் அழிவின் நிமித்தம், அவரின் மகனாக பிரகலாதன் அவதரித்தார்.
பிரகலாதன் பிறக்கும்போதே மகாவிஷ்ணுவிடம் பக்தி கொண்டவனாக விளங்கினான். சதா அவர் நினைவே அவன் உள்ளத்தில் நிறைந்திருந்தது.
ஐந்தாவது வயதில் பிரகலாதனை வித்தியாப்பியாசம் செய்ய உபாத்தியாயரிடம் அழைத்துச் சென்றான் ஹிரண்யகசிபு. அங்கே முதலில் ஹிரண்யாய நம: என்று ஹிரண்யனை வணங்கிவிட்டே பாடம் ஆரம்பிப்பது வழக்கம். அவ்வாறு ஹிரண்யன், கட்டளையிட்டு நடத்தச் செய்திருந்தான். பிரகலாதனோஓம் நமோ நாராயணாயஎன்றே சொன்னான்.
பக்கத்திலிருந்த ஹிரண்யனின் கண்கள் கோவைப் பழம் போல் சிவந்தன. அதைக் கண்ட உபாத்தியாயர் நடு நடுங்கி குழந்தே, உன் தகப்பனார்தான் சகல லோகங்களுக்கும் அதிபதியாகத் திகழ்கிறார். அவரை வணங்கிய பின்னர்தான் பாடம் தொடங்க வேண்டும். எங்கே, ஹிரண்யாய நம: என்று சொல்லு" என்றார்.
சகல புவனங்களுக்கும் நாராயணனல்லவா அதிபதி. அவனல்லவோ ஜகத்ரக்ஷகன். என் தந்தை வெறும் மானிடப் பிறவி தானே" என்றான் பிரகலாதன்.
ஹிரண்யன் அபரிமித கோபத்தால் சீறினான்.
பிரபோ, பதட்டப்படக் கூடாது. முதல் நாள் அல்லவா? குழந்தை ஏதோ தெரியாது உளறுகிறான். நான் சரிப்படுத்தி விடுகிறேன்" என்றார் உபாத்தியாயர்.
ஹிரண்யன் மகனை அவ்விடத்திலேயே விட்டுச் சென்றான்.
சில நாட்களுக்குப் பிறகு, ஹிரண்யன் ஒருநாள் தன் குமாரனை அழைத்துவரச் செய்தான். அவனை மகிழ்ச்சியோடு தூக்கி மடியில்  வைத்துக் கொண்டு, குமாரா பள்ளியில் என்ன கற்றுக் கொண்டாய்?" என்று கேட்டான்.
அப்பா, ‘ஓம் நமோ நாராயணாயஎன்ற தாரக மந்திரத்தைத் தவிர கற்பதற்கு என்ன இருக்கிறது?" என்று பதில் அளித்தான் பிரகலாதன்.
கோபம் கொண்ட ஹிரண்யன், உபாத்தியாயரை வர வழைத்துக் கேட்க, அவரோ பிரகலாதன் நாராயணனிடம் கொண்டுள்ள ஈடுபாட்டை விட மறுக்கிறான் என்றும், மற்ற பிள்ளைகளையும் கெடுத்து குட்டிச் சுவராக்கி நாராயணனைக் குறித்துப் பஜனை செய்யச் சொல்லுகிறானென்றும் தெரிவித்தார். இனி பள்ளிக்கு அனுப்புவதில் பலனில்லை என்பதை அறிந்த ஹிரண்யன், மனைவி கயாதுவை அழைத்து, கயாது, உன் மகனுக்கு நாராயண பித்து பிடித்திருக்கிறது. நீதான் அவனைச் சரியான வழிக்குக் கொண்டுவர வேண்டும்" என்று ஒப்படைத்தான்.
கயாது குமாரனை அழைத்துச் சென்று விஷ்ணுவைத் துவேஷிக்குமாறு பலவிதங்களிலும் எடுத்துச் சொன்னாள்.
அம்மா, சர்வலோக ரக்ஷகனான நாராயணன் என் தந்தையினும் மேம்பட்டவரன்றோ? நாராயணனை துதித்தால் பிறவிப் பேற்றை ஒழித்து முக்தியைப் பெறலாமே. அதை விட்டு விட்டு நரஸ்துதி செய்யுமாறு சொல்லுகிறீர்கள்" என்றான் பிரகலாதன்.
கயாது தன்னால் முடிந்தவரை குமாரனின் மனத்தை மாற்ற முயற்சித்தாள். அவள் முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. வேறு வழியின்றிக் கணவனிடம் அழைத்து வந்து விட்டு விட்டாள்.
ஹிரண்யனின் கோபம் அளவுக்கு  மீறிவிட்டது. மந்திரிகளை அழைத்தான்.
அமைச்சர்களே, இவன் நம் குலத்தை அழிக்க வந்த நெருப்பு எனத் தோன்றுபடி நடந்து கொள்கிறான். இவனை அழைத்துச் சென்று நெருப்பிலே தள்ளியோ, கூரிய ஆயுதங்களால் உடலைத் துண்டித்தோ, நீரிலே தள்ளியோ, விஷம் கொடுத்தோ தண்டியுங்கள். இவனை விட்டு வைத்தால் நமக்குத்தான் அழிவு" என்றான்.
மந்திரிகள் அரக்கனின் கட்டளைப்படி பிரகலாதனை இழுத்துச் சென்றுதிகு திகுவென்று எரியும் நெருப்பிலே தள்ளினார்கள். பிரகலாதனுக்கு நெருப்பு குளிர்ச்சியாக இருந்தது. ஒன்றுமே நடக்காததுபோல் எழுந்து வந்தான். மலையுச்சியிலிருந்து அவனை உருட்டித் தள்ளினர். கீழே விழுந்த பிரகலாதன் பஞ்சுப் பொதிமேல் விழுந்தவன் போல ஒரு காயமுமின்றி எழுந்து வந்தான். விஷத்தைக் கொடுத்துக் குடிக்க செய்தனர். அதுவோ அவனைக் கொல்வதற்குப் பதிலாக உடலுக்கு அபரிமித காந்தியைக் கொடுத்தது. பலவித ஆயுதங்களைக் கொண்டு அவனை அடித்தனர். அந்த அடிகள் புஷ்ப ஹாரங்களாக விழுந்தன. கல்லில் அவனையும் சேர்த்துக் கட்டி  நீரிலே தள்ளினர். கல்லோ நீரில் மிதந்தது. அவர்கள் என்ன செய்த போதிலும் பிரகலாதன் நாராயண ஸ்மரணத்தை விடவில்லை. மந்திரிகள் அவனை அழைத்து வந்து ஹிரண்யனிடம் விட்டு நடந்ததைத் தெரிவித்தனர்.
ஹிரண்யன் மறுபடியும் உபாத்தியாயரை அழைத்து மற்றப் பிள்ளைளோடு இவனையும் பேதம் பாராமல் அடித்து மிரட்டிப் பாடம் சொல்லிக் கொடுக்குமாறு ஒப்படைத்தான். உபாத்தியாயரும் பிரகலாதனை அழைத்துச் சென்று இதமான வார்த்தைகள் சொன்னார்.
பிரகலாதா! உன் தந்தையோ மூவுலகங்களுக்கும் அதிபதி. அவரை மிஞ்சக் கூடியவர் மூவுலகங்களிலும் எவருமில்லை. அவருக்குப் பின், நீதான் நாட்டின் அரசனாகப் போகிறாய். அவருடைய மனத் திருப்திப்படி நடக்கக் கூடாதா? விஷ்ணு தியானத்தைவிட்டு நல்ல பிள்ளையாக விளங்கு" என்று சொன்னார்.
ஆனால் எந்தப் பலனும் இல்லை. பிரகலாதன் விஷ்ணு தியானத்தை விட்டுவிட மறுத்துவிட்டான். அது மட்டுமல்ல; தன்னுடன் படிக்கும் மற்ற மாணவர்களுக்கும் ஞான மார்க்கத்தை உபதேசிக்கத் தொடங்கினான். உலகில் உள்ள யாவுமே அழியக் கூடியதென்றும், அழியா வஸ்துவாகிய நாராயணனிடம் மனத்தைச் செலுத்த வேண்டுமென்றும் சொல்லித் தந்தான்.
உபாத்தியாயருக்கு இது தெரிந்துவிடவே, பிரகலாதனை அழைத்துக் கடிந்து கொண்டார்.
அடே பிரகலாதா, தந்தையின் சொல்லைத் தட்டக் கூடாதென்று சாஸ்திரங்கள் சொல்லவில்லையா? ஏன் இப்படித் தவறி நடக்கிறாய்?" என்றார்.
ஐயா, நீர் சொல்வது வாஸ்தவமானதே. ஒருவன் அஞ்ஞானியாயிருக்கும் வரையில் தான் சரீர, சம்பந்தத்தால் உண்டான தந்தை அவனுக்குப் பிதாவாக இருப்பார். அவன் ஞானியாகிவிட்டாலோ அவனுக்குப் பிதா பரப்பிரம்மமல்லவா? என் ஞானத் தந்தையைத் தியானிப்பது எவ்வாறு தவறாகும்?" என்று கேட்டான் பிரகலாதன்.
உபாத்தியாயர் பார்த்தார். ஞானம் மிகுந்துவிட்ட பிரகலாதனை ஒருபோதும் திருத்த முடியாதென்பதை உணர்ந்தார். அவனை அழைத்து வந்து ஹிரண்யனிடமே விட்டுவிட்டார்.
ஹிரண்யன் மந்திரி குமாரர்களை அழைத்து அவர்களோடு பழகச் செய்து அவன் மனத்தை மாற்ற முயன்றான். அதுவும் பலன் தரவில்லை. கோபத்தால் உடல் துடிக்க அவனை அழைத்து, பிரகலாதா, நான் இத்தனை செய்தும் நீ இன்னமும் உன் பிடிவாதத்தை விடாதிருக்கிறாய். உலகில் எந்தக் காரணங்களுக்காக நாராயணனை வேண்டுவார்களோ, அந்த உயர்ந்த பதவியை என்னால் நீ அடைந்திருக்கிறாய். சகலமான தேவர்களும் என் கட்டுப்பாட்டுக்குட்பட்டே நடக்கிறார்கள். அப்படியிருக்க, நீ கூறும் விஷ்ணு என்னைவிட எப்படி மேலானவனாகிவிட முடியும்? எங்கே அந்த விஷ்ணு? காட்டு" என்றான்.
அப்பா, விஷ்ணு உன்னைவிட எத்தனையோ விதங்களில் மேலானவர். அவரோடு உன்னை ஒப்பிட முடியுமா? ஏற்றத் தாழ்வுகள் பல இருக்கின்றன. இரத்தினத்துக்கும் சோற்றுப் பருக்கைக்கும், குயிலுக்கும் தவளைக்கும், சந்தனத்துக்கும் சேற்றுக்கும், சூரியனுக்கும் மின்மினிப் பூச்சிக்கும் உள்ளதுபோல் உனக்கும் விஷ்ணுவுக்கும் ஏற்றத் தாழ்வுகள் இருக்கின்றன. நீயோ அகங்காரி; அழிவுடையவன்; பிறரைத் தூஷிப்பவன். அவரோ சாந்தசீலர், அழிவற்றவர், தன்னைத் தூஷிப்பவனையும் தவற்றை உணர்ந்து மன்னிப்புக் கேட்டால் காப்பாற்றுபவர். இந்த அண்ட சராசரங்கள் முழுமையிலும் விஷ்ணு வியாபித்திருக்கிறார். தூணிலும் இருப்பார்; துரும்பிலுமிருப்பார்; உன்னிலும் இருக்கிறார்; என்னிடமும் இருக்கிறார்..."
பிரகலாதனின் பேச்சு, ஹிரண்யனின் கோபத்தை அதிகரிக்கச் செய்தது. மீசை படபடவென்று துடிக்க ஆயுதத்தால், அடே, இந்தத் தூணிலிருப்பாரா உன் விஷ்ணு?" என்று எதிர்புறமிருந்த தூணைக் காட்டினான்.
அவர் எங்கும் இருக்கிறார் அப்பா. அவர் இல்லாத இடமே கிடையாது" என்றான் பிரகலாதன்.
விஷ்ணு இங்கு இருப்பாராகில் வெளியே வரட்டும்" என்று கர்ஜித்தபடி தூணை ஆயுதத்தால் அடித்தான் ஹிரண்யன்".
மடார்என்ற சப்தத்துடன் தூண் இரண்டாகப் பிளந்தது. உள்ளிருந்து விஷ்ணு நரசிம்ம அவதாரத்தோடு வெளிப்பட்டார்.
இடுப்புக்குக் கீழே மனித உருவோடும், அதற்குமேல் சிங்கத்தின் உருவத்தோடும், பிடரிமயிர் நாற்புறமும் பறந்து சிலிர்க்க, கண்கள் அனல் பறக்க விஷ்ணு, நரசிம்மராக வெளிப்பட்டார். அவரைக் கண்டதும் ஹிரண்யன் ஆயுதத்தை ஓங்கிக் கொண்டு சண்டையிடச் சென்றான். அண்ட சராசரங்களும் கிடுகிடுக்கக் கர்ஜித்தவராய் விஷ்ணு அவனோடு ஒரு முகூர்த்தம் யுத்தம் செய்தார். மாலை மங்கி சந்தியா வேளை வந்தது. இரவுமின்றி பகலுமின்றி உள்ள அந்த நேரமே அவனை வதைப்பதற்கு ஏற்ற சமயம் என எண்ணி அவனை இரு கைகளாலும் வாரி எடுத்தார். உள்ளுமின்றி வெளியுமின்றி வாயிற்படியின் மேல் அமர்ந்து தொடையில் அவனைக் கிடத்தினார். ஆயுதங்களால் மரணம் கூடாதென அவன் வரம் கேட்டிருப்பதால் தமது கூரிய கைவிரல் நகங்களா லேயே அவன் உடலைக் கிழித்து ஒரு சொட்டு இரத்தம் கூட பூமியில் விழாது உறிஞ்சிவிட்டு உடலை மாலையாக அணிந்து கொண்டார்.
எங்கும் மகிழ்ச்சி ஆரவாரம் நிறைந்தது. தேவர்கள் பூமாரி பெய்தனர். அப்சரஸுகள் நிருத்தியம் செய்தனர். முனிவர்கள் வேதகோஷமிட்டனர்.
நரசிம்மராக அவதரித்த விஷ்ணு, ஹிரண்யனின் சம்ஹாரத்துக்குப் பின்னரும் சாந்தமடையவில்லை. அரக்கனின் சம்ஹாரத்துக்காக அவர் கொண்ட உக்கிரம், கண்டோரை நடுங்க வைத்தது. எவரும் அவரை நெருங்கப் பயந்தனர். தேவர்கள் ஒன்றுகூடித் தேவேந்திரனை அவரருகில் செல்லுமாறு கோரினர். விஷ்ணு சாந்தமடைந்தால்தான் தானே உலகம் க்ஷேமமுறும்!
இந்திரனும் அவரை நெருங்கப் பயந்தான். லக்ஷ்மியைத் துதித்து அவளே தற்சமயம் விஷ்ணுவை நெருங்கக் கூடியவள் என்று கூறினான்.
லக்ஷ்மியும் பயந்தாள். இதுபோன்ற கோர ரூபத்தைத் தான் இதுவரைக் கண்டதில்லை எனத் தெரிவித்து பிரகலாதனையே அனுப்புமாறு சொல்லி விட்டாள்.
தேவர்கள் பிரகலாதனைத் துதிக்க, பிரகலாதன் அனேக விதங்களால் நாராயணனை ஸ்தோத்தரித்தான். நரசிம்மர் பிரகலாதனை வாரி எடுத்துத் தம்மடிமீது அமர்த்திக் கொண்டார்.
அப்போதும் அவருடைய உக்கிரத்தைத் தாங்க மாட்டாதவர்களாய்த் தேவர்கள் சிவபெருமானைப் பிரார்த்தித்தனர்.
கையிலாசநாதா, ஹிரண்யனைச் சம்ஹரிக்கத் தோன்றிய விஷ்ணுவின் உக்கிரத்தன்மை கொஞ்சமும் குறையவில்லை. அதன் உஷ்ணத்தை எங்களால் தாங்க முடியவில்லை. முன்பொருமுறை ஆலகால விஷம் பரவியபோது அதை உண்டு எங்களைக் காப்பாற்றவில்லையா? இப்போதும் தாங்கள் தான் எங்களை ரக்ஷிக்க வேண்டும்" என்று வேண்டினர்.
கைலாசநாதன் தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சரபமாக உருவெடுத்தார்.
மிருகம் மற்றும் பறவையின் ரூபத்தில் இறக்கைகளோடு பிரசன்னமானார் ஈசன். சரபேஸ்வரராக வந்த ஈசன், உக்கிரத்தோடு இருக்கும் நரசிம்மரை நெருங்கி, ‘‘நாராயணா, ஹிரண்ய சம்காரம் முடிந்ததல்லவோ?" என்று கேட்டார்.
கைலாசநாதனைக் கண்டதும் விஷ்ணுவின் உக்கிரம் குறைந்து சாந்தம் உண்டாயிற்று. பகவானை வலம் வந்து வணங்கி அவரோடு ஐக்கியமானார். பின்னர் சிவபெருமான் பிரகலாதனுக்கும் தேவர்களுக்கும் வேண்டிய வரங்களைக் கொடுத்து அந்தர்த்தியானமானார்.
அடுத்த பிறவியில் ஜய, விஜயர், இராவணன், கும்பகர்ணனாகப் பிறந்தனர். விஷ்ணு ஸ்ரீராமனாக அவதரித்து அவர்களைச் சம்ஹரித்தார்.
மூன்றாவது ஜன்மத்தில் அவர்கள் இருவரும் சிசுபால தந்தவக்கிரராகப் பிறந்தனர். நாராயணன் கிருஷ்ணனாகத் தோன்றி அவர்களை அழித்தார்.

No comments:

Post a Comment