Saturday 6 June 2020

சிவ புராணம் ( 40 )



40. காமன் கதை




“ முனிவர்களே! நாராயணன் காம வசப்பட்டு பாதாள லோகத்திலேயே தங்கிவிட, சிவ பெருமான் ரிஷ மூர்த்தியாய் உருவெடுத்து அவரை வைகுந்தத்திற்கு அழைத்துவந்த விருத்தாந்தத்தைக் கேட்டீர்கள். காமனுக்கு அடி பணியாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். எத்தனையோ தேவர்களும், ரிஷிகளும் அவன் பிடியில் சிக்கி உள்ளார்கள் “ என்று சொல்லி, அந்த விருத்தாந்தங்களைச் சொல்லத் தொடங்கினார், சூதர்.

சப்த ரிஷிகளின் மனைவியரைக் கண்டு மோகித்த அக்னி தேவன், விரகதாபத்தால் வருந்தினான். அவன் நிலையைக் கண்ட கார்த்திகைப் பெண்கள் அறுவரும் அவனை அடைந்து அவன் விரகத்தைப் போக்கினர்.

பிரம்மாவின் புத்திரன் குசன். அவன் மகன் குசநாபன். அவனுக்கு நூறு பெண்கள். அதி அற்புதமாக இருப்பார்கள். அவர்களைக் கண்டு மோகித்த வாயுதேவன், அவர்கள் தனியாக இருக்கும்போது, அவர்கள் முன்னிலையில் சென்று தன்னை மணக்குமாறு கேட்டான். அவர்களோ, ரூபமற்ற அவனை மணக்க மறுத்துவிட்டனர். வாயுவுக்கு பெரும் கோபம் வந்தது. அவர்களை ரோகிகளாகப் போகும்படி சபிக்க, குசநாபனின் நூறு பெண்களும் ரோகிகளானார்கள்.

இதை அறிந்த அப்பெண்களின் பாட்டனாரான குசன், தன் தபோவலிமையால், அவர்கள் இழந்த ரூபலாவண்யத்தைத் திரும்பவும் அடையச் செய்தான். அத்துடன் அவர்கள் அனைவரையும் வாயுதேவனுக்கே, திருமணம் செய்து கொடுக்க ஆவன செய்தான்.

துவஷ்டாவின் மகள் சமிஞ்ஞா. அவளை மணக்க விருப்பம் கொண்டான், சூரியன். அவளோ, சூரியனின் வெப்பத்தைத் தன்னால் தாங்க முடியாது என்று மறுத்துவிட்டாள். அவளிடம் கொண்ட ஆவலைக் கட்டுப்படுத்த முடியாமல், அவளைத் திரும்பவும் வற்புறுத்தினான், சூரியன்.

“ இந்த நிலையில் மணம் செய்து கொள்ள முடியாது. உன் பிரகாசத்தைக் குறைத்துக் கொள்ள சம்மதமானால் உடன்படுகிறேன் “ என்றாள் சமிஞ்ஞா.

அவள் என்ன கூறினாலும் அதற்குக்கட்டுப்பட தயாராக இருந்தான் சூரியன். துவஷ்டா முதலானோர், சூரியனைச் சாணைக் கல்லில் உரைத்தனர். அவன் உக்கிரம் குறைந்தது. அப்போது உதிர்ந்தவற்றில் இருந்து தேவர்கள் பற்பல ஆயுதங்களைச் செய்து கொண்டனர்.

சாணைக்கல்லில் உரைக்கப்பட்ட சூரியனை சமிஞ்ஞா மணந்தாள். அப்போதும் அவளால் சூரியனுடைய வெப்பத்தத் தாளமுடியவில்லை. ஆகவே, சூரியனைப் பிரிந்து, பெண் குதிரையாகி கானகம் சென்றாள். சூரியன் ஆண் குதிரையாக உருவெடுத்து அவளைத் தொடர்ந்தான்.

கானகத்தில் அவர்கள் இருவரும் இன்புற்று இருக்கும் வேளையில், சமிஞ்ஞாவின் நாசியில் இருந்து அசுவினித் தேவர்கள் தோன்றினார்கள். நாளடைவில் அவர்களுக்கு வைவசுத மனு, யமன், யமுனை ஆகியோர்கள் தோன்றினர்.

இன்னமும் சூரியனின் வெப்பத்தைத் தாளமுடியாத சமிஞ்ஞா, தன் சாயையை அவனிடம் நிறுத்திவிட்டு, பிரிந்து சென்றால். சயாதேவிக்கும் சூரியனுக்கும் சாவனிமனு, சனி, பத்திரை எனும் பெண் ஆகியோர் பிறந்தனர்.

மித்திரா, வருணர் என்னும் இரு முனிவர்களும் ஊர்வசியைக் கண்டு அவளை அடைய விரும்பினர். மோகம் காரணமாக இருவருடைய தேஜஸ்ஸும் வெளிப்பட்டன. ஒருவர் கும்பத்திலும், மற்றொருவர் ஜலத்திலுமாக அவற்றை விட்டனர். குப்பத்தில் இருந்து அகஸ்தியரும், ஜலத்தில் இருந்து வசிஷ்டரும் உண்டானார்கள்.

சவன் மஹரிஷிக்கு இரு கண்களும் பார்வையற்றது. அவர் பகவானைக் குறித்து தவம் மேற்கொண்டார். அவர் உடல் புற்றால் மூடப்பட்டுவிட்டது. ஓர்நாள், வேடப் பெண் ஒருத்தி, அப்புற்றைக் கலைத்தாள். உள்ளே முனிவர் இருப்பதைக் கண்டதும், அவரை அழைத்துச் சென்று அரசனிடம் விட்டாள். அரசனும் அவரை வரவேற்று உபசரித்தான். முனிவருக்கு இரு கண்களும் பார்வையற்று இஉப்பதை அறிந்து, அசுவித்தேவர்களை அழத்து, பார்வையைக் கொடுக்குமாறு வேண்டினான். பார்வை வரப்பெற்ற முனிவர், வேடப் பெண்ணைக் கண்டதும் அவள் அழகில் மயங்கி, அவளையே மணந்து கொண்டார்.

காசிபருக்கும், விருதைக்கும் பிறந்தவர் பக்ஷீசுவரன் என்னும் முனிவர். அவர் ஒர்நாள், அருகில் இருக்கும் தடாகத்துகுச் சென்றபோது அதிலூள்ள மீங்கள் மகிழ்ச்சியுடன் வளைய வருவது கண்டு, தானும் திருமணம் செய்து கொண்டு, இல்லற வாழ்க்கை  நடத்த வேண்டும் என்று இச்சை கொண்டார். சுதன்மன் எனும் அரசனிடம் சென்று, அவன் குமாரத்திகளை தனக்கு திருமணம் செய்து கொடுக்கும்படி கேட்டார்.

அரசனுக்கோ, விகாரரூபம் கொண்டிருக்கும் முனிவருக்குத் தன் குமாரத்திகளைக் கொடுக்க மனமில்லை. மறுத்தால், சபித்து விடுவாரோ என்று அஞ்சி, ஓர் உபாயம் செய்தான்.

“ முனிசிரேஷ்ட… எனக்கொரு ஆக்ஷேபணையும் இல்லை. ஆனால். உங்களை மணக்க என் புத்தரிகள் சம்மதிக்க வேண்டுமல்லவா ? தாங்கள் அந்தப்புரத்திற்குச் சென்று அவர்களைக் கேளுங்கள்.  யார் விருப்பம் தெரிவிக்கிறார்களோ அவர்களையே உங்களுக்கு மணம் முடித்துத் தருகிறேன் “ என்றான்.

முனிவர், தன் யோக பலத்தால் மன்மத வடிவம் கொண்டு அந்தப் புரம் சென்றார். அங்கிருந்த சுதன்மனின் குமாரத்திகள் பதினைந்து பேரும், முனிவரின் அழகில் மயங்கி, ஆவரை மணக்கச் சம்மதித்தனர். அரசனும் அவ்வாறே முனிவருக்குத் தன் குமாரத்திகளை மணம் செய்து கொடுத்தான்.

கருடன் ஒரு சமயம் சாண்டினி என்பவளைக் கண்டு மோகித்தான். அவளை அடைந்து இன்புறவேண்டுமென்று அவளை நெருங்கினான். அவளோ மகா தபஸ்வி. தன் உள்ளத்தில் அவனுக்கு இடமில்லை என தெரிவித்தாள். கருடன் அதைக் கேட்காது அவளைத் துன்புறுத்தினான். கோபம் கொண்ட சாண்டினி, கருடனின் இரு சிறகுகளும் அறுந்து விழட்டும் என சபித்தாள். அலனே கருடனின் சிறகுகள் அறுந்து விழுந்தன. கருடன் தன் தவறை உணர்ந்து, அவள் பாதங்களில் பணிந்து, தன் தவறை மன்னிக்குமாறு வேண்டினாம். அவளும் அவன் கோரிக்கையை ஏற்று கருடனை மன்னித்து, தன் சக்தியினால் அறுந்த சிறகுகள் மீண்டுக் உண்டாக அருளினாள்.
விபாண்டர் என்ற முனிவர், ஒரு சமயம் நீராடச் சென்றபோது, அங்கொரு யௌவன மங்கையைக் கண்டு பேதலிக்கவே, அவரது வீர்யம் வெளிப்பட்டு நீரில் விழுந்தது. அதைப் பெண்மான் ஒன்று பருகிடவே , மானின் வயிற்றிலிருந்து ரிஷ்யசிங்கர் உண்டாணார்.

பராவசு என்றொரு முனிவர் இருந்தார். மஹா தபஸ்வியான அவரை அழைத்து வந்து, யாகத்தை நடத்தினார், அரசம். யாகத்திற்கு வந்திருந்த யவக்கிரீதன் என்ற முனிவர், பராவசுனின் நனைவியைக் கண்டு மோகித்து, பலவந்தமாக அவளைக் கவர்ந்து சென்றார். இதை அறிந்த பராசுவின் தந்தை ரைப்பிய மஹரிஷி, தன் மருமகளைக் கொன்று , அவள் உடலைத் துண்டித்து, அதைக் கொண்டே ஹோமம் செய்தார். பின்னர், தமது சக்தியால், அவள் தோலை அரக்கியாக மாற்றி, யவக்கிரீதனைக் கொன்று வர உத்தரவிட்டார்.

முனிவரின் உத்திரவின்படி புறப்பட்ட அரக்கி, தன் மாயையால் அழகிய பெண்ணக உருவெடுத்தாள். யவக்கிரீதனிடம் சென்று இன்புறலாம் என ஆசை வார்த்தைகள் பல கூறி, கானகத்துக்கு அழைத்து வந்தாள்.

முனிவருடன் கானகத்துக்குள் செல்லும் அழகு மங்கையைப் பார்த்த அசுரன் ஒருவன், யவக்கிரீதனைக் கொன்று, அரக்கியை இழுத்துச் சென்றுவிட்டான்.

யவக்கிரீதன் கொல்லப்பட்டதை அறிந்த அவரது தந்தை, தன் மகன் ரைப்பியரால் கொல்லப் பட்டான் என்பதை உணர்ந்து, ரைப்பியரும் அவரின் மகனாலேயேக் கொல்லப்பட வேண்டும் என சாபமளித்தார்.

ஒரு நாள், பராவசு அரசனிடம் சென்று, அனேக மரியாதைகளைப் பெற்று ஆசிரமத்திற்குத் திரும்பி வந்துகொண்டிருந்தார், அப்போது, ரைப்பியர் மான் தோலைப் போர்த்துக் கொண்டு ஓரிடத்தில் சந்தியாவந்தனம் செய்து கொண்டிருந்தார். துரத்தில் இருந்து இதைப் பார்த்த பராவசு, அங்கு இருப்பது மான் என நினைத்து, அம்பை எய்ய, ரைப்பியர் இறந்தார்.

அருகே சென்று பார்த்தபோதுதான், தான் கொன்றது தன் தந்தையை என்பதை உணர்ந்தார், பராவசு. மறுநாள் , தன் சகோதரனாகிய பரத்வாஜரிடம் சென்று, நடந்ததைக் கூறி, பரிகாரம் வேண்டினார், பராவசு.

பரத்வாஜர் பெரிதும் துக்கித்து, “ சகோதரா, உன்னால் செய்ய முடியாது. நீ ஆஸ்ரமத்தில் இரு , உனக்காக தவம் செய்த்து, உன் பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கச் ஸ்ய்து திரும்புகிறேன் “ என்று கூரி, கானகம் சென்று கடுமையாகத் தவம் செய்து, தன் சகோதரனின் தோஷத்தை நீங்கச் செய்தார்.

ஆசிரமம் திரும்பிய பரத்வாஜரை, “ கொலைகாரா…. தந்தையைக் கொன்ற உனக்கு இங்கு இடமில்லை “ எனக் கடிந்துரைத்தார் பராவசு.

சகோதரனிடமிருந்து இவ்வார்த்தைகளை எதிர்பாராத பரத்வாஜர் ஸ்தம்பித்துவிட்டார். அவ்வமயம், அவ்வழியே சென்று கொண்டிருந்த அரசனின் காவலாளிகள், பராவசு, பரத்வாஜரைகொலைகாரன் என குற்றம் சாட்டுவதைக் கேட்டு, பரத்வாஜரை , மன்னனிடம் கட்டி இழுத்துச் சென்றனர்.

“ ஹே  சர்வேசா ! இது நியாயமா ? நான் என்ன குற்றம்செய்தேன் ? என் சகோதரன் அடைந்த தோஷத்தை நீக்கத்தானே உன்னைக் குறித்து தவம் செய்தேன்? இப்போது நானே அந்த கொலைப் பழிக்கு ஆளாகிவிட்டேனே ! நான் நிரபராதி என்பது உண்மையானால், என்மீது அமிர்ததாரை பெய்வித்து, என்மேல் சுமத்தப்பட்ட பழியை நீக்கு “ என கதறினார்.

பரத்வாஜர் நிரபராதி என உலகிற்குஅரிவிக்க, இறைவனும் பரத்வாஜர் மீது அமிததாரை பெய்வித்து, ரைப்பியரையும், யவக்கிரீதனையும் உயிர் பெற்று எழச் செய்தார்.

ஒரு சமயம், கௌதமர் கடுமையான தவம் செய்யும்போது, அந்த தவத்திர்கு இடையூறு விளைவிக்க, இந்திரன் அப்சரஸ்களில் ஒருத்தியை அனுப்பினான். அவளின் சுந்தர வடிவில் மனம் பேதலித்த கௌதமருக்கு தேஜஸ் வெளிப்படவே, அவர் அதௌ துரோணத்தில் விட்டார். அதிலிருந்து துரோணர் உண்டானார்,
ஒரு சமயம் , உலகில் தர்மாச்சார்யங்கள் சரிவர நடக்காமல், அழிந்துபோகும் நிலை உண்டாயிற்று. அப்போது, பிரமதேவன், சூரியனை அழைத்து, பூலோகத்தில் சிலகாலம்  இருந்து, தர்மங்களைக் காபாற்றி, அவை சரிவர நடந்துவரும்படிச் செய்யக் கூறினார்.

அதன்படி, சூரியன் அயோத்தி நகரில் உபசிரவசு என்ன்னும் அரசனாகப் பிறந்தான். நசிந்திருந்தத் தர்மங்களை நிலை நிறுத்தி, அவற்றை முறை பிறழாது நடந்துவரச் செய்தான். ஒருமுறை, அவன் நாட்டைச் சுற்றிப் பார்த்துக்கொண்டுவரும் போது, இந்த சமயத்தில் தன் அருகில் மனைவி இல்லையே என்ற ஏக்கம் உருவாயிற்று. அந்தக்ஷணமே, அவன் வீரியம் வெலீப்பட்டுவிட்டது. அரசன் இலை ஒன்றை தொன்னையாகத் தைத்து, தேஜஸை அதில் விழச் செய்தபின், அதை எவ்வாறு தன் மனைவியிடம் சேர்ப்பது என்று யோசிக்கையில், சேனம் என்றொரு பறவை, அதைத் தான் கொண்டு சென்று அரசியிடம் சேர்ப்பதாகக் கூறிற்று. அரசனும் சம்மதிக்க, பறவை அதை அலகினால் கொத்திக் கொண்டு பறந்து சென்றது.

யமுனை நதியின்மீது பறந்து செல்லும்போது, இதைப் பார்த்த மற்றொரு பறவை, மூக்கிலே பிடித்திருப்பது மாமிசம்மாக இருக்கக்கூடும் என்று கருதி, அதைப் பிடுங்க, தொன்னை ஆற்றில் விழுந்துவிட்டது. அதிலிருந்த அரசனின் வீரியத்தை, ஆற்ரில் இருந்த பெண் மீன் ஒன்று விழுங்கியது.

அந்த மீன் , பூர்வத்தில் கிரிகை என்ற அப்ஸரசாக இருந்தவள். பிரம்மனின் சாபத்தால். மீணாக யமுனையில் வாழ்ந்து வந்தவள். அரசுனின் வீரியத்தை விழுங்கிய கிரிகை எனும் மீன் சில நாட்களில் கருவுற்றது.

சில பல நாட்களிக்குப் பின், மீன் பிடிக்கும் வலைஞனின் வலையில் அம்மீன் சிக்கிக் கொண்டது. அளவில் பெரியதாகவும், பொன்னிறத்தொடும் ஜொலித்த அந்த மீனை வீட்டிற்கு அடுத்துச் சென்று அறுத்தான், மீனவன். அதன் வயிற்றில் ஆணும் பென்ணுமாக இரு குழந்தைகள்க் கண்டு அதியப்பட்டு, ஆண் குழந்தையை அரசனிடம் சேர்பித்தான்.

அக்குழந்தையைக் கண்டதும், அதனிடம் அபரிதமான வாஞ்சை தோன்றவே, அரசன் மீனவனை அழைத்து விசாரிக்க, மீனவன் இந்தக் குழந்தையை ஒரு மீன் வயிற்றில் கண்டெடுத்ததாகக் கூறினான். இக்குழந்தை, தன் குழந்தையே எனத் தெளிந்த அரசன், அதை வளர்த்துமச்ச தேசத்திற்கு அரசனாக முடி சூட்டினான்.

மீனவன், அப்பெண் குழந்தையைதன் மகளாகவே பாவித்து வளர்த்து வந்தான். யமுனையில் பிறந்ததால் யமுனியயின் பெயர்களில் ஒன்றான கோதினி என்ர பெயரையும், தன் முன்னோர்களில் ஒருத்தியான மார்த்தாண்டி என்ற பெயரையும் அவளுக்கிச் சூட்டினான். கிரிகையின் பெண் என்பதால், கிரிஜா என்றா பெயரையும் அவள் அடைந்திருந்தாள். அவளைச் சத்யவதி என்று அன்போடு அழைத்துவந்தான் .

சத்யவதி வளர்ந்து பெரியவளானதும், தன் தந்தையில் வேலையில் பங்குகொண்டு அவருக்கு உதவிகள் செய்து வந்தாள். யமுனையின் இக்கரையில் இருந்து அக்கரைக்கும், அக்கரையில் இருந்து இக்கரைக்கு மக்களை ஏற்றிச் செல்லும்படகோட்டியாகவும் இருந்தாள். ஒரு சமயம் யமுனை நதி தீரத்திற்கு வந்த பராசரர், சத்யவதியின் அழகில் மயங்கி அவளை மணம் செய்து கொண்டார். அவர்களுக்கு, வேதவியாசர் தொண்ரினார்.

விசித்திர வீரியார்ச்சுனன் இறந்ததும், தேவர்களின் நன்மைக்காக, அவன் மனைவியுடன் கூடி, திருதராஷ்டிரன், பாண்டு, விதுரர் ஆகியோரை, வியாசர் தோற்றுவித்தார். பின்னர் ஒரு சமயம், கானகத்தில், அரளிக்க்கட்டையைக் கடையும் போது சுகர் உண்டானார்.

சுகர் பிரம்மஞானி. அவர், கௌரவர், கபிலர், கிருஷ்ணர், நீலர் என நாங்கு புத்திரர்களையும், ஒரு புத்திரியையும் தோற்றுவித்தார்.

சும்பர், ரிசும்பர் இருவருக்கும் சுந்தர், உபசந்தர் என்னும் புத்திரர்கள் பிறந்தனர். அவர்கள் இருவரும் திலோத்தமையைக் கண்டு அவளை அடைய முற்பட்டு, விரோதம் உண்டாகி, அதனால் உண்டான சண்டையில் இருவரும் மாண்டனர்.

இஷ்வாகு குலத்தில் பிறந்த அரசனொருவன், சுக்கிராச்சாரியாரின் மகளின் அழகில் மயங்கி, அவளை காந்தர்வ மணம் செய்து கொண்டான். இதைப் பொறாத சுக்ராச்சாரியார், அரசனுடன் எட்டு நாட்கள் யுத்தம் செய்து, அவனை.  பாசத்தால் கட்டி தண்டித்ததோடு, அவன் ராஜ்ஜியத்தையும் அழித்தார்.

ஆங்குரஸ முனிவரின் புத்தரி வேகவதி. அவளைக் கண்ட இராவணன் அவள் மேல் மோகம் கொண்டு அவளை அடைய விரும்பினான். அவள் தனிமையில் இருக்கும்போது,அவளை நெருங்கி அவளை பலவந்தமாக அடைந்தான். பெரும் கோபம் கொண்ட வேகவதி, தன் வாழ்வைச் சீரழித்த அவனைக் கொல்வேன் என சபதம் செய்து , தீக்குளித்தாள்.

இராவணன், கயிலையில் இருந்து திரும்பி வரும்போது, குபேரனின் மகனான நளகபரனுடைய மனைவி, ரம்பையைக் கண்டு மோகித்தான். அவள் தன் மருமகள் உறவுமுறை கொண்டவள் என்பதயும் மறந்து, அவளைப் பலவந்தமாக கவர்ந்து சென்று இன்புற்றான். இதை அறிந்த நளகபரன், மிகுந்த கோபம் கொண்டு, “ பிற ஸ்தீயை, அவர்கள் சம்மதமின்றித் இராவணன் தீண்டுவானாகில், அவன் தலை ஆயிரம் சுக்கல்களாக வெடித்துச் சிதற “ சாபம் கொடுத்தான்.

அடுத்த பிறவியில், மிதிலையில், ஜனகராஜனின் புதல்வி சீதையாக யாக குண்டத்தில் அவதரித்தாள், வேகவதி, அயோத்தி மன்னன் தசரதனின் குமாரனாக மஹாவிஷ்ணு அவதரித்து, சீதையை மணந்தார்.


ஸ்ரீராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய தசரதர் ஏற்பாடுகளைச் செய்யும் சமயத்தில், கைகேயி தசரதனிடம் தான் பெற்றிருந்த இரு வரங்களை,    ஸ்ரீராமன்  கானகம் செல்லவும், பரதன் பட்டம் சூடவும் பயன்படுத்திக் கொண்டதில் இருந்து, இராவணன் வதம் வரை விரிவாக எடுத்துரைத்தார், சூத முணிவர்.

ஹரி ஓம் !! 



No comments:

Post a Comment